அத்தியாயம் 150
அர்ஜுன் கலவரத்தில் அடிபட்டு ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருக்கிறான் என்று தெரிந்தவுடன் அங்கே கிளம்பி சென்ற தேன்மொழி அவன் மீது இருந்த கோபத்தை எல்லாம் மறந்துவிட்டு அவனைக் கட்டி அணைத்து அவன் மீது தனது எல்லை இல்லா காதலை பொழிந்து கொண்டு இருந்தாள்.
குழந்தைகளும் எப்படியோ நியூசை பார்த்துவிட்டு “நாங்க இப்பவே டாடியை பார்க்கணும்.” என்று அடம்பிடித்ததால் அவர்களை அழைத்துக் கொண்டு பாதுகாப்பாளர்களுடன் பின் வாசல் வழியாக ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தாள் ஜானகி.
லேசாக எக்கி அவளது கன்னங்களைப் பற்றி நெற்றியில் முத்தமிட்ட அர்ஜுன் “உனக்கு என் மேல இருந்த கோபம் எல்லாம் போயிருச்சா?” என்று ஆசையாக கேட்க, இல்லை என்று கலங்கிய கண்களுடன் தலையாட்டினாள் அவள். “அடிப்பாவி.. ஏதோ ஒரு யோசனைல கன்பியுஷன்ல உன்னை எப்படி ஃபேஸ் பண்றதுன்னு தெரியாம உன் கிட்ட பேசாம இருந்துட்டேன்.
அதுக்காக நமக்குள்ள எதுவும் இல்லைன்னு ஆயிடுமா? எத்தனை நாளைக்கு என் மேல கோவமா இருப்ப?
அது சரி, இன்னும் என் மேல கோபம் குறையலனு சொல்ற. அப்புறம் இவ்ளோ ரிஸ்க் எடுத்து பிரக்னண்டா இருக்கிற இந்த டைம்ல எதுக்கு டி என்னை பார்க்க வந்த?” என்று கேட்டான் அர்ஜுன்.
அருகில் இருந்த சேரை எடுத்து போட்டு அமர்ந்த தேன்மொழி “கோபத்தை விட அதிகமா எனக்கு உன் மேல லவ் இருக்கே அர்ஜூன்.. நான் ஆல்ரெடி சொன்ன மாதிரி உனக்கு யோசிக்கிறதுக்கு தேன்மொழி, சியான்னு ரெண்டு ஆப்ஷன் இருக்கலாம்.
பட் எனக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்ல. You are my best friend. You are my lover, husband, soulmate, companion, you are my everything Arjun. You are the one. The only one!
என் கிட்ட பேசலனா கூட, நீ எத்தனை நாள் ஆனாலும் அப்படியே கல்லு மாதிரியே இருக்க. நான் எவ்ளோ அன்பு கொட்டுனாளும் என்னால உன்னை கரைக்க முடியல.
பட் அதுக்காக எல்லாம் என்னால உன்ன மாதிரி இருக்க முடியல. என்ன ஆனாலும், நீ என்ன எவ்ளோ கஷ்டப்படுத்தினாலும், என்னைத் தவிர உனக்கு மத்தது எல்லாமே இம்பார்டன்ட்னு நீ ஃபீல் பண்ண வச்சாலும் கூட, ஸ்டில் நான் உன்னை தான் prioritize பண்ணுவேன். That’s the difference between you and me.” என்று பேச பேச அவளது கன்னங்களும் கண்களும் சிவந்து, துக்கம் தொண்டையை அடைத்ததால் வார்த்தைகள் தடுமாறியது.
அவள் கேட்கும் அனைத்து கேள்விகளும் நியாயமானதாக இருப்பதால் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அர்ஜுன் திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்க, அவன் அட்மிட் ஆகி இருந்த ரூமின் கதவை திறந்து கொண்டு ஜானகி குழந்தைகளுடன் உள்ளே வந்தாள். ஆருத்ரா “டாடி!” என்று கத்திக் கொண்டு அழுதபடி அவனை நோக்கி ஓடினாள்.
சித்தார்த்தும் வாடிய முகத்துடன் அர்ஜுனை பார்த்தபடி உள்ளே வந்தான். ஆருத்ராவை கண்டவுடன் தான் சோர்வாக இருப்பதைக் கூட தன் மகள் பார்த்து வருத்தப்படக் கூடாது என்று நினைத்த அர்ஜுன் சிரமப்பட்டு எழுந்து அமர, சென்று அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு “உங்களுக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு நினைச்சு நான் ரொம்ப பயந்துட்டேன் டாடி.” என்று சொல்லிவிட்டு அழுதாள் ஆருத்ரா.
தானும் அவளை கட்டி அணைத்து சமாதானப்படுத்திய அர்ஜுன் “don’t cry baby, daddy is perfectly alright!” என்றான். அவன் தலையில் இருந்த கட்டை பார்த்துவிட்டு கவலையான முகத்துடன் “உங்களுக்கு எதுவும் இல்லைன்னா அப்புறம் எதுக்கு டாடி இப்படி உங்க தலையில கட்டு போட்டு இருக்காங்க?
நீங்க ஏன் எப்ப பார்த்தாலும் என் கிட்ட பொய் சொல்றீங்க? எனக்கு அது தான் உங்க கிட்ட சுத்தமா பிடிக்கல.” என்றாள் ஆருத்ரா.
“நீ நல்லா யோசிச்சு பாரு பேபி. டாடி டைரக்டா வந்து உன் கிட்ட எப்பயாவது பொய் சொல்லி இருக்கேனா? சில சமயத்துல சில விஷயங்களை அந்த டைம்ல சொன்னா நல்லா இருக்காதுன்னு தோணும்.
அதனால நான் சொல்லாம இருந்திருப்பேன் அவ்வளவு தான். மத்தபடி உங்க கிட்ட எதையும் மறைக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல.
நீயும் சரி, சித்தார்த்தும் சரி, இன்னும் சின்ன குழந்தைங்களா இருக்கீங்க டா. நடந்தது எல்லாத்தையும் என்னாலேயே இன்னும் ஏத்துக்க முடியல.
உங்களால் எப்படி தாங்க முடியும்? உங்களுக்காக தான் நாங்க டைரக்டா அத பத்தி உங்ககிட்ட பேசாம இருந்தோம் அவ்வளவு தான். இதுல நீங்க தேன்மொழி மேல கோவப்படுறது எல்லாம் நியாயமே இல்ல.
நம்ம ரஷ்யால இருக்கும்போது எனக்கும் தேன்மொழிக்கும் எப்படி மேரேஜ் ஆச்சுன்னு நான் தான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் கிளியரா எக்ஸ்ப்ளைன் பண்ணுனனே.. அப்பயும் நீங்க தான் நான் சொன்னத நம்பல.
எந்த தப்பும் பண்ணாத தேன் மொழியை தப்பா பேசினா எனக்கு கோபம் வராதா? அதான் நான் சித்தார்த்தை அடிச்சேன். அதை பார்த்து நீ பயந்து போய் டாடி கிட்ட வர மாட்டேன்னு சொன்னல்ல! இப்ப உனக்கு என் மேல இருக்கிற பயம் போயிடுச்சா?” என்று அர்ஜுன் நிதானமாக கேட்க,
தேன்மொழியை திரும்பி ஒரு பார்வை பார்த்த ஆருத்ரா “போயிருச்சு டாடி. எனக்கு உங்களையும், மம்மியையும் ரொம்ப பிடிக்கும். இனிமே நீங்களும் எங்க கிட்ட கோவப்படாதீங்க. நாங்களும் உங்கள எதுவும் சொல்ல மாட்டோம் ஓகேவா?” என்று அர்ஜுனிடம் கேட்டாள்.
“டபுள் ஓகே! Love you my little princess! You are such a sweety Pie! குழந்தைங்க தப்பு பண்ணா பேரன்ட்ஸ் அப்படி பண்ணாதீங்கன்னு சொல்ல தான் செய்வாங்க. அதுக்காக அந்த விஷயத்துல சம்பந்தப்பட்டவங்க தான் அவங்களுக்கு இம்பார்டன்ட்.
அதனால தான் அவங்க இப்படி எல்லாம் பேசுறாங்கன்னு நீங்களா ஒன்ன புரிஞ்சுகிட்டு இனிமே பேசக்கூடாது. Positives or negatives.. whatever! உங்க மெயின்ட்ல எது இருந்தாலும் நீங்க டைரக்ட்டா வந்து டாடி கிட்டையும் மம்மி கிட்டையும் டிஸ்கஸ் பண்ணனும். ஓகேவா?” என்று அர்ஜுன், “ஓகே டாடி!” என்ற ஆருத்ரா அர்ஜுனை கட்டிப்பிடித்து அவனது நெற்றியில் முத்தம் கொடுத்து “get well soon!” என்றாள்.
கலங்கிய கண்களுடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி “இதே மாதிரி தான் ஆருத்ரா என் கிட்டேயும் பாசமா இருப்பா. மம்மி மம்மின்னு நான் எங்க போனாலும் என் பின்னாடியே வந்துட்டு இருப்பா.
நான் அவளை எவ்வளவு மிஸ் பண்றேன்.. அது மட்டும் இவளுக்கு தெரியலையா? அவ டாடியை மட்டும் மன்னிச்சிட்டா.. பட் மறுபடியும் அவர் என்னை அவளோட மம்மியா பார்ப்பாளான்னு தெரியலையே!” என்று நினைத்து ஒரு பக்கம் வருத்தப்பட்டு கொண்டிருக்க,
இன்னொரு பக்கம் ஜானகியின் அருகில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த சித்தார்த் “நான் கூட டாடி டோட்டலா மாறிட்டாரு. அந்த ஆன்ட்டிக்காக எங்களை அவர் hate பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாரு நினைச்சேன்.
பட் அவங்க முன்னாடியே டாடி எங்களை இம்பார்டன்ட்ன்னு சொல்லிட்டாரு. He even kissed ஆருத்ரா. ஆனா ஏன் அவர் என் கிட்ட பேசவே இல்ல?
நான் அன்னைக்கு சண்டை போட்டதுனால இன்னும் அவர் என் மேல கோவமா இருக்காரா? ஆருத்ரா மாதிரி எனக்கும் தான் என் டாடிய பிடிக்கும். அதுக்காக அவர் என் கிட்ட மம்மி விஷயத்துல பொய் சொல்லலாமா?” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டபடி தேன் மொழியையும், அர்ஜுனையும் மாறி மாறி பார்த்தான்.
தேன்மொழி பார்ப்பதற்கு அப்படியே தன் அம்மாவைப் போல இருப்பதால், எப்படி நினைத்துக் கொண்டாலும் சித்தார்த்துக்கு அவள் மீது வெறுப்பு வரவில்லை. அவளை அவன் தன் அம்மா சியாவாகவே நினைத்துக் கொண்டிருந்ததால், இப்போது அது அப்படி இல்லை. சியா இறந்து விட்டாள், இங்கு இருப்பது தன் அப்பாவின் இரண்டாவது மனைவி என்று நினைக்கும் போது அவன் மனம் அதை ஏற்க மறுக்கிறது அவ்வளவு தான்.
இப்போது தான் குழந்தைகள் அர்ஜுனை ஓரளவிற்கு புரிந்து கொள்கிறார்கள் என்பதால் தேன்மொழியை வைத்து அங்கே ஒரு பிரச்சினை வர வேண்டாம் என்று நினைத்த ஜானகி சித்தார்த்தை உள்ளே அனுப்பிவிட்டு தேன்மொழியை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.
இன்னும் அவள் முகம் வாட்டமாகவே இருக்க, ஆதரவாக அவள் கைகளை பிடித்துக் கொண்ட ஜானகி “இப்ப கூட உனக்கு உங்க அம்மா வீட்டுல இருக்குறது தான் சரின்னு தோணுதா?” என்று அவள் கண்களை பார்த்து கேட்க, அந்த கேள்விக்கு பாவம் அவளிடம் எந்த பதிலும் இல்லை. அதனால் தலை குனிந்து நின்றாள் தேன்மொழி.
“என்ன தேன்மொழி சைலண்டா இருக்க.. கேட்கிறேன்ல்ல.. வாயை திறந்து ஏதாவது சொல்லு.” என்று ஜானகி கேட்க, “தெரியல அத்தை!” என்றாள் தேன்மொழி. “இப்படித் தான் நடக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரியும். இதுக்குத் தான் உன்னை கிளம்பி உங்க வீட்டுக்கு போக வேண்டாம்னு நான் சொன்னேன்.
இவங்க எல்லாரும் உன்ன கஷ்டப்படுத்தறாங்கன்னு தானே நீ கிளம்பி போன… இப்ப அவங்க இல்லாம உனக்கு கஷ்டமா இருக்குன்னு திரும்பி வந்து இருக்க.. இது தான் லைஃப் தேன்மொழி. இங்க எல்லாமே இப்படித் தான் இருக்கும்.
நீ இந்த வாழ்க்கைய எப்படி வாழ்றதுன்னு புரிஞ்சுக்கறதுக்குள்ளையே பாதி வாழ்க்கை முடிஞ்சு போயிடும்.. அர்ஜுன் என் பையன் தான். பட் எல்லாரையும் விட அவன் ரொம்ப டிஃபரண்டா இருப்பான். பட் சித்தார்த் அப்படியே அர்ஜுன் மாதிரி. அவன் யாரை பார்த்தும் எதை பார்த்து பயப்பட மாட்டான்.
இந்த வயசுலையே அர்ஜுனை கேள்வி கேக்குற அளவுக்கு அவனுக்கு தைரியம் இருக்குனா பாத்துக்கோ.. இவங்க எல்லாரையும் ஹேண்டில் பண்ணி இந்த ஃபேமிலில நீ ஆல்ரெடி ஒரு மெம்பரா இருந்தாலும், உன் பொசிஷனை நீ ஸ்ட்ராங்காக்கிக்கிறதுக்கு கண்டிப்பா உனக்கு டைம் எடுக்கும். அதுவரைக்கும் வெயிட் பண்றது தவிர உனக்கு வேற ஆப்ஷன் இல்ல.
இது உனக்கு மட்டும் நடக்குதுன்னு நினைச்சுக்காத. கல்யாணம் ஆகி ஹஸ்பண்ட் வீட்டுக்கு போற எல்லா பொண்ணுக்கும் இது தான் நிலைமை. என்னால உனக்கு பண்ண முடிஞ்சது எல்லாம் மாமியார் கொடுமை பண்ணாம இருக்கிறதும், என் பொண்ணு மாதிரி உன்னை நினைச்சு உன் கூட இருந்து பார்த்துக்கிறதும் மட்டும் தான். அதை நான் கரெக்டா பண்ணி இருக்கேன்னு நான் நம்புறேன்.
இப்ப நான் சொல்றது உனக்கு புரிஞ்சுதுனா, நீ கிளம்பி நம்ம வீட்டுக்கு வரணும். இப்ப அர்ஜுனுக்கு உடம்பு சரியில்ல. எப்படியும் வெளிய நடக்கிற பிரச்சனை எல்லாத்தையும் அவன் ஈஸியா சால்வ் பண்ணிடுவான். பட் வீட்டுக்குள்ள இருக்குற பிரச்சனையை நீ தான் சரி பண்ணனும்.” என்றாள்.
தேன்மொழி மீண்டும் அர்ஜுனின் வீட்டிற்கு செல்வாளா?
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)