அத்தியாயம் 212: வருணும் பிரவினும் நண்பர்கள் (பார்ட் 1)
மாலை நேரம்…
பிரவீனின் வீட்டில்…
வழக்கத்தை விட இன்று தன்னுடைய வீட்டிற்கு சீக்கிரமாக வந்து இருந்தான் பிரவீன். லக்ஷனா தன்னுடைய தங்கை சௌபர்ணிகா மற்றும் மாமியார் தேவியுடன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள். அவர்கள் அனைவரையும் பொதுவாக பார்த்து “குட் ஈவினிங்.” என்று சொன்ன பிரவீன், லக்ஷனாவின் அருகே சென்று அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவள் அருகே அமர்ந்தவன், “ஐ மிஸ் யூ டியர்.” என்று தன் பொய்யான வார்த்தைகளின் மூலம் அன்பை பொழிந்தான். 😍 🥰 👩❤️👨 அவன் உன்னை நினைத்து ஏங்கினேன் என்று வார்த்தைகளால் சொல்லி இருந்தாலும் அந்த ஏக்கத்தை அவனுடைய செயல்களிலோ, அவனுடைய தோற்றத்திலோ, லக்ஷனாவால் உணர முடியவில்லை. அதனால் அவனை கேஷுவலாக பார்த்தவள், பொதுவாக மற்றவர்கள் நம்மிடம் குட் மார்னிங், குட் ஈவினிங், என்று சொன்னால் பதிலுக்கு நாமும் சொல்வதைப்போல அவன் சொன்னதற்கு தானும் பதில் சொல்லும் விதமாக, “மிஸ் யூ டு ஹனி.” என்றாள். 😊
அவர்களைப் பார்த்து கொண்டு இருந்த சௌபர்ணிக்கவும், தேவியும், உண்மையாகவே இவர்கள் இருவரும் ஒருவரின் மீது ஒருவர் பாசமாக இருக்கிறார்கள் என்று அப்பாவியாக நினைத்து மகிழ்ந்தனர். 🥰 பின் லக்ஷனாவின் கைகளை இறுக்கமாக பற்றி கொண்ட பிரவீன், “இப்போ நம்ம எங்கேயாவது அவுட்டிங் போலாமா டார்லிங்..???” என்று காதல் பொங்கி வலியும் கண்களுடன் கேட்டான். 😍 இவனா இப்படி எல்லாம் தன்னிடம் கேட்கிறான் என்று ஆச்சரியமாக அவனைப் பார்த்த லக்ஷனாவிற்கு அப்போது தான் சிறிது நேரத்திற்கு முன் தான் தொலைக்காட்சியில் வருண் மற்றும் ரித்திகாவை பற்றிய செய்திகளை பார்த்தது அவளுக்கு ஞாபகம் வர, “அதானே பாத்தேன்.. இந்த எலி சும்மா எதுக்கு ஸ்வெட்டர் போட்டுட்டு் சுத்துதுன்னு….??? 🐀 இன்னைக்கு வருனும் அவருடைய வைப்பும் வெளியில போனது ஹெட்லைன்ஸில வந்ததுனால இப்ப இவனுக்கும் ஹெட் லைன்ஸ் -ல வரணும் போல. அதான் நம்மள வெளிய கூட்டிட்டு போறேன்கிறான். இவன் அவர பத்தி யோசிச்சு யோசிச்சு இவனுக்குன்னு ஒரு லைஃப் இருக்குன்னு அதை பத்தி யோசிச்சு பாக்கவே மாட்டேங்கிறானே ச்சே…!!!” என்று நினைத்து பெருமூச்சு ஒன்றை விட்டவள், “எங்க போக போறோம்..??” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள்.
பிரவீன்: “எங்க வேணா போலாம். உனக்கு எங்க போகணும்னு சொல்லு பார்க், ரெஸ்டாரன்ட், மால்… இல்லைனா, எங்கையாவது அவுட் ஆப் ஸ்டேஷன் கூட போயிட்டு வரலாம். நான் உன்ன நம்ப ஹனி மூன் -க்கு எங்க போலாம்னு டிசைட் பண்ணி வைக்க சொன்னேன். அதவே நீ இன்னும் டிசைட் பண்ணி என்கிட்ட சொல்லல. சீக்கிரம் சொல்லு நம்ப எங்க போலாம்…???” என்று ஆர்வமான குரலில் கேட்டான். 😍
லக்ஷனா அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக அவனுடைய முகத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள். அதனால் அவர்கள் பேச்சுவார்த்தையில் கூறுக்கிட்ட சௌபர்ணிகா, “என்ன லக்ஷனா.. மாமா உன்கிட்ட இத்தனை தடவ எங்க போலாம்னு கேக்குறாரு நீ எதுவும் சொல்லாம அமைதியாவே இருக்க..!! உங்களுக்கு மேரேஜ் ஆனதுல நீங்க ரெண்டு பேரும் எங்கேயுமே வெளியில போகலையே… இப்பயாவது ரெண்டு பேரும் எங்கேயாவது சும்மா போயிட்டு வாங்க.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
பிரவீன்: லக்ஷனாவின் தோளில் கை போட்டபடி அவள் அருகே அமர்ந்து இருந்த சௌபரணிகாவை ஓர கண்ணால் பார்த்தவன், “நீயும் எங்க கூட வரியா சௌபி …??” என்று சபலம் நிறைந்த கண்களுடன் கேட்டான். 😍
சௌபர்ணிகா: “நீங்க ரெண்டு பேரும் கப்புல் ஆ வெளியில போறீங்க. அங்க நடுவுல கரடி மாதிரி நான் எதுக்கு..?? நீங்க ரெண்டு பேரும் ஜாலி ஆ போயிட்டு வாங்க மாமா.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். 😁 😁 😁
தேவி: அதனால என்ன மா.. அவன் உன்னையும் தானே வர சொல்லி கூப்பிடுறான்.. நீயும் அவங்க கூட போயிட்டு வா. அபர்ணாவும் வீட்ல தான் இருக்கா. அவளும் வருகிறாளான்னு கேளுங்க. அவள் வந்தா, அவளையும் கூட்டிட்டு போங்க.
பிரவீன் சௌபர்ணிகாவை பார்க்கும் பார்வையே லக்ஷனாவிற்கு பிடிக்கவில்லை. அதனால் முதலில் தன்னுடைய தங்கையை இங்கு இருந்து பேக் செய்து அனுப்ப வேண்டும் என்று நினைத்தவள், “ஆமா சௌபி. அபர்ணா வந்தா, நாங்க அவளை எங்க கூட கூட்டிட்டு போறோம். நீ நாளைக்கு நம்ம வீட்டுக்கு போறேன்னு சொன்னில.. போய் இப்பயே பேக்கிங் ஐ ஸ்டார்ட் பண்ணு.” என்று ஒரு அர்த்தத்துடன் அவளை கூர்மையாக பார்த்து சொன்னாள். அவள் இப்போது தன்னையே இந்த வீட்டில் இருந்து சூசகமாக திரும்ப சொல்கிறாள் என்று சௌபரணிகாவிற்கு புரியவில்லை என்றாலும் அவளுடைய பார்வையை வைத்து ஏதோ இருக்கிறது என்று புரிந்து கொண்டவள், “ஆமா அக்கா நான் போய் பேக் பண்றேன்.” 👛 என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து வேகமாக எழுந்தாள்.
சௌபர்ணிகா எழுந்தவுடன் தானும் எழுந்து நின்று கொண்ட பிரவீன் அவளைப் பார்த்து, “ஏன் இவ்ளோ சீக்கிரமா கிளம்புற இன்னும் ஒன் வீக் இருந்திட்டு போலாம்ல்ல..???” என்று அக்கறை நிறைந்த குரலில் கேட்டான். சௌபர்ணிகா அவனிடம் ஏதோ பதில் சொல்ல வர அதற்குள் முந்திக் கொண்ட லக்ஷனா, “மம்மி அவளுக்கு அலையன்ஸ் பார்க்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. அவளுக்கு ஒழுங்கா சமைக்க கூட தெரியாது. அதான் டாடி அவள வீட்டுக்கு வர சொன்னாரு. அவளுக்கு மேரேஜ் நடக்குறதுக்குள்ள அவளாவது ஏதாவது கத்துக்கொடுக்கணும்ல அதான். திடீர்னு எனக்கு நடந்த மாதிரி அவளுக்கும் மேரேஜ் நடந்தா, என்ன பண்றதுன்னு தெரியாம அவளும் என்ன மாதிரி கஷ்டப்படக்கூடாது இல்ல…!!!” என்று ஒரு உள் அர்த்தத்துடன் சொன்னாள்.
லக்ஷனா என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் என்பது போல சௌபரணிகா தன்னுடைய தலையை வேகமாக ஆட்டி வைத்தாள். லக்ஷனா தனக்கு நடந்த அவசர திருமணத்தை பற்றி இவ்வாறு குறிப்பிட்டது தேவிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அதனால் சிரித்து சமாளித்தவள், “அதுவும் கரெக்ட் தான் மா. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறது நல்லது தானே. நீ போய் கிளம்பு.” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்று விட்டாள். லக்ஷனா ஒரு முடிவில் தான் இருக்கிறாய் இதற்கு மேல் தான் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று நினைத்த பிரவீன், அவனும் தன்னுடைய அறைக்கு லக்ஷனாவை வர சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்று விட்டான்.
தேவியும், பிரவினும், அங்கு இருந்து சென்றவுடன் லக்ஷனாவை பயம் நிறைந்த கண்களுடன் பார்த்த சௌபர்ணிகா, “ஏய்… என்ன டி சொல்ற அதுக்குள்ள எனக்கு அலையன்ஸ் பாக்குறாங்களா அம்மா..?? இவங்க சும்மாவே இருக்க மாட்டாங்களா..?? எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கிற மைண்டு செட் ஏ இல்ல.” என்று அவசரமான குரலில் சொன்னாள். “நீ போய் முதல்ல உன்னோட திங்ஸ் ஐ பேக் பண்ணு. நாளைக்கு நானே உன்னை விடுவதற்கு வீட்டுக்கு வரேன். மத்ததெல்லாம் அங்க போய் பேசிக்கலாம்.” என்று சொன்ன லக்ஷனா தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.
நாராயணன் பேலஸுல்…
சித்தார்த்திற்க்கு அவனுடைய பெண்டிங் இருந்த ஹோம் வொர்க் அனைத்தையும் செய்வதற்காக உதவிய ரித்திகா, அவன் அதை அனைத்தையும் சரியாக செய்து முடித்து இருக்கிறானா என்று சரி பார்த்துவிட்டு அவன் டிவி பார்க்க வேண்டும் என்று சொன்னதால், அவனை அனுப்பி வைத்துவிட்டு வெளியே வந்தாள். அவள் கிச்சனுக்கு வந்து தன்னால் முடிந்த வரை ஏதேனும் வேலைகளை செய்யலாம் என்று நினைத்தாலும், செண்பகம் அவளுடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்கெல்லாம் அவளை அனுமதிக்கவில்லை.
அதனால் மிகவும் போரிங் ஆக உணர்ந்த ரித்திகா, என்ன செய்யலாம் என்று யோசிக்கப்படியே நாராயணன் பேலஸை சுற்றி உலா வரத் தொடங்கினாள். வேறு வேறு அறைகளில் இருந்தாலும் மொபைல் போனில் விஷ்ணுவும் ஷாலினியும் கடலை வறுத்து கொண்டு தான் இருந்தனர். அதனால் ஷாலினியாலும் ரித்திகாக்கு கம்பெனி கொடுக்க முடியவில்லை. திருமணத்திற்கு முன்பும் கூட இவள் சில முறைகள் இங்கே வந்து இருந்தாலும் அவள் முழுமையாக அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்ததில்லை. அதனால் இன்று குறைந்தபட்சம் தான் வாழும் இந்த இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்து ஒவ்வொரு தளமாக சுற்றி பார்க்கத் தொடங்கினாள். மேலே உள்ள அனைத்து தலங்களையும் லிப்ட்டின் வழியாக சென்று சுற்றி பார்த்துவிட்டு, லிப்டின் வழியாக தரை தளத்திற்கு வந்து கொண்டு இருந்தாள் ரித்திகா.
அப்போது அவள் வந்த லிப்டில் எரிந்து கொண்டு இருந்த லைட்டுகள் மின்னி.. மின்னி.. எரிய தொடங்கின. அதனால் லிப்டில் கோளாறு ஏதேனும் ஏற்பட்டு பாதி வழியில் அப்படியே நின்று தான் இதன் உள்ளே மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்தாள் ரித்திகா . 😓😱 😨 இதில் தன் பின்னே யாரோ நிற்பது போன்ற உணர்வு வேறு அவளுக்குள் திடீரென எழுந்தது. அதனால் பதட்டத்துடன் தன் பின்னே திரும்பிப் பார்த்தாள். அங்கே யாரும் இல்லை. ஆனால் மீண்டும் அந்த லிப்டின் லைட்டுகள் ஆப் ஆகி பின் ஆன் ஆகி ஆஃப் ஆவது என இருந்தன. அதனால் பயத்தில் தன் கண்களை இறுக்கி மூடி கொண்ட ரித்திகா, “முருகா… முருகா… முருகா…!!!” என்று மீண்டும் மீண்டும் சொல்லி
கொண்டே இருந்தாள்.
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)