Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 196

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 196

by Thenaruvi Tamil Novels
67 views

அத்தியாயம் 196: வருணின் விபரீத முடிவு (பார்ட் 1)

வருண்: “இப்ப அவ எங்க மா இருக்கா…??” என்று பதட்டமான குரலில் கேட்டான். 

க்ரிஷா: “இப்ப அவங்க இருக்கிற லொகேஷன் நாராயணன் பேலசுக்கு  1 கிலோ மீட்டர் சரௌண்டிங்ல தான் காமிக்குது. சோ நீங்க யாராவது அங்க சீக்கிரம் போயிட்டு உங்களோட லைவ் லொகேஷன் ஐ எனக்கு ஷேர் பண்ணுங்க. அத வச்சு உங்களுக்கு எந்த டைரக்ஷன்ல அவங்க இருக்காங்கன்னு நான் அக்யூரேட்டா செக் பண்ணி சொல்றேன். சீக்கிரம் போங்க. நான் லைன்லயே வெயிட் பண்றேன்.” என்றாள்.

அதனால் வருணும் ஹரியும் தங்களுடைய கார் ஐ திருப்பிக் கொண்டு வேகமாக நாராயணன் பேலஸ் ஐ நோக்கி விரைந்தனர். செல்லும் வழியிலேயே அங்கு இருந்த தன்னுடைய ஆட்களுக்கு ரித்திகா அங்கே தான் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாக இன்பார்ம் செய்த வருண், அவளை தேடுமாறு உத்தரவிட்டான். இன்னொரு பக்கம் அனைவரின் கண்களிலும் மண்ணை தூவி விட்டு ரித்திகாவை அடைத்து வைத்து இருக்கும் இடத்திற்கு வேகமாக வந்து கொண்டு இருந்தான் பிரவீன்.

வருணின் ஆட்கள் நாராயணன் பேலஸ் ஐ சுற்றி அங்குலம் அங்குலம் ஆக தேடிக் கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள் சந்தேகம் படும் விதமாக எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வருண் தன்னுடைய போனில் க்ரிஷா உடனும், சிவாவின் போனில் தன் ஆட்களுடனும்  மாறி.. மாறி..  பேசி கொண்டு இருந்தான். இதற்கிடையில் அவனுடைய கார் நாராயணன் பேலசை நோக்கி சீறி பாய்ந்தது. ஹரி சற்று அருகிலேயே இருந்ததால் வருண் அங்கே வருவதற்கு முன் அங்கு வந்தடைந்தான். 

அதனால் அவன் வருணின் இடத்தில் இருந்து அனைவரையும் வழி நடத்த தொடங்கினான். வெளியில் இருந்து மொத்த இடத்தையும் அவர்கள் சல்லடை போட்டு சலித்து பார்த்து விட்டனர். அவர்களுக்கு கிடைத்த சி. சி. டிவி. கேமரா ஃபுட்ஏஜ்களையும் செக் செய்து பார்த்து விட்டனர். ஆனால் அவர்களால் ரித்திகாவை  கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு இடையில் தொலைவில் இருந்து ஹரி வந்ததையும் அங்கே வருணின் ஆட்கள் சல்லடை போட்டு சலித்துக் கொண்டு இருப்பதையும் கவனித்த பிரவீனின் ஆட்கள் அவனுக்கு கால் செய்து, “பாஸ் ஏதோ தப்பு நடந்துருச்சு. வருண் அந்த பொண்ணு இருக்கிற இடத்தை மோப்பம் புடிச்சிட்டான்னு நினைக்கிறேன். ஹரியும் வருனோட ஆட்களும் சேர்ந்து நாராயணன் பேலஸ் ஐ சுத்தி அந்த பொண்ண தேடிக்கிட்டு இருக்கானுங்க. இப்ப நீங்க இங்க வர்றது சேஃப் இல்ல. நாங்க முடிஞ்சா அந்த பொண்ண வேற இடத்துக்கு மாத்துறோம்.” என்று சொல்ல, 

அதைக் கேட்டு கடப்பான பிரவீன் தன் ஓட்டி கொண்டு இருந்த காரிம் ஸ்டேரிங் ஐ கோபத்தில் வேகமாக குத்தியவன் மீண்டும் தன்னுடைய காரை திருப்பிக் கொண்டு தன்னுடைய வீட்டிற்க்கே செல்ல தொடங்கினான். வருனும் அந்த லொகேஷன் ஐ வந்தடைந்து விட்டான். திடீரென்று ரித்திகாவிடம் இருந்து க்ரிஷாவிற்கு வந்து கொண்டு இருந்த சிக்னல் கட்டாகிவிட்டது. அதனால் ஹரி வேகமாக அங்கு வந்திருந்தும் ஒரு பயணம் இல்லாமல் போய்விட்டது. க்ரிஷா மீண்டும் அந்த சிக்னலை பெரும் முயற்சியில் இருந்தாள். 

வருண் சில நிமிடங்கள் அமைதியாக நின்று யோசித்து பார்த்தான். ஒரு வேளை இந்த சரவுண்டிங் -க்குள் ரித்திகாவை அவர்கள் கடத்தி வைக்க வேண்டும் என்றால் அதற்கு தோதுவான அருகில் உள்ள இடங்கள் என்னென்ன என்று யோசித்துப் பார்த்தான். அப்படி அவன் யோசித்துப் பார்த்ததில் பாழடைந்து போன ஒரு பில்டிங், ஒரு ரைஸ் மில், அந்த கோழிப் பண்ணை, பாதி கட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு பில்டிங் ஆகிய இடங்கள் அவனுடைய கணிப்பிற்குள் வந்தன. அதனால் தன்னுடைய ஆட்களை அழைத்த வருண், அந்த இடங்களில் சந்தேகப்படும் படியான ஆள் நடமாட்டங்கள் ஏதேனும் இருந்தனவா என்று விசாரித்தான். 

சில நொடிகள் யோசித்து பார்த்த வருணின் ஆட்கள் அப்படி எதையும் தாங்கள் காணவில்லை என்று அவனிடம் சொல்லி விட்டனர். அதை வருணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை கண் முன்னே இருந்தும் கவனிக்காமல் விட்டதை போல் உணர்ந்தான் வருண். அதனால் இந்த ஒரு கிலோ மீட்டர் சரவுண்டிங்கில் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது ஒன்றும் தனக்கு பெரிய விஷயம் இல்லை என்று நினைத்தவன், தன்னுடைய ஆட்களை வைத்து அந்த முழு இடத்தையும் சுற்றிவளைத்தான். அதனால் பிரவீனின் ஆட்களால் ரித்திகாவை  வேறு இடத்திற்கு மாற்ற முடியவில்லை. 

வருணை வேவு பார்ப்பதற்காக அங்கே சுற்றித்திரிந்த பிரவீனின் ஆட்கள் இனியும் தாங்கள் இங்கே இருந்தால் தங்களுடைய உயிருக்கு ஆபத்து என்று நினைத்தவர்கள், உள்ளே இருக்கும் தங்களுடைய ஆட்களை எச்சரிக்காமல் கூட அங்கு இருந்து தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைத்து தப்பித்து ஓடிச் சென்றுவிட்டனர்.

க்ரிஷாவின் தொடர் முயற்சியால் சில நிமிடங்களில் மீண்டும் அவள் ரித்திகா இருக்கும் லொகேஷனை கண்டுபிடித்தாள். இப்போது வருண் லைவ் லொகேஷனும் அவளிடம் இருப்பதால், அவன் இருக்கும் இடத்தில் இருந்து ரித்திகா எத்தனை மீட்டர் தொலைவில் இருக்கிறார் என்பதை க்ரிஷாவால் துல்லியமாக இப்போது சொல்ல முடிந்தது. அதனால் ஒரு நொடியும் தமதிக்காமல் வருணிற்கு  கால் செய்தாள் க்ரிஷா. 

வருண்: “அகைன் சிக்னல் கெடச்சதா..?? எனக்கு என்னமோ நம்ம டிலே பண்ற ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு ஏதோ ஒரு பெரிய ஆபத்து வந்துரும்ன்னு தோனிகிட்டே இருக்கு.” என்று அவசரமான குரலில் கேட்டான். 

க்ரிஷா: “அப்படி எல்லாம் எதுவும் ஆகாது ப்ரோ. நீங்க அவங்க பக்கத்துல தான் இருக்கீங்க. உங்க லொகேஷன்ல இருந்து 500 மீட்டர் ரேடியஸ்ல தான் அவங்களோட லொகேஷன் காமிக்குது. சோ நீங்க நல்லா சர்ச் பண்ணி பாருங்க. சிக்னல் போய் வர்றத பாத்தா அது ஏதாவது ஒரு இன்டீரியர் பிலேசா இருக்கலாம். நான் லைன்லயே இருக்கேன் நீங்க மூவ் பண்ணிக்கிட்டு இருங்க.  எக்ஸாக்டான லொகேஷன் ஐ கண்டுபிடிச்சிடலாம்.” என்று அவளும் பதட்டமான குரலில் சொன்னாள். 

அவள் சொன்னதைக் கேட்டு கையில் துப்பாக்கியுடன் வருண் தன்னுடைய ஆட்களை கூட்டி கொண்டு அவன் சந்தேகத்திற்குரிய இடங்கள் என்று எதை எல்லாம் நினைத்தானோ அதன் அருகே சென்றான். க்ரிஷாவும் அவனுக்கு தொடர்ந்து வழி சொல்லிக் கொண்டே இருந்தாள். வருண் அந்த கோழி பண்ணையின் அருகே வர, உற்சாகமான குரலில் அவனை அழைத்த க்ரிஷா, “எஸ் ப்ரோ அங்க தான். கரெக்டா உங்களுக்கு பக்கத்துல 100 மீட்டர்ஸ் ரேடியஸ்ல தான் ரித்திகா இருக்காங்க.” என்று சொல்ல, தனக்கு முன்னே இருந்த கோழி பண்ணையை கூர்மையான விழிகளுடன் பார்த்தான் வருண். 😒 🤨

அவனுடைய ஆழ்மனதிற்கும் ரித்திகா இங்கே தான் இருக்கிறாள் என்று தோன்றியது. அதனால் தன்னுடைய ஆட்களை வைத்து அந்த இடத்தை சுற்றி வளைத்தான். அந்த கோழி பண்ணையில் உள்ளே ரித்திகா இன்னும் அதே அறையில் சுய நினைவு இன்றி கட்டிலில் மயங்கி கிடந்தாள். அப்போது ரித்திகாவின் அறைக்கு வெளியே அதுவரை காவலுக்கு நின்றவன், மீண்டும் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

அழகு பதுமையாய் கட்டிலில் கிடப்பவளை பார்த்துவிட்டு அவனுடைய ஆண்மை அவனை அமைதியாக இருக்க விடவில்லை. அதனால் பிரவீன் வருவதற்கு முன் தன்னால் முடிந்த வரை அவளுடைய பெண்மையை ருசித்து பார்க்க விரும்பியவன், ரித்திகாவின் அருகே சென்றான். ரித்திகாவின் செவ்விதழ்கள் அவனை தன் அருகே வா வா என்று அழைப்பதை போல் அவனுடைய உள்ளுணர்வு அவனை உசுப்பேத்தி கொண்டு இருந்தது. 😍 😘 😘

அதனால் பிரவீன் இங்கே வந்து தன் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்தவன், ரித்திகாவின் அருகே சென்று அவள் மீது படர்ந்து அவளுடைய செவ்விதழை சுவைக்க தொடங்கினான். 😚 😘 இவை எதைப்பற்றியும் அறிந்திறாத ரித்திகா, அசைவின்றி மயங்கி கிடந்தாள். வருண் அந்த கோழி பண்ணைக்குள் சென்றான். அது வெளியே இருந்து பூட்டப்பட்டு இருந்தது. இருப்பினும் தயக்கம் இன்றி அதை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அந்த இடம் துர்நாற்றம் வீசுவதாவும், விசாலமானதாகவும், இருள் நிறைந்ததாகவும் இருந்தது. வருனுடன் வந்த ஹரி கைகளில் துப்பாக்கியுடன் அவனை தீர்க்கமாக பார்த்தவன், “நான் இந்த பக்கம் போறேன். நீ அந்த பக்கம் போ.” என்று சொல்லிவிட்டு தன்னுடன் சில ஆட்களை கூட்டிக்கொண்டு அந்த கோழி பண்ணையில் ரித்திகாவை  தேடி புறப்பட்டான். 

வருண் கூர்மையான  விழிகளுடன் கையில் துப்பாக்கியை இறுக்கிப்பிடித்து அதை தன் முன்னே நீட்டியபடி உள்ளே சென்றான். அங்கே கோழிகளும் கோழி வளர்ப்பிற்காக வைக்கப்பட்டு இருந்த சில பொருட்கள் மட்டும் தான் இருந்தது. அதை தவிர சந்தேகம் படும்படி வேறு எதையும் அவனால் காண முடியவில்லை. ஆனால் க்ரிஷாவோ உறுதியாக, “அண்ணா நல்லா பாருங்க. அவங்க அங்க தான் இருக்காங்க. நீங்க இருக்கிற லொகேஷனும், அவங்க இருக்குற லொகேஷனும், சேம் தான்.” என்றாள். அதனால் வருண் தொடர்ந்து முன்னேறினான்.

வருணின் வலது பக்கம் ஒரு பூட்டப்பட்ட பழைய கதவு இருந்தது. அதை தன்னுடைய ஒரு காலால் வெறி கொண்டு உதைத்து திறந்தான் வருண். அந்த கதவு பலத்த சத்தத்துடன் கீழே விழ, அதனால் திடக்கிட்ட பிரவீனின் ஆட்கள் அலர்ட் ஆகி, உள்ளே வந்தவர்களை தாக்குவதற்காக கையில் ஆயுதங்களுடன் வேகமாக ஓடி வந்தனர். அவர்களை எரித்து விடும் பார்வை பார்த்த வருண் தன் கையில் இருக்கும் துப்பாக்கியை வைத்து எளிதாக இவர்களை கொன்றுவிட்டால் ரித்திகாவை  கடத்தியது யார் என்று தனக்கு தெரியாமலே போய்விடும் என்று நினைத்தவன், தன் கையில் இருந்த துப்பாக்கியை தன் இடுப்பில் சொருகிவிட்டு சிவா உடன் இணைந்து தன்னை நோக்கி கத்தியால் குத்த வருபவனை அடிக்க சீறி பாய்ந்தான். 

வருணை நோக்கி வேகமாக வந்தவன் தன் கையில் இருந்த கத்தியை வருணின் வயிற்றில் இரக்க முயல, அவனுடைய கையை இறுக்கி பிடித்து திருப்பிய வருண், தன் அருகே இருந்த சுவற்றின் மீது அவனை தள்ளி அதன் மீது அவனை வைத்து அழுத்தி தன்னுடைய இன்னொரு கையால் அவனுடைய தலை முடியை கொத்தாக பிடித்து அவனுடைய தலையை சுவற்றின் மீது வைத்து பலமாக மீண்டும் மீண்டும் இடித்தவன், “ரித்திகா எங்க டா..??? யார் சொல்லி நீங்க அவளை கடத்துனீங்க..?? சொல்லு.. வாய திறந்து ஏதாவது சொல்லு.” என்றவன் மீண்டும் மீண்டும் அவனை தாக்கிக் கொண்டே இருந்தான். 😡 😤 🔥

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured