அத்தியாயம் 157: உன்னை யாருக்கும் தர மாட்டேன்
திவ்யா தன் கையில் இருந்த விரகு கட்டையை தூக்கி போட்டவள், “அந்த பயம் இருக்கட்டும். இப்ப இங்க நீ எதுக்கு வந்த..??? அத முதல்ல சொல்லு.” என்று கோபமாக கேட்டாள்.. 😒 😡
சிவா: நான் சொல்றதெல்லாம் இருக்கட்டும் டி. முதல்ல நீ இங்க வந்ததுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லு. அந்த பன்னாடைய கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஓகே சொல்லி, அவன் கூட எங்கேஜ்மென்ட் பண்ணிட்டியா..???” இன்று பதட்டமான குரலில் கேட்டான்.
திவ்யா: “ஆமா எங்கேஜ்மென்ட் முடிஞ்சிடுச்சு. நான் அந்த பன்னாடைய தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.” என்றவள், தன் கையில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை அவன் முன் தன்னுடைய கையை நீட்டி காண்பித்தாள். அங்கு இருந்த இருளில்.. அவள் கையில் இருந்த அந்த தங்க மோதிரம் பிரகாசமாக ஜொலித்தது.
அதைப் பார்த்து கடுப்பான சிவா, “அப்போ நெஜமாவே நீ என்ன ஏமாத்திட்டு, அவன கல்யாணம் பண்ணிக்க போறியா…??? எப்படி டி உன்னால என் இடத்துல இன்னொருத்தன வச்சு பாக்க முடியுது..??? உனக்கு இதெல்லாம் அசிங்கமா இல்லையா…???” என்று கோபமான குரலில் கேட்டான். 😡 🔥
திவ்யா: அவன் சொன்னதை கேட்டு கடுப்பானவள், அவனுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். நியாயமாக இவள் அவனை பலமாக அறைந்ததற்கு அவனுடைய கண்கள் தான் கலங்கி இருக்க வேண்டும். ஆனால் அவன் கல் போல் நின்று கொண்டே இவனையே வெறித்து பார்த்துக் கொண்டு இருக்க, இவளுடைய கண்கள் தான் கலங்கிவிட்டன. 😔 🥺
பின் அவனை கோபமாக பாத்தவள், “கேப்ப டா.. கேப்ப…!!! உன்ன லவ் பண்ண பாவத்துக்கு இன்னும் என்ன பாத்து உன்னால என்னலாம் கேட்க முடியுமோ.. எல்லாத்தையும் கேளு. நீ என்ன பாத்து நீ என்ன கேட்ட.. எனக்கு அசிங்கமா இல்லையான்னு கேட்டில…???
இப்ப நான் கேட்கிறேன் என்ன பாத்து இப்படி ஒரு கேள்விய கேக்குறதுக்கு உனக்கு அசிங்கமா இல்லையா டா..?? ஒரு பொண்ணு நானே என் வெக்கத்த விட்டு உன்கிட்ட என் லவ்வ சொல்றேன், அத கேட்டுட்டு நீ என்ன மதிச்சு ஒரு ஆன்சர் ஆவது சொல்லுமா இல்லையா…??? சரி அப்ப தான் கிரிட்டிக்கல் சிச்சுவேஷன் உன்னால எதுவும் சொல்லல முடியல. அதுக்கப்புறம் பஸ்ல எவ்ளோ நேரம் டிராவல் பண்ணி தானே நான் இங்க வந்தேன்.
ஆராதனா பிரச்சனை சால்வானதற்கு அப்புறம் கூட உனக்கு என்கிட்ட பேசணும்னு தோணலைல்ல..??? அப்புறம் என்ன மயிருக்கு டா இங்க வந்த..?? உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம, நான் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பேன்னு நீ கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா…??? அத எல்லாம் நெனச்சு கொஞ்சம் கூட வருத்தப்படாம, இங்க வந்து என்ன பாத்து காமெடி பண்ணிட்டு இருக்கல நீ..!!! சத்தியமா சொல்றேன் உன்ன மாதிரி ஒரு ஆள போய் லவ் பண்ணிட்டமேன்னு எனக்கு தான் அசிங்கமா இருக்கு. இவ எங்க போய்ட போறான்ற தைரியத்தில தானே நீ எனக்கு என்னனு இருந்த. அப்படியே இருந்துக்கோ. என்ன விற்று.” என்று கோபமாக சொன்னவள் மீண்டும் தன்னுடைய வீட்டிற்குள் செல்ல திரும்பினாள்.
கலங்கிய கண்களுடன் அவளுடைய கையைப் பிடித்து வேகமாக இழுத்து அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்ட சிவா, “ஐ அம் சாரி திவ்யா. நான் உனக்கு கால் பண்ணிக்கிட்டே இருந்தேன் டி. உன் போன் தான் நாட் ரீச்சபிள் இருந்துச்சு. உன்னை இங்க வந்து பாக்கிற வரைக்கும் நான் எப்படி பைத்தியக்காரன் மாதிரி உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம அத பத்தியே யோசிச்சு யோசிச்சு தூங்காம கூட இருந்தேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.
அந்த சுச்சுவேஷன்ல உனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு நான் ஒன்னும் கிளம்பி போகல. எது நடந்தாலும் நீ எனக்கு மட்டும் தான்ற நம்பிக்கைல தான் கிளம்பி போனேன். என்ன நம்பு டி. அப்படிலாம் எந்த பன்னாடைக்கும் நன உன்ன விட்டு குடுத்திட மாட்டேன். நீ எனக்கு மட்டும் தான். ஐ லவ் யூ திவ்யா. ஐ லவ் யூ சோ சோ மச்.” என்று வலி நிறைந்த குரலில் தன்னுடைய காதலை அவளிடம் சொல்லி அவளுக்கு புரிய வைக்க முயன்றான். 🥺 ❤️
என்னை விட்டு உயிர் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
ஜென்மம் பல எடுத்தாலும்…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…
நீ இல்லா நேரம்…
அது நிலவே இல்லா வானமே…
இரண்டும் இருண்டு போகும்…
சிறு வெளிச்சம் தேடி ஓடுமே…
உன்னில் துலைந்த என்னை…
உடனே மீட்டு கொடு..
இல்லை என்னுள் நீயும்…
அழகாய் உடனே துலைந்துவிடு… 🎶 🎶 😍 ❤️ 💫🌟 ✨
இறுதியாக சிவா தன்னுடைய காதலை தன்னிடம் சொல்லிவிட்டதால் மகிழ்ந்தத திவ்யா, அவனை இன்னும் இருக்கி அணைத்துக் கொண்டாள். 🤗 அவனுடைய அனைப்பை வைத்தே தன்னுடைய காதல் வெற்றி அடைந்து விட்டதை உறுதி செய்த சிவா, அவளுடைய இதழ்களை தன்னுடைய இதழ்களால் சிறை செய்தான். 😗 😘 முதலில் அதிர்ந்த திவ்யா பின் அவனுக்கு ஒத்துழைக்க தொடங்கினாள். அவர்கள் இருவருமே தங்களுடைய காதல் தவிப்பை அந்த ஒரு இதழ் முத்தத்தில் தீர்த்துக் கொள்ள துடித்தனர். 🥰
சில நிமிடங்கள் இப்படியே தொடர பின் பிரிய மனம் இன்றி பிரிந்தவர்கள், ஒருவரின் முகத்தை ஒருவர் வெட்கத்துடன் பார்த்துக் புன்னகைத்து கொண்டனர். ☺️ திவ்யாவின் தோள்களில் தன்னுடைய கையை போட்டு அங்கே இருந்த திண்ணையில் அமர்ந்த சிவா, “இப்பவாவது சொல்லி தொல டி. என்ன தான் ஆச்சு..??? நெஜமாவே உனக்கும் அவனுக்கும் என்கேஜ்மென்ட் முடிஞ்சிருச்சா..???” என்று வருத்தமான குரலில் கேட்டான்.
திவ்யா: “ஆமா முடிஞ்சிருச்சு என்பது போல தன்னுடைய தலையை ஆட்டியவள், “என்ன வேற என்ன பண்ண சொல்ற சிவா..??? நீயும் என்கிட்ட எதுவும் சொல்லல. நான் இங்கே வந்த உடனே என்னோட போன புடுங்கி சுவிட்ச் ஆஃப் பண்ணி, என்ன ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. நான் என்ன பண்றதுன்ற கன்ஃபியூஷன்ல இருக்கும்போதே அப்படியே நிச்சயம் நடந்துருச்சு. என்னால எதுவுமே பண்ண முடியல.
எனக்கு உன் மேல கோவம் இருந்தாலும் நீ எப்படியும் என்னை தேடி வருவேன்ற நம்பிக்கை இருந்துச்சு. அதான் எப்படியோ கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் இருக்குல்ல பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.” என்று அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டு சொன்னாள்.
அப்போது அவளுடைய கைகளை பிடித்த சிவா, அவளுடைய விரல்களில் இருந்த மோதிரத்தை பார்த்தான். யாரோ ஒருவன் அறிவித்த மோதிரம் அவளுடைய கைகளில் இருப்பதை அவன் விரும்பவில்லை. அதனால் அவளுடைய விரல்களில் இருந்து அதை கழட்டியவன், அருகே இருந்த ஒரு அண்டாவில் இருந்த தண்ணீரில் அதை கழுவி விட்டு, அதை மீண்டும் அவளுடைய விரல்களில் அணிவித்தான். இப்படி அவன் செய்வதன் மூலம் அதில் பதிந்திருந்த பிரசாந்தின் ரேகைகளை அவன் அளித்து விட்டானாம் பாருங்களேன்..!!!
அதை நினைத்து சிரித்த திவ்யா, “என்ன தான் இருந்தாலும், இது அவன் வீட்ல வாங்கி போட்ட மோதிரம் தானே..!!! அது மட்டும் என் கையில இருந்தா பரவாயில்லையா..???” என்று நக்கலாக கேட்டாள். 😂 😂 😂
சிவா: “அதுக்கு என்ன பண்றது..?? இப்ப உன் கையில இந்த ரிங் இல்லைனாலும் உன் மேல உங்க வீட்ல இருக்கவங்களுக்கு சந்தேகம் வந்துரும். நானும் வேற எந்த ரிங் -ம் வாங்கிட்டு வரலையே…!!! கொஞ்ச நாள் இத போட்டிரு. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு நான் திரும்பவும் இங்க வந்து உன் பேமிலி கிட்ட பேசி சம்மதம் வாங்குகிறேன். அப்புறம் அபிஷியலா இத விட எக்ஸ்போன்ஸிவான ரிங் அ வாங்கி இந்த ஊர்ல இருக்கிறரிங்க எல்லார் முன்னாடியும் அத உன் கைல போடறேன். ஓகே வா..??” என்று அவளை காதலுடன் பார்த்து கேட்டான். 😍
அப்போது பின் வாசலில் போடப்பட்டு இருந்த குண்டு பல்ப் திடீரென்று ஒளிர்ந்தது. பயந்து போன சிவாவும், திவ்யாவும், வேகமாக பிரிந்து எழுந்து நின்றனர். அவர்கள் இருவரும் வாசற் கதவை பயத்துடன் பார்க்க, அங்கே வந்த திவ்யாவின் அப்பா வாசுதேவன் பலர் என்று திவ்யாவின் கன்னத்தில் அறைந்தார். அதைக் கண்டு கடுப்பான சிவா அவருடைய சட்டையை கோபத்தில் இறுக்கி பிடித்து “என்ன தைரியம் இருந்தா, என் முன்னாடியே அவள அடிப்ப..???” என்று உச்ச ஸ்ருதியில் கேட்டான். 😡 🔥
அதனால் கோபப்பட்ட வாசுதேவன் சிவாவின் கன்னத்திலும் பளார் என்று அறிந்தார். அதனால் சிவாவின் கோபம் இன்னும் அவனுடைய தலைக்கு ஏறி விட, வாசுதேவனை அடிக்க சீறி பாய்ந்தான். அந்த காட்சியை கண்டு பயந்து போன திவ்யா வேகமாக அவர்களின் நடுவே சென்று அவர்களை பிரித்து விட்டவள் கோபமாக சிவாவை பார்த்து, “அவர் என்னோட அப்பா டா. கொஞ்சம் அடங்கு. மரியாதையா பேசு.” என்று காட்டமான குரலில் சொன்னாள். 😒
அவள் சொன்னதைக் கேட்டு ஓங்கிய தன்னுடைய கரத்தை கீழே தாழ்த்தி கொண்ட சிவா, “சாரி சார்.” என்று தாழ்மையான குரலில் சொன்னான். அவன் இழுத்ததில் கசங்கி போன தன்னுடைய சட்டையை சரி செய்த வாசுதேவன் கூர்மையான கண்களுடன் சிவாவை பார்த்து, “யாருடா நீ..??? இந்த நேரத்துல இங்க வந்து என் பொண்ணு கூட எதுக்கு தனியா பேசிட்டு இருக்க..??? அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்..??? உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா எங்க ஊருக்கே வந்து என் வீட்டு சுவர ஏறி குதிச்சு திருட்டுத்தனமா இங்க வந்திருப்ப..??? இதுல என்ன ஏதுன்னு கேட்க வந்தா பெரிய ரவுடியா நீ என்னயவே அடிச்சிருவியா..?? இங்க பாருடா உன்னோட சண்டியர் தினத்தை எல்லாம் உங்க ஊரோட வச்சுக்கோ. இங்க வந்து இந்த மாதிரி சலம்பிக்கிட்டு திரிஞ்சினா, அருவாவை எடுத்து உன்ன ஒரே ஒரு போடு போட்டுட்டு, நான் ஜெயிலுக்கு சந்தோஷமா போயிடுவேன்.” என்று கடுமையான குரலில் சொன்னார். 😒 😡 🔥
திவ்யா: ஐயோ அப்பா ப்ளீஸ் கோபப்படாதீங்க. அவனுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அவளுக்கு உங்களை யாருன்னு தெரியல. அதான் என் மேல இருக்குற பாசத்துல அப்படி பண்ணிட்டான். அவன் ரொம்ப நல்ல பையன் பா. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம். ப்ளீஸ் எங்கள பிரிச்சிராதீங்க.” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் தன்னுடைய இரு கைகளையும் கூப்பி எப்படி தன்னுடைய தந்தையின் முன் மண்டையிட்டு அழுதாள். 😭 😭 😭
அவள் மட்டும் என் தங்களுடைய காதலுக்காக போராட வேண்டும் என்று நினைத்த சிவா அவள் அருகே அவனும் திவ்யாவின் அப்பாவை பார்த்து தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன், “சாரி சார். இதுக்காக கோபப்பட்டு என்ன கெட்டவன்னு நினைச்சு என்னையும், இவளையும், பிரிச்சிடாதீங்க. நாங்க ரெண்டு பேரும் உண்மையா லவ் பண்றோம். நீங்க என்ன தவிர வேற யாருக்கு இவளை கல்யாணம் பண்ணி வச்சாலும், இவ சந்தோஷமா இருக்க மாட்டா. நானும் தான். நீங்க இவளுக்கு பார்த்து வைத்திருக்கிற மாப்பிள்ளை யாரு அவன் எப்படி இருப்பான்னு எல்லாம் எனக்கு தெரியாது.
ஆனா கண்டிப்பா அவன விட நான் எந்த விதத்திலும் குறைஞ்சவனா இருக்க மாட்டேன். என்னை விட அதிகமா உங்க பொண்ண யாராலையும் அன்பா, பாசமா, பாத்துக்க முடியாது. நான் இந்தியாவிலயே ஒரு பெரிய கம்பெனில வேலை பாக்குறேன். எனக்கு மாசம் மூணு லட்ச ரூபா சம்பளம். சொந்த வீடு, காரன்னு.. எல்லாமே வச்சிருக்கேன். என்னால காலம் முழுக்க என் திவ்யாவ ராணி மாதிரி வச்சு சந்தோஷமா பாத்துக்க முடியும். ப்ளீஸ் அவளை எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்க சார்.” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் கெஞ்சினான். 😭 😭 😭
– நேசம் தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)