Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 182

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 182

by Thenaruvi Tamil Novels
3 views

அத்தியாயம் 182

மைக்கேல் மீராவின் இதழ்களில் உணர்ச்சிகள் பொங்க முத்தமிட்டு கொண்டு இருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் மூச்சு விட முடியாமல் திணற, அவளை விட்டு பிரிந்த மைக்கேல் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அவளது சோல்டரில் முகம் புதைத்து வேகமாக மூச்சு விட்டான். அவனது சூடான மூச்சுக்காற்று இப்போது அவளது தோள்களில் பட்டு அதில் உடல் கூசிய மீரா தானும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவளுக்கும் மூச்சு வாங்கியது.

அதேசமயம் அவள் மூளைக்குள் ஏராளமான கேள்விகளும், குழப்பங்களும் இருக்க, அவனை விட்டு பிரிந்தவாறு “இப்ப இங்க என்ன நடந்துச்சு? நீங்க ஏன்.. ஏன் இப்படி பண்ணிங்க சார்?” என்று பதட்டத்துடன்  குரல் நடுங்க கண்கள் கலங்க கேட்டாள். அவள் தன்னை தவறாக நினைத்துக் கொண்டாள் போல என நினைத்து பதறிய மைக்கேல், “என்னடி லூசா நீ? ஒரு பையன் ஒரு பொண்ண எதுக்கு கிஸ் பண்ணுவான்? ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குற?

நடுவுல நீயும் சேர்ந்து தானே என்னை கிஸ் பண்ண.. அப்ப உனக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இல்லையா? என்ன புடிக்கலையா உனக்கு?” என்று கேட்டான்.

இப்போதும் அவன் கேள்வியை தவறாகவே புரிந்து கொண்ட மீரா “நீங்க ரஷ்யன் சிட்டிசன். உங்க ஊர்ல இது எல்லாம் ரொம்ப நார்மல். ஆனா எனக்கு அப்படி இல்ல. இதுவரைக்கும் நான் யாரையுமே கிஸ் பண்ணதில்லை. என்னையும் யாருமே கிஸ் பண்ணதுல. ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்டா எனக்கு உங்க மேல இன்ட்ரஸ்ட் இருக்கான்னு கேக்குறீங்க.

நீங்க இன்ட்ரஸ்ட்ன்னு என்ன மீன் பண்றீங்கன்னு எனக்கு புரியல. நானே குடும்ப கஷ்டத்துக்கு இங்க வேலைக்கு வந்து இருக்கேன்.  இங்க வந்து பசங்க மேல இன்ட்ரஸ்ட் காமிச்சிட்டு இருக்கிறது தான் என் வேலையா? நீங்க கிஸ் பண்ணதுனால உங்களுக்கு என் மேல ஃபீலிங்ஸ் இருக்குன்னு நினைச்சேன். பட் நீங்க என்னென்னா இப்படி சொல்லிட்டீங்க! அதான் நீங்க அன்னைக்கே சொன்னீங்களே.. நான் ஜஸ்ட் வேலைக்காரியினு… அதுக்குள்ள அதை மறந்துட்டு ஒரு செகண்டா நான் லூசுத் தனமா ஏதோ யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

நீங்க அர்ஜுன் சாரோட ஃபிரிண்ட்.. நான் ஜஸ்ட் இங்க செஃப். அர்ஜுன் சார் கூட பழகுறவங்க எல்லாருக்கும் கண்டிப்பா பெரிய பேக்ரவுண்ட் இருக்கும். உங்க மேல ஆசைப்படறதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கு?  அப்படி நெனச்சு தான் நான் இத்தனை நாளா உங்களை விட்டு விலகியே இருந்தேன். ஆனா நீங்க இப்படி அவசரப்பட்டு பண்ணி இருக்க கூடாது சார். ஏதோ பரவால்ல இந்த ஒரு தடவை நான் இதை பெருசாக்காம விட்டுட்டேன். இனிமே இப்படி பண்ணாதீங்க.” என்று அழுது கொண்டே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தாள்.

அவள் கையைப் பிடித்து தடுத்த மைக்கேல் மீண்டும் தனது இதழ்களை கொண்டு அவள் இதழ்களை சிறை செய்தான். ஆனால் இம்முறை ஆழமாகவோ அழுத்தமாகவோ அல்லாமல் மிகவும் மென்மையான முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு அவளை விட்டு விலகிய மைக்கேல் “எனக்கு உன்ன பிடிச்ச மாதிரி உனக்கும் என்ன பிடிக்கும்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா இப்ப நான் சொல்லாம விட்டா, நீ கடைசி வரைக்கும் அதை சொல்லவே மாட்டேன்னு தோணுச்சு.

அதான் ஏதோ ஒரு வேகத்துல கிஸ் பண்ணிட்டேன். அது ஒன்னும் பிரச்சனை இல்ல.. இப்ப நான் சொல்றத நீ நல்லா கேட்டுக்கோ! மிஸ் மீரா நான் உங்கள ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும்போதே உங்க கிட்ட விழுந்துட்டேன். உனக்கும் எனக்கும் நடுவுல ஏதோ ஒரு ஸ்பெஷல் கனெக்சன் இருக்கிற மாதிரி எனக்கு ஃபீலாச்சு.

இதுவரை அந்த மாதிரி எனக்கு யார் கிட்டயும் தோணுதில்ல. சோ அப்பவே உன்ன பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன். அப்படி தெரிஞ்சுக்க தெரிஞ்சுக்க உன்னை இன்னும் பிடிச்சது. பட் உனக்கு என்ன பத்தி எதுவுமே தெரியாதுல.. அப்படி இருந்தும் கூட உனக்கு என்ன புடிச்சிருக்கு! 

அதுக்குள்ள அந்த அளவுக்கு நீ என் மேல பைத்தியம் ஆயிட்டியா? என்ன பத்தி நானே சொல்றேன். என்னோட ஃபுல் நேம் மைக்கேல் ஜான்சன் ஸ்டிரிவார்ட். நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் அர்ஜுன் மாதிரி ஒன்னும் பெரிய பணக்காரன் இல்லை.

உனக்கு புரியிற மாதிரி சிம்பிளா சொல்லணும்னா, நான் அர்ஜுனோட டீம்ல வொர்க் பண்ணேன். நடுவுல அர்ஜுன் கோமாவுக்கு போனதுக்கு அப்புறம் எங்க டீம் பிரிஞ்சிடுச்சு. அவன் இல்லாம எங்களுக்கு எதையும் செய்ய பிடிக்கல. நாங்க எல்லாருமே சின்ன வயசுல இருந்தே ஃபிரண்ட்ஸ்.

சோ அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி அர்ஜுன் கூட சேர்ந்து பிசினஸ் பண்ண ஆரம்பிச்சோம். சோ அவனோட கம்பெனில எனக்கும் கொஞ்சம் ஷேர்ஸ் இருக்கு அவ்வளவு தான். என்னோட கரியர் பத்தி இதுக்கு மேல என்னால உன் கிட்ட கிளியரா சொல்ல முடியாது.

என்னோட இன்னொரு சைடு உனக்கு தெரியாம இருக்குறது தான் உனக்கு நல்லது. என்னை சுத்தி எப்பையுமே ரிஸ்க் இருக்கும். பட் நான் அதுல எப்பயும் மாட்டுனது இல்ல. இனிமே பெருசா எதுக்குள்ளேயும் இன்பால்வு ஆகக் கூடாதுன்னு தான் எனக்கு கம்பெனி சேர்ஸ்ல இருந்து வர இன்கம் போதும்னு நான் எல்லாத்துல இருந்தும் ஒதுங்கி இருந்தேன்.

அர்ஜுனுக்கு மேரேஜ் ஆனது தெரிஞ்ச உடனே அவன பாக்க இந்தியா வந்தேன்‌. ஆனா உன்ன மாதிரி ஒரு பொண்ண இங்க மீட் பண்ணுவேன், உன் கூட சேர்ந்து ஒரு லைஃப் வாழனும்னு யோசிப்பேன்னு எல்லாம் அப்ப நான் கொஞ்சம் கூட நினைக்கல.

நீ என்ன நம்பி என் கூட ரஷ்யா வந்தா, உன்ன லைஃப் லாங் பத்திரமா பாத்துக்குவேன். நீயும் நானும் எப்பயும் எந்த வேலைக்கும் போகாமயே ஜாலியா வீட்ல உக்காந்துட்டு சாப்பிட்டு இருந்தா கூட அர்ஜுனோட கம்பெனிஸ் இருக்கிற வரைக்கும் நமக்கு இன்கம் இருக்கும். 

அண்ட் முக்கியமான விஷயம்.. பாக்குறதுக்கு என்ன தான் நான் young அண்ட் handsomeஆ தெரிஞ்சாலும் எனக்கும் கிட்டத்தட்ட அர்ஜுனோட ஏஜ் தான். பட் எனக்கு இன்னும் மேரேஜ் எல்லாம் ஆகல. இதுவரைக்கும் எனக்கு மேரேஜ் பண்ணி செட்டில் ஆகணும்னு தோணல. ஏதோ எனக்கு புடிச்ச மாதிரி இருக்குறத வச்சு நான் பாட்டுக்கு இத்தனை நாள் வாழ்ந்துட்டு இருந்துட்டேன்.

இப்போ எனக்குன்னு ஒரு ஃபேமிலி உன் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாததுனால தானே இப்படி ஓவர் டைம் வொர்க் எல்லாம் பார்த்து கஷ்டப்படுற.. உனக்கு ஓகேன்ன சொல்லு, நம்ம இந்தியா போனவுடனே லீகலா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி உன்னையும் உங்க அப்பாவையும் சேர்த்து என் கூட ரஷ்யா கூட்டிட்டு போறேன். ஐ லவ் யூ மீரா. நீ என்னை கிஸ் பண்ணிட்டதுக்காக, உடனே நீ ஓகே சொல்லணும்னு நான் எதிர்பார்க்கல. உனக்கு யோசிக்க டைம் வேணும்னா எடுத்துக்கோ. என்ன பிடிக்கலைன்னா கூட பரவால்ல. எதுவா இருந்தாலும் உன்னோட சாய்ஸ் தான்.” ‌ என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தான்.

அவன் என்னதான் தன்னடக்கமாக அர்ஜுன் அளவிற்கு தான் பணக்காரன் இல்லை என்றெல்லாம் பேசி இருந்தாலும், அர்ஜுனின் கம்பெனியில் ஷேர்ஸ் வைத்திருப்பவர்கள் கூட பல மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். அதை நினைத்து பார்த்த மீரா “நீங்க நிஜமாவே என்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஓகேன்னு சொல்றீங்களா? இப்ப இப்படி எல்லாம் பேசிட்டு கடைசில ஏமாத்திட மாட்டீங்களே! நான் ரொம்ப சாதாரணமான பொண்ணு. நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.‌ அதான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.” என்று நம்ப முடியாமல் கேட்க,

உடனே அவளைப் பார்த்து சிரித்த மைக்கேல் “அப்ப உனக்கு ஓகே தானே.. இதுக்கப்புறம் அடுத்து நடக்க வேண்டியதை நான் பாத்துக்குறேன். பிரிட்டோ கிளாரா மேரேஜை தேன்மொழி தான் நடத்தி வச்சாங்களாம் கேள்விப்பட்டேன்.. நம்ப மேரேஜுக்கும் அர்ஜுன் அண்ட் தேன்மொழி தான் சீஃப் கெஸ்ட். அவங்களே முன்னாடி இருந்து எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணி நமக்கு கல்யாணம் பண்ணி வச்சா, அப்பையாவது என்னை நம்புவியா நீ?” என்று கேட்க, உடனே அவனை சென்று அணைத்துக் கொண்டாள் மீரா.

மறுநாள் காலை நேரத்தில் அவர்களது பிரைவேட் ஜெட் விமானம் அதற்கான இடத்தில் சென்று இறங்கியது. அதில் இருந்து இறங்கிய அர்ஜுனும், அவனுடன் வந்த மற்றவர்களும் வாக்கிங் ஏரியாவில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென அவர்கள் முன் தோன்றிய நால்வர் சர்ப்ரைஸ் ஆக அவர்களை வரவேற்றார்கள். ‌

அர்ஜுன் கோமாவில் இருந்து எழுந்த பிறகு இப்போது தான் அவர்கள் அனைவரும் அவனை பார்க்கிறார்கள் என்பதால் கண்ணீர் மல்க அவனை கட்டிப்பிடித்து தங்கள் பாச மழையை பொழிந்தார்கள். அவனுக்கும் இத்தனை வருடங்களுக்கு பிறகு அவர்களை பார்த்ததில் மன நிறைவாக இருந்தது. சந்தோஷமாக தேன்மொழியையும், அவளது குடும்பத்தினரையும் அவர்களுக்கு இண்ட்ரடியூஸ் செய்து வைத்தான் அர்ஜுன். 

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured