Home தாபம் தீர்க்க வந்த தாரமேதாபம் தீர்க்க வந்த தாரமே CH 158

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 158

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 158: இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா? (பார்ட் 1)

திவ்யாவின் வீட்டில்..

திவ்யாவிடம் சிவா தன்னுடைய காதலை சொல்ல அவர்கள் இருவரும் தங்களுடைய காதலில் திளைத்துக் கொண்டு இருக்கும் தருணம், அவர்களை எதிர்பாராத விதமாக திவ்யாவின் தந்தை பார்த்து விட, அவர் திவ்யாவின் மீது கோபப்பட்டு அவளை அடிக்கிறார். அதனால் கோபப்பட்ட சிவா, அவர் தான் திவ்யாவின் தந்தை என்று தெரியாமல்.. அவரை அடிக்க சீறி பாய்கிறான். அதை கண்டு அதிர்ந்து போன திவ்யா அவர்களின் குறுக்கே சென்று அவனை தடுத்து நிறுத்தியவள், அவர் தான் தன்னுடைய தந்தை என்று சிவாவிற்கு சொல்லி புரிய வைத்துவிட்டு; பின் தன்னையும், சிவாவையும், சேர்த்து வைக்குமாறு அவள் தன்னுடைய தந்தையிடம் கெஞ்ச, சிவாவும் அவளுடன் இணைந்து அவளுடைய அப்பாவிடம் கெஞ்சினான். 

தன் முன்னே மண்டியிட்டு கெஞ்சி கொண்டு இருக்கும் தன்னுடைய மகளையும், சிவாவையும், கூர்மையான விழிகளுடன் நோக்கிய வாசுதேவன், ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். ஏற்கனவே அவர் ஆராதனா காதலுக்காக தற்கொலை செய்ய முயற்சித்ததை திவ்யாவின் வாயிலாக அவர் அறிந்து வைத்து இருந்தார். அதனால் இப்போது தான் தன்னுடைய மகளிடம் வெறுப்பாக பேசினால் அவள் அப்படி ஏதேனும் ஒரு முடிவை எடுத்து விட கூடும் என்று நினைத்தவருக்கு, “இவ இவன் தான் வேணும்னு இவன் கூட ஓடி போனாலும், நமக்கு கௌரவ குறைச்சல் தான். இவன இவ காதலிச்சு இப்ப தற்கொலை பண்ணி செத்துப் போனாலும், நமக்கு கௌரவ குறைச்சல் தான். அதனால இப்ப ஆத்திரப்பட்டு நம்ப சண்டை போடுறத விட, புத்திசாலித்தனமா ஏதாவது பண்ணி தான் இவங்க ரெண்டு பேரையும் பிரிக்கணும். நமக்கு காரியம் தான் முக்கியம்.” என்று நினைத்தவர், திவ்யா மற்றும் சிவாவைப்போல் தானும் தரையில் மண்டியிட்டு அமர்ந்தவர் அவர்களைப் பார்த்து தன்னுடைய இரு கைகளையும் கூப்பி, “இங்க பாருங்க.. உங்களுக்கு இந்த வயசுல உங்களோட காதல் தான் பெருசா தெரியலாம். ஆனா நாங்க எல்லாம் அந்த காலத்து ஆளுங்க பா. நாங்க -லாம் சாதி, சனம், கௌரவம், தான் பெருசுன்னுு வாழ்ந்துட்டோம். இப்ப நீங்க திடீர்னு வந்து இப்படி கேக்குறீங்கன்னு என்னால எல்லாத்தையும் மாத்திக்க முடியாது. 

உங்க காதல நான் மட்டும் இல்ல இந்த ஊர் உலகம்  எப்பவுமே ஏத்துக்காது. என் கிட்ட காசு பணம் பெருச்சா இல்லைனாலும், இத்தனை வருஷமா நான் இங்க கௌரவமா வாழ்ந்துட்டேன். இதுக்கு மேல நான் இங்க இருந்து செத்து பாடையில பாக்கும்போதும், அதே கௌரவத்தோட போகணும்னுு ஆசைப்படுறேன். தயவு செஞ்சு நீங்க ரெண்டு பேரும் சேந்து என் ஆசையில மண்ண அள்ளி போட்டுறாதீங்க. இந்த விஷயம் யாருக்காவது தெரிஞ்சுச்சுன்னா, நான் என்னோட உயிரையே விட்டுட்டுவேன்.”என்றவர் சிவாவின் கைகளை பிடித்துக் கொண்டு, “இங்க பாரு பா.. இது உன்னோட கை இல்ல, காலா நினைச்சு நான் கேட்கிறேன். என் பொண்ணு இன்னொருத்தனுக்கு நிச்சயமானவ. நீ இப்போ இந்த மாதிரி வந்து அவள பாக்குறது, பேசுறது எல்லாம் சரி இல்ல. உன்ன கெஞ்சி கேட்கிறேன் எங்களையும், என் பொன்னையும் விற்று. இந்த கடைசி காலத்தில நாலு பேர் நாலு விதமா பேசுறத எல்லாம் கேக்கற தெம்பு எனக்கு இல்ல.” என்று கலங்கிய கண்களுடன் சொன்னவர், சிவாவின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சினார். 😭 😭 😭 🙏

தன்னுடைய அப்பா பேசியதை கேட்டு மனம் உடைந்து போன திவ்யா, “ப்ளீஸ் அப்பா இப்டி எல்லாம் பேசாதீங்க. நான் எப்பவுமே உங்கள ஒரு கம்பீரமான ஆளா தான் பாத்து பழகி இருக்கேன். நீங்க இப்படி எங்ககிட்ட போய் கெஞ்சறத என்னால தாங்கவே முடியல. எனக்கு நீங்க மட்டும் தான் பா முக்கியம். நீங்க மத்தவங்கள பத்தி கவலைப் படாதீங்க. அந்த நாலு பேர் நம்ப நல்லா இருந்தாலும் பேசுவாங்க. இல்லைன்னாலும் பேசுவாங்க. அவங்கள பத்தி யோசிச்சிகிட்டு நம்ப நம்மளோட சந்தோஷத்தையும், நிம்மதியையும், கெடுத்துக்க வேணாம் பா. 

தயவு செஞ்சு கொஞ்சம் பிராக்டிக்கலா யோசிச்சு பாருங்க பா. நீங்க சொல்ற இந்த ஊரும், நம்ப சாதி, சனத்துல இருக்கிறவங்களும் நீங்க என்ன படிக்க வச்சப்ப பொம்பள பிள்ளைய எதுக்கு படிப்புன்னு கேட்டாங்க. என்ன நீங்க வெளி ஊருக்கு வேலைக்கு அனுப்புனப்ப, புள்ள வெளியூருக்கு அனுப்பிச்சா கெட்டுப் போயிரும் வேணா அனுப்பாதேன்னு சொன்னாங்க. ஆனா அது எல்லாத்தையும் மீறி நீங்க என்னை நம்பி எனக்கு சப்போர்ட் பண்ணீங்கல்ல பா. என் அப்பா எப்பவும் என்னோட சந்தோசத்த பத்தி தான் யோசிப்பாருன்னு நான் நம்பிட்டு இருந்தேன். அத எல்லாத்தையும் பொய்யாகிறாதீங்க பா ப்ளீஸ். நீங்களும் கஷ்டப்பட வேண்டாம். நானும் கஷ்டப்பட வேண்டாம். எனக்கு சிவாவுக்கும் கல்யாணம் நடந்தா, நம்ம எல்லாருமே சந்தோஷமா இருக்கலாம் பா. கொஞ்சம் எனக்காக யோசிச்சு பாருங்க பா. என் முடிவு சரியா இருக்கும்னு நம்புங்க அப்பா.” என்று சொல்லி, தன் அப்பாவின் மடியில் படுத்து கொண்டு அழுது கதறினாள் திவ்யா. 😭 😭 😭

சிவா வேறு வழி இன்றி அமைதியாக அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டு இருந்தான். ஒரு வேளை முன்பு போல் திவ்யாவின் அப்பா தன்னிடம் சண்டைக்கு வந்து இருந்தால், கூட ஏதாவது செய்து திவ்யாவை இங்கு இருந்து தூக்கிக் கொண்டு போய் கூட அவன் தாலி கட்டி இருப்பான். நாளைக்கு இவர்களால் ஏதாவது பிரச்சனை வந்தால் கூட, விஷ்வா தனக்கு சப்போர்ட் செய்வான் என்று நம்பி இதில் இறங்கி இருப்பான். ஆனால் இப்போது தன்னுடைய தந்தை வயதில் இருக்கும் ஒருவர் தன்னிடம் கெஞ்சுவதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

இதற்கு மேலும் அவரிடம் சென்று.. “உங்க பொண்ண எனக்கு கட்டிக் குடுங்க.” என்று கேட்க கூட அவனுக்கு வாய் வரவில்லை. அதனால் அமைதியாகவே இருந்து விட்டான். திவ்யாவின் தலையை தன்னுடைய ஒரு கைகளால் பாசமாக வருடிய வாசுதேவன், “நீ சொன்னது எல்லாமே சரி தான் மா திவ்யா. நான் உனக்காக எல்லாத்தையும் உனக்கு பிடிச்சதா பாத்து.. பாத்து.. தான் செஞ்சு இருக்கேன். யாரு என்ன சொன்னாலும், உன் அப்பா உனக்கு புடிச்சத தான் செய்வேன்னு உனக்கே தெரியும்ல்ல மா..?? நான் எந்த நம்பிக்கையில உன்னை ஊரு விட்டு ஊரு வேலைக்கு அனுப்பி வச்சேன்னு நினைக்கிற..??

நான் என் பொண்ண நம்புனேன். இந்த ஊர்க்காரங்க நாக்கு மேல பல்ல போட்டு பேசுற மாதிரி என் பொண்ணு எப்பயுமே நடந்துக்க மாட்டான்னு நான் நம்புனேன். அதான் யார் சொல்லியும் கேட்காம நீ ஆசைப்படுறன்னு நான் உன்ன வேலைக்கு வெளியூர்க்கு அனுப்புனேன். ஆனா நீ இந்த அப்பா நம்பிக்கைய ஒடைச்சுட்டியே மா..!!! இப்ப அந்த ஊர்க்கார நாய்ங்க பேசினது எல்லாம் உண்மைன்னு ஆகி போய்டுச்சு இல்ல. இதுக்கு மேல நான் அவங்க மூஞ்சில எல்லாம் போய் எப்படி முழிப்பேன்..??? 

அவனுங்க எல்லாம் என்ன கேவலமா பேச மாட்டாங்களா..???? உனக்கு அப்புறம் உனக்கு ஒரு தம்பியும், தங்கச்சியும், இருக்காங்களே.. அவங்கள எப்படி நான் கரை சேத்தவேன்…??? நீயே சொல்லு நீ இப்படி எவனையாச்சும் இழுத்துகிட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நம்ம ஜாதி சனத்துல எவனாவது நம்ம வீட்ல பொண்ணு கட்டுவானா..?? இல்ல பொண்ணு தான் குடுப்பானா..?? நான் உனக்கு மட்டும் அப்பா இல்ல மா திவ்யா. நான் என்னோட எல்லா பிள்ளைகளும் நல்லா இருக்கணும்னு தான் நினைப்பேன். நான் உனக்கு பாத்திருக்கிற பையன் ஒன்னும் மோசமானவன் கிடையாது. இந்த வாழ்க்கை உனக்கு நல்லபடியா அமைஞ்சு, நீ நல்லா இருப்ப இந்த அப்பாவ நம்பு மா.” என்று சொன்னவர் தன் மீது படுத்து இருந்த திவ்யாவை எழுப்பிவிட்டு எழுந்துு நின்று, “நான் சொல்ல வேண்டியத எல்லாத்தையும் சொல்லிட்டேன் மா. இதுக்கு மேல எல்லாமே உன் இஷ்டம் தான். உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் தரேன். நான் இப்போ வீட்டுக்குள்ள போறேன். நான் போய் அடுத்த அஞ்சு நிமிஷத்துல நீ உள்ள வரணும். அப்படி நீ வரலைன்னா, அடுத்த ஆறாவது நிமிஷம் நான் தூக்கில தொங்கிடுவேன். என் குடும்பம் சந்தி சிரிக்கிறத எல்லாம் என்னால இருந்து வேடிக்கை பாக்க முடியாது. அதுக்கு நான் செத்துப் போறதே மேல்.

நான் இவ்ளோ சொல்லியும், நீ இந்த தம்பி கூட தான் வாழனும்னு முடிவு எடுத்தின்னா.. அது உன்னோட இஷ்டம். நான் போய்ட்டா உங்க அம்மாவும் இருக்க மாட்டா. அவளும் செத்துருவா. நீயும் இந்த தம்பியும் சேந்து உன் தம்பியையும், தங்கச்சியையும், பத்திரமா பாத்துக்கோங்க. முடிஞ்சா உங்க கூடவே உங்க ஊருக்கு அவங்களையும் கூட்டிட்டு போயிருங்க. இந்த ஊர்ல இருந்து என் புள்ளைங்க அசிங்கப்பட வேண்டாம். எனக்காக இத மட்டும் செய்ங்க. நீ எந்த முடிவு எடுத்தாலும், நீ நல்லா இருப்ப மா திவ்யா. என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பயும் இருக்கும்.” என்று  கண்ணீர் நிறைந்த கண்களுடன் சென்டிமென்டலாக திவ்யாவிடம் சொன்னவர், அவர் சொன்னதைப் போல் தன்னுடைய வீட்டிற்குள் சென்று விட்டார். 

திவ்யாவை போ என்றும் சொல்ல முடியாமல், போகாதே என்றும் சொல்ல முடியாமல், தவித்துக் கொண்டு இருந்தான் சிவா. கண்ணீர் நிறைந்த கண்களுடன் சிவாவை திரும்பி பார்த்தாள் திவ்யா. 😭 😭 😭 திவ்யாவை அந்த நிலையில் பார்த்த சிவாவின் கண்களில் இருந்தும் நிற்காமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.  😭 😭 😭 வேகமாக வந்து அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்ட திவ்யா, 🤗 “ஐ அம் சாரி சிவா. அண்ட் ஐ லவ் யூ சோ மச்.” என்று அழுது கொண்டே சொன்னவள், பின் அவனை விட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்குள் சென்று கதவை அடித்து சாற்றிி விட்டாள்.  😭 😭 😭 

சிவாவிற்கு இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்றே புரியவில்லை. அதனால் சிலையாய் சிறிது நேரம் அப்படியே சமைந்து நின்றவன், தன்னுடைய பெற்றோர்களால் திருவிழாவில் கைவிடப்பட்ட குலத்தையைப் போல் என்ன செய்வது என்று தெரியாமல் தரையில் மண்டியிட்டு அழ தொடங்கினான். 😭 😭 😭 அவனுடைய காதல் கதை இன்றே தொடங்கி இன்றே முடிந்து விட்டது என்று அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைை. 😭 😭 😭

அவன் அவளோடு பழகியது கொஞ்ச காலமாக இருந்தாலும், திவ்யா தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திவிட்டுு சென்ற தாக்கத்தில் இருந்து அவனால் ஒருபோதும் மீண்டும் வர முடியாது என்று அவனுக்கு தோன்றியது. 💔 🥀 அதனால் உடைந்த இதயத்துடன் சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவன், பின் வேறு வழி இன்றி தன்னை தேற்றி கொண்டு தான் வந்த வழியிலேயே திரும்பி அந்த வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தவன், தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். 

தனியாக தவிக்கின்றேன்

துணைவேண்டாம் அன்பே போ..

பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ…

நீ தொட்டஇடமெல்லாம் எரிகிறது அன்பே போ…

நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ…

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ

உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ..

உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே…. 😭 ❤️

உயிர் காதல் நீ காட்டினாள் வாழ்வேனே பெண்ணே.. 😭

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்

மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா..???

இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்

விடியலை காணவும் விதி இல்லையா

போ நீ போ போ நீ போ..

என் காதல் புரியலய உன் நஷ்டம் அன்பே போ…

என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ… 💔 🥀

அடுத்த நாள் காலை…

பிரவீனின் வீட்டில்…

குடித்துவிட்டு தன்னுடைய பெட் ரூமில் மட்டையாகிக் கிடந்த பிரவீனை அவனுடைய   மேனேஜர் சங்கர், அங்கே வந்து எழுப்பினான். எரிச்சலுடன் அவனைப் பார்த்த பிரவீன், “இப்ப உன்ன யாரு டா இங்க வர சொன்னா..?? என்ன கொஞ்ச நேரமாவது  நிம்மதியா இருக்க விடு டா. எனக்கு இப்ப மூடு சரி இல்ல. என்னால இப்ப ஆபீஸ்க்கு எல்லாம் வர முடியாது. பேசாம நம்ம வழக்கமா போற லாட்ஜ்ல ஒரு ரூம் போடு. நம்ம வனிதாவ அங்க வர சொல்லு. அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. கொஞ்ச நேரம் ஜல்சா பண்ணாளாவது மூடு சரி ஆகுதான்னு பாப்போம்.” என்று தன்னுடைய பெட்டில் எழுந்து அமர்ந்த படியே சங்கரிடம் சொன்னான். 😒

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured