Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 151

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 151

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 151

கன்ஸ்ட்ரக்சன் சைட்டில் அர்ஜுனை தாக்க முயற்சி செய்தவர்கள் யார் யார் என்று தனித்தனியாக விசாரித்து அவர்களின் சந்தேகப்படும் விதமாக இருந்தவர்களை மட்டும் தனியாக கொத்தாக பிரித்து எடுத்த மைக்கேல் அவர்களை தனியாக அர்ஜுனின் பிரைவேட் ஸ்பேஸுற்க்கு அழைத்து சென்று தனது ஸ்டைலில் அடித்து உதைத்து விசாரித்தான்.

இவர்களது தனித்துவமான விசாரணை தோனியை தங்கு அளவிற்கு எல்லாம் அவர்கள் ப்ரொபஷனல் ஆன கைக் கூலி இல்லை என்பதால் இரண்டு அடியில் அவர்கள் யார் சொல்லி தங்கள் இதையெல்லாம் செய்தோம் என்று கக்கி விட்டார்கள்.

அதனால் அதை ஆதாரமாக வீடியோவில் ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்ட மைக்கேல் அதை அர்ஜுனுக்கு அனுப்பி வைத்து “இப்ப நான் நெக்ஸ்ட் என்ன பண்ணனும்? அவனையும் இப்படி தனியா தூக்கிட்டு வந்து நாலு மிதி மிதிச்சு உண்மையை சொல்ல சொல்லி மிரட்டவா?

இல்லைனா இந்த எவிடென்சை டைரக்டா போலீஸ் கிட்ட குடுக்கிறதா?” என்று கேட்டான். அந்த வீடியோவை முழுவதுமாக பார்க்க அர்ஜுன் “இப்போதைக்கு இது போதும். அவனுங்கள உன் கஸ்டடியில வை. அண்ட் இதுல சம்பந்தப்பட்டவனை நான் பாக்கணும்னு சொன்னேன்னு நாளைக்கு ஹாஸ்பிடல் வர சொல்லு.

நான் அவனை நேர்ல மீட் பண்ணனும். அவன் செஞ்ச தப்பை அவனே பப்ளிக்கா மீடியா முன்னாடி ஒத்துக்கிட்டா இதை இத்தோட விட்டுடலாம். இல்லைனா நம்ம யூஸ்வலா என்ன பண்ணுவோமோ அதே மாதிரி பண்ணிடு.” என்று அவனுக்கு ரிப்ளை அனுப்பினான்.

“ஓகே டன்!” என்று அனுப்பிய மைக்கேல் தன்னிடம் சிக்கியவர்களில் ஒருவனை மட்டும் அவர்களை அனுப்பிய அவனிடம் திருப்பி அனுப்பி “போய் அவன் கிட்ட அர்ஜுன் சார் அவனை பாக்குறதுக்கு வர சொல்லி இருக்காருன்னு சொல்லு.

உயிரோட வாழறதுக்கு ஆசை இருந்துச்சுன்னா அவன் நேர்ல போய் அர்ஜுன் சார் கிட்டயும் மத்தவங்க கிட்டயும் உண்மைய சொல்லணும். நீங்க பேசுனது எல்லாமே ரெக்கார்ட் ஆகி ஏற்கனவே எங்க கிட்ட எவிடென்சா இருக்குன்னு மறந்திடாதீங்க.” என்று சொல்லி மிரட்டி அனுப்பினான்.

அதன் பிறகு நள்ளிரவு வேலையில் சோர்வாக இருந்ததால் ஓய்வெடுக்கலாம் என நினைத்து அவன் அர்ஜுனின் பங்களா வீட்டிற்கு சென்றான். ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு பசித்ததால் கிச்சனுக்கு கால் செய்தான். அவன் இரண்டு மூன்று முறை கால் செய்தும் அவனது உணவு ஆர்டரை எடுத்துக் கொள்வதற்காக யாரும் அவனது அழைப்பை ஏற்கவில்லை.

அதனால் கடுப்பான மைக்கேல்  வெறும் ஷார்ட்சை மட்டும் எடுத்து அணிந்து லிஃப்ட் மூலமாக கீழே இறங்கி கிச்சனுக்கு சென்றான். அவன் சுற்றி முற்றி பார்க்க, அங்கே யாரும் இல்லை. “என்ன நடக்குது இங்க? அர்ஜுன் வீட்டு கிச்சன்ல சமைக்கிறதுக்கு ஆள் இல்லையா? நைட் ஷிப்ட்க்கு வரவங்க எல்லாம் எங்க போயிருக்காங்க?” என்று முணுமுணுத்தபடி கிச்சனை விட்டு அவன் வெளியேற, கையில் ஒரு டஜன் முட்டை அட்டையுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு இளம் பெண் தன் கையில் இருந்த பொருள் மீது கவனத்தை செலுத்தியவாறு வந்து கொண்டிருந்ததால் எதிர்பாராத விதமாக அவன் மீது மோதினாள்.

வெறும் நான்கரை அடியில் இருந்த அந்த பெண், ஐந்தரை அடியில் இருந்த அவன் மீது மோதும் போது அவள் முகம் அவனது கட்டுமஸ்தான மார்பில் முட்டி நிற்க, தான் யாரோ ஒருவரின் மீது மோதி விட்டோம் என நினைத்து பதட்டத்தில் கையில் இருந்த முட்டைகள் அடங்கிய அட்டையை அவள் கீழே தவற விட்டாள்.

அதில் உள்ள முட்டைகள் எல்லாம் உடைந்து தரையில் ஊற்ற ஏதோ ஹாலிவுட் மூவியில் வரும் ஹீரோ போல இருக்கும் அந்த வெளிநாட்டு இளைஞனை பார்த்து ஒரு நொடி அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள் அந்த இளம் பெண்.

“are you mad or what? இப்படித் தான் மேல வந்து விழுவியா? உனக்கு கண்ணு தெரியுமா தெரியாதா?

நான் இப்பதான் குளிச்சிட்டு வந்தேன். இப்படி என் மேல முட்டையை ஊத்தி விட்டுட்ட நீ.. யுலாக்‌‌.. இதோட ஸ்மெல்.. it’s very disgusting.

பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு ஒரு சாரி கூட கேட்காம சைலண்டா வே இருக்கியா நீ? அவ்ளோ திமிரா உனக்கு? நீ இப்ப பண்ண மிஸ்டேக்காக நான் நினைச்சா என்னால உன்னை இப்பவே இந்த வேலையில இருந்து fire பண்ண கூட முடியும். பண்ணவா?” என்று சிவந்த கண்களுடன் மைக்கேல் கேட்க,

பாடி மட்டும்தான்  பாலிசாக இருக்கிறது. வாயை திறந்தால் சென்னை தமிழ் சரளமாக வருகிறதே யார் இவன்? என்று நினைத்து அதிர்சியுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண் “I am so sorry sir. மார்னிங் மத்தவங்க சமைக்க வரும்போது கிச்சன்ல எல்லாமே கரெக்டா இருக்கணும்னு சொல்லுவாங்க.

சோ நைட்டு எது இருக்கு இல்லைன்னு செக் பண்ணி நான் pantry-ல இருந்து அதை கொண்டு வந்து  வச்சிருவேன். அதான் எக் இல்லைன்னு பார்த்துட்டு போய் எடுத்துட்டு வந்தேன்.

அதை பார்த்துக்கிட்டே வந்ததுல ஆப்போசிட்ல வந்த உங்களை கவனிக்காம விட்டுட்டேன். I am so sorry sir. இதுக்காக எல்லாம் என fire பண்ணிடாதீங்க ப்ளீஸ்!

இந்த ஜாப் எனக்கு ரொம்ப இம்பார்டன்ட். இந்த சேலரி திடீர்னு கட் ஆயிடுச்சின்னா என்னால நெக்ஸ்ட் மந்த் என் வீட்டுக்கு ரெண்டு கூட கொடுக்க முடியாது. நான் இப்பவே இது எல்லாத்தையும் கிளீன் பண்ணிடுறேன்.

நான் உங்க மேல எக்கை ஊத்துனதுக்காக நீங்க எனக்கு வேற என்ன பனிஷ்மெண்ட் கொடுத்தாலும் ஏத்துக்கிறேன். பட் என்ன இந்த வேலையில இருந்து மட்டும் தூக்கிடாதீங்க சார். நான் உங்களை கெஞ்சி கேட்கிறேன்!” என்று கண்கள் கலங்க சொல்லிவிட்டு அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.

அவள் chef அணியும் வெள்ளை நிற கோட்டை அணிந்து தனது தலை முடியை கொண்டையிட்டு வைத்திருந்தாள்‌. இவ்வளவு நேரமாக அங்கும் இங்கும் அலைந்து திரிந்த வேலை செய்ததில் அவளுக்கு நன்றாக வியர்த்துக் கொட்டி இருக்க, அவளது தலைமுடி லேசாக கலைந்திருந்தது. இருப்பினும் அவளது அந்த நிலை அவளுடைய இயற்கையான அழகை எந்தவிதத்திலும் குறைத்து காட்டவில்லை.

அவளை மேலும் கீழும் பார்த்த மைக்கேல் “உன் பேர் என்ன?” என்று அதட்டலாக அவளை மிரட்டுவதைப் போல கேட்க, “மீ.. மீரா சார்.” என்ற அந்தப் பெண் மீண்டும் “ப்ளீஸ் சார் இந்த வேலை எனக்கு ரொம்ப இம்பார்டன்ட், வேலையை விட்டு மட்டும் என்னை தூக்கிடாதீங்க.” என்று அவனிடம் கெஞ்ச தொடங்கினாள்.

அவளை மேலும் கீழும் பார்த்த மைக்கேல் “லுக் மீரா.. நீ என்னை ரொம்ப டென்ஷன் பண்ணி இருக்க. அவ்ளோ சீக்கிரம் இதை நான் மறக்கவே மாட்டேன்.

நான் செம பசியில கிச்சனுக்கு கால் பண்ணும் போது ஒருத்தர் கூட அட்டென்ட் பண்ணல. இந்த டைம்ல நீதானே இன்சார்ஜ்..

கொஞ்சம் கூட ரெஸ்பான்சிபிலா இருக்க தெரியல உனக்கு. எனக்கு இப்ப பிரியாணி சாப்பிடணும் தோணுது.

அதுவும் பக்கா தலப்பாக்கட்டி ஸ்டைல் பிரியாணி. உனக்கு நான் 30 மினிட்ஸ் டைம் குடுக்கிறேன். அதுக்குள்ள சுட சுட சிக்கன் பிரியாணி ரெடி பண்ணி என் ரூமுக்கு கொண்டு வர.

நீ செய்கிற பிரியாணியை சாப்பிட்டு பார்த்துட்டு உன்னை மன்னிக்கலாமா வேண்டாமான்னு நான் டிசைட் பண்ணுகிறேன்.” என்று சொல்ல,

பயந்து போன மீரா “ஐயோ சார் அரை மணி நேரத்துல எப்படி பிரியாணி செய்ய முடியும்? சிக்கன் வேகுறதுக்கு பத்து நிமிஷம் ஆகும்.

மொத்தமா குக்கர்ல செய்தால் கூட அட்லீஸ்ட் 40 மினிட்ஸ் வேணும். It’s impossible sir.” என்றாள் அவசரமாக.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. உனக்கு இந்த ஜாப் இம்பார்டன்ட்டா இருந்தா, நான் சொல்றத நீ செய்யணும் அவ்வளவு தான். நீ இப்படியே நின்னு என் கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருந்தா,  உனக்கு கொடுத்த முப்பது நிமிஷம் டைம் 15 நிமிஷம் ஆக்கிடுவேன்.” என்று மைக்கேல் அவளை மிரட்ட, “ஐயோ சரியான கொடுமைக்காரன் கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன். எல்லாம் என்ன நேரம்!” என நினைத்து மனசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட மீரா “ஓகே சார் ஓகே சார், எனக்கு புரியுது. நான் போய் சீக்கிரமா சமச்சு உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கிறேன். Once again, I am sorry sir. ப்ளீஸ் எதையும் மனசுல வச்சுக்காதீங்க.” என்று ஒரே மூச்சாக சொல்லிவிட்டு கிச்சனுக்குள் ஓடினாள் மீரா.

அவள் மஞ்சள் நிற பேண்டிற்கு மேலே அந்த chef  வெள்ளை நிற கோட்டை அணிந்திருந்ததால் அவள் அப்படி துளி குதித்து ஓடும்போது அந்த கெட்டப்பில் அவளை பார்க்க யாரோ ஒரு சிறிய பெண் வாத்து கெட்டப் போட்டுக் கொண்டு ஓடுவதை போல அவனுக்கு தோன்ற, செல்லும் அவளைப் பார்த்து லேசாக தனக்குள் புன்னகைத்த மைக்கேல் திரும்பி நடக்கும் போது தரையில் முட்டை உடைந்து ஊற்றி கிடந்ததால் அதில் கால் வைத்து வழுக்கி கீழே விழுந்தான்.

அர்ஜுன் சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று நினைத்த தேன்மொழி ஹாஸ்பிடலுக்கு வந்த குழந்தைகள் திரும்பி அவன் வராமல் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்ததால் அவர்களை அந்த மருத்துவமனையிலேயே இருந்த விஐபிகள் தங்கும் அறையில் தங்க வைத்து சர்வன்ட்டிடம் சொல்லி அவர்களுக்கான  உணவுகளை கொண்டு வரச் சொன்னாள்.

அவர்களுடன் அதே ரூமில் தான் ஜானகியும் அவளும் இருந்தார்கள். சகஜமாக மீண்டும் குழந்தைகளுடன் பழக தேன்மொழி முயற்சி செய்ய, அவர்கள் இருவரும் அவளிடம் பேசாமல் அமைதியாகவே இருந்தார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு டைம் தேவைப்படும் என்று ஜானகி சொன்னதை மனதில் வைத்து பொறுமையாக காத்திருக்க முடிவெடுத்தாள் தேன்மொழி.

அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு ரப்பர் அர்ஜுனுக்கான உணவை எடுத்துக் கொண்டு அவனது ரூமிற்கு சென்ற தேன்மொழி ‌ அவன் அருகில் அமர்ந்து அவனுக்கு ஊட்டி விட தொடங்கினாள்.

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured