Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 132

மூர்கனின் காதலி CH 132

by Thenaruvi Tamil Novels
51 views

அத்தியாயம் 132

தனக்கு பாட்டி நல்ல வாக்கு சொல்லியதால் நிலா சந்தோஷமாக இருக்க, “நம்மளும் நம்ப வாழ்க்கை என்னதான் ஆகும்னு அவங்ககிட்ட கேட்டுப் பாக்கலாமா..??” என்று நினைத்த சௌபர்ணிகா தயக்கத்துடன் பாட்டியின் முன்னே தன் கையை நீட்டினாள். அவள் கைரேகைகளை உற்று கவனித்த பாட்டி, “உன் வாழ்க்கை தடம் மாறி போயிடுச்சோன்னு நினைச்சு நீ அதிக வேதனையில வாடிட்டு இருக்க. ஆனா உனக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்குன்னு உன் ரேகை சொல்லுது.. நீ பின் வரும் காலங்கள்ல சந்தோஷமா இருப்பேன்னு அந்த ஆத்தா உனக்கு வாக்கு கொடுக்கிறா. உன் பெயருக்கு ஏத்த மாதிரி நீ சௌபாக்கியவதியா எல்லா நலமும் வளமும் பெற்று சந்தோஷமா இருப்ப தாயி.” என்றார்.

“என் வாழ்க்கை.. சேரன் கையில மாட்டி கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு இருக்கு. ஆனா இவங்க என்ன இப்படி oppositeஆ சொல்றாங்க..!!” என்று நினைத்து குழம்பிய சௌபர்ணிகா அந்த கூட்டத்தைவிட்டு வெளியேற, மற்றவர்கள் இருவருக்கும் பாட்டி நல்வாக்கு சொன்னதால் “எல்லாருக்கும் இவங்க நல்லதா தான் சொல்றாங்க. நமக்கு என்ன சொல்றாங்கன்னு பாப்போம்.” என்று நினைத்த மேகா ஆர்வமாக தன் கையை பாட்டியிடம் நீட்டினாள்.

வெகு நேரமாக அவள் கைரேகையை அலசி ஆராய்ந்த பாட்டி “உனக்கு விபரீத ராஜயோகம் இருக்குமா. அதனால எப்பவும் உன் வாழ்க்கையில சந்தோஷம், சோகம் ரெண்டுமே கலந்து தான் இருக்கும். உனக்கு அந்த கடவுள் கொடுக்க நினைக்கிறத யாராலயும் தடுக்க முடியாது. அதே சமயம் உன்ன தொடர்ந்து வர்ற பிரச்சினைகளையும் உன்னால தவிர்க்க முடியாது. புயல் அடிக்கும் போது, அவ்வளவுதான் உன் வாழ்க்கை முடிஞ்சிருச்சுன்னு நெனச்சு துவண்டு போயிடாத. சந்தோஷமா இருக்கும்போது இனி எப்பவுமே இப்படி உன் வாழ்க்கை சுகமா இருக்கும்னு நம்பி அலட்சியமா இருந்துடாத. நீ உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிச்சுக்கிட்டே இல்லைனா, உனக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கை மொத்தமா உன் கையவிட்டு பறிபோகுறதுக்கு கூட நிறைய வாய்ப்பு இருக்கு. சூதானமா இருந்தா நீ பொழைச்சுக்குவ மா.” என்று சொல்ல,

“மத்தவங்களுக்கு எல்லாம் simpleஆ சொல்லிட்டு ஏன் என்னை மட்டும் கண்டத சொல்லி குழப்புறாங்க இந்த பாட்டி..?? இவங்க என்ன சொல்ல வராங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியல.” என்று யோசித்துக் குழம்பிய மேகா “என்னமோ.. நடக்கிறது எல்லாம் நல்லதா நடந்த சரி.” என்று நினைத்து தன் கையை பார்த்தபடி அந்தக் கூட்டத்தைவிட்டு வெளியேறினாள்‌.
அவள் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளை கவனித்த வெண்ணிலா “என்னாச்சு அக்கா.. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?? அந்த பாட்டி உங்களுக்கு ஏதாவது negativeஆ சொல்லிட்டாங்களா..??” என்று கேட்க,

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடி. அவங்க என்ன சொன்னாங்கன்னே எனக்கு ஒன்னும் புரியல. சரி வா இருட்ட போகுது.. நம்ம வீட்டுக்கு போகலாம்.” என்ற மேகா அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு சென்றாள்.
சில மணி நேரங்களுக்கு பிறகு அனைவரும் இரவு உணவை மேகாவின் வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்கு சென்றார்கள்.

ஏப்பம் விட்டபடி மேகாவின் ரூமிற்குள் நுழைந்த விஷ்வா “உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாம் ஆளாளுக்கு ஒவ்வொரு designல இருந்தாலும் உங்க எல்லாரையும் இந்த சாப்பிடுற விஷயத்துல கண்டிப்பா பாராட்டனும்டி. நேரா நேரத்துக்கு கரெக்டா tastyஆ சோறு போட்டுடறாங்க. உங்க வீட்டு foodக்கு நான் அடிமை. பேசாம நான் இங்க லோக்கல்ல ஒரு restaurant start பண்ணவா..?? உங்க அண்ணிய chief cookஆ போடுறேன். அவங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் ஓகேவான்னு கேட்டு சொல்லு.” என்றபடி சென்று கட்டிலில் அமர்ந்தான்.

“சும்மா எதாவது சொல்லி விளையாடிட்டே இருக்காதீங்க விஷ்வா.” என்ற மேகா சென்று அவன் அருகில் அமர, “ஹே.. நான் விளையாடலடி. seriousஆ தான் சொல்றேன். நிஜமாவே உங்க அண்ணி சூப்பரா சமைக்கிறாங்க. அவங்க talentஐ எதுக்காக waste பண்ணணும்..??” என்று கேட்டபடி அவள் தோள்களில் கை போட்டான் விஷ்வா.

“அண்ணி வெளியே போய் வேலை செய்வதற்கு எல்லாம் அண்ணன் ஒத்துக்க மாட்டாரு.” என்றுவிட்டு அவன் தோள்களில் சாய்ந்த மேகா சட்டென ஏதோ ஞாபகம் வந்தவளாக, “ஆமா என் டைரி எங்க..?? நான் சௌபர்ணிகா அக்காக்கூட மும்பை போகும்போது மறந்து அதை வீட்டிலயே வச்சிட்டு போட்டேன். நீ அதை எடுத்து படிச்சேன்னு சொன்னில.. அப்புறம் எங்க வெச்ச..??” என்று கேட்டாள்.

“அது என்கிட்ட தான் இருக்கு.” என்ற விஷ்வா எழுந்து சென்று தனது trolley bagல் இருந்த அவளது டைரியை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான். அதன் பக்கங்களை புரட்டிய மேகா தற்செயலாக புதிதாக அதில் ஏதோ எழுதப்பட்டிருப்பதை கண்டு ஷாக்காகி அதில் இருந்தவற்றை படிக்க தொடங்கினாள்.

அதன் ஒரு சில பக்கங்களில் “ஏண்டி என்ன விட்டுட்டு போன..?? என்ன தப்பா நினைச்சுட்டியா..?? உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா..?? ப்ளீஸ் திரும்ப வந்துடு. நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்டி‌. I miss you. I love you. I want you right now.” என்றெல்லாம் ஒவ்வொரு பக்கத்திற்கு ஒவ்வொரு வரியில் எழுதி வைத்திருந்த விஷ்வா அதற்கு கீழே என்னவோ அவனது இந்த வார்த்தைகளுக்கு மற்றவர்கள் copyrights கேட்டு வந்துவிடுவார்கள் என்று பயப்படுவதை போல அன்றைய நாளின் தேதியை எழுதி timeஐ கூட mention செய்து sign போட்டிருந்தான் விஷ்வா.

அதை பார்த்துவிட்டு வாய் வீட்டு சத்தமாக சிரித்த மேகா “அடப்பாவி.. என்னடா எழுதி வச்சிருக்க நீ…?? யாராவது diaryல இப்படித்தான் எழுதுவாங்களா..?? ஒவ்வொரு பேஜ்ளையும் எழுதி இருக்கிறது ஒரே ஒரு லைன். இதுல அதுக்கு கீழ date, time, signature வேற.. ஏன் இதுல அப்படியே weather reportல சொல்லுவாங்களே அந்த மாதிரி.. இப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழை வருவதைப் போல இருக்கிறது. வெயில் அடிக்கிறதுன்னு எல்லாம் எழுதி வைக்க வேண்டியதுதானே..!! அப்பத்தான் historyல இதெல்லாம் strongஆ record ஆகும்.” என்று சொல்ல, “அதையும் எழுதிருப்பேன். இடம் பத்தல. அதான் விட்டுட்டேன்.” என்று விஷ்வா தன் முகத்தை seriousஆக வைத்துக்கொண்டு சொல்ல, மீண்டும் அவளுக்கு சிரிப்புதான் வந்தது.

அவள் தன்னை கிண்டல் செய்து தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பதால் எரிச்சல் அடைந்த விஷ்வா, “இப்ப எதுக்குடி என்ன பாத்து பல்லை காட்டிட்டே இருக்க..??” என்றவன், அவளை கட்டிலில் தள்ளி அவள் மீது விழுந்தான். “ஓய் விஷ்வா.. control yourself. நான்தான் நம்ம இங்க இருந்து கிளம்பற வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசிக்கனும்னு சொன்னேன்ல.. மறந்துட்டியா நீ..?? ஒழுங்கா என்னவிட்டு தள்ளிப்போ..!!” என்று அவள் சொல்ல, “போக மாட்டேன்டி. என்ன பண்ணுவ..??” என்ற விஷ்வா முத்தம் கொடுப்பதற்காக அவளது செவ்விதழ்களை நோக்கி குனிந்தான்.

“அந்த பக்கம் போடா எருமை.. விடுன்னு சொல்றேன்ல..!! கிட்ட வராத போ.” என்ற மேகா தன் முகத்தை வேறு புறமாக திருப்பிக்கொள்ள, “நீ சொன்னா நான் போகணுமா..?? அப்படி எல்லாம் போக முடியாது. என்னடி பண்ணுவ..??” என்ற விஷ்வா அவள் கைகள் இரண்டையும் அவள் தலைக்கு மேலே தூக்கி பிடித்து மீண்டும் அவளை முத்தமிட முயற்சி செய்தான்.

அரவிந்திற்க்கு மெசேஜ் செய்து அவனை மொட்டை மாடிக்கு வர சொன்ன நிலா, “நீ என்னதான் நெனச்சிட்டு இருக்க அரவிந்த்..?? என்னமோ பெரிய இவனாட்டம் எனக்கு propose பண்ணீல.. அதோட எல்லாம் முடிஞ்சுதா..?? நாளைக்கு என்ன பொண்ணு பாக்க வராங்க. அப்பா இந்த விஷயத்துல ரொம்ப சீரியஸா இருக்காரு. அப்படியே அடுத்தடுத்து உறுதி பேசுறது, நிச்சயதார்த்தம் பண்றதுன்னு ஒவ்வொண்ணா நடந்த கடைசியில கல்யாணம் முடிஞ்சுரும். நீ இப்படியே ஓரமா நின்னு நடக்கிறது எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்க போறியா..??” என்று அவனிடம் கோபமாக கேட்க,

“சும்மா எதுவும் தெரியாம நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பேசாத நிலா. நான் நம்மள பத்தி சொல்லி பாஸ்கிட்ட help கேட்க காலையிலயே try பண்ணேன். நான் அவரை பார்க்க போனா, அங்க அவர் உங்க அப்பாகிட்ட உன்ன நாளைக்கு பாக்க வரப்போற மாப்பிள்ளைய பத்தி சீரியஸா discuss பண்ணிட்டு இருக்காரு. அவர் என்ன இருந்தாலும் இந்த வீட்டு மாப்பிள்ளை. இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு தானே support பண்ணுவாரு.. அதான் என்ன பண்றதுன்னு தெரியாம நான் திரும்பி வந்துட்டேன். பட் வந்ததுல இருந்து நானும் என்ன பண்ணலாம்னு என் மண்டைய ஒடச்சு பல விதமா யோசிச்சு பாத்துட்டேன். எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னும் தெரியலடி. நீதான் ரொம்ப தெளிவான ஆளாச்சே.. நீயே என்ன பண்ணனும்னு சொல்லு. என் உயிரே போனாலும் பரவால்ல. உனக்காக நான் அதை பண்றேன்.” என்றான் அரவிந்த்.

மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்து பார்த்த வெண்ணிலா “Are you sure..?? நான் ஏதாவது சொன்னதுக்கு அப்புறம்.. பேச்சு மாறமாட்டியே..!!” என்று கேட்க,

“அட.. மாறமாட்டேண்டி நம்பித்தொல. இந்த மாதிரி விஷயத்துல கூட நீ என்னை நம்ப மாட்டேங்குற. அப்புறம் எந்த நம்பிக்கைல நீ என்ன லவ் பண்ற..?? Loveஓட base ஏ trust தான் நிலா. என்ன ஆனாலும், யார் என்னை எதிர்த்தாலும் நான் உனக்காக இருப்பேன்னு நீ என்ன நம்பணும்.” feel செய்து உருக்கமாக சொன்னான் அரவிந்த். “சரி நம்பறேன். நீ என்கூட வா.” என்ற நிலா அவன் கையை பிடித்து இழுத்து எங்கேயோ அவனை அழைத்து சென்றாள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured