Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 155

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 155

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 155

சந்தோஷ் ஜனனியிடம் பேசும் விதத்தை கவனித்துக் கொண்டு இருந்த மைக்கேல் “என்ன இவன் டோட்டலா மாறிட்டான்? ஜனனியை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இவன் இப்படி இல்லையே!” என்று நினைத்தான்.

சந்தோஷ் வெளியில் சென்றவுடன் ஜனனி மைக்கேலை கவனித்து விட்டு அவசரமாக தன் கண்ணீரை அவனுக்கு தெரியாமல் துடைத்தவள், “ஹாய் ப்ரோ! இப்ப தான் தூங்கி எந்திரிச்சு வரீங்களா? பிரேக்ஃபாஸ்ட் ரெடியா இருக்கு. வாங்க சாப்பிடலாம்!” என்றாள்.

“ஆமா ஆமா.. நைட் ரொம்ப லேட் ஆயிடுச்சு வீட்டுக்கு வர்றதுக்கு.  இப்பயும் அர்ஜுனை போய் ஹாஸ்பிடல்ல பார்க்க வேண்டிய வேலை இருக்கு. சாப்பிட்டு போலாம்னு தான் இங்க வந்தேன்.  நீயும் வா, நம்ம சேர்ந்து சாப்பிடலாம். நான் உன் கிட்ட பேசி ரொம்ப வருஷம் ஆகுது.” என்று மைக்கேல் சொல்ல,

சர்வன்டை அழைத்து தன் கையில் இருந்த குழந்தையை கவனித்துக் கொள்ளச் சொல்லி கொடுத்துவிட்டு ஜனனி மைக்கில் உடன் சாப்பிடுவதற்காக சென்றாள். அவள் அமைதியாக பேருக்கு சாப்பிட்டு கொண்டு இருப்பதை கவனித்த மைக்கேல் “நீ சந்தோஷ் கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டேன். அப்படி என்ன ஸ்பெஷல் டே இன்னைக்கி? அதை அவன் மறந்துட்டானா?” என்று கேட்க,

“ஆக்சுவலி இன்னைக்கு ரெண்டு ஸ்பெஷலான விஷயம் இருக்கு. அதுல ஒன்னு எனக்கும் சந்தோஷுக்கும் ரொம்ப ஸ்பெஷல். இன்னைக்கு அர்ஜுன் அண்ணாவுக்கும் சியா அண்ணிக்கும் மேரேஜ் அனிவர்சரி.

அவங்களுக்கு மேரேஜ் ஆகும் போது தானே நான் சந்தோஷ கிட்ட ப்ரபோஸ் பண்ணேன்! எங்களுக்கு இன்னைக்கு லவ் அனிவர்சரி. அதைப் பற்றித் தான் நான் அவன் கிட்ட பேசிட்டு இருந்தேன் ப்ரோ. பட் அவன் நான் சொல்ல வர்றத கேட்காம ஏதோ இம்பார்ட்டண்ட் ஒர்க் இருக்குன்னு கிளம்பி போயிட்டான்.

இதுக்கு முன்னாடி எல்லாம் சந்தோஷ் இப்படி இல்ல தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ற டைம்ல இருந்து நீங்க தான் எங்களை பாக்குறீங்களே.. அப்ப எல்லாம் அவனோட வேல்டுல நான் மட்டும் தான் இருந்தேன். எப்பயுமே அவன் என்ன பத்தியே யோசிச்சுகிட்டு என் பின்னாடியே சுத்திட்டு இருப்பான்.

இப்ப எங்களுக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறமா இங்க அப்படியே ரோல் ரிவர்ஸ் ஆன மாதிரி ஆயிடுச்சு. நான் தான் அவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கேன். என்னையும், எங்க பேபிசையும் அவன் கண்டுக்கவே மாட்டேங்கிறான். நான் கூட பரவால்லஃ எங்க குழந்தைங்க கிட்ட கூட அவன் பெருசா டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்குறான். இப்படியே போனா குழந்தைகளுக்கு அப்பா முகம் எப்படி ப்ரோ ரிஜிஸ்டர் ஆகும்? முதல்ல குழந்தைகளுக்கும் பேரண்ட்ஸ்க்கும் நடுவுல ஒரு நல்ல bond இருந்தா தானே அங்கே ஒரு ஃபேமிலி கிரியேட் ஆகும்!

எனக்கு  இப்ப  தோணுது பேசாம எங்களுக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறமா நான் சந்தோஷை கூட்டிக்கிட்டு தனியா வேற வீடு பார்த்து போயிருந்தா நல்லா இருந்திருக்கும்னு இப்ப தோணுது. ஆபீஸ் வர்க்கல பிஸியா இருக்கேன்னு எப்ப கேட்டாலும் அவன் ரீசனா சொல்றான். அர்ஜுன் அண்ணா கிட்ட சொல்லி அவன் கிட்ட எந்த வேலையும் கொடுக்காதீங்கன்னு சொல்லலாம்னு கூட எனக்கு தோணுது ப்ரோ. நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டு தன் மனதில் இருந்த அனைத்தையும் அவனிடம் கொட்டினாள் ஜனனி.
 
‌“ம்ம்.. எனக்கும் நீ சொல்றது கரெக்ட்ன்னு தான் தோணுது ஜனனி. நீயும் அவனும் ஹாப்பியா வாழனும்னு தானே அர்ஜுன் கோமல இருக்கிற ஸ்டேஜ்ல கூட உனக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வச்சோம்.. ஆனா நீயே இங்க ஹாப்பியா இல்லனா, அப்புறம் எதுக்கு இதெல்லாம்?

அங்க எல்லாத்துக்கும் தனித் தனியா வேலை பாக்குறதுக்கு ஆளுங்க இருக்காங்க. அர்ஜுனே சம்டைம்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டு தேன்மொழி பின்னாடி தான் சுத்திட்டு இருக்கான். இவனுக்கு அப்படி என்ன அவனோட ஃபேமிலிய கவனிக்க முடியாத அளவுக்கு வேலை? கண்டிப்பா நான் இத பத்தி அர்ஜுன் கிட்ட பேசுறேன்.” என்று மைக்கேல் சொல்ல, “தேங்க்ஸ் அண்ணா!” என்று உற்சாகமான குரலில் சொன்னாள் ஜனனி.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே ஹாஸ்பிடலில் இருந்து தேன் மொழியையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் ஜானகி.

தேன்மொழியை முதன்முறையாக நேரில் பார்ப்பதால் ஆச்சரியப்பட்ட மைக்கேல் அவள் அருகில் வந்தவுடன் எழுந்து நின்று “ஹாய் மிஸ்ஸஸ் அர்ஜுன்! நான் மைக்கேல். உங்களுக்கு கால் பண்ணி அன்னைக்கு பேசுனது நான் தான். நெஜமாவே நீங்க அப்படியே பாக்குறதுக்கு சியா மாதிரியே இருக்கீங்க.” என்று அவசரமான குரலில் சொல்ல, தேன் மொழியையும் சியாவையும் அவன் ஒப்பிட்டு பேசியதை கேட்டவுடன் குழந்தைகள் இருவருக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது.

அதனால் அவர்கள் இருவரும் தன் முகத்தை திருப்பி கொண்டு சென்று விட, “இதுக்கு இல்லையா ஒரு எண்டு?” என்று நினைத்து செல்லும் குழந்தைகளை பாவமாக பார்த்த தேன்மொழி மைக்கேலை பார்த்து “வந்தவுடனே உங்களால என்ன செய்ய முடியுமோ அதை கரெக்டா செஞ்சுட்டீங்க.” என்று நினைத்தவள், “ஹாய் ப்ரோ! Nice to meet you.” என்று சொல்லி வராத புன்னகையை வரவழைத்து சிரித்தாள்.

“நீங்களும் உக்காருங்க! நம்ம எல்லாரும் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்!” என்று மைக்கேல் சொல்ல, ஜானகி வரும்போது கிச்சனுக்கு கால் செய்து தேன்மொழிக்காக சில உணவுகளை சமைக்க சொல்லி இருந்ததால் அங்கே போதுமான சர்வெண்ட் இல்லை என்ற நிலையில் தானே சமைத்து அதை எடுத்துக் கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தாள் மீரா.

ஜானகியும், தேன்மொழியும் அவர்களுடன் சேர்ந்து டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட தொடங்கினார்கள். உணவு பரிமாற ஆளில்லாததால் மீராவே அந்த வேலையை செய்ய, “ஏன் மா மீரா.. நீ ஏன் இதை எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்க? சர்வன்ட் யாரும் இல்லையா?” என்று கேட்டாள் ஜானகி.

“தேன்மொழி மேடம் பிரக்னண்டா இருக்கிறதை அர்ஜுன் சார் அனவுன்ஸ் பண்ண போறாராம் மேடம். அதுக்காக வீட்டிலேயே ஒரு சின்ன செலிப்ரேஷன் பார்ட்டி ஆர்கனைஸ் பண்ண எங்களுக்கு ஆர்டர் வந்து இருக்கு.

நான் இவ்ளோ நேரம் மெனு ரெடி பண்ணிட்டு இருந்தேன். நீங்க கால் பண்ண உடனே மேடம்காக ஸ்பெஷல் ஃபுட் ஐட்டம்ஸ் பிரிப்பர் பண்ணேன். சர்வ் பண்றதுக்கு ஆள் இல்ல. எல்லாரும் பார்ட்டி டெகரேஷன் வொர்க்ல பிஸியா இருக்காங்க.” என்று அனைவருக்கும் உணவு பரிமாறியபடி சொன்னாள் மீரா. 

“என்னது ப்ரக்னன்சி அனவுன்ஸ்மென்டா? இப்ப எதுக்கு இது தேவை இல்லாம! வளைகாப்பு பண்ணும் போது சொன்னா பத்தாதா? இருக்கிற பிரச்சினைக்கு நடுவுல இந்த அர்ஜுன் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கான்? உன் கிட்ட இதைப் பற்றி அவன் ஏதாச்சும் சொன்னானா மா தேனு?” என்று ஜானகி தேன்மொழியிடம் கேட்க, “இல்லையே அத்தை.. உங்க பையன் என்னைக்கு எல்லாத்தையும் என் கிட்ட சொல்லிட்டு செஞ்சிருக்காரு? இப்ப தான் பெரிய சண்டைக்கு அப்புறம் நாங்களே பேசி இருக்கோம். மே னபி சொல்ல மறந்திருப்பாரு. இல்ல சர்ப்ரைஸா பிளான் பண்ணாரோ என்னமோ தெரியல.” என்றாள் தேன்மொழி.

அவள் சர்ப்ரைஸ் என்று சொன்னவுடன் பதறிய மீரா “அச்சோ சாரி மேடம்! உங்களுக்கு இத பத்தி தெரியாதுன்னா, அர்ஜுன் சார் சர்ப்ரைஸ் பிளான் தான் பண்ணி இருக்காரு நினைக்கிறேன். நான் உங்க முன்னாடியே எல்லாத்தையும் சொல்லி உங்க சர்ப்ரைஸை கெடுத்துட்டேன்.” என்று சொல்ல, “பரவால்ல விடுங்க.. இதெல்லாம் அவர் அடிக்கடி பண்றது தான். அர்ஜுன் எனக்காக இந்த மாதிரி ஏதாவது பண்ணலேன்னா தான் நான் சர்ப்ரைஸ் ஆவேன். அவருக்கு எந்த அளவுக்கு சம்பாதிக்க பிடிக்குமோ அந்த அளவுக்கு செலவு பண்ணவும் பிடிக்கும். சோ செலவு பண்றதுக்கு ஏதாவது ரீசன் கிடைச்சா அவர் சும்மா இருக்க மாட்டாரு.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் தேன்மொழி.

“நான் கூட தேன்மொழி மேடம்  நம்ம அவங்களோட சர்ப்ரைஸை கெடுத்ததுக்காக கோபப்படுவாங்கன்னு நினைச்சேன்‌. பரவால்ல எவ்ளோ பெரிய இடத்துக்கு போனாலும் இவங்க இன்னும் ஒரு நார்மல் தான பொண்ணாவே இருக்காங்க.” என்று நினைத்த மீராவிற்கு தேன்மொழியை மிகவும் பிடித்து விட்டது.

அங்கே ஹாஸ்பிடலில் அர்ஜுன் தூங்கி எழுந்து ரெப்ரெஷ் ஆகிவிட்டு சாப்பிட்ட பின் மருந்துகளை எடுத்துக் கொண்டு எடுத்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டு இருந்தான். அப்போது தனது ஆட்களுடன் கருப்பு கோட் சூட் அனுப்பி இருந்த ஒருவன் அந்த ஹாஸ்பிடல் ரூமிற்கு வெளியில் நின்று கொண்டு இருந்த அர்ஜுனனின் பாதுகாவலர்களிடம் “நாங்க மிஸ்டர் அர்ஜுனை பாக்கணும். அவர் எங்களை வர சொல்லி இருந்தாரு.” என்றான்.

உடனே அந்த பாதுகாவலர்களின் தலைவன் உள்ளே சென்று அர்ஜுனிடம் விஷயத்தை சொல்ல, “அவன உள்ள வர சொல்லுங்க. ஆனா அவன சாதாரணமா எல்லாம் வெல்கம் பண்ண கூடாது. இன்னைக்கு வாங்குறதை அவன் லைஃப் லாங் மறக்க கூடாது. அந்த மாதிரி ஏதாவது ஸ்பெஷலா கொடுத்து அவனை வெல்கம் பண்ணுங்க. பட் அவன் என்ன வாங்கி இருக்கானு யாருக்கும் தெரிய கூடாது. நான் சொல்றது புரியுதா?” என்று வந்தவனிடம் கேட்டான் அர்ஜுன்.

“எஸ் chief, நாங்க அவனை நல்லா கவனிச்சு அப்புறமா உள்ள கூட்டிட்டு வர்றோம்.” என்று சொல்லிவிட்டு வெளியே சென்ற பார்ட்டிகார்ட்  “எங்க சீஃப் உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் குடுக்க சொல்லி இருக்காரு. நீங்க எங்க கூட வாங்க.” என்று சொல்லி அவனையும், அவனுடன் வந்தவனையும் அழைத்துக் கொண்டு லிப்கட் மூலமாக ஹாஸ்பிடல் மொட்டை மாடிக்கு சென்றார்கள்.

மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured