Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 157

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 157

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 157

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த மைக்கிலுக்கு அர்ஜுனிடம் இருந்து கால் வந்தது. உடனே அதை அட்டென்ட் செய்தவாறு அவன் எழுந்து ஒரு ஓரமாக செல்ல, “அவன் வந்தான் டா. அவனை நல்லா வெளுத்து விட்டு அனுப்பியாச்சு. ஆனா எனக்கு என்னமோ இதுவரைக்கும் நடந்தது எல்லாத்தையும் இவனுங்க பண்ண மாதிரி தெரியல.

நான் அந்த பையன் ராகவ் கிட்ட விசாரிச்ச வரைக்கும் ஏற்கனவே இந்த கன்ஸ்டிரக்ஷன் பில்டிங்ல பிரச்சனை போயிட்டு இருந்ததுனால அதை யூஸ் பண்ணி அவனுங்க நமக்கு எதிரா ஆளுங்கள வச்சு பிரச்சனைய பெருசாக்க மட்டும் தான் ட்ரை பண்ணி இருக்காங்க. அப்ப இது எல்லாத்தையும் கிரியேட் பண்ணவன் வேற ஒருத்தன்.

அவனை தான் நம்ம கண்டு பிடிக்கணும். இப்ப இந்த பிரச்சனையை ராகவை வச்சே முடிச்சாச்சு. அவனே மீடியா முன்னாடி எல்லாத்துக்கும் அவன் தான் காரணம், என் பெயரை கெடுக்குறதுக்கு தான் இப்படி எல்லாம் பண்ணதா ஒத்துக்கிட்டான். சோ இப்ப ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்டார்ஜ் ஆகி வெளியே போகும்போது அப்படியே கேஷுவலா அவங்களா வர்ற மாதிரி வீடியோ ஆளுங்கள இங்க வர வை.

நம்ம சைடுல இருந்து இறந்தவங்க ஃபேமிலிக்கு காம்பன்ஷேசன் அமௌன்ட் கொடுக்கிறது மட்டும் இல்லாம, நம்மளோட ஹரி ஹோம்ஸ்ல அவங்க பர்மனென்ட்டா ஸ்டே பண்றதுக்கு அரெஞ்ச் பண்ணி கொடுத்திடலாம். இன்னும் வேற ஏதாவது கேட்டாங்கனாலும் பண்ணி கொடுக்கணும். ஆக மொத்தம் இந்த பிரச்சனையை இதோட முடிக்கணும்.” என்றான் அர்ஜுன்.

“அதெல்லாம் முடிச்சிடலாம். பிரிட்டோ கிட்ட பேசி எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிக்கலாம். எனக்கு என்னவோ இந்த வீட்ல  ஏதோ ஒன்னு சரி இல்லன்னு தோணுது டா. பட் அது என்னனு என்னால கரெக்டா கண்டுபிடிக்க முடியல. எனக்கு கொஞ்சம் டைம் கொடு.

உன் கூட மறஞ்சு நின்னு கபடி விளையாடிட்டு இருக்க அந்த cleaver enemy யாருன்னு நான் சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன். நீ கிளம்பும்போது சொல்லு. எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு நான் முடிச்சிட்டு அங்க வரேன்.” என்று சொல்லிவிட்டு அவனது அழைப்பை துண்டித்த மைக்கேல் சாப்பிடுவதற்காக மீண்டும் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

அப்போது மற்றவர்கள் அனைவரும் சாப்பிட்டு எழுந்து சென்று இருந்ததால் சாப்பாடு பரிமாறுவதற்காக அங்கே ஓரமாக நின்று கொண்டு இருந்த மீரா அவனையே குறுகுறுவென்று பார்க்க, “உன் பார்வையே சரி இல்லையே.. என்ன ஏதாவது திருட்டுத்தனம் பண்ணி வச்சிருக்கியா? நான் சாப்பிடுற சாப்பாட்டுல உப்பு அள்ளி கொட்டிட்டியா? இல்ல மொத்தமா என்னை போட்டு தளத்துக்கு பாய்சனே வச்சுட்டியா?” என்று அவளிடம் கேட்டான் மைக்கேல்.

“என்ன சார் எப்ப பாத்தாலும் என் மேல பழி போட்டுக்கிட்டே இருக்கீங்க? நீங்க என்ன எனக்கு எனிமியா? உங்கள ஏதாவது பண்ணி கொல்றதுனால எனக்கு என்ன கிடைக்கப் போகுது?” என்று கேட்ட மீரா அவனைப் பார்த்து முறைக்க, “சரி அதை விடு, நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் உட்காரு.” என்றான் மைக்கேல்.

“இப்ப என்ன பேச போறான் இவன்? மறுபடியும் என்னை கார்னர் பண்ற மாதிரி ஏதாவது பேசட்டும்.. இன்னைக்கு இவன பத்தி நான் ஜானகி மேடம் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணாம விட மாட்டேன்.” என்று நினைத்த மீரா அவனுக்கு எதிரில் இருந்த  சேரில் அமர்ந்து கொண்டு “என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு வேலை இருக்கு.” என்றாள்.

“போதும் போதும் ஓவரா பண்ணாத. லிண்டாவுக்கு ஃபுட் அலர்ஜி ஆச்சு உனக்கு அத பத்தி தெரியுமா?” என்று மைக்கேல் தனது முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு கேட்க, இப்போது அவன் கண்டிப்பாக தன்னிடம் விளையாடவில்லை என்று அவளுக்கும் புரிந்ததால் தானும் சீரியசான மோடிற்க்கு மாறிய மீரா “ம்ம்.. தெரியும் சார். அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு ஆகாஷ் சார் கூட எங்க எல்லார் கிட்டயும் விசாரிச்சாரு.” என்றாள்.

“ம்ம்.. அப்ப எதனால அவங்களுக்கு  ஃபுட் அலர்ஜி ஆச்சுன்னு உனக்கு தெரிஞ்சு இருக்கணுமே!” என்று கேட்ட மைக்கேல் சந்தேகமாக அவளை பார்க்க, “தெரியும் சார், அவங்க சாப்பிட்ட சாப்பாட்டுல வேர்க்கடலை இருந்திருக்கு. ஆனா எனக்கு அது எப்படி ஃபுட்ல வந்துச்சுன்னு தான் இப்ப வரைக்கும் தெரியல.

இந்த  வீட்டை  அர்ஜுன் சார் வாங்கினதுக்கு அப்புறமா புதுசா ஆளுங்கள வேலைக்கு எடுத்தாங்க. நாங்க ஒரு குக்கிங் டீம் ஃபார்ம் பண்ணும்போது வீட்ல இருக்கிறவங்க யாருக்காவது அலர்ஜி இருக்கான்னு முதல்ல கேட்டு தெரிஞ்சிக்குவோம்.

லிண்டா மேமுக்கு கிரௌண்ட் நெட் சாப்பிட்டா அலர்ஜி இருக்குன்னு முன்னாடியே ஜானகி மேடம் சொல்லிட்டாங்க. அதனால மோஸ்ட்லி சமைக்கிற எதிலுமே நாங்க அதை ஆட் பண்ண மாட்டோம். இந்த விஷயம் நடந்த அன்னைக்கு சமைச்ச எல்லா சாப்பாட்டையும் நைட்டு கிளம்பறதுக்கு முன்னாடி நான் சாப்பிட்டேன்.

அப்போ சப்பாத்திக்கு வச்சிருந்த கிரேவில வேர்க்கடலை ஃபிளேவர் இருந்துச்சு. ஆனா ரொம்ப மைல்டா இருந்துச்சு. அந்த கிரேவியை நாங்க மூணு பேர் சேர்ந்து செஞ்சோம். எனக்கு நல்லா தெரியும் யாருமே அதுல வேர்க்கடலையை போடல. கிச்சன்ல கூட சிசிடிவி கேமரா இருக்கு சார்.

அப்படி எல்லாம் யாருக்கும் தெரியாம இங்க யாரும் எதுவும் பண்ணிட முடியாது.  ஆனாலும் எங்க எல்லாரையும் மீறி எப்படி அதுல வேர்க்கடலை வந்துச்சுன்னு என்னாலயும் கண்டுபிடிக்க முடியல. எனக்கு என்ன தோணுதுனா, கிச்சன்ல இருந்து வேர்க்கடலை வரல.

நாங்க கொண்டு வந்து டைனிங் டேபிள்ல வச்சதுக்கு அப்புறமா தான் யாரோ வேணும்னே பிளான் பண்ணி லிண்டா மேடம் சாப்பிடுவதற்கு முன்னாடி அதுல வேர்க்கடலைய பவுடர் பண்ணி ஆட் பண்ணி இருக்கணும்.” என்று அனைத்தையும் தெளிவாக அவனிடம் விளக்கினாள் மீரா.

அவள் பேசும்போது அவளது முக பாவனைகளையே பார்த்துக் கொண்டு இந்த மைக்கேல் “இவ சொல்ற மாதிரி எல்லாம் நடந்திருக்கணும்னு தோணுது. இவ கண்ணுல பொய் தெரியல. இவ கொஞ்சம் கூட பதட்டப்படல. அப்ப இது தான் உண்மை. நடுவுல வந்து எவனோ ஒருத்தன் வேலைய பாத்துட்டு போயிருக்கான். அதுவும் சிசிடிவி கேமரால மாட்டாத அளவுக்கு எல்லாத்தையும் பிளான் பண்ணி இருக்கான்.

அவன் யாரோ ஒரு மூணாவது ஆளா இருந்தா, அப்படி ஒருத்தன்  இந்த வீட்டுக்குள்ள வந்துட்டு போறது எங்கயும் ரெக்கார்டு ஆகல. அப்ப கேமரா ஆக்சஸ் இருக்கிற எவளோ இந்த வீட்டுக்குள்ள இருக்கிற ஒருத்தர் தான் அவர் மேல யாரும் எப்படியும் சந்தேகப்பட மாட்டாங்கன்ற தைரியத்துல கொஞ்சம் கூட பயமே இல்லாம இதை பண்ணி இருக்கான்.” என்ற முடிவிற்கு வந்தான்.

ஈவினிங் அனைத்தையும்  பிரச்சனையும் ஹாஸ்பிடலில் முடித்து வைத்துவிட்டு அங்கே இருந்து கிளம்பிய அர்ஜுன் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அப்போது அந்த வீடு அழகாக அலங்கரிக்கப்பட்டு தேன்மொழியின் பிரக்னன்சி ரீவில் செலிப்ரேஷன்க்காக தயாராக இருந்தது.

இத்தனை நாட்களாக தேன்மொழியை கஷ்டப்படுத்தியது போதும். இதற்கு மேல் அவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நினைத்த அர்ஜுன் கிளாராவை வைத்து தேன்மொழிக்கு பிடித்தவர்கள், அவளுடன் படித்தவர்கள், அவளது சொந்தக்காரர்கள் நண்பர்கள் என அனைவரையும் இன்வைட் செய்து வரவழைத்து இருந்தான்.
 
ஃபங்ஷனுக்காக ஒரே மாதிரி சிவப்பு நிறத்தில் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆடை அணிந்து இருக்க, நடக்கும் எதற்கும் நடக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல தனது ரூமிற்குள் சோகமே உருவாக அமர்ந்து இருந்தான் சித்தார்த்.

ஜானகி சொன்னதற்காக தனக்கு கொடுக்கப்பட்ட புதிய ஆடையை அணிந்து கொண்டு தயாராகி சித்தார்த்தை தேடிக் கொண்டு அவனது ரூமிற்கு சென்ற ஆருத்ரா “ஃபங்ஷனுக்கு ரெடியாகி எல்லாரும் கீழ வந்துட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கேக் கட்டிங் ஸ்டாட் ஆகப்போகுது. பாட்டி உன்னை கீழே கூட்டிட்டு வர சொன்னாங்க. நீ ஏன் இன்னும் ரெடியாகாம இருக்க சித்து?” என்று கேட்க, “இந்த ஃபங்ஷனுக்கு நான் எதுக்கு ரெடி ஆகணும்? எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்ல. உனக்கு அந்த ஆண்டியை ரொம்ப புடிச்சிருந்தா, நீ அவங்க கூட போய் செலிபிரேட் பண்ணு. நான் உன்னை போக வேண்டாம்னு சொல்லலையே.. என்னை அங்க வரச் சொல்லி எதுக்கு என்னை டிஸ்டர்ப் பண்ற? நான் தனியா இருக்கணும்னு நினைக்கிறேன். Please leave me Alone.” என்று உடைந்த குரலில் சொன்னான் சித்தார்த்.

வர வேண்டியவர்கள் எல்லாம் கூடி லிவிங் ரூமில் பிரமாண்டமாக போடப்பட்டு இருந்த டெம்ப்ரவரி மேடைக்கு  முன்னே நிற்க, அர்ஜூனுடன் மேடையில் நின்று கொண்டு இருந்த தேன்மொழி “ஆருத்ராவும் சித்தார்த்தும் வருவாங்களா? நீ போய் அவங்கள கூட்டிட்டு வாயேன் !” என்று சொல்ல, “அவங்க கண்டிப்பா வருவாங்க எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றான் அர்ஜூன்.

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured