Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 129

மூர்கனின் காதலி CH 129

by Thenaruvi Tamil Novels
55 views

அத்தியாயம் 129

மேகாவுடன் அவளது ரூமிற்கு சென்ற விஷ்வா “நீ போய் refresh ஆகிட்டு வா. நம்ம சாப்பிட எங்கையவது வெளிய போகலாம்.” என்று சொல்ல, “நான் மறுபடியும் உன் கூட எங்கேயும் வர மாட்டேன் போ. எனக்கு சாப்பாடுக்கூட வேண்டாம். எனக்கு இருக்கிற tiredக்கு தூங்குனா போதும்னு தான் இருக்கு. நான் போய் தூங்குறேன். Good night.” என்ற மேகா பொத்தென கட்டிலில் விழுந்தாள்.

“எந்திரிடி சாப்பிட்டு படு. அப்பவே பசிக்குதுன்னு சொன்னில..!!” என்ற விஷ்வா அவள் கையை பிடித்து இழுக்க, “என்ன விடு.. என்ன விடு விஷ்வா ப்ளீஸ்.. அதான் ‌tiredஆ இருக்குன்னு சொல்றேன்ல உனக்கு புரியாதா..??” என்ற மேகா சினுங்கினாள்.‌

“இவகிட்ட பேசிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.” என்று நினைத்த விஷ்வா அவளை குண்டுகட்டாக தூக்கி தன் தோள்களில் போட்டுக்கொண்டு பாத்ரூமை நோக்கி செல்ல, அப்போதும் “என்ன விடு.. விடுடா விடு. எரும மாடு..!! ம்ம்ஹேம்ம்..!!” என்று சினுங்கிய மேகா தொடர்ந்து அவன் முதுகில் சரமாரியாக அடித்தாள். அந்த எரிமலைக்கு அவளது அடிகள் எல்லாம் சிறு கற்களாக தெரிய, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவளுடன் பாத்ரூமிற்குள் நுழைந்த விஷ்வா அவளது ஆடைகளை வலுக்கட்டாயமாக அவன் மீது இருந்து அகற்றிவிட்டு தனது ஆடைகளையும் கழட்டி எறிந்தவன், அவளுடன் சேர்ந்து குளித்தான்.

பின் அவளை ஒரு பெரிய தூண்டில் சுற்றி தூக்கிக் கொண்டு வெளியில் வந்து அவனே அவளுக்கான ஆடைகளை தேர்ந்தெடுத்து அதை அவளுக்கு போட்டுவிட, அவர்களுக்குள் இது மாதிரியான விஷயங்கள் நடப்பது புதிது என்பதால் அத்தனையையும் ரசித்த மேகா, “நெசமாவே என் robot மண்டயனுக்கு heart, kidneyன்னு எல்லாமே வந்துருச்சு போல.. அதான் இவன் என்ன இப்படி அழகா குழந்தை மாதிரி பார்த்துக்கிறான்.‌ I love this Vishwa, The Robot. Version 2.0.” என்று நினைத்து சந்தோஷப்பட்டாள்.
விஷ்வா சொன்னதை போலவே அவளை அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள famous restaurant ஒன்றிற்கு சென்றான். அங்கே தனக்கு பிடித்த உணவு வகைகளை எல்லாம் ஆர்டர் செய்து உண்டு மகிழ்ந்தாள் மேகா.

பின் அவளுடன் அங்கிருந்து காரில் கிளம்பிய விஷ்வா, “உனக்கு என்ன வேணுமோ கேளு. இல்ல உனக்கு வேற ஏதாவது புதுசா பெருசா பண்ணனும்னு ஆசை இருந்தா சொல்லு. எதுவா இருந்தாலும் அத இன்னிக்கே பண்ணிடலாம்.” என்று சொல்ல, சில நொடிகள் அமைதியாக இருந்த மேகா, “எனக்கு எதுவுமே கேட்கணும்னு தோணலையே விஷ்வா. Actually I am done today. உன் கூட நம்ம வீட்டுக்கு போய் நிம்மதியா படுத்து தூங்குனா போதும்னு இருக்கு. எனக்கு வேற எதுவும் வேண்டாம்.” என்றாள்.‌
“சரி, சும்மாவாவது ஏதாவது பேசிட்டே வாடி. நீ அமைதியா இருந்தா ஏதோ மாதிரி இருக்கு.” என்று அவன் சொல்ல, ஏதோ ஞாபகம் வந்தவளாக.‌.. “ம்ம்ம்.. நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னு நெனச்சேன் மறந்துட்டேன்.” என்று மேகா சொல்ல, “அதான் இப்ப ஞาபகம் வந்திருச்சே.‌.. என்னன்னு சொல்லு.” என்றான் அவன்

“நான் உன்ன லவ் பண்றேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது.‌..??” என்று ஆர்வமாக அவள் கேட்க, “அதுவா.. அன்னைக்கு நீ என்ன ஹோட்டல் ரூம்ல திட்டிட்டு போனது எனக்கு அரைகுறையா ஞாபகம் இருந்துச்சு. And அங்க இருந்த decorations, மகேஷ் நீ எனக்காக surprise plan பண்ணத பத்தி சொன்னது, அப்புறம் உன் diary..!!” என்றான் விஷ்வா.

அவன் சொன்னதைக் கேட்டு ஷாக்கானா மேகா, “What.. என் diaryஆ..?? என் permission இல்லாம அதை எடுத்து படிச்சிட்டியா நீ..?? நான் அதுல லூசுத்தனமா கண்டதை எழுதி வைத்திருப்பேனே..!! எல்லாத்தையும் படிச்சிட்டியா..??” என்று கேட்க,

“ம்ம்ம்.. lastஆ டேய் மெட்டல் மண்டையா.‌.. I love you so much. ஏன் உனக்கு என் லவ் புரிய மாட்டேங்குது..?? ஒழுங்கு மரியாதையா நீயும் என்னை லவ் பண்ணு. இல்லனா உனக்கு tata bye bye சொல்லிட்டு Hrithik Roshan மாதிரி வேற எவனாவது ஒரு handsomeஆன பையனா பாத்து அவன கரெக்ட் பண்ணி settle ஆயிடுவேன்! அப்புறம் மேகா.. மேகான்னு சொல்லிட்டு நடுத்தெருவுல நீ பைத்தியம் பிடிச்சு சுத்திட்டு இருப்ப பாத்துக்கோன்னு எழுதி வச்சிருந்தியே.. அது எல்லாத்தையும் ஒன்னு விடாம படிச்சுட்டேன். And you know what.. it was so interesting.” என்று சொல்லிவிட்டு விஷ்வா கிண்டலாக அவளை பார்த்து சிரிக்க, தன் முகத்தை மூடிக்கொண்டு விரல்களின் ஓட்டை வழியாக அவனைப் பார்த்த மேகா, “நமக்கு உரிமை இருக்கிறவங்ககிட்ட தானே விஷ்வா இப்படி எல்லாம் பேச முடியும்..!! எனக்கு உன்ன விட்டா யார் இருக்கா சொல்லு..?? கொஞ்சறதா இருந்தாலும் கோபப்படுறதா இருந்தாலும் எல்லாமே உன்கிட்ட தான் பண்ண முடியும். அது என்னமோ தெரியல.. உன்கிட்ட மட்டும் இப்படி sillyஆ குழந்தை மாதிரி behave பண்றது எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கு. உன்க்கூட இருந்தாலே எனக்கு naturalஆவே அப்படித்தான் இருக்க தோணுது.” என்றாள்.

கார் ஓட்டியபடி ஓரக்கண்ணால் அவளைப் பார்த்து குறும்பாக சிரித்த விஷ்வா “பண்ணு.. பண்ணு.. உனக்கு என்ன தோணுதோ பண்ணு. உன்னை யாரு கேட்கப் போறா..??” என்று சொல்ல, “அதானே எனக்கு என் புருஷன் support இருக்கும்போது, என்னை கேள்வி கேட்கிற தைரியம் யாருக்கு இருக்க போகுது..?” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் அவள்.

இப்படியே அவர்கள் பேசியபடி மீண்டும் வீடு சென்று சேர்ந்தார்கள். மேகாவே மீண்டும் சென்னை செல்ல விரும்புவதால் அனைவரிடத்திலும் பொதுவாக விஷ்வா “நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு eveningஏ சென்னை கிளம்பறோம்.” என்று சொல்ல,

“இருங்க தம்பி. நம்ம வெண்ணிலாவுக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு. அவங்க நாளைக்கு காலையில இவள பொண்ணு பாக்க நம்ம வீட்டுக்கு வர்றாங்க. இந்த நேரத்துல எங்க வீட்டு பெரிய மாப்பிள்ளை நீங்க ஊருக்கு கிளம்பி போறது நல்லா இருக்கா…?? இங்க ஒரு ரெண்டு நாள் இருந்து என் பொண்ணு கல்யாண வேலையை ஆரம்பிசசு வச்சிட்டு அப்புறமா கிளம்பி ஊருக்கு போங்க. சம்பந்த வீட்டுக்காரங்கக்கூட உங்களை பத்தி ரொம்ப பெருமையா பேசினாங்க. அவங்க வரும்போது நீங்க இங்க இருந்தா நல்லா இருக்கும்.” என்றார் காளீஸ்வரன்.

அதனால் அனைவரும் “அதுக்குள்ள இவளுக்கு கல்யாணமா…??” என்பதைப் போல காளீஸ்வரனையும், வெண்ணிலாவையும் மாறி மாறி பார்க்க; வாடிய முகத்துடன் நிலா அரவிந்தை பார்த்தாள். அவன் கலங்கிய கண்களுடன் நின்றிருக்க,  அனைவரின் முக பாவனைகளையும் நன்றாக கவனித்த விஷ்வா “ஏன் அதுக்குள்ள இவளுக்கு கல்யாணம் பண்றீங்க..?? இப்பதானே இவ படிச்சிட்டு இருக்கா.. முதல்ல படிச்சு முடிக்கட்டும். அப்புறமா நல்ல மாப்பிள்ளையா கிடைச்சா கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்.” என்றான்.

“ஆமா அண்ணா. நிலா நல்லா படிக்கிற பொண்ணு. இப்ப அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சா, அவளோட studies affect ஆகும்.” என்று தன் பங்கிற்கு மேகாவும் சொல்ல, “உங்களுக்கு என்ன.. நீங்க ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்லுவீங்க. ஆனா பொம்பள புள்ளைய பெத்த எனக்கு தானே வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு! ஏற்கனவே இந்த வீட்ல இருக்கிறதுங்க எல்லாம் காதல் கல்யாணம் பண்ணிக்குச்சிங்க. அதனால ஊர்ல இருக்கிறவன் எல்லாம் பொறுப்பா எனக்கு என் புள்ளைங்கள வளர்த்த தெரியலன்னு நாக்கு மேல பல்லை போட்டு பேசிட்டு இருக்கானுங்க.. இதுல இவளும் அந்த மாதிரி காதல் கத்திரிக்கான்னு எவனையாவது இழுத்துட்டு வந்துட்டா என்னால மறுபடியும் எல்லாம் பஞ்சாயத்தில போய் நின்னு அசிங்கப்பட முடியாது. இவளுக்கு நான் பார்த்து வைத்திருக்கிற மாப்பிள்ளை தங்கமான பையன். நல்ல குடும்பம். அவரும் நல்லா படிச்சிருக்காரு. போறவு வேற என்ன வேணும்..?? ஆடி மாசம் முடிஞ்ச உடனே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிபுடலாம்னு இருக்கேன்.” என்று உறுதியாக சொல்லிவிட்டார் காளீஸ்வரன்.
“அப்போ நீ எனக்கு கிடைக்க மாட்டியா நிலா..??” என்று நினைத்து உடைந்து போன அரவிந்த் அதற்கு மேலே அங்கே நின்று நடப்பதை காண முடியாமல் கண்ணீருடன் அந்த கூட்டத்தைவிட்டு சத்தமின்றி வெளியேறினான்.

“இவர் இப்படி விடாப்பிடியா இருந்தா நம்ம என்ன பண்ண முடியும்..?? இந்த நிலாவும் அரவிந்த லவ் பண்ற மாதிரி தான் தெரியுது. அவங்க அப்பா அவ கல்யாணம் பேச்சை எடுத்த உடனே அவ முகமே மாறிடுச்சு.” என்று நினைத்த விஷ்வா கேள்வியாக மேகாவை பார்க்க, “இப்போ பொண்ணு பாக்க தானே வர்றாங்க.. விடுங்க என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசத்துக்கு மேல இருக்கு. அதுக்குள்ள ஏதாவது பண்ணி இந்த கல்யாணத்தை stop பண்ணிடலாம்.” என்று அவன் காதோரம் கிசுகிசுத்தாள் அவள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured