Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 169

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 169

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 169

ஆதவன் ஏதோ சொல்லிவிட்டு சென்றதை கேட்டு  ஆருத்ரா அழுது கொண்டு இருப்பதை கவனித்தபடி அவள் அருகில் சென்று சோபாவில் அமர்ந்தான் சுனில். அவனை கண்டவுடன் அவள் தன் கண்ணீரை கஷ்டப்படுத்து துடைத்துக் கொள்ள, “what happened baby? எதுக்கு அழுகிற? உன்ன  மாதிரி அவன் ஏதாவது சொன்னானா?” என்று எதையோ தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான் சுனில்.

உடனே சாதாரணமாக அவனைப் பார்த்த ஆருத்ரா “ இல்ல  மாமா..  அவர் ஏன் என்ன கஷ்டப் படுத்துற மாதிரி பேச போறாரு?  ஆதி மாமா ரொம்ப நல்லவரு.  எனக்கு அவர ரொம்ப பிடிக்கும்.  நான் தான் அவர் கிட்ட சரியா பேசாம அவரை ஹர்ட் பண்ணிட்டேன்.  அதனால தான் அவர் அழுதுட்டு போறாரு.

அவர்  அழுகிறத பார்க்கும் போது எனக்கும் கஷ்டமா இருந்துச்சு. அதான் நானும் அழுதுட்டேன்.  வேற ஒன்னும் இல்ல நீங்க அவரை தப்பா நினைக்காதீங்க.”  என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் தான் அங்கே இருந்தால் அவன் தன்னிடம் ஏதேனும் கேள்வி கேட்பானோ என நினைத்து எழுந்து தனது ரூமிற்கு சென்று விட்டாள்.

தன் அக்காவின் மகள்  தன்னிடம் பேசவே யோசிக்கிறாள் ஆனால் இவனிடம் மட்டும் இத்தனை பாசத்துடன் நடந்து கொள்கிறாளே என நினைக்கவே சுனிலுக்கு ஒரு மாதிரி இருந்தது.  அதனால் ஆருத்ராவை விட்டுவிட்டு சித்தார்த்தின் மீதாவது தன் அன்பைப் பொழிவோம் என நினைத்து அவனது ரூமிற்கு சென்றான்.

ஏற்கனவே தனது அம்மாவின் சொந்த பெற்றோர்கள் கூட தேன்மொழியை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் தன்னால் மட்டும் அப்படி செய்ய முடியவில்லை என நினைத்து  சோகத்தில் இருந்த சித்தார்த்  இருதலை கொல்லி எறும்பாக தனது முன்னுக்கு பின் முரணான சிந்தனைகளுக்குள் சிக்கிக் கொண்டு முடிவெடுக்க தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தான்.

அங்கே சுனில் வரவும்,  அவன் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்க, “நீங்க ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்ததுனால இந்நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு  இருப்பீங்கன்னு நினைச்சேன் மாமா.  பட் அதையும் தாண்டி நீங்க என்ன பார்க்க  வந்ததுல எனக்கு ரொம்ப   ஹாப்பியா இருக்கு.” என்று சொல்ல, இவன் ஒருவனாவது தன்னை நினைவில் வைத்து  தன்னையும் அவன் குடும்பத்தில் ஒருத்தராக நினைத்து பாசத்துடன் பேசுகிறானே என நினைத்து  சந்தோஷப்பட்ட சுனில் “ என்ன இப்படி சொல்லிட்ட சித்து?  யூ ஆர் சோ இம்போர்ட்டண்ட் டு மீ.  உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு எனக்கு எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா?  நான் உன்னையும் ஆருத்ராவையும் எங்கேயாவது வெளிய கூட்டிட்டு   போகலாம்னு நெனச்சேன்.
பட் நான் அவ கிட்ட பேசிட்டு இருக்கும்போதே அவ பாதியிலயே எந்திரிச்சு போயிட்டா.  அந்த லோ கிளாஸ் பையன்  ஆதி  என்னமோ சொல்லிட்டு போய்ட்டான்னு  அவன நான் தான் hurt பண்ணிட்டேன்.. ஆதி மாமா என்னால feel பண்ணிட்டு போறாருன்னு இவ ஒக்காந்து அழுதுட்டு இருக்கா..  இதையெல்லாம் பார்க்கவே டிஸ்கஸ்டிங்கா இருக்கு.” என்று தன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சொன்னான்.

உடனே  தனது புருவங்களை சுருக்கி கூர்மையான விழிகளுடன் அவனைப் பார்த்த சித்தார்த் “ ஏன் அப்படி சொல்றீங்க?  டாடியும், பாட்டியும் எப்பயுமே யார் கிட்டயும் ஸ்டேட்டஸ் பாத்து பழகக் கூடாதுன்னு எங்க கிட்ட சொல்லுவாங்க. சோனியா பாட்டியும்,  சுஷாந்த் தாத்தாவும் உங்களுக்கு அதெல்லாம் சொல்லிக் கொடுக்கலையா?  உங்களுக்கு அவரை  புடிக்கலைன்னு நினைக்கிறேன்.

அதுக்காக அவரை இப்படி எல்லாம் சொல்லாதீங்க.  அவரும் எனக்கு மாமா தான்.  எங்க  dadyயே அவரை He is my first sonன்னு  சொல்லி இருக்காரு.  அவர் முன்னாடி நீங்க இப்படி பேசினா கண்டிப்பா டாடிக்கு கோவம் வரும். அண்ட் ஆதி மாமா ரொம்ப நல்லவரு.  ஆருத்ராவை hurt  பண்ற மாதிரி எல்லாம் அவர் எதுவும் பண்ணிருக்க  மாட்டாரு.  இனிமே யார் கிட்டயும் இப்படி பேசாதீங்க.” என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டான்.

அவன் பேசிய பேச்சில் சுனிலின் முகத்தில்  ஈ ஆடவில்லை. “நாங்க வரும்போது சித்தார்த்  பேசுனதை  வச்சு அந்த பொன்னையும் அவளோட ஃபேமிலியையும்  இவனுக்கும் பிடிக்கலைன்னு நான் தப்பு கணக்கு போட்டுட்டேன்.

வந்து கொஞ்ச நாளிலேயே  அவ வீட்ல இருக்குறவங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்து இங்க செட்டில் பண்ணி  மத்தவங்க கிட்ட நல்லா பழக விட்டு  நல்லா ஓட்ட வச்சுட்டா போல இருக்கு..   அதனால தான் குழந்தைங்க கூட இந்த அளவுக்கு பேசுறாங்க.  நான் நினைச்சதை விட இந்த தேன்மொழி பெரிய ஆளா தான் இருக்கா.. 

  இல்லைனா இவ்ளோ சீக்கிரம் அக்காவை டோட்டலா மறக்க வச்சு அர்ஜுன் மாமாவயே இந்த அளவுக்கு அவளால மாத்தி இருக்க முடியுமா? உங்களுக்கு ஏதோ ஒரு லக் இருந்திருக்கு.  அதனால தான் அவ பாக்குறதுக்கு எங்க அக்கா மாதிரியே இருக்கா..  அந்த முகத்தை  காட்டியே  இந்த ஃபேமிலில ஒருத்தியா ஈஸியா  மிங்கிள் ஆகிட்டா.  இது எவ்வளவு தூரம் போகுதுன்னு நானும் பார்க்கிறேன்.” என்று நினைத்த  சுனில்,
“சாரி சித்து..  நான் வேணும்னு அப்படி பேசல..  ஆருத்ரா  அழுதுட்டு இருக்கிறத பார்க்கும்போது எனக்கு கஷ்டமா இருந்துச்சு. அதான் ரீசன் அவனா  இருக்குமோன்னு நினைச்சிட்டேன்.  இனிமே நீ சொன்ன மாதிரி நான் இந்த மாதிரி எல்லாம் பேசமாட்டேன். He is a small boy. அவன பத்தி பேசுறதுக்கு என்ன இருக்கு?

ஓகே அத விடு,  நம்ம சென்னையில  ஒரு சூப்பரான தீம் பார்க் வேர்ல்ட் கிளாஸ் லெவல்ல புதுசா வந்திருக்கு.  நீ ஓகேன்னு சொன்னா,  நம்ம அங்க போகலாம்.  நீ வர்றது தெரிஞ்சா ஆருத்ராவும் வர்றதுக்கு சான்ஸ் இருக்கு.  வெளிய போயிட்டு வந்தான் ஒரு  சேஞ்ஜா இருக்கும்ல…   எவ்ளோ நேரம் தான் நீங்களும்  வீட்டுக்குள்ளேயே இருப்பீங்க உங்களுக்கெல்லாம் போர் அடிக்கலையா?”  என்று கேட்டான்.

அவன் சொல்வதைப்போல சிறிது நேரம் எங்கேயாவது வெளியில் சென்று நிம்மதியாக இருந்து விட்டு வந்தால் கூட நன்றாக இருக்கும் என்று தான் சித்தார்த்திற்கும் தோன்றியது.  அதனால்  உடனே “ஓகே மாமா,  நான் போய்  மைக்கேல் அங்கிள் கிட்ட சொல்லிட்டு ஆருத்ராவை கூட்டிட்டு வரேன்.  கூட ப்ரொடெக்ஷனுக்கு ஆள் இல்லாம எங்கேயும் போகக் கூடாதுன்னு டாடி சொல்லி இருக்காரு.” என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றான் சித்தார்த்.

செல்லும் அவனையே  ஒரு அர்த்தத்துடன் பார்த்தபடி சுனில் வெளியில் செல்ல,  அவனது மொபைல் நம்பருக்கு யாரோ ஒரு தெரியாத நபரிடம் இருந்து  ஹாய் என மெசேஜ் வந்தது.  அந்த நம்பர் இந்தியாவை சேர்ந்தது என்பதால், “ நம்ம இந்தியா  வரதா ஃபிரண்ட்ஸ் குரூப்ல சொன்னதுனால எவனோ ஒருத்தன் வேற ஒரு நம்பர்ல இருந்து மெசேஜ் பண்ணி பேசலாம் போல இருக்கு.  யாருன்னு கேட்போம்.”  என்று நினைத்த சுனில் “ ஹாய், ஹூ ஆர் யூ?”  என்று கேட்டு ரிப்ளை அனுப்பினான்.

பதிலுக்கு அடுத்த கனமே அவனுக்கு ஆங்கிலத்தில் “ எல்லாம் உங்களுக்கு வேண்டப்பட்டவன் தான் ப்ரோ.  உங்களால நீங்க நினைச்சும் செய்ய முடியாததை என்னால  ஈஸியா செய்ய முடியும்.  உங்க ஹெல்ப் இல்லாமையும் என்னால அதை செஞ்சு காமிக்க முடியும்.  பட் அதுல உங்களுக்கு எந்த சேடிஸ்பேக்ஷனும்  கிடைக்காதே..

சோ நம்ம ரெண்டு பேரும் பார்ட்னர்  ஆகிட்டா நீங்க நினைச்சதை  செய்யறதுக்கு என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும். நான் எத பத்தி பேசுறேன்னு உங்களுக்கு  குழப்பமா இருந்துச்சுன்னா கொஞ்சம் தெளிவா யோசிச்சு பாருங்க.  நல்லா புரியும்.

எதிரியும் எதிரியும் நண்பனா தானே இருக்க முடியும்..  உங்களுக்கு  வேண்டப்பட்டவர்களுக்கான இடம்  இன்னொருத்தருக்கு  கிடச்சது உங்களுக்கு பிடிக்காம போனா அந்த இடத்துக்கு வேற யாரையும் வர விடாம நம்மளால  பண்ண முடியும்.  நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரிஞ்சுதுனா, yesன்னு ஒரே ஒரு ரிப்ளை மட்டும் பண்ணுங்க.  அப்புறம் என்ன நடக்குதுன்னு வெயிட் பண்ணி பாருங்க.”  என்று அந்த மர்ம நபரிடம் இருந்து ரிப்ளை வந்தது.

அதை குழப்பமான முகத்துடன் பார்த்துக் கொண்டே இருந்த சுனில் அவனுக்கு எதிரில் உள்ளவன் என்ன சொல்ல வருகிறான் என்று  புரிந்ததால், “ யார் இது?  நிஜமாவே இவன் நமக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிறானா?  இல்ல அர்ஜூன் மாமாவே என்னால அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆயிடுமோ நெனச்சு என்ன  செக் பண்றதுக்காக இப்படி யாரையாவது மெசேஜ் பண்றாரா என்று தெரியவில்லையே .. எதுவாயிருந்தாலும், பாத்து பொறுமையா தான் பண்ணனும்.

இல்லைனா கண்டிப்பா நம்ம அர்ஜுன் மாமா கிட்ட மாட்டிப்போம். இதெல்லாம் தெரிஞ்சா மத்தவங்க மேல கோபப்படுற மாதிரி நம்மள கொள்ற அளவுக்கு எல்லாம் அவர் யோசிக்க  மாட்டாரு.  பட் கண்டிப்பா சிவியர் பனிஷ்மென்ட் கிடைக்கும்.”  என்று நினைத்தவன் எதுவாக இருந்தாலும் தீவிரமாக  விசாரித்து யோசித்து தெரிந்து கொள்ளாமல்  தானாக எதையும் செய்து மாட்டிக் கொள்ளக் கூடாது என நினைத்தான்.

பின் சித்தார்த் வந்து அவனிடம் “ நான் டாடிக்கு கால் பண்ணி பேசிட்டேன் மாமா.  மைக்கேல்  அங்கிளையும் டாடி நம்ம கூட கூட்டிட்டு போக சொன்னாரு.  ஆருத்ரா இன்னும் 5 மினிட்ஸ்ல கிளம்பி கீழ வரேன்னு சொன்னா. அவ வந்த உடனே நம்ம கிளம்பலாம்.”  என்று சொன்னதால்,  அவனுடன்  கீழே சென்றான் சுனில்.

கிச்சனில் இருந்த மீராவை கால் செய்து ஹாலுக்கு வரச் சொன்னான் மைக்கேல்.  அவளும் ஏதோ முக்கியமான விஷயமாக இருக்குமோ என நினைத்து அவசரமாக அங்கே வந்து “ சொல்லுங்கள் சார்..  எதாவது வேணுமா?”  என்று அவனிடம்  கேட்க, “ம்ம்..  நீதான் வேணும்.”  என்று      பட்டென சொன்னான் மைக்கேல்.

அவனது பதிலில் ஷாக்கான மீரா “ என்ன சார் சொன்னிங்க?”  என்று அதை உறுதி செய்து கொள்வதற்காக கேட்க, “ என்ன ஆச்சு மீரா உங்களுக்கு காது கேட்காதா?  நான் கிட்ஸை கூட்டிட்டு தீம் பார்க் போறேன்.  எப்படியும் நாங்க திரும்ப  வர்றதுக்கு நைட் ஆயிடும்.  சோ அதுவரைக்கும் அவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது வேணும்ல?  அதை நீங்க தானே பண்ணி தரணும்..  அதுக்கு தான் உங்களை வர சொன்னேன்.”  என்றான் மைக்கேல்.

அதை கேட்ட பிறகு நிம்மதி  பெருமூச்சு விட்ட மீரா “ஓஹோ நீங்க அப்படி சொன்னீங்களா?  நீங்க எப்ப எப்படி பேசுவீங்கன்னு தெரிய மாட்டேங்குதா..  அதான் நான் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன்.  வேற ஒன்னும் இல்ல..  குழந்தைங்க சாப்பிடுவதற்கு தானே..  அதெல்லாம் ஆல்ரெடி நாங்க எவ்ரி வீக்  பிளான் பண்ணி எல்லா ஸ்னாக்ஸும் செஞ்சு வச்சுருவோம்.  லஞ்ச் ரெடியா தான் இருக்கு.  நீங்க வேணும்னா சொல்லுங்க..  நான் எல்லாத்தையும் பேக் பண்ணி கொண்டு வந்து கொடுக்கிறேன்.”  என்றாள்.

மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured