அத்தியாயம் 126
காலை பொழுது அழகாக விடிந்தது. விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் சூரியன் தன் கடமையை பார்க்க time-மிற்க்கு சரியாக வந்திருந்தும் அந்த இடம் ஜிலு ஜிலுவென இருந்தது. மேகாவின் ஆடைகளை தரையில் விரித்து விஷ்வாவின் overcoatஐ தங்களது வெற்றுடலின் மீது போத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் இறுக அனைத்தபடி அவர்கள் இருவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஜன்னல் வழியாக வந்த சூரிய கதிர்கள் அவர்கள் முகத்தில் விழுந்ததால் முதலில் கண் விழித்தான் விஷ்வா.
அவன்மீது தன் உடலை குறுக்கிக் கொண்டு அவனை கட்டிப்பிடித்தபடி மேகா படுத்திருக்க, அவனது நீண்ட தலை முடி மயில் தொகை போல விரிந்து தரையில் கிடந்தது. தன் நெஞ்சில் கிடந்த மேகாவின் முகத்தை பார்த்து அழகாக புன்னகைத்த விஷ்வா அவள் கூந்தலை மென்மையாக வருட, கண்களை திறந்து அவனைப் பார்த்து “என்னை என்னடா பண்ண?” என்று கேட்பதைபோல திருதிருவென அவள் விழிக்க, “Good Morning.” என்று மென்மையான குரலில் சொன்ன விஷ்வா அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான்.
முதலில் தானும் அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்து “Good morning” என்ற மேகா அண்ணாந்து அவர்கள் இருக்கும் இடத்தை பார்த்துவிட்டு உடனே கடுப்பாகி அவனைவிட்டு பிரிந்து எழுந்து நின்றவள், “நம்ம ரெண்டு பேரும் இன்னும் இங்கதான் இருக்கோமா? இதுதான் நீ என்ன காப்பாத்தி கிழிக்கிற லட்சனமா..?? போச்சு விஷ்வா.. நம்ம இங்க நல்லா மாட்டிக்கிட்டோம்.” என்று கோபத்தில் கத்த, சூரியனின் காலை நேர தங்க நிற கதிர்கள் பட்டு அவளது ஆடையில்லா பால்நிற மேனி தகதகவென மீண்டும் மின்ன அதன் அழகை கண்டு ரசித்த விஷ்வாவிற்க்கு அவள் திட்டியது எல்லாம் தலைக்கு ஏறவே இல்லை.
“என்னடா நான் பாட்டு பேசிட்டே இருக்கேன்.. நீ பல்ல பல்ல காட்டிட்டு இருக்க..??” என்று அவள் கோபமாக கேட்க, அவளை மேலும் கீழும் பார்த்த விஷ்வா தொடர்ந்து வெட்கப்பட்டு “நீ இப்படி இருந்தா, எனக்கு எப்படி டி நீ சொல்றத கேட்டு கடுப்பாகும்..??” என்று கேட்டுவிட்டு சிரித்துக்கொண்டே இருந்தான். அப்போதுதான் தான் இருந்த நிலையை உணர்ந்த மேகா ஓடி வேகமாக அருகில் இருந்த bureauஐ திறந்து அதன் கதவிற்கு பின்னே நின்று கொண்டு, “முதல்ல என் dressஐ எடுத்துக் கொடு.” என்று தன் தலையை மட்டும் வெளியே நீட்டி கேட்டாள்.
தனது ஆடைகளை எடுத்து அணிந்து கொண்ட விஷ்வா “அன்பா.. மரியாதையாக கேளு. அப்பதான் எடுத்து தருவேன்.” என்று சொல்ல, “டேய்.. ஓவரா பண்ணாதடா. நான் வெளியே வந்தேன்னு வையேன்.. அவ்ளோதான் நீ..!!” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு சொன்னாள் அவள். “என்னடி கொழுப்பா..?? உன்னை மரியாதையா தானே கேட்க சொன்னேன்.. நீ என்ன என்னை திட்டிக்கிட்டே இருக்க..?? நான் நல்ல moodல இருக்கும்போதே ஒழுங்கா மரியாதையா கேட்டு உன் dressஐ வாங்கிக்கோ. இல்லனா differentஆ வேற எதையாவது பண்ண சொல்லி உனக்கு punishment குடுத்துருவேன் பாத்துக்கோ..!!” என்ற விஷ்வா அவள் ஆடைகளுடன் ஒரு chiarல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
“ஐயோ.. சரியான ராட்சசன்கிட்ட வந்து சிக்கிருக்கேன்.. நேரம் பார்த்து என்ன பழி வாங்குறான் Idiot. இருக்கட்டும்.. எனக்கும் ஒரு time வரும்ல.. அப்ப இருக்கு இவனுக்கு..!!” என்று நினைத்த மேகா “ஏங்க pleaseங்க.. உங்க பொண்டாட்டி பாவம்ல.. என் dressஐ குடுங்க..!!” என்று பொறுமையாக கேட்க, “பத்தல.. பத்தல.. இன்னும் மரியாதையா கேளு. நீ எனக்கு கொடுக்கிற மரியாதையில.. அப்படியே நான் feel ஆகணும்.” என்ற விஷ்வா அவளை பார்த்து கண்ணடித்தான்.
“கண்ணடிக்கிறியா இருடா உன் கண்ண நோண்டுறேன்…!!” என்று நினைத்த மேகா அவனைப் பார்த்து முறைத்துவிட்டு “என் காதல் கணவன் விஷ்வா அவர்களே.. உங்களிடம் தயவுசெய்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். எனது ஆடையை பெரிய மனசு பண்ணி என்கிட்டயே குடுத்துருங்க ராசா..!!” என்று மேகா பாவமாக தன் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, குபீரென்று சத்தமாக சிரித்த விஷ்வா, “இந்தாடி..!! சீக்கிரம் போட்டுட்டு வா.. நான் வெளியே இருக்கேன்.” என்றவன் அவள் மீது ஆடைகளை தூக்கி எறிந்துவிட்டு வெளியில் சென்றான்.
“கைல குடுத்துட்டு போனா என்னாவாம் இவனுக்கு.. சரியான குரங்கு பையன்..!!” என்று முனகிய மேகா, கீழே கிடந்த தனது அடைகளை எடுத்து அணிந்து கொண்டு வெளியே சென்றாள். அங்கே விஷ்வா தனது mobile phoneன் battery மொத்தமாக drain out அதற்குள் signal கிடைத்தால் யாரையாவது தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று நினைத்து phoneஐ வானத்தை நோக்கி பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் போன வண்ணம் வந்த வண்ணம் இருந்தான்.
“டேய்.. மெட்டல் மண்டையா இங்கதான் இருக்கியா நீ…!!” என்று நினைத்த மேகா வேகமாக விஷ்வாவின் அருகே சென்று அவன் உயரத்திற்கு தாவி குதித்து அவன் தலையில் நங்கென்று கொட்டியவள், “நான் உனக்கு மரியாதை கொடுக்கணுமா..?? இந்த மரியாதை போதுமாடா உனக்கு..??” என்று கேட்டுவிட்டு கிண்டலாக சிரித்தாள்.
அவளை அலேக்காக தூக்கி தலைகீழாக திரும்பிய விஷ்வா, “என்னடி சொன்ன.. சரியா கேககல. இப்போ மறுபடியும் நல்லா சொல்லு பாக்கலாம்..!!” என்று தனது கனீர் குரலில் கேட்க,
“அடப்பாவி சும்மா விளையாட்டுக்கு பண்ணதுக்கு நெஜமாவே என்னை தூக்கி தலை கீழ தொங்க விட்டுட்டானே இவன்..!! சரியான செங்கல் சைக்கோவ இருப்பான் போல!” என்று நினைத்து பயந்த மேகா,
“அச்சச்சோ please என்னை மன்னிச்சு விட்ருங்க விஷ்வா. இனிமே இப்படி எல்லாம் பேசவே மாட்டேன். ஏற்கனவே பசியில எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. இதுல நீங்க வேற இப்படி பண்ணி.. எனக்கு எல்லாமே தலைகீழா ரெண்டு ரெண்டா தெரியுது.” என்று அவசரமாக சொன்னாள்.
அவள் இடுப்பை பிடித்து சுற்றி அவளை நேராக நிற்க வைத்த விஷ்வா “தலைகீழா தொங்கவிட்டா தலைகீழா தாண்டி தெரியும்.” என்றுவிட்டு விளையாட்டாக அவள் நெற்றியில் அடித்தான்.
“ச்ச்ச்.. சும்மா இரு விஷ்வா ப்ளீஸ். எனக்கு நெஜமாவே பசிக்குது. இப்ப எப்படி இங்க இருந்து தப்பிச்சு போறது..??” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு மேகா கேட்க, அவள் தோள்களில் கைப்போட்ட விஷ்வா “நீ மதுரை தானே.. மதுரை சுற்று வட்டாரத்துல இருக்கிற ஏதோ ஒரு கிராமத்துல தான் இப்ப இப்ப நம்ம இருக்கோம். இது என்ன இடம்ன்னு தெரியாதா உனக்கு..??” என்று கேட்க, “எனக்கு பசிக்கும்போது மூளை ஒழுங்கா வேலை செய்யாது விஷ்வா. இந்த ஊர் பக்கமெல்லாம் வந்த மாதிரியே எனக்கு ஞாபகம் இல்ல.” என்ற மேகா அவன் மீது சாய்ந்து கொண்டாள்.
அவர்கள் இருவரும் அப்படியே தொடர்ந்து அந்த ஊருக்குள் நடந்தார்கள்.
அங்கே ஏராளமான வீடுகள், சிறிய கோவில்கள், அரசு அலுவலகங்கள் என்று எத்தனையோ இருந்தது. ஆனால் அங்கே அவர்களால் ஒரு மனிதர்களைக்கூட பார்க்க முடியவில்லை. “இது என்ன இடம் விஷ்வா.. இங்க ஒரு ஈ காக்காவை கூட காணோம்..!!” என்று மேகா கேட்க, “அத நான் தாண்டி உன்கிட்ட கேட்கணும். இங்கேயே இருந்துகிட்டு உங்க ஊர சுத்தி இருக்கிற ஊர பத்தி எதுவும் தெரிஞ்சு வச்சுக்க மாட்டியா நீ..??” என்று கோபமாக கேட்டான் விஷ்வா.
அவன் கேட்டவுடன் தான் அவளுக்கு ஏதோ ஞாபகம் வர, “அட ஆமா.. எனக்கு இப்பதான் ஞாபகம் வருது. நான் ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது மதுரை பக்கம் ஒரு கிராமத்துல புதுசா chemical factory வந்ததுனால அந்த ஊர்ல இருக்கிற மக்களுக்கு நிறைய health issues வந்துச்சுன்னு அந்த டைம்ல protest பண்ணிட்டு இருந்தாங்க. அதனால அந்த factory owner இங்க இருந்தவங்களுக்கு governmentகூட சேர்ந்து சென்னையில தங்க வேற இடம் arrange பண்ணி குடுத்துட்டாரு. சோ இங்க இருந்தவங்களும் கிராமத்துக்குள்ள இருக்குறதுக்கு சென்னைக்கு போறதே betterன்னு அங்க போய் settle ஆகிட்டாங்க. எனக்கு தெரிஞ்சு இப்போ நம்ம அந்த ஊர்ல தான் இருக்கணும்.” என்றாள் மேகா.
“அப்போ அந்த chemical factory எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சு அங்க யாராவது இருந்தா, அவங்க கிட்ட help கேட்டு இங்க இருந்து தப்பிச்சு போறத தவிர நமக்கு வேற வழி இல்ல.” என்று விஷ்வா சொல்ல, “எனக்கெல்லாம் இப்பவே tiredஆ இருக்கு. அந்த chemical factory எந்த மூலையில இருக்கோ தெரியல. அத நம்ம எப்ப கண்டுபிடிச்சு எப்போ வீடு போய் சேர்றது..?? எனக்கு கால் எல்லாம் வலிக்குது விஷ்வா. நடக்கவே முடியல.” என்ற மேகா சிறிதும் யோசிக்காமல் அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.
“என்னடி நடுரோட்டில உட்கார்ந்து இருக்க எந்திரி..!!” என்று விஷ்வா அவள் கையை பிடித்து இழுக்க, “போடா நான் எந்திரிக்க மாட்டேன். எனக்கு கால் வலிக்குது. நீதானே என் புருஷன்.. நீதான் என்ன நல்லா பாத்துக்கணும். ஒழுங்கா என்ன தூக்கிட்டு போ.” என்ற மேகா தன் இரு கைகளையும் அவனை நோக்கி நீட்டி, தன் இரு கால்களையும் உதைத்து கொண்டு குழந்தை போல அடம் பிடித்தாள்.
“ஐயோ, சரியான இம்சைடி நீ. உன்ன மாதிரி ஒரு கிறுக்கிய எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு என்னை நல்லா ஏமாத்திட்டாங்க..!!” என்று புலம்பிய விஷ்வா அவளை தூக்கி தன் தோள்களில் போட்டுக் கொண்டு அங்கிருந்து நடக்க தொடங்கினான். “இவன் நம்ம ஓவரா வாய் பேசுறோம்னு வேணும்னே நம்மளை கீழ போட்டாலும் போட்டுடுவான்.” என்று நினைத்த மேகா அவனை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.
தொடரும்..