அத்தியாயம் 173
ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு இருந்த தேன்மொழி அர்ஜுன் தனது ரூமிற்கு வந்தவுடன் அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதாள். அவளது நிலைமையை பார்த்தவுடன் அவன் இதயம் கனத்தது அவன் கண்களும் ஈரமானது.
அங்கே இருந்த டாக்டர்களும் நர்சுகளும் எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் தன் மனைவிக்கு ஒன்று என்று வந்தவுடன் சுற்றம் மறந்து அவளுக்காக கண்ணீர் சிந்துகிறானே என நினைத்து ஆச்சரியமாக பார்த்தார்கள்.
“நான் போய் அம்மா எப்படி இருக்காங்கன்னு பாக்கணும். இவங்க யாரும் என்னை விட மாட்டேங்குறாங்க அர்ஜுன். என்ன காப்பாத்த போய் அவங்களுக்கு இப்படி ஆயிடுச்சுன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று உடைந்த குரலில் தேன்மொழி சொல்ல,
சோனியாவை தான் இவள் அம்மா என்று அழைக்கிறாள் போல என நினைத்த அர்ஜுன் “அவங்களுக்கு ஒன்னும் இல்ல மா.. நீ பயப்படாத சரியா? பெஸ்ட் டாக்டர்ஸ் அவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்காங்க. சீக்கிரம் அவங்களும் சரி ஆயிடுவாங்க.” என்று அவளை தன்னுடன் சேர்த்து அனைத்து பிடித்துக் கொண்டு அவள் தலை முடியை மெதுவாக வருடியவாறு சொன்னான்.
அவனது சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்த தேன்மொழி “எல்லாரும் சேர்ந்து என் கிட்ட பொய் சொல்லாதீங்க. நான் பார்க்கும்போது தலையில் அடிபட்டு அவங்களுக்கு நிறைய பிளட் லாஸ் ஆகி இருந்துச்சு. அதுல collapse ஆகி அவங்க அப்படியே விழுந்துட்டாங்க. அவங்கள நேர்ல பார்த்தா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும் அர்ஜுன்.
ப்ளீஸ் நான் சொல்றத புரிஞ்சுக்கோ. என்னை அவங்க கிட்ட கூட்டிட்டு போ. அவங்களும் இதே ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்க! அப்புறம் நான் அவங்களை பார்க்கிறதுல என்ன பிரச்சனை?” என்று துக்கம் தொண்டையை அடைக்க கேட்டுவிட்டு கண்ணீர் கோடுகளுடன் அண்ணாந்து அவன் முகத்தை பார்த்தாள்.
நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த டாக்டர் “லேப்ல இவங்களோட ஸ்கேன் ரிப்போர்ட்டை கேட்டு வாங்கிட்டு வாங்க.” என்று நர்ஸுடம் சொல்லி அனுப்பிவிட்டு “இவங்க இப்படியே தான் சார் ரொம்ப நேரமா அடம் பிடிச்சுட்டு இருக்காங்க. இவங்களோட கண்டிஷனும் இப்ப கொஞ்சம் கிரிட்டிக்கலா தான் இருக்கு. ஸ்கேன் ரிப்போர்ட் வந்தா தான் பேபி எப்படி இருக்குன்னு பாத்து சொல்ல முடியும். இவங்க ட்ரீட்மென்ட்க்கு cooperate பண்ணாம அகைன் அண்ட் அகைன் சோனியா மேடமை போய் பாக்கணும்னு தான் கேட்டுகிட்டே இருக்காங்க.
பிரக்னண்டா இருக்கிற இந்த டைம்ல இவங்க இப்படி எமோஷனல் ஆகுறது குழந்தைக்கு கொஞ்சம் கூட நல்லதே இல்ல. ப்ளீஸ் அவங்கள கொஞ்சம் calmஆ இருக்க சொல்லுங்க சார்.” என்று அர்ஜுனை பார்த்தபடி சொன்னாள்.
உடனே தேன்மொழியின் அருகில் பெட்டில் அமர்ந்த அர்ஜுன் அவள் கைகள் இரண்டையும் பிடித்து அதில் தன் முகத்தை புதைத்து “இப்ப நான் சொல்றத பொறுமையா கேளு. சோனியா ஆன்ட்டி எனக்கு தெரிஞ்சு ரொம்ப நல்லவங்க. அவங்க அந்த நேரத்துல உன்ன அவங்க பொண்ணா தான் பாத்துருக்காங்க.
அதனால தான் நீயும் உரிமையா அவங்கள அம்மான்னு கூப்பிடற எனக்கு புரியுது. பட் உன்னோட கண்டிஷன் எப்படி இருக்குன்னு டாக்டர் சொல்றத நீ ஏன் புரிஞ்சுக்க ட்ரை பண்ண மாட்டேங்குற? சோனியா ஆன்ட்டி உனக்கு வந்த ஆபத்த கிட்டதட்ட அவர்களே ஏத்துக்கிட்டாங்க..
அதுக்கு என்ன அர்த்தம்? உனக்கு எதுவும் ஆக கூடாதுன்னு அவங்க நினைக்கிறாங்கன்னு அர்த்தம். இந்த சுச்சுவேஷன்ல நீ ரொம்ப எமோஷனலாகி உனக்கோ குழந்தைக்கோ ஏதாவது ஆயிட்டா, நாங்க என்ன ஆவோம் தேன்மொழி? அத கூட விடு. உனக்காக அவங்க இவ்ளோ ரிஸ்க் எடுத்து இருக்காங்க இல்ல..
உனக்காக அதை செஞ்சவங்களுக்கு பதிலுக்கு நீ எதுவும் செய்ய வேண்டாமா? உன்னையும் நம்ம குழந்தையையும் அவங்க காப்பாத்தி கொடுத்திருக்காங்க. இப்ப இது உன்னோட trun. அட்லீஸ்ட் அவங்களுக்காகவாவது நீ உன்னை நல்லா பாத்துக்கணும்.
அவங்கள பாத்துக்கிறதுக்கு இங்க நாங்க நிறைய பேர் இருக்கோம். நீ அங்க வந்து அவங்கள பாக்கிறதுனால இப்ப எதுவும் நடக்க போறது இல்ல. ஐ ப்ராமிஸ்… நம்ம இங்க இருந்து கிளம்பும்போது கண்டிப்பா நீ சோனியா ஆண்டிய பார்க்கலாம். அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு ஆல்ரெடி டாக்டர் சொல்லிட்டாங்க.
சோ முதல்ல இப்ப உனக்கு டாக்டரை ட்ரீட்மென்ட் பண்ண விடு. ஆல்ரெடி சோனியா ஆன்ட்டிக்கு இப்படி ஆனதையே உன்னால தாங்க முடியல. இப்ப நீ இப்படி ட்ரீட்மென்ட்டை டிலே பண்ணி குழந்தைக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா அதை உன்னால தாங்க முடியுமா? எனக்கு உன்ன தாண்டி இந்த குழந்தை எல்லாம் முக்கியம் இல்லடி.
ஆனாலும் அப்பனாச்சே.. என் புள்ளைய பத்தி நான் யோசிச்சு ஆகணும். எனக்கு என் பொண்டாட்டியும் புள்ளையும் ரொம்ப முக்கியம். ப்ளீஸ் தேன்மொழி புரிஞ்சுக்கோ! அவசரப்படாத. இவ்ளோ ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத..!!” என்றான்.
பின் அவள் நெற்றியில் மென்மையான முத்தம் ஒன்றைப் பதித்து “Trust me! யாருக்கும் நான் எதுவும் ஆக்க விடமாட்டேன். நான் இப்பவே போய் சோனியா ஆண்டி எப்படி இருக்காங்கன்னு பார்க்கிறேன். டாக்டர் ஏதோ டெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. நீ அதுக்கு cooperate பண்ணு. ஓகேவா?” என்று அர்ஜுன் கேட்க, தன் கண்ணீரை துடைத்துக் கொண்ட தேன்மொழி சரி என்று தலையாட்டினாள்.
அதன் பிறகு அர்ஜுன் அவளை விட்டு விலகி நிற்க அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க தொடங்கிய டாக்டர் அவனை பார்த்து “சார் கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க!” என்றதால் “டோன்ட் வரி ஹனி.. எதுவும் தப்பா நடக்காது. நான் இங்க தான் இருப்பேன். வெளிய வெயிட் பண்றேன்.” என்று தேன்மொழியை பார்த்துச் சொன்ன அர்ஜுன் வெளியில் சென்றான்.
அங்கே கண்ணீரும் கம்பலையுமாக ஜானகியும், விஜயாவும் நின்று கொண்டிருந்தார்கள். அவனைப் பார்த்தவுடன் அவனை பிடித்து வைத்து டாக்டர் என்ன சொன்னார்கள்? என்று போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் இருவரும் அர்ஜுனிடம் விசாரிக்க, “இன்னும் எதுவும் தெரியல. டாக்டர் செக் பண்ணிட்டு சொல்றேன்னு சொல்லிருக்காங்க. நான் போய் சோனியா ஆண்டிய பாத்துட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து தனியாக பிரிட்டோ உடன் நடந்து சென்றான்.
அப்போது அவனுக்கு கால் செய்த மைக்கேல் “நான் இப்ப அந்த ஆக்சிடென்ட் நடந்த லொகேஷன்ல தான் இருக்கேன் அர்ஜுன். இங்க சுத்தி இருக்கிற எல்லா சிசிடிவி கேமராவையும் செக் பண்ணி பாத்துட்டேன்.
எதிலையும் ஒன்னு கூட மாட்டல. அந்த கம்பம் பழசா இருக்கிறதுனால தானா உடைஞ்சு விழுந்திருக்கலாம்னு சொல்றாங்க. பட் எனக்கு அப்படி தோணல. நான் வர்றதுக்குள்ளயே இங்க இருந்து அந்த கம்பத்தை கார்ப்பரேஷன் ஆளுங்க ரிமூவ் பண்ணிட்டு போய்ட்டாங்க.
நான் டைரக்ட்டா அந்த ஆபீஸ் கே போய் அந்த கம்பத்தை பார்த்தேன். அது நல்லா டேமேஜ் ஆகியிருக்கு. அது பழசு தான். பட் யாரோ அதை எதையோ யூஸ் பண்ணி கட் பண்ண மாதிரி நல்லா தெரியுது. கரெக்டா தேன்மொழி அங்க வர்ற நேரத்துல அது விழுகணும்ன்ற வரைக்கும் எல்லாத்தையுமே பிளான் பண்ணி இருக்காங்க.
ஆனா அந்த பிளானை எப்படி எக்ஸிகியூட் பண்ணாங்கன்னு தான் எந்த ஆங்கில்ல ட்ரை பண்ணாலும் கண்டுபிடிக்கவே முடியல. இதை யார் பண்ணி இருந்தாலும் கண்டிப்பா லோக்கல் சாப்பாட்டோட தான் பண்ணி இருப்பாங்க. இங்க
ஒர்க் பண்றவங்க எல்லாரையும் நான் நம்ம ஆளுங்கள வெச்சு தூக்கிட்டேன்.
இப்ப அவனுங்க நம்ம கஸ்டடியில தான் இருக்காங்க. இன்னைக்கு நைட்டு ஃபுல்லா அவங்க கிட்ட எப்படி விசாரிக்கணுமோ அப்படி விசாரிச்சு இதை யார் பண்ணதுன்னு நான் கண்டுபிடிச்ச உனக்கு சொல்றேன்.” என்றான்.
தன் கையில் இருந்த மொபைல் ஃபோனை வந்த கோபத்தில் இறுக்கிப் பிடித்த அர்ஜூன் “அவன் யாரு என்னன்னு தெரிஞ்சுகிட்டு நான் என்ன பண்ண போறேன்? இங்க இருக்கிற லோக்கல் சல்லி பசங்க எல்லாம் எனக்கு தேவையில்லை. அவர்களுக்கு பின்னாடி இருக்கிறது யாரு, அவனை எப்படி பிடிக்கறதுன்னு பாரு.
அவனுங்க வாயில இருந்து இப்படி அவங்கள பண்ண சொன்னது யாருன்னு மட்டும் வந்திருச்சுன்னா, ஒருத்தனை கூட உயிரோட விடாத. இந்த அர்ஜுன் பொண்டாட்டி மேலையே கை வைக்க எவனுக்கு தைரியம் இருக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கணும்.” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு சொன்னான்.
தனது அம்மா அட்மிட் செய்யப்பட்டு இருக்கும் ரூமிற்கு வெளியே நின்று அழுது கொண்டு இருந்த சுனில் “நீ யாரா இருந்தாலும் சரி. என் மம்மியை இப்படி பண்ணதுக்கு நான் உன்ன சும்மாவே விடமாட்டேன் டா. நீயா எல்லாத்தையும் பண்ணிட்டு கடைசில என் மம்மிய கஷ்டப்படுத்திட்ட இல்ல.. நீ சிம்பிளா சாரி கேட்டா எல்லாம் சரி ஆயிடுமா? I will make you pay for it.” என்று நினைத்தவன், தன் அப்பாவிடம் ஃபோன் வாங்கி தனது அசிஸ்டன்ட் ஒருவனுக்கு கால் செய்து “என்னோட மொபைல் ஃபோன் மிஸ் ஆயிடுச்சு. என் சிம் கார்டை பிளாக் பண்ணுங்க. அதே நம்பர்ல எனக்கு இன்னொரு சிம் அண்ட் நியூ மொபைல் இன்னைக்கி நைட்டுக்குள்ள கிடைக்கணும். நம்ம ஆளுங்கள இந்தியா வர சொல்லு. நமக்கு ஒரு இம்பார்டன்ட் ஒர்க் வந்துருச்சு.” என்று இறுக்கமான முகத்துடன் சொன்னான்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)