அத்தியாயம் 183: இன்று நிச்சயதார்த்தம்
இன்று நிச்சயதார்த்தம்..
தான் அவனுக்கு கொடுத்த வேலையை கௌத்தம் சொதப்பிவிட்டதால் அவனை கொல்ல திட்டமிட்ட பிரவீன், ஆட்களை ஏவி விடுகிறான். தன்னை கொல்ல வருபவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிக் கொண்டு இருக்கிறான் கௌத்தம். அப்போது அங்கே வந்த சிவா அவனை காப்பாற்ற, சிவாவை கட்டி பிடித்து கொண்டு கதறி அழுத கௌத்தம் அவனிடம் மன்னிப்பு கேட்கிறான். 😥 🤗
கௌத்தமை தன் மீது இருந்து பிரித்த சிவா, “உனக்கு யார்கிட்டயாவது சாரி கேட்கணும்னு தோணுச்சுன்னா, அதை போய் நம்ம வருண் சார் கிட்ட கேளு. அவருக்கு இன்னமும் உன் மேல பாசம் இருக்கு டா. அதான் நீ இவ்ளோ பண்ணியும் நீ உண்மைய சொன்னதுனால அவர் உன்னை மன்னித்து விட்டுட்டாரு. அவர் மட்டும் ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானே உன்னை கொன்னு இருப்பேன். இப்பயும் அவர் தான் பிரவினால உனக்கு ஏதாவது பிரச்சனை வரத்துக்கு சான்ஸ் இருக்குன்னு யோசிச்சு எங்கள, உனக்காக இங்க அனுப்பிவச்சு இருக்காரு. அந்த மனுஷனுக்கு போய் உனக்கு எப்படிடா துரோகம் பண்ண மனசு வந்துச்சு…???” என்று கடுமையான குரலில் கேட்டான் சிவா.
சிவா சொன்னதை கேட்டு வாய் அடைத்து போய் நின்று விட்டான் கௌத்தம். அவன் தன் மீது இருக்கும் நட்பின் காரணமாக சிவா தான் தன்னை காப்பாற்ற வந்திருப்பான் என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்க, வருண் தன்னை மன்னித்து சிவாவை தனக்காக அனுப்பி இருக்கிறான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அதனால் சிவாவின் சட்டை காலர் ஐ இறுக்கி பிடித்த கௌத்தம், “என்ன டா சொல்ற நெஜமா அவர் தான் உன்னை அனுப்பினாரா..??” என்று ஆச்சரியமான குரலில் கேட்டான்.
தன்னுடைய சட்டை காலரில் இருந்து அவனுடைய கைகளை விளக்கி விட்டு தன்னுடைய சட்டையை சரி செய்து கொண்ட சிவா, “ஆமா அவர் தான் சொன்னாரு. அவர என்ன.. நீ உன்ன மாதிரியான ஆளுன்னு நினைச்சியா…?? அவருக்கு புடிச்ச அவங்களுக்காக அவர் என்ன வேணாலும் செய்வாரு. அவர் உனக்காக என்ன செய்யல சொல்லு…!!!
நீ அவருக்கு போய் ஏன் டா இப்படி எல்லாம் பண்ண..?? நீ பண்ண வேலையால அவர் கோபப்பட்டு ரித்திகாவை அடிச்சுட்டாரு தெரியுமா..??? அந்த பொண்ணு மேல தப்பு இல்லன்னு ஆயிடுச்சு. இப்போ அவருக்கு கில்டியா இருக்கும் இல்ல…!!! அதான் அவர் அந்த கோவத்துல உன்ன அடிச்சிருக்காரே தவிர, அவருக்கு உன் மேல இருந்த பாசம் குறைஞ்சு போயிடல. இப்பவாது நீ அவர புரிஞ்சுகிட்டு, ரித்திகா லைஃப்ல இருந்து போயிடு. நியூ லைப் ஸ்டார்ட் பண்ணு. இதுக்கு மேல நீ அவர் கண்ணுல பற்றாத. அதான் உனக்கு நல்லது.” என்று சொல்லி அறிவுறுத்தினான்.
சிவா சொன்னதை கேட்ட கௌத்தம், சில நொடிகள் அமைதியாக நின்று எதையோ யோசித்தான். பின் பெருமூச்சு ஒன்றை விட்டவன், “சரி டா. நான் இங்க இருந்து போய்டுறேன். என்னால வருண் சாருக்கும், ரித்திகாவுக்கும் நடுவுல இனி எந்த பிரச்சினையும் வராது. ஆல்ரெடி சென்னையில இருந்து எனக்கு ஒரு ஜாப் ஆப்பர்சுனிட்டி வந்துச்சு. நான் தான் அவளுக்காக அங்க போக வேணாம்னு அத ரிஜெக்ட் பண்ணிட்டேன். இப்ப அவளுக்காகவே அங்க போறேன். உன்னோட வருண் சார் ஐ அவள பத்திரமா பாத்துக்க சொல்லு. அண்ட் நான் அவர்கிட்ட சாரி கேட்டேன்னு சொல்லிரு.” என்றவன் அங்கு இருந்து கிளம்பினான். அவன் சேஃப் ஆக அங்கு இருந்து சென்னை செல்லும் வரை வருண் ஆட்கள் அவனுக்கு பாதுகாப்பாக இருந்தனர்.
பிரார்த்தனாவின் கல்லூரியில்….
ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்த பிராத்தனா, தன்னுடைய பெரும்பாலான நேரத்தை பிரேம் உடன் செலவிட விரும்பி அவன் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தாள். அதைக் கண்டு வயிற்று எரிச்சலிலும், மன வேதனையிலும், சூர்யா சுற்றி கொண்டு இருக்க… சூர்யாவுடன் சுற்றிக் கொண்டு இருந்த நிவேதா அவனுடன் இருந்து அவனை ஆறுதல் படுத்திக் கொண்டு இருந்தாள்.
இப்போது அவர்கள் சில புதிய ஆட்களை இந்த ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இணைத்து இருப்பதால், அவர்கள் எதில் எதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும், அதில் சிறந்தவர்களாக இருப்பவர்களை தேர்ந்தெடுக்கவும், பிரேம் பி. இ. டி. டீச்சர்களுடன் இணைந்து சிறிய சிறிய காம்படிசன்களை ஏற்பாடு செய்து இருந்தான்.
அதில் பிராத்தனா, சூர்யா, நிவேதா, என அனைவரும் கலந்து கொண்டனர். முதலில் ஆண்களை ஒரு அணியாகவும், பெண்களை ஒரு அணியாகவும், பிரித்து, ஃபுட் பால் டோர்னமெண்ட் நடத்தினர். இப்போது ஆண்களுக்கான அணியில் சூர்யாவும் பெண்களுக்கான அணியில் பிராத்தனாவும், நிவேதாவும், இருந்தனர். சூர்யா எப்போதும் பிரார்த்தனாவையே சைட் அடித்துக் கொண்டிருப்பதால் இவளை பற்றி எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த நிவேதா, அவளிடம் சிறிது சிறிதாக பேச்சு கொடுக்க முயன்றாள்.
ஆனால் பிரேம் இன் மீது தன்னுடைய ஒட்டு மொத்த கவனத்தையும் வைத்து இருந்த பிராத்தனா, நிவேதா அல்ல அங்கு இருந்த வேறு யாரையும் அவள் கண்டு கொள்ளவில்லை. சில நிமிடங்களில் அந்த காம்பெடிஷன் தொடங்கியது. இந்தப் போட்டி பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் ஆக இருந்தது. அதனால் இரு தரப்பினரும் மாறி மாறி விளையாடிக் கொண்டு இருந்தனர். பிராத்தனா, இப்போது தான் இவற்றை எல்லாம் கற்றுக் கொள்கிறாள் என்பதால் அவளால் சிறப்பாக விளையாட முடியவில்லை. ஆனால் சிறு வயதில் இருந்து இந்த விளையாட்டை நன்கு கற்று வைத்து இருந்த சூர்யா, சிறப்பாக விளையாடினான். பிராத்தனாவின் குழுவில் இருந்த நிவேதாவும், மறுமுனையில் இருந்து சூர்யாவிற்கு சமமாக விளையாடிக் கொண்டு இருந்தாள்.
ஆக மொத்தத்தில் இந்த போட்டிகளில் பிரேம் இன் கவனத்தையும் ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்தது சூர்யாவும், நிவேதாவும், தான். அவருடைய கவனத்தையும் ஈர்ப்பையும் பெற வேண்டும் என்று நினைத்த பிராத்தனா, தான் இங்கே வந்தது மட்டும் அல்லாமல் தன்னுடைய நண்பர்களையும் இங்கே அழைத்து வந்திருந்தாள். ஆனால் அந்த நாள் இறுதி வரையிலும் அவளால் அவள் நினைத்ததை செய்து முடிக்க முடியவில்லை.
அதனால் சோகமாக இருந்த பிராத்தனாவிற்கு திடீரென்று தன்னுடைய அம்மா தன்னிடம் கொடுத்த வருண் மற்றும் ரித்திகா நிச்சயதார்த்தம் மற்றும் திருமண அழைப்பிதழ் பற்றி ஞாபகம் வர, அதை கொடுக்கும் சாக்கில் பிரேமிடம் பேசிய பிராத்தனா, திருமணத்திற்கும் நிச்சயதார்த்தத்திற்கும் கண்டிப்பாக அவனை வரும்படி சொல்லி அன்பு கட்டளை இட்டுவிட்டு அவன் வருவான் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாக தன்னுடைய வீட்டிற்கு சென்றாள்.
இரவு 10:00 மணி….
அரை மனதாக சாப்பிட்டு முடித்துவிட்டு தன்னுடைய அறையில் இருந்த கட்டிலில் வந்து படுத்தாள் ரித்திகாவிக்கு . அப்போது செண்பகத்திடம் இருந்து அவளுக்கு ஒரு கால் வந்தது.
செண்பகம்: என்ன மா ரித்திகா தூங்கிட்டியா..?? நான் ஒன்னும் உன்னை டிஸ்டர்ப் பண்ணடலையே…!!!
ரித்திகா: “இல்லை அம்மா. நான் இப்ப தான் சாப்பிட்டு வந்தேன். நீங்க சாப்டீங்களா..??? சித்தார்த் சாப்பிட்டானா..???” என்று அக்கறையாக விசாரித்தாள்.
செண்பகம்: “நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் மா. சித்தார்த் இந்நேரம் தூங்கவே போயிருப்பான். இன்னைக்கு நடந்த கலவரத்துல நான் உங்களோட ப்ரீ வெட்டிங் போட்டோ எல்லாம் வந்தத பத்தி உன்கிட்ட சொல்லவே மறந்துட்டேன். அது எல்லாத்தையும் நான் உனக்கு whatsapp -ல அனுப்பி வச்சிருக்கேன்ன் பாரு. எல்லா போட்டோசுமே ரொம்ப நல்லா வந்திருக்கு மா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லாமே என்னோட மனசு படி நல்லபடியா இனிமே நடக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு வந்துருச்சு.
எனக்கு ஒரே ஒரு ஆசை தான் மா, நான் போய் சேர்ரதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் மனசு ஒத்து போய் சந்தோசமா வாழ்றத நான் கண் குளிர பாக்கணும்.” என்று உருக்கமான குரலில் சொன்னாள்.
ரித்திகா: அவளுக்கு தானும், வருண், மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்வோம் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை. இருந்தாலும் செண்பகத்தை அவள் கஷ்டப்படுத்த விரும்பாததால், “நீங்க எங்களை நினைச்சு கவலைப்படாதீங்க மா. எல்லாமே நீங்க ஆசைப்பட்ட மாதிரி நல்ல படியா நடக்கும்னு நம்புங்க.” என்று சொன்னாள்.
செண்பகம்: “சரி மா. இதுவரைக்கும் நடந்ததில நல்ல விஷயங்களை மட்டும் ஞாபகத்துல வச்சுக்கோ. தேவை இல்லாதத எல்லாத்தையும் யோசிச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காத. இப்போ டைம் இருந்தா அந்த போட்டோஸ் எல்லாத்தையும் பாரு. இல்லனா சீக்கிரம் தூங்கிடு. அப்ப தான் நாளைக்கு ஃபேஸ் பாக்க பிரஷ்ஷா இருக்கும். பங்க்ஷன் சாயங்காலம் தான் நடக்குதுன்னாலும், பொறுமையா கிளம்பி ஒரு 11 மணிக்கு மேல மண்டபத்துக்கு போயிடலாம். அதனால நிறைய டைம் இருக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடு.” என்றவள், அந்த தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டாள்.
செண்பகத்திடம் பேசிவிட்டு தன்னுடைய கையில் இருந்த மொபைல் போனை தூக்கி அந்த கட்டிலின் ஒரு மூலையில் போட்ட ரித்திகா, மல்லாந்து படுத்து கொண்டு சீலிங் ஐ பார்த்தாள். நாளை அவளுக்கு நிச்சயம் நடக்க இருக்கிறது என்பதை ஒரு கணம் அவளாலேயே நம்ப முடியவில்லை. இப்போது எல்லாம் புதிது புதிதாக அவளுடைய வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் அவளுக்கு ஏதோ ஒரு கனவு போல் இருக்கிறது.
அதனால் சிறிது நேரம் தன்னுடைய திருமணத்தை பற்றி யோசித்தவள், பின் வருணை பற்றி யோசித்துப் பார்த்தாள். முதலில் அவள் இது சித்தார்த்திற்காக ஏதோ பேருக்கு நடக்கும் திருமணம் என்று தான் இதை சாதாரணமாக நினைத்து இருந்தாள். ஆனால் இத்தனை நடந்ததற்கு பின் அவளால் அதை சாதாரணமாக பார்க்க முடியவில்லை. அவளுடைய மனதில் சிறிது பயம் கூட எட்டிப் பார்த்தது. ஏன் தனக்கு இந்த திருமணம் வேண்டுமா என்றெல்லாம் கூட யோசித்துப் பார்த்தாள்.
அவள் இந்த திருமணம் வேண்டாம் என்று யோசிக்கையில் சித்தார்த்தின் அழகிய குட்டி முகம் அவளுடைய நினைவில் வர, அவளுக்குள் இருக்கும் சித்தார்த்திற்கான தாய் பாசம், அவளுடைய மகனை விட்டு அவளால் இருக்க முடியாது என்று அவளுக்கு உணர்த்தியது. அதனால் ரித்திகா கண்களில் அவளுடைய மொபைல் போன் பட செண்பகம் தனக்கு அனுப்பி இருப்பதாக சொன்ன புகைப்படங்கள் அவளுக்கு ஞாபகம் வர, அதை திறந்து பார்த்தாள்.
அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் நேர்த்தியாகவும் கண்களை பறிக்கும் விதத்தில் அழகாகவும் இருந்தன. என்ன தான் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றாலும், தானும் வருணும் இப்படி ஜோடியாக நிற்கும் இந்த வகையான புகைப்படங்களை அவளுடைய கண்கள் தன்னை மீறி ரசித்துப் பார்த்தன. அவைகளை பார்த்தவுடன் உண்மை இது தான் என்று உணர்ந்துவிட்டாலோ என்னவோ தெரியவில்லைை அதனால், தன்னை அறியாமல் மொபைல் ஸ்க்ரீனில் தெரிந்த வருணின் முகத்தை தன்னுடைய விரல்களால் தொட்டுப் பார்த்தாள் ரித்திகா . அந்த ஒரு நொடியில் அவளுக்கு அவன் மீது இருந்த அனைத்து கோபங்களும் பஞ்சாய் பறந்து விட்டன.
அந்த ஒவ்வொரு போட்டோவையும் பார்க்கும்போது அவளுடைய மனதில்.. அந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டபோது நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் நிழல் படமாக ஓடியது. அது அவளுடைய முகத்தில் தானாக ஒரு சிறு புன்னகையை வர வைத்தது. பின் சில நிமிடங்களிலேயே தன்னுடைய போனை வைத்துவிட்டு நிம்மதியாக படுத்து உறங்க தொடங்கி விட்டாள் ரித்திகா.
வருணின் அறை..
தன்னுடைய அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்த வருணின் சிந்தனைகளில் ரித்திகாவை தான் நிறைந்து இருந்தாள். அப்போது அவன் எதேர்ச்சியாக தன்னுடைய அறையை சுற்றிப் பார்க்க…. அதில் புதிதாக வந்து சேர்ந்திருக்கும் மாற்றங்கள் அவனுடைய கண்களை உருத்தியது மட்டும் அல்லாமல் அவனுடைய மனதை வாட்டியது. 💔
ஜான்வின் பொருட்களால் நிரம்பிக் கிடந்த அவனுடைய அறை, இப்போது புதிய பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு அவனுக்கே அது அவனுடைய அறை இல்லை என்று தோன்றுவது போல் அவனுக்கு இருந்தது. அதனால் அவனால் அதற்கு மேல் அந்த அறையில் இருக்க முடியவில்லை. சோகமாக தன்னுடைய அறையின் கதவை திறந்து வெளியே வந்த வருண், வெளியே கார்டன் ஏரியாவிற்கு வந்தான். அந்த கார்டன் ஏரியாவில் அவனுக்கும் ஜான்விக்கும் பேவரெட்டான ஸ்பாட் ஆக ஒரு ஊஞ்சல் மாட்டப்பட்டு இருக்கும் ஒரு இடம் இருந்தது.
அதை பார்த்தவுடன் ஜான்வியுடன் அந்த ஊஞ்சலில் தான் செலவிட்டு தருணங்களை நினைத்துப் பார்த்த வருண், கணத்த இதயத்துடன் அதில் அமர்ந்தான். நேற்று நடந்த போட்டோ ஷூட்டில் வேறு அவன் இதே போன்ற ஊஞ்சலில் ரித்திகா உடன் அமர்ந்தது அவனுடைய நினைவில் வர, அதனால் எரிச்சல் அடைந்த வருண் தன்னுடைய ஜான்வி இருக்க வேண்டிய இடத்தில் இந்த ரித்திகா இப்போது வந்துவிட்டாளே என்று நினைத்து அவள் மீது கோபப்பட்டவன், சோகமாக லிவ்விங் ரூம் இருக்கு வந்து அங்கு இருந்த சோபாவில் அமைதியாக படுத்து கொண்டான்.
அவனுடைய முகத்தில் அவன் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டு சோகமும், இன்று அந்த இடத்திற்கு வேறொருவர் வர போகின்றதால்…. பெருத்த சோகத்தில் இருந்த வருண், குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டு இருந்தான். சத்தம் இன்றி அவனுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை, துடைத்துவிட்டு அவனை ஆறுதல் படுத்த கூட அங்கே ஆள் இல்லை.
இமையே இமையே விலகும் இமையே…
விழியே விழியே பிரியும் விழியே…
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கணமே…
பனியில் மூடிபோன பாதை மீது வெய்யில் வீசுமா…???
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா..???
அடி மனதில் இறங்கிவிட்டாய்…
அணு அணுவாய் கலந்துவிட்டாய் …
இப்படியே ஜான்வியைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கிய வருண் சற்று நிமிடங்களில் தன்னை அறியாமல் தூங்கி விட, ஒரு வெள்ளை நிற கவுன் அணிந்து இருந்த இளம் வயது பெண் வருணின் காலின் அருகே வந்து அமர்ந்து கொண்டு வழி நிறைந்த கண்களுடன் அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அடுத்த நாள் காலை….
இன்று வருண் மற்றும் ரித்திகாவின் நிச்சயதார்த்தம் என்பதால் நாராயணன் பேலஸ் ஏ விழாக்கோலம் பூண்டு இருந்தது. வழக்கத்தை விட அதிகமாக அந்த இடம் முழுவதும் அதிக பாடி கார்டுகள் குவிக்கப்பட்டு இருந்தனர். ரித்திகாவின் குடும்பத்தினர் காலை நேரமாக எழுந்து கிளம்பி ஷாலினியையும் தங்களுடன் கூட்டி கொண்டு நாராயணன் பேலஸ்க்கு வந்து சேர்ந்தனர்.
- நேசம் தொடரும்….
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)