Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 162

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 162

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 162

ரியா அனிதாவிடம் தொடர்ந்து “என்ன மா நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன்.‌. நான் கேட்கிற எதுக்கும் நீங்க ஆன்சர் பண்ணவே மாட்டேங்கறீங்க? பாக்குறதுக்கும் நீங்க ரொம்ப டென்ஷனா இருக்குற மாதிரி தெரியுது. ஏதாவது ப்ராப்ளமா? ப்ளீஸ் எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லுங்க.” என பதட்டத்துடன் அழுது கொண்டே கேட்க,

“என்னை சுத்தி திடீர் திடீர்னு என்னென்னமோ நடக்குது. அது எல்லாம் ஏன் நடக்குது எதுக்கு நடக்குதுன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது.  இதுல சின்ன பொண்ணு உன் கிட்ட நான் என்ன டா சொல்லட்டும்? தேன்மொழிக்கு எல்லாமே தெரிஞ்சிருச்சு.

கண்டிப்பா கோபப்பட்டு அவ வீட்டில இருக்கிறவங்க எல்லார் கிட்டயும் நடந்ததை சொல்லி பெரிய பிரச்சனை ஆக்கிருப்பா. அவங்க எல்லாரும் இப்ப என்ன தான் தேடிக்கிட்டு இருப்பாங்க. அர்ஜுன் சாருக்கு மட்டும் நான் பண்ணது தெரிய வந்துச்சுன்னா, கண்டிப்பா அவர் என்னை கொலை பண்றதுக்கு கூட தயங்க மாட்டாரு.

உனக்குன்னு நான் மட்டும் தான் இருக்கேன் ரியா. நானும் போய் சேர்ந்துட்டா உன்னை யார் பார்த்துக்குறது? அதான் இப்படி நான் என் உயிரை காப்பாத்திக்குறதுக்கு ஓடிக்கிட்டு இருக்கேன்.” என நினைத்து கண் கலங்கிய அனிதா தன் மகளிடம் அவளால் வெளிப்படையாக எதையும் சொல்ல முடியாது என்பதால் “ப்ளீஸ் ரியா.. அம்மா கிட்ட இப்ப எதுவும் கேட்காத டா. உனக்கு ஆன்சர் பண்ற சுச்சுவேஷன்ல நான் இல்ல. கொஞ்ச நேரம் அமைதியா இரு.” என்றாள்.

அவள் என்ன சொன்னாலும், ரியாவிற்கு நொடிக்கு நொடி பயம் அதிகமாகிக் கொண்டே இருந்ததால் அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் தன் அம்மாவிடம் அவள் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாள். இப்படியே அவர்கள் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தியபடி காரில் சென்று கொண்டு இருக்க, திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் கார் அவளது காரை வழிமறித்து நின்றது.

அதை கண்டவுடன் பயந்து போன அனிதா சடன் பிரேக் போட்டு தனது காரை நிறுத்தினாள். நல்லவேலையாக அவளும் ரியாவும் சீட் பெல்ட் போட்டு இருந்ததால் அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு ஏதோ தவறாக நடக்கிறது என்று அனிதாவிற்கு புரிந்து விட்டதால் அவள் பதட்டத்துடன் இருந்ததில் அவளது முகம் முழுவதும் வியர்வை துளிகள் பூத்து இருந்தது.

அவள் அப்படியே காரில் இருந்து கீழே இறங்கி தப்பித்து எங்கேயாவது தனது மகளுடன் ஓடிச் சென்று விடலாம் என்று கூட ஒரு நொடி நினைத்தாள். ஆனால் அந்த யோசனை அவள் எண்ணங்களை விட்டு மறைவதற்குள் அவளுக்கு முன்னே நின்று கொண்டு இருந்த காரின் இரு பக்கத்தில் இருந்து மைக்கிலும், பிரிட்டோவும் கையில் ஆளுக்கு ஒரு துப்பாக்கியுடன் கீழே இறங்கினார்கள்.

அவர்களைக் கண்டவுடன் தப்பிக்கும் எண்ணத்தை கைவிட்ட அனிதா “எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல. ரியாவை மட்டும் எப்படியாவது காப்பாத்தி இங்க இருந்து அனுப்பிவைசிரனும்.” என நினைத்தவள் அவசரமாக தங்கள் இருவரின் சீட் பெல்ட்டையும் அகற்றினாள்.

பின் தன் மகளிடம் “இங்க பாரு ரியா.. அம்மா சொல்றத நல்லா கேட்டுக்கோ.. இப்ப நான் கார்ல இருந்து கீழே இறங்கி போக போறேன். மேபி அவங்க என்னை அவங்க கூட கூட்டிட்டு போவாங்கன்னு நினைக்கிறேன். அப்படி நடந்தா, நீ கார்ல இருந்து கீழே இறங்கவே கூடாது. டோரை உள்ள லாக் பண்ணிக்கோ.

உங்க பாட்டிக்கு கால் பண்ணி உன்ன வந்து கூட்டிட்டு போக சொல்லு. ஏற்கனவே நான் அவங்களுக்கு வாட்ஸப்ல லைவ் லொகேஷன் அனுப்பிட்டேன். ஒருவேளை அவங்க உன்னையும் என் கூட கூட்டிட்டு போக ட்ரை பண்ணா, அம்மாவோட ஃபோனை எடுத்துக்கிட்டு கார் டோரை ஓப்பன் பண்ணி வேகமா வெளிய ஓடிப் போயிடு. அவங்க உன்னை துரத்திட்டு வராம நான் பாத்துக்கிறேன். என்ன நான் சொல்றது புரியுதா?” என்று கேட்க,

அழுது கொண்டே பாவமாக அவளை பார்த்த ரியா “இல்ல அம்மா! ப்ளீஸ் என்ன விட்டுட்டு போகாதீங்க. யார் அவங்க? எதுக்காக கையில பிஸ்டல் ஓட நம்ம கிட்ட வராங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீங்க கீழ இறங்காதீங்க.

காரை ரிவர்ஸ் எடுங்க. நம்ம எப்படியாவது இங்க இருந்து பாட்டிகிட்ட போயிடலாம். மறுபடியும் என்ன தனியா விட்டுட்டு போயிடாதீங்க அம்மா ப்ளீஸ்!” என்று அழுது கதறினாள்.

இப்படித் தாயும் மகளும் பாச போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போதே அவர்களை நெருங்கி வந்திருந்த பிரிட்டோவும், மைக்கலும் துப்பாக்கியை காட்டி அனிதாவை காரில் இருந்து கீழே இறங்கி வரச் சொல்லி மிரட்டினார்கள்.

“ரியா அம்மா சொன்னத ஞாபகம் வச்சுக்கோ!”  என்று தன் மகளிடம் சொன்ன அனிதா “நான் வந்துட்டறேன் சார் வந்துடறேன்.. ப்ளீஸ் எங்கள எதுவும் பண்ணிடாதீங்க. என் பொண்ணு அப்பாவி. அவளுக்கு எதுவும் தெரியாது. அவளை விட்ருங்க!” என்று கெஞ்சியபடி தன் பக்கம் இருந்த கார் கதவை திறந்து கீழே இறங்கினாள்.

“அம்மா.. ப்ளீஸ் அம்மா போகாதீங்க!” என்று அனிதாவை பார்த்து அழுதபடி சொன்ன ரியா அவளை துப்பாக்கியை காட்டி மிரட்டிக் கொண்டு இருந்த பிரிட்டோ மற்றும் மைக்கேலை பார்த்து “யார் நீங்க? எதுக்காக எங்களை டார்ச்சர் பண்றீங்க?  என் அம்மாவை விட்டுருங்க.. அவங்க ரொம்ப பாவம்..  ப்ளீஸ் அங்கிள்!” என்று கெஞ்சினாள்.

தேவை இல்லாமல் ரியாவை இந்த பிரச்சனையில் அழ வைக்க வேண்டாம் என நினைத்த பிரிட்டோ அனிதாவின் கையை பிடித்து அவளை அவளது காரின் பின் சீட்டிலேயே தள்ளி கதவை மூடிவிட்டு சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்தான். உடல் நடுங்க  அவனைப் பார்த்து பயத்துடன் ரியா அழுது கொண்டு இருக்க,

“நாங்க உன்னை எதுவும் பண்ண மாட்டோம். உங்க மம்மி கிட்ட எங்களுக்கு கொஞ்சம் என்கொயரி பண்ண வேண்டியது இருக்கு. நாங்க அதை பண்ணி முடிக்கறதுக்குள்ள உங்க மம்மி எஸ்கேப் ஆகி வந்துட்டாங்க.

அதனால தான் நாங்க அவங்களை தேடி வந்தோம். உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சோ நீ அமைதியா இருந்தா, உனக்கும் உங்க மம்மிக்கும் எதுவும் ஆகாது. Keep quiet!” என்று ரியாவை பார்த்து சொல்லிவிட்டு தனது இதழ்களில் ஆள் காட்டி விரலை வைத்து அமைதியாக இரு என்பதை போல சைகை செய்தான்.

அவர்கள் ஏதோ கொள்ளைக்காரர்கள் அல்லது கடத்தக்காரர்கள் போல என நினைத்து பயத்தில் நடுங்கி கொண்டு இருந்த ரியா உடனே தனது வாயை மூடிக் கொண்டு “நான் எதுவும் பேச மாட்டேன். நீங்க எங்களை விட்ருங்க.” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

“நான் இவங்கள கூட்டிட்டு வந்துடறேன். நீ ஃபாலோ பண்ணி வா டா.” என்று மைக்கில் இடம் சொன்ன பிரிட்டோ அனிதாவின் காரை ரிவர்ஸ் எடுத்து அர்ஜுனின் வீட்டை நோக்கி பயணித்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பின் வாசல் வழியாக ஹனி பேலஸிற்குள் அழைத்து வரப்பட்ட அனிதா தேன்மொழியின் முன்னே நிற்க வைக்கப்பட்டு இருந்தாள். “என் பொண்ணு எங்க? அவளை என்ன பண்ணீங்க?” என்று அனிதா கண்ணீருடன் அனைவரையும் பார்த்து கேட்க, கோபத்தில் அவளை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்த தேன்மொழி “எங்களை பார்த்தா உனக்கு என்ன குழந்தை கடத்தறவங்க மாதிரி தெரியுதா? நீ பண்ண வேலைக்கு உன்னை நாங்க சும்மா விடவே கூடாது. அதுக்காக சின்ன பொண்ணை ஏதாவது பண்ணனும்னு நினைக்கிற அளவுக்கு நாங்க உன்ன மாதிரி ஒன்னும் சீஃப்பான ஆளுங்க இல்ல.

ரியா கிளாரா கூட பிளே ஏரியால இருக்கா. இப்ப சொல்லு.. எதுக்காக இப்படி ஒரு கேவலமான வேலைய பண்ண? என் ஹஸ்பண்ட் மேல உனக்கு ஒரு கண்ணு இருந்து இருக்குன்னு கூட கண்டு பிடிக்க தெரியாத முட்டாளா நான் இருந்திருக்கேன்ல..!! அவர் இப்ப வரைக்கும் அது நான்னு நினைச்சுட்டு இருக்காரு.

அவருக்கே தெரியாம அவருக்கு ஜூஸ்ல ட்ரக்ஸ் கலந்து கொடுத்தது நீதான்னு நாங்க சிசிடிவி கேமராவுல பார்த்து கண்டு பிடிச்சிட்டோம். இப்ப இதுக்கு நீ என்ன பதில் சொல்ல போற அனிதா? அர்ஜுனுக்கு இப்ப தான் ட்ரீட்மென்ட் முடிஞ்சது. அவர் நார்மல் ஆகும்போது, நடந்தது எல்லாம் அவருக்கு தெரிஞ்சா உன்னை கடவுளே நினைச்சாலும் அவர் கிட்ட இருந்து காப்பாத்த முடியாது. ஒழுங்கு மரியாதையா நான் கேட்கும் போதே உண்மையை சொல்லிடு.” என்று அவளை மிரட்டினாள்.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured