அத்தியாயம் 149
தேன்மொழி தனது மொபைல் ஃபோனில் வந்த நியூஸை பார்த்து ஷாக் ஆனாள். அதில் செய்தி வாசிக்கும் பெண் ஒருத்தி கையில் மைக்கை பிடித்துக் கொண்டு “மிஸ்டர் அர்ஜுனோட கன்ஸ்டிரக்சன் கம்பெனி வாங்கின கவர்மெண்ட் ப்ராஜெக்ட்டை அவர் ரஷ்யா கிளம்பி போன சூழ்நிலையில அவரோட தம்பி மிஸ்டர் ஆகாஷ் அவர்கள் தன் கவனிச்சுட்டு இருந்தாருன்னு நமக்கு எல்லாருக்கும் தெரியும்.
சமீபமா அங்க அடுத்தடுத்து நடந்த ஆக்சிடென்ட்னால அந்த கம்பெனி தரமான பொருட்களை வைத்து பில்டிங்கை கட்டுறது இல்லைன்னும், மக்களுக்கு ஆபத்து விளைவிக்கிற வகையில அவங்க கட்டின தரைமற்ற பில்டிங் இடிஞ்சு விழுந்ததுல அங்க வேலை பார்த்த கட்டிடத் தொழிலாளிகள் ஒரு சிலர் உயிரிழந்த சம்பவம் பெரிய பேசும் பொருள் ஆச்சு.
இறந்து போன குடும்பத்துக்கு மிஸ்டர் அர்ஜுனோட கம்பெனி சார்பாகவும், கவர்மெண்ட் சார்பாகவும் நிறைய நிதி உதவிகள் கிடைச்சிருந்தாலும் கூட, இப்படி ஒரு மோசமான கட்டிடத்தை லாப நோக்கத்துக்காக கட்டணம் நினைச்ச மிஸ்டர் அர்ஜுன் மீதும், அதற்கு துணையாய் இருந்த மிஸ்டர் ஆகாஷ் மீதும் இத கட்டிடத்தை கட்டும் பணியில் ஈடுபட்ட இன்ஜினியர்கள் மீதும் உடனே போலீசர்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கணும்னு இன்னைக்கு மாலையில் இருந்தே பொதுமக்கள் அந்த கன்ஸ்ட்ரக்சன் சைட் பக்கத்துல போராட்டம் பண்றது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கு.
இந்த நிலையில நிலமை தீவிரம் அடைகிறதா உணர்ந்து பிரச்சனையை சரி பண்றதுக்காக தனது தனி விமானம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மிஸ்டர் அர்ஜூன் அந்தக் கூட்டத்தை சந்திச்சு நேரடியா பேசிட்டு இருக்கும்போது, அங்க இருந்த யாரோ ஒரு சிலர் அவர தாக்க முயற்சி செஞ்சிருக்காங்க. உடனே அவரோட பாடிகார்டுகள் அங்கே வந்து அதை தடுக்க முயற்சி செஞ்ச போதிலும், அதையும் தாண்டி ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்ட பொதுமக்களும், அந்த கட்டிடத்தோட இடுப்பாடுகள்ள சிக்கி உயிரிழந்த கட்டிட தொழிலாளிகளோட உறவினர்களும், சக தொழிலாளர்களும் அவரை பலமா தாக்கினதா தெரிய வந்திருக்கு.
இந்த தாக்குதல்ல சிக்குன அர்ஜுன் இப்ப பக்கத்துல இருக்கிற ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கிறதா நமக்கு தகவல் கிடைச்சிருக்கு.” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் பேச பேச பேக்ரவுண்டில் யாரோ ஒருவர் அர்ஜூனின் தலையில் கல்லை விட்டு எரிந்திருந்ததால், அவன் ரத்தத்தை கட்டுப்படுத்துவதற்காக கர்சிப்பை வைத்து பிடித்துக் கொண்டு செல்வதும், சில நாட்களுக்கு முன்பாக அடிபட்டு இருந்த அவனது கால்களில் மீண்டும் ஒரு சிலர் இப்போது தாக்கி இருந்ததால் அவன் நொண்டி நொண்டி நடந்து போவதையும் கேமராவில் படம் பிடித்து ஓட்டி காட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்த காட்சியில் பிரிட்டோவும், மைக்கிலும் அர்ஜுனை கை தாங்களாக பிடித்துக் கொண்டு செல்வது கூட பதிவாகி இருந்தது. அதை எல்லாம் பார்த்து மனம் உடைந்த தேன்மொழி “அட கடவுளே.. எங்களுக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ! கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் அர்ஜுன் நிறைய பேருக்கு நல்லது செஞ்சிருக்கான். அதனால அவன் கடவுள் மாதிரின்னு எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க.
இப்ப தெரியாம ஏதோ ஒரு ஆக்சிடென்ட் நடந்துருச்சு. அதுக்கு என்னவோ என் அர்ஜுன் தான் எல்லாரையும் பிளான் பண்ணி கொன்ன மாதிரி என்ன எல்லாரும் அவன் மேல வன்மத்துல இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க? நான் இப்பவே போய் அவனை பாக்கணும்.” என நினைத்து தனது அறை கதவை திறந்து கொண்டு அவசரமாக வெளியில் சென்றாள்.
கிச்சனில் சமைக்க தேவையான பொருட்களை எல்லாம் விஜயா அடுக்கி வைத்துக் கொண்டிருக்க, தேன்மொழியின் வீட்டிற்கு பாதுகாப்பை அதிக படுத்த வேண்டும் என அர்ஜுன் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருந்ததால் அந்த வேலையில் ஈடுபட்டிருந்தால் கிளாரா கையில் ஒரு வாக்கி டாக்கியை வைத்துக் கொண்டு அதில் மற்றவர்களிடம் பேசியபடி அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தாள்.
மெல்ல நடந்து அவள் அருகில் சென்ற தேன்மொழி “நான் அர்ஜுன பாக்கணும்.” என்று சொல்ல, செய்யும் வேலையை நிறுத்திவிட்டு அவளை திரும்பிப் பார்த்த கிளாரா “இவங்களுக்கு உண்மை தெரிஞ்சிருச்சு போலயே! இப்ப என்ன சொல்லி இவங்கள ஸ்டாப் பண்றது? இவங்கள வெளிய போகவே விடக் கூடாது. இவங்க பக்கத்திலேயே இருந்து நான் பார்த்துக்கணும்னு சீஃப் எனக்கு ஆர்டர் குடுத்திருக்காரே! இப்ப நான் தேன்மொழி சொல்றத கேட்கிறதா? இல்ல அவர் கொடுத்த ஆர்டரை நான் ஃபாலோ பண்றதா?” என்று யோசித்தவள்,
அர்ஜுன் தேன்மொழியின் நன்மைக்காக தான் அப்படி சொல்கிறான் என்பதால் “சாரி தேன்மொழி, என்னால இப்ப உங்கள வெளிய விட முடியாது.” என்றாள்.
“நான் உங்க கிட்ட பர்மிஷன் கேட்கல கிளாரா. நான் போகணும். நீங்க என் கூட வரணும்னு சொல்றேன்.” என்று தேன்மொழி அழுத்தி சொல்ல, “சாரி தேன்மொழி, chief குடுக்கிற ஆர்டரை எங்களால் மீற முடியாது உங்களுக்கே தெரியும்! என்ன force பண்ணாதீங்க ப்ளீஸ்.” என்று உறுதியாகச் சொன்னாள் கிளாரா.
“okay fine, நீங்க என் கூட வரத் தேவையில்லை. யார் என்னோட வந்தாலும் வரலைனாலும் நான் அர்ஜுன பாக்க போறத உங்க யாராலயும் ஸ்டாப் பண்ண முடியாது.” என்ற தேன்மொழி வேக எட்டுகள் வைத்து தனது வீட்டு வாசலை நோக்கி நடந்தாள். அப்போது தான் விஷயத்தை கேள்விப்பட்டு வெளியில் சென்று இருந்த ஆதவனும் அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான். அவளும் தன் அக்காவை வெளியில் செல்ல விடாமல் தடுப்பதற்கு எவ்வளவோ பேசிப் பார்த்தான்.
“ப்ளீஸ் மாத்தி மாத்தி ஆள் ஆளுக்கு பேசி என்னை டென்ஷன் பண்ணாதீங்க. நான் என் புருஷனை போய் பார்க்கணும் அவ்ளோ தான்! நீங்க என்ன ஸ்டாப் பண்ண ட்ரை பண்ணா, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்ன டென்ஷன் ஆகி தேன்மொழி அவள் பாட்டிற்கு உச்சரிதியில் கத்தி கொண்டிருக்க, அவள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவளது பிளட் பிரஷர் அதிகமாகி அவளுக்கு வேர்த்து கொட்டி மயக்கம் வருவதை போல இருந்தது.
அர்ஜுனை கூட காப்பாற்றிவிடலாம். கர்ப்பமாக இருக்கும் தேன்மொழிக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? என நினைத்து பயந்து போன கிளாரா “ஐயோ ப்ளீஸ் தேன்மொழி சொன்னா கேளுங்க! வெளிய சுச்சுவேஷன் out of control-ல போயிட்டு இருக்கு. இப்ப சீஃப் அட்மிட் ஆகி இருக்கிற ஹாஸ்பிடல், அங்க எல்லாரும் ஸ்டே பண்ணி இருக்கிற பங்களானு எல்லா பக்கமும் பீப்பிள்ஸ் நிறைய பேர் சுத்தி நின்னுக்கிட்டு சீஃப்-ஐ அரெஸ்ட் பண்ண சொல்லி ப்ரோடெஸ் பண்ணிட்டு இருக்காங்க.
நல்ல வேலையா நீங்க இந்த வீட்டுக்கு கிளம்பி வந்துட்டீங்க. இப்ப நீங்க வெளிய போனா எவ்வளவு பெரிய இஸ்யூ ஆகும்னு உங்களுக்கு புரியுதா இல்லையா? இப்படி பிரக்னண்டா இருக்கிற டைம்ல எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்னு நினைக்கிறீங்க? Chief-க்கு ஒன்னும் இல்ல.
அவருக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு. He will be alright soon! நீங்க இங்க இருந்து அங்க போகும்போது உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்ண முடியும் சொல்லுங்க?” என எவ்வளவோ சொல்லி அவளை தடுக்க பார்த்தாள்.
ஆனால் அப்போதும் பிடிவாதமாக இருந்த தேன்மொழி யார் சொல்லியும் கேட்காமல் வெளியில் சென்றே தீருவேன் என்று அடம்பிடித்ததால், வேறு வழி இல்லாமல் அர்ஜுனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு பலத்த பாதுகாப்புடன் காரில் தேன்மொழியை ஆதவனுடன் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றாள் கிளாரா.
தேன் மொழியை யார் கண்ணிலும் படாமல் அவர்கள் பத்திரமாக பின் வாசல் வழியாக உள்ளே அழைத்துச் சென்றார்கள். அங்கே அர்ஜுன் அட்மிட் செய்யப்பட்டு இருந்த அறைக்கு வெளியே நின்று கொண்டு இருந்த ஆகாஷ் தேன்மொழியை பார்த்துவிட்டு “அண்ணி நீங்க எதுக்கு இங்க வந்தீங்க? அர்ஜுனையே இந்த அளவுக்கு அட்டாக் பண்ணி இருக்காங்க. நீங்க பிரக்னட்டா இருக்கும்போது இப்படி எல்லாம் டிராவல் பண்ணி வந்து ரிஸ்க் எடுக்கலாமா? அர்ஜுன் நல்லா தான் இருக்கான். ப்ளீஸ் நீங்க கிளம்புங்க.” என்று சொல்ல, அவன் பேசியதை காதில் வாங்காமல் “நான் அவரை பாக்கணும்.” என்றாள் தேன்மொழி.
அதனால் ஆகாஷ் கேள்வியாக கிளாரா வை பார்க்க “நாம என்ன சொன்னாலும் அதை கேட்கிற மைண்ட் செட்டில இவங்க இல்ல.” என்றாள் அவள். தேன்மொழி பாவமாக அர்ஜுன் இருந்த அறையை திரும்பிப் பார்க்க, அவனுக்கு முதல் உதவி ட்ரீட்மென்ட் கொடுத்துவிட்டு அந்த அருகில் இருந்து வெளியே வந்தார் டாக்டர்.
அவரை நிற்க வைத்து தேன்மொழி அர்ஜுனை பற்றி விசாரிக்க “அவருக்கு தலையில கொஞ்சம் அடிபட்டு இருந்துச்சு மிஸ்ஸஸ் அர்ஜுன். actually he is so strong. நீங்க இங்க வரும்போது அவர் அன்கான்சியஸா இருக்கக் கூடாதுன்னு நாங்க தலையில ஸ்டிச்சஸ் போடும்போது கூட அவர் அனஸ்தீசியா எடுத்துக்கல.
அவ்ளோ வலியை பொறுத்துக்கிட்டு எங்களுக்கு ட்ரீட்மென்ட்க்கு கோஆபரேட் பண்ணாரு. கால்ல கொஞ்சம் muscle stiffness இருக்கு. அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல, கொஞ்ச நாள்ல தானா சரியாயிடும். அவர் உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு நீங்க போய் பாருங்க.” என்று சொல்லிவிட்டு சென்றார் டாக்டர்.
டாக்டர் பேச பேச தேன்மொழியின் கண்களில் இருந்து அருவி போல கண்ணீர் கொட்ட, டோரை ஓப்பன் செய்தபடி உள்ளே சென்றாள் அவள். அரை மயக்க நிலையில் படுத்து கிடந்த அர்ஜூன் அவள் உருவத்தை தனது மங்கிய பார்வையிலும் அடையாளம் கண்டு கொண்டு “தேனு!” என்றான் மெல்லிய குரலில்.
மெல்ல நடந்து அவன் அருகில் சென்ற தேன்மொழி “உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லல்ல! தையல் போட்டா எவ்ளோ வலிக்கும்! எனக்காக மயக்க மருந்து வேணா சொல்லுவியா? லூசா டா நீ?” என அவன் அருகில் சென்று அவனது சட்டையை பிடித்துக் கொண்டு கத்தி கேட்க, அவளது கண்ணீர் அவன் முகத்தில் விழுந்தது.
லேசாக அவளை பார்த்து புன்னகைத்த அர்ஜுன் “நான் இப்படி கேஷுவலா உன் கிட்ட பேசிட்டு இருக்கும் போதே எனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு நினைச்சு இந்த சுச்சுவேஷன்லையும் நீ பயந்து ஓடி வர.. இதுல நீ வரும்போது நான் அன்கான்சியஸா இருந்தா உன்னால அது தாங்க முடியுமா?
இந்த பாடி எவ்வளவோ வலியை தங்கிடுச்சு. ஆனா இப்ப வரைக்கும் நீ பிரிஞ்சு போற வலிய மட்டும் தாங்க முடியலடி. அதான் இந்த வலிக்கு அந்த வலி எவ்வளவோ பரவாயில்லைன்னு விட்டுட்டேன்.” என்றான். உடனே அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் மீது சாய்ந்து படுத்து கொண்ட தேன்மொழி கதறி அழுதாள்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)