Home FREE NOVELSமுர்கனின் காதலி CH 125

முர்கனின் காதலி CH 125

by Thenaruvi Tamil Novels
8 views

அத்தியாயம் 125

விஷ்வா தான் ஒருத்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு சென்றதாக சொல்ல, ஷாக்காகி விழிகள் விரிய அவனை பார்த்தாள் மேகா.

அவளது கலைவரான முகத்தை கண்டு “நீ என்ன பார்த்து பயப்படுறியாடி..??” என்று அவன் உடைந்த குரலில் கேட்க, முதலில் வேகமாக இல்லை என்று தலையாட்டிய மேகா பின் லேசாக ஆமாம் என்று தலையாட்டினாள். அதனால் அவனுக்கு கோபம் வந்துவிட,

“இப்ப எதுக்கு நீ என்னை பாத்து பயப்படுற..?? நான் என்ன உன்னையும் கொன்னுடுவேனா.. ஏண்டி இப்படி இருக்க..??
அன்னைக்கு உனக்காக உங்க palaceல ஆதித்யாவ நான் கொல்ல ரெடியா இருந்தப்போ மட்டும் பயமா இல்லையா உனக்கு..?? நீ அப்பயெல்லாம் எதுமே சொல்லல.‌.. இப்போ பொதுவா நான் ஒரு பொண்ண கொலை பண்ணிட்டேன்னு சொன்னவுடனே.. உனக்கு பயம் வந்துருச்சா..?? அவ யாரு? என்ன நான் ஏன் இப்படி பண்ணேன்னு எத பத்தியும் யோசிக்காம உடனே நீ என்னை judge பண்ணுவியா..??” என்று கேட்டு கோபத்தில் தொடங்கி சோகமாக முடித்தான் விஷ்வா.

“I am sorry” என்று சொல்லிவிட்டு அவன் கைகளை இறுக்கமாக பற்றி கொண்ட மேகா, “நீ ஏன் எப்ப பார்த்தாலும் எல்லாத்தையும் என்கிட்ட bit.. bitஆ சொல்ற.. நீ சொல்ல வர்றத fullஆ சொல்லாம அப்புறம் என் மேல கோச்சுக்கிற..!!” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, அவளை அணைத்துக் கொண்ட விஷ்வா “என் தம்பிய ஒருத்தி லவ் பண்ணி ஏமாத்தி விட்டுட்டு போய் அவன கொன்னாளே.. அவளைத்தான் நான் என் கையால கொண்டுட்டு வந்தேன்.‌ உனக்கு இந்த details போதுமா.. இல்லை இன்னும் கொஞ்சம் detailஆ சொல்லனுமா..??” என்று கேட்டான்.
அண்ணாந்து அவனது இறுகிய முகத்தை பார்த்த மேகா, “வேண்டாம் போதும். இதுக்கு மேல நீ எதுவும் பேச வேண்டாம்.” என்று சொல்ல,

“இப்பயாவது நீ என்னை நம்புறியா இல்லையாடி..??” சோர்ந்த குரலில் கேட்டான் விஷ்வா. அவனை கட்டிக்கொண்டு அவன் தோள்களில் தன் முகத்தை புதைத்த மேகா “நம்புறேன் விஷ்வா. உன்னை நம்பாம என்னால வேற யார நம்ப முடியும்..?? I trust you so much. And I love you more than that.” என்று மனதாரச் சொன்னாள். அப்போது அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க, அவள் தலையை வருடிய விஷ்வா “இப்போ எதுக்குடி இதுக்கும் அழுகற..??” என்று கேட்டுவிட்டு லேசாக புன்னகைத்தான்.

அவன் கண்களை பார்த்த மேகா “இது happy tears. இத்தனை நாளா நீ என்ன ஏமாத்திட்டியோனு நினைச்சு நான் எவ்ளோ பயந்தேன் தெரியுமா..?? நான் நினைசச மாதிரி எதுவும் தப்பா கூடாதுன்னு நான் ஒவ்வொரு secondம் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டே இருந்தேன். அதான்.. இப்போ நீ எனக்கு மட்டும்தான்னு நினைக்கும் போது, அப்படியே ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றுவிட்டு அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

“அந்த அளவுக்கு உனக்கு பிடிக்கமாடி என்னை..??” காதலுடன் விஷ்வா அவள் கண்களை பார்த்து கேட்க, “ம்ம்ம்.. ரொம்ப பிடிக்கும். உன்னை மட்டும் தான்டா புருஷா பிடிக்கும்.” என்ற மேகா விளையாட்டாக அவன் இரு கன்னங்களையும் பிடித்து கிள்ளினாள்.

“என்னடி.. flowல என்ன போடா வாடான்னு ஏதாவது சொன்னியா..??” விஷ்வா sarcasticஆக கேட்க,

“flowல எல்லாம் சொல்லல. வேணும்னு தான் சொன்னேன். ஏன் நீ என்ன போடி வாடின்னு கூப்பிடும்போது நான் உன்ன டா சொல்லக் கூடாதாடா..??” குறும்பாக கேட்டாள் அவள்.‌ “சொல்லு சொல்லு.. நான் எப்போ வேணாம்னு சொன்னேன்..?? இதுவும் கேட்க நல்லா தான் இருக்கு.” என்ற விஷ்வா அவளை தனக்கு அருகில் இழுத்து அவனது கால்களால் அவளை லாக் செய்து, “நானே ஆல்ரெடி பாதி பைத்தியக்காரனா இருக்கேன்.. என்ன மாதிரி ஒரு characterஐ எல்லாம் யாருக்கும் பிடிக்காதேடி… அப்புறம் எப்படி டி உனக்கு மட்டும் என்ன பிடிச்சிருக்கு..??” என்று மென் குரலில் கேட்டான்.

அவன் தோள்களில் தன் கைகளை மாலையாக போட்ட மேகா இன்னும் அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்து “நீதான் என் புருஷன் ஆயிட்டியே.. சோ நீ முழு பைத்தியக்காரன் ஆனாலும் எனக்கு உன்னை அப்பாவும் ரொம்ப பிடிக்கும்.” என்று சொல்லிவிட்டு சிரிக்க, “ஓஹோ.. அப்ப நான் உன் புருஷனா இருக்கிறதுனால தான் உனக்கு என்னை பிடிச்சிருக்கா..?? நமக்கு கல்யாணம் ஆகலைன்னா நீ என்ன திரும்பி கூட பார்த்திருக்க மாட்டலடி..!!” என்று உடனே கேட்டான் விஷ்வா. அவன் குரலில் வெளிப்படையாக சோகம் தெரிந்தது.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே.. நான் உன்னை first time hotelல meet பண்றதுக்கு முன்னாடியே நம்ம பேசி பழகுறதுக்கு chance கிடைச்சிருந்தா, கண்டிப்பா எப்பயோ உன்ன பைத்தியக்காரத்தனமா லவ் பண்ணி இருப்பேன் விஷ்வா. நானே உன்கிட்ட வந்து proposeகூட பண்ணியிருப்பேன். உன்னோட worth என்னன்னு உனக்கே தெரியல. அதான் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க நீ.” என்று அவள் சொல்ல, “சும்மா எனக்காக ஏதாவது சொல்லாத.” நம்பிக்கை இல்லாமல் சொன்னான் அவன்.
“அட நெஜமாதாண்டா.. நான் press meetல நம்ம love story சொன்னனே.. உனக்கு ஞாபகம் இருக்கா..??” மேகா ஆர்வமாக கேட்க, “ம்ம்ம்.. இருக்கு.. இருக்கு… அதுக்கு என்ன இப்போ..!!” சலிப்பாக கேட்டான் அவன்.

“அதுலதான் main matterஏ இருக்கு. நான் அன்னைக்கு சொன்ன மாதிரி.. 2 years back, மீராக்கூட coffee shopல‌ உக்காந்து interview பத்தி பேசிட்டு இருக்கும்போது, நான் உன்னை பார்த்தேன். நீ மழையில நெனச்சிட்டு இருந்த puppyஆ தூக்கிட்டு போய் உன் carல ஏறுனீயே..‌ அதே black colour dog தானே இப்ப நம்ம வீட்ல பெருசா இருக்குற silk..!!” என்று மேகா ஆர்வமாக கேட்க, “அட ஆமா.. நான் silkஐ நடுரோட்டில இருந்து தான் தூக்கிட்டு வந்தேன். இப்பதான் எனக்கு அது ஞாபகமை வருது. அதான் அன்னைக்கு நீ சொல்லும்போது எல்லாமே எனக்கு நிஜமா நடந்த மாதிரி இருந்துச்சு போல..!!” என்றான் விஷ்வா.

“அது மட்டுமில்ல.. gaming app launchல நான் உன்னை பார்த்தேன்னு சொன்னனே.. அதுவும் உண்மைதான்.‌ உனக்கு ஞாபகம் இருக்கா..?? Talking mosey app..?? உங்க Companyதானே அந்த appஐ launch பண்ணாங்க.. அந்த eventக்கு நானும் வந்திருந்தேன். அப்போ தூரத்துல இருந்து உன்ன பார்த்தேன். நீ ரொம்ப அழகா இருக்கன்னு நெனச்சேன். Already உன்ன பத்தி நான் நிறைய rumours கேள்விப்பட்டிருக்கேன். சோ உன்ன சரியான terror pieceன்னு நெனச்சேன். அப்புறம் event முடிஞ்சதுக்கு அப்புறம் அங்க இருந்து மீராக்கூட கிளம்பிட்டேன். நான் நம்ப fake love storyல சொன்ன மாதிரி அன்னைக்கு ஏதாவது ஒரு தரமான சம்பவம் நடந்து நம்ம ரெண்டு பேரும் பேச chance கிடைச்சிருந்தா.. நான் அப்பவே உன்ன தான் லவ் பண்ணி இருப்பேன் விஷ்வா. But அப்போ உனக்கு நான் யாருன்னு கூட தெரிஞ்சிருக்காதுல்ல..!!” என்று ஆச்சரியமாக மேகா சொல்ல, “ஆமாமா.. அதான் இப்ப தெரிஞ்சிருச்சே.. இனிமே ஜாலியா love பண்ணலாமே.. without any gap..!!” என்று குறும்பாக கேட்ட விஷ்வா அவள் மூக்கின் மீது தன் மூக்கை வைத்து உரசினான்.
இதுவரை பேச்சு சுவாரசியத்தில் நார்மலாக இருந்த மேகா இப்போது அவனது நெருக்கம் ஏற்படுத்திய சிலிர்ப்பை தாங்க முடியாமல் தன் உதட்டை கடிக்க, அவன் தோள்களில் இருந்த அவளது கைகளின் இருக்கம் கூடியது. அது இன்னும் அவன் ஆண்மையை கிளறிவிட, அவளது கீழ் உதட்டை பிடித்து இழுத்த விஷ்வா “இதெல்லாம் என்னோட ஏரியா. உன்னை என்ன பண்றதா இருந்தாலும் நான் தான் பண்ணுவேன். நீ எல்லாம் இப்படி கடிக்க கூடாது.” என்று ஹஸ்கி voiceல் சொன்னான். எழுமாத குரலில் மேகா, ம்ம்ம் என்று இழுத்தாள்.

அவள் தனக்கு permission கொடுத்து விட்டதாக நினைத்த விஷ்வா இருப்பினும் confirmationகாக, “பண்ணவா..??” என்று கேட்க, மீண்டும் அவள் ம்ம்ம்ம்.. என்றாள். வெட்கத்தில் அவள் தலை குனிந்து இருக்க, அவள் தாடயை பிடித்து அவள் முகத்தை உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்த விஷ்வா “என்ன ம்ம்ம்..‌ம்ம்ம்..?? வாய திறந்து சொல்ல மாட்டியா நீ..?? உனக்கு ஓகேவா இல்லையான்னு ஒழுங்கா சொல்லு. நான் என் இஷ்டத்துக்கு last time உன்கிட்ட எதுவும் கேட்காம.. ஏதோ பெரிய romantic hero மாதிரி எல்லாமே பண்ணா.. நீ உக்காந்து அழுதுட்டு இருந்த… அவசரப்பட்டுட்டமேன்னு எனக்கு அப்போ எவ்ளோ guiltyஆ இருந்துச்சு தெரியுமாடி..!! அதான் இப்போ உனக்கு ஓகேவா இல்லையான்னு உன் வாயாலவே கேட்டு தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். நீ எதுவும் சொல்லலன்னா.. நான் அப்படியே stop பண்ணிடுவேன்.” என்றான்.‌

“எனக்கு ஓகே தான்.” என்று வெட்கத்துடன் சொன்ன மேகா தன் கண்களை மூடிக்கொண்டு, திக்திக் இதயத்துடன் அவன் இதழ்களை நோக்கி குனிய, “என்ன இவ slow motionல வந்துட்டு இருக்கா..?? இப்படி வந்தா நான் என்னைக்கு start பண்ணி என்னைக்கு முடிகிறது..??” என்று நினைத்த விஷ்வா ஒரு நொடியும் தாமதிக்காமல் பாய்ந்து அவளது இதழ்களை கவ்வி சுவைக்க தொடங்கினான். அவர்கள் இருவரின் இத்தனை நாள் பிரிவின் தவிப்பை தீர்க்கும் விதமாக அவர்கள் இருவரும் அந்த முத்தத்தின் ஆலத்தை கூட்டிக்கொண்டே செல்ல, அவர்கள் இருவரின் கைகளும் மற்றவரின் மேனியெங்கும் அத்துமீற தொடங்கி இருந்தது.
அப்படியே மேகாவுடன் தரையில் விழுந்தான் விஷ்வா. அவர்கள் அருகில் குளிருக்கு இதமாக நெருப்பு எரிந்து கொண்டிருக்க, அதன் ஒளியில் பேரழகியாக ஜொலித்தாள் மேகா.

அந்த அழகை கண்டு ரசிக்கவும், அள்ளி பருகவும் இந்த ஒரு ஜென்மம் போதாது என்று நினைத்த விஷ்வா அவளை ஆட்கொள்ள, அவர்கள் இருவரின் உடலும் மோகத்தாபத்தில் எரிந்து கொண்டிருந்தது. அவர்களுக்குள் இத்தனை நாளாக இருந்த gap இப்போது அனல் மேலே பனித்துளியாய் காணாமல் போய்விட, அங்கே ஒரு அழகான, ஆழமான கூடல் அரங்கேறியது.‌ இணைந்தது அவர்கள் இருவரின் உடல்கள் மட்டுமல்ல, இதுவரை தனித்தனியாக இருந்த அவர்களது இதயங்களும் தான்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured