அத்தியாயம் 167
டைனிங் ஏரியாவில் அர்ஜுன் தேன்மொழி இருவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அப்போது மூவர் அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள். அர்ஜுனுக்கு அவர்கள் வரப்போகும் செய்தி பிரிட்டோ மூலம் ஏற்கனவே வந்திருந்ததால் அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வந்தவர்களை வரவேற்பதற்காக எழுந்து அவர்களை நோக்கி சென்றான்.
அதனால் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மற்றவர்களும் வாசல் பக்கம் பார்த்தார்கள். ஜானகியின் கண்களில் அப்பட்டமாக அவர்களைக் கண்டவுடன் அதிர்ச்சி தெரிந்தது. உடனே மரியாதை நிமித்தமாக அவளும் வந்தவர்களை காண எழுந்து சென்றாள். தேன்மொழிக்கும் அவளை சேர்ந்தவர்களுக்கும் இவர்கள் யார் என தெரியாததால் அவர்கள் குழப்பத்துடன் இருக்க,
சாப்பிடுவதற்காக கீழே வந்த சித்தார்த் அவர்களைப் பார்த்தவுடன் “grandma, grandpa!” என்றபடி கலங்கிய கண்களுடன் அவர்களை நோக்கி ஓடினான். அவர்களும் அவனைப் பார்த்து பாசத்துடன் கண்கள் குளமாக தரையில் மண்டியிட்டு அமர்ந்து தங்களது இரு கைகளையும் நீட்டி அவனை வரவேற்றார்கள்.
இத்தனை வருடங்கள் கலித்தும் சித்தார்த் இவர்களை எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறானோ என்று ஆச்சரியமாக பார்த்த அர்ஜுன் அவர்கள் அருகில் சென்று “வாங்க அங்கிள்.. வாங்க ஆன்ட்டி.. ஹாய் சுனில்!” என்று சொல்லி அவர்களை வரவேற்றான்.
“ஹலோ மிஸ்டர் அண்ட் மிஸஸ் மெஹரா.. how are you?” என்று ஜானகியும் தன் பங்கிற்கு கேட்க, சித்தார்த்தை விடாமல் தங்கள் பக்கம் பிடித்து வைத்துக் கொண்டு சியாவின் பெற்றோர்கள் அவளிடமும் அர்ஜுனிடமும் பேசினார்கள்.
ஆருத்ரா சோஃபாவின் அருகில் நின்று கொண்டு அவர்களிடம் செல்லலாமா வேண்டாமா என்று யோசித்தபடி இருக்க, அவளைப் பார்த்து ஹாய் என்று கை காட்டிய சியாவின் தம்பி சுனில் “ஹே ருத்ரா! Come here baby!” என்று அவளை அழைத்தான்.
உடனே மெல்ல நடந்து அவன் அருகில் சென்ற ஆருத்ரா “ஹலோ அங்கிள்.. good to see you.” என்று சொல்ல, ஆருத்ராவிற்கு ஹிந்தி தெரியும் என்பதால் அவன் உடனே “எதுக்கு என்னை அங்கிள்ன்னு கூப்பிடுற? It’s so formal yaar! அண்ட் வயசானவங்கள அப்படி சொன்னா கூட ஓகே.. எனக்கு இன்னும் மேரேஜ் கூட ஆகல பேபி. நீ என்னை மாமானு கூப்பிடு.” என்று ஹிந்தியில் சொன்னான்.
அதற்கு சரி என்று தலையாட்டிய ஆருத்ரா டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த தேன் மொழியையும், ஆதவனையும் திரும்பி பார்த்தாள். நடப்பதை கவனித்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு வந்திருப்பது யார் என்று இப்போது தான் தெரிந்திருந்தது. உடனே அவர்களும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஹாலுக்கு வந்தார்கள்.
தேன்மொழியை பார்த்தவுடன் சியாவின் அம்மா சோனியா மெஹரா எமோஷனல் ஆகி “இந்த பொண்ணு பாக்குறதுக்கு நிஜமாவே நம்ம சியா மாதிரி தான் இருக்கா.” என்று சொல்ல, ஆம் என்ற சுஷாந்தும் தேன்மொழியையே பார்த்தார். அதனால் தேன்மொழி மெல்ல நடந்து அவர்கள் அருகில் செல்ல, “சியா மாதிரி இருக்கிறவங்க எல்லாரும் நம்ம சியா ஆகிட முடியாது. சோ ஸ்டாப் ரியாக்டிங்.” என்றான் சியாவின் தம்பி.
இப்போது அவன் ஆங்கிலத்தில் பேசியதால் அதை புரிந்து கொண்டு தேன்மொழி அப்படியே நின்று விட, அவள் முகம் வாடுவதை கவனித்த அர்ஜுன் “இப்ப எதுக்கு தேவை இல்லாம இவங்க இங்க வந்து இருக்காங்க? ஆல்ரெடி இருக்கிற பிரச்சனையையே என்னால சமாளிக்க முடியல. இதுல இவங்க வேறயா!” என்று நினைத்து பெருமூச்சு விட்டவன், “தேன்மொழி இங்கே வா!” என்றான்.
கொஞ்சம் தயக்கத்துடன் அவள் மெல்ல நடந்து அவன் அருகில் செல்ல, உரிமையாக அவளது தோள்களில் கை போட்ட அர்ஜுன் “This is தேன்மொழி. My better half.” என்றான். உடனே சுனிலின் முகம் கோபத்தில் சிவக்க, அவன் மீண்டும் தேன்மொழியை பற்றி ஏதேனும் சொல்ல வாயை திறப்பதற்குள் முந்தி கொண்ட அர்ஜுன்,
“எங்க மேரேஜ் எப்படி நடந்துச்சுன்னு இந்நேரம் கண்டிப்பா உங்களுக்கு நியூஸ் வந்திருக்கும்ன்னு எனக்கு தெரியும். சோ அத பத்தி நான் உங்க கிட்ட பேச விரும்பல. என் ஃபேமிலில இருந்து உங்களுக்கு ப்ராப்பரா எல்லா ஃபங்ஷனுக்கும் நாங்க இன்விடேஷன் அனுப்பியும் இதுவரைக்கும் நீங்க தான் வரல.
அது ஏன்னு எனக்கு தெரியல. பட் நான் ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். தேன்மொழி பாக்குறதுக்கு சியா மாதிரி இருக்கிறது அவளோட தப்பில்ல. It’s a Nature’s magic. அண்ட் மோர்ஓவர் நாங்க யாருமே இவளுக்குள்ள சியாவை தேடணும்னு நினைக்கல.
Because we already know they both are different. And the only same thing between them is, அவங்க ரெண்டு பேருமே என்னோட wife. சியா இருந்தாலும் இல்லாம போனாலும் அவ என் பொண்டாட்டின்றது எப்பயும் மாறாது. அதே மாதிரி இவளும் என் பொண்டாட்டின்னுறது மாறாது.
எனக்கு தேன்மொழிய புடிச்சிருக்குறதுனால மட்டும் தான் நான் அவளை லவ் பண்றேன். அவ சியா மாதிரி இருக்குறதுக்காக இல்ல.” என்று ஆங்கிலத்தில் சொன்னான்.
சியா உயிருடன் இருக்கும் போது அவளை அர்ஜுன் எந்த அளவிற்கு காதலித்தான் என்பது பற்றி சியாவின் பெற்றோர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் அவர்கள் அவனது கருத்தை மனதார ஏற்றுக்கொள்ள தயாராகவே இருந்தார்கள். தங்கள் மகளை இழந்த சோகத்தில் இருந்து அவர்கள் இன்னும் வெளி வந்திருக்காததால், அவளை போலவே இருக்கும் தேன் மொழியை பார்க்கும்போது அவர்கள் மனம் ஆறுதல் அடைந்தது.
ஆனால் அப்போதில் இருந்து இப்போது வரையிலும் சியாவின் தம்பி சுனிலுக்கு அர்ஜுன் தேன்மொழியை திருமணம் செய்து கொண்டது சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் தான் இன்விடேஷன் வந்தும் அவனும் திருமணத்திற்கு வரவில்லை. தனது பெற்றோர்களையும் செல்ல விடவில்லை.
சோனியா தேன்மொழியின் தலையில் கை வைத்து “உங்களோட பிரக்னன்சி செலிப்ரேஷன் வீடியோவை நாங்க நியூஸ்ல பார்த்தோம். உன்ன அர்ஜுன் கூட பார்க்கும்போது, மறுபடியும் எனக்கு எங்க பொண்ணு சியாவை பாக்குற மாதிரி இருந்துச்சு.
அதான் உன்னை நேர்ல பார்த்து ஆசீர்வாதம் பண்ணிட்டு போலாம்னு வந்தோம். God bless you my child! என் பொண்ணால அவளுக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கையை ரொம்ப நாளைக்கு சந்தோஷமா வாழ முடியல.
அன்னைக்கு அது ஏன் அப்படி நடந்துச்சுன்னு எனக்கு தெரியல. பட் இப்போ கடவுளோட விருப்பம் நீயும் அர்ஜுனும் சேர்ந்து வாழறதுல தான் இருக்கு. சோ கடைசி வரைக்கும் இதே மாதிரி நீங்க ஹாப்பியா இருக்கணும்.” என்று ஆங்கிலத்தில் சொல்லி வாழ்த்த,
அவர்கள் தன் மீது கோபப்படுவார்களோ என நினைத்து பயத்தில் இருந்த தேன்மொழி அப்படி எதுவும் நடக்காததால் சந்தோஷப்பட்டு சோனியா மற்றும் சுஷாந்தின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.
சியா இறந்ததற்கு ஏதோ ஒரு வகையில் அர்ஜுன் தான் காரணம் என்று அவளது குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றாக தெரியும். இருப்பினும் அவளை கொல்வது அர்ஜுனின் எண்ணம் இல்லை என புரிந்து கொண்டு சியாவின் பெற்றோர்கள் மனம் மாறிவிட்டார்கள். ஆனால் என்ன இருந்தாலும் தன் அக்கா இப்போது தங்களுடன் இல்லாமல் போனதற்கு அர்ஜுன் தானே காரணம் என்ற கோபம் இன்றளவிலும் சுனிலின் மனதில் இருப்பதால் அவன் தேன்மொழியை தன் அக்காவின் இடத்தை பிடிக்க வந்த போட்டிக்காரியாகவே பார்த்தான்.
ஆனால் தேன் மொழியுடன் போட்டி போட எதிரில் இங்கே சியா என்ற ஒருத்தி இல்லவே இல்லை. எப்போதோ அவள் இறைவனடி சேர்ந்து விட்டாள், இனி அவளைப் பற்றி யோசிப்பதிலோ பேசுவதிலோ எந்த பயனும் இல்லை என புரிந்து கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை. அவன் கண்கள் வெறுப்புடனே தேன்மொழியை பார்த்துக் கொண்டிருந்தது.
அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த அர்ஜுன் இவன் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என மனதில் குறிப்பெடுத்துக் கொண்டான். சியாவின் பெற்றோர்களே தேன்மொழி இடம் இப்படி அன்புடன் நடந்து கொள்கிறார்களே என குழப்பத்துடனும் ஆச்சரியத்துடனும் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த சித்தார்த் நேரடியாகவே அவர்களிடம் “உங்களுக்கு இவங்க மேல கோபம் இல்லையா?” என்று கேட்டான்.
அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சோனியா சிஷாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “உன்னால இவங்கள உன் மம்மியா ஏத்துக்க முடியுமா சித்தார்த்?” என்று அவனிடம் கேட்டான் சுனில்.
அதற்கு பதில் சொல்லாமல் சித்தார்த் தன் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து மற்றவர்களை பார்க்க, “இந்த பொண்ணு மேல கோபப்படறதுக்கு என்ன இருக்கு சித்தார்த்? உங்க டாடிக்கும் இந்த பொண்ணுக்கும் எப்படி மேரேஜ் ஆச்சுன்னு ஆல்ரெடி எங்களுக்கு தான் தெரியுமே..
இப்படி ஒரு மேரேஜ் நடக்கும்னு பாவம் அந்த பொண்ணு கூட எதிர்பார்த்திருக்க மாட்டா. இது எல்லாமே கடவுளோட விளையாட்டு. நாங்க யார் மேலயாவது கோபப்படனும்னா எங்க பொண்ணா ஏன் அல்பாய்ஸ்ல கூட்டிட்டு போனேன்னு அந்த கடவுள் மேல தான் கோவப்படணும்.
எது எப்படியோ, உங்க டாடிக்கும் இவங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. இப்ப இவங்க தான் உன் அம்மா. தேன்மொழி உன்னையும், ஆருத்ராவையும் பாசமா பார்த்துக்கிறதா உங்க ஜானகி பாட்டி எங்க கிட்ட சொல்லிருக்காங்க. நெஜமாவே அப்படி இருந்தா எங்களுக்கு அது சந்தோஷம் தான்.
அம்மா இல்லாத குழந்தைங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்கன்னு எங்களுக்கு நல்லா தெரியும். உங்களுக்கு அந்த கஷ்டம் வரக்கூடாது. நீங்க எல்லாரும் எப்பயும் ஹாப்பியா இருக்கணும். சோ இனி பாஸ்டை பத்தி யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல.” என்று அவனுக்கு புரியும்படி விளக்கிச் சொன்னாள் சோனியா.
– மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல்பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)