Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 145

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 145

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 145: என்னை கொஞ்சம் வாழ விடு (பார்ட் 2)


கௌத்தம்: “ஓ..!!! இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள அவரு உன்னோட ஹஸ்பண்டா…??? நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு. இப்படி இப்பவே காஸ்ட்லியா பிளாட்டினம், டைம்ன்ட்ன்னு எல்லாம் வந்து குடுக்கிறாரே நல்ல பணக்காரர் வேற… கல்யாணம் பண்ணிக்க போறோம்.. ஜாலியா இருக்கலாம்னு பணத்த பாத்து மயங்கிட்டியா ரித்திகா..??? ஆமா அந்த வருண்நாராயணனுக்கு முன்னாடி என்ன கம்பேர் பண்ணா, நான் எல்லாம் உனக்கு ச்சியா தான் தெரியுவேன்.” என்று நக்கலாக அவளை பார்த்து ஒரு விரக்தி புன்னகையுடன் சொன்னான். 😁😁 😁 

ரித்திகா: அவன் சொன்னதை கேட்டவளின் கோபம் தலைக்கு ஏறிவிட்டது. அதனால், “வாய மூடு கெளத்தம். என்ன பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை. என்ன பத்தி நான் உனக்கு ப்ரூவ் பண்ணனும்னு எந்த அவசியமே எனக்கில்ல. நான் யார வேணாலும், எதுக்காக வேணாலும், கல்யாணம் பண்ணிப்பேன் அத கேக்குறதுக்கு நீ யாரு…???” என்று உச்ச சுருதியில் கேட்டாள். 

கௌத்தம்: “ஆமா, நான் யாரோ தான். நீ என்னை லவ் பண்ணவே இல்லைன்னாலும், நீ நல்லா இருக்கணும்னு நினைக்கிறேனல்ல…!!!  நான் உனக்கு யாரோவா தான் தெரிவேன். இதோ இப்போ உன் கழுத்துல போட்டு இருக்காங்களே இந்த செயின்… இது என்ன சிம்பிள் ஆப் லவ்வுன்னு நெனச்சியா…??? 

நம்ப புதுசா ஆடு, நாய், பூனைன்னு எதயாவது வளக்கறதுக்கு வாங்கிட்டு வந்தா, அது நம்ம கால சுத்திகிட்டே கிடைக்கணும், வெளியில எங்கேயும் தனியா போய் தொலைஞ்சிட கூடாதுன்னு அது கழுத்துல கட்டுவாங்க . இப்ப அப்படித்தான் உன் கழுத்துல மணி கட்டி விட்டுருக்காங்க. இத எல்லாம் உன் மேல இருக்கிற பாசம், அக்கறைன்னு நம்பி ஏமாந்து நிக்காத டி. அவர் கூட இருந்தா, நீ ஒரு நாள் கூட நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியாது.

உனக்கு என்ன பிடிக்கலன்னா கூட பரவால்ல. உனக்கு புடிச்ச மாதிரி நீ வேற யார வேணாலும் கல்யாணம் பண்ணிக்கோ. ஆனா, அவர மட்டும் கல்யாணம் பண்ணிக்காத. ப்ளீஸ் உன் லைப்பே வீணா போயிடும் டி. சொன்னா புரிஞ்சுக்கோ.” என்று கண்ணீர் தேங்கிய கண்கள் உடன் சொன்னான். 🥺

ரித்திகா: அவன் என்ன சமாதானம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் அவள் இருக்கவில்லை. அதனால், “இங்க  பாரு… !! எனக்கு இந்த மாதிரி அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காத. நான் என்ன பண்றேன்னு எனக்கு தெரியும். என்னோட பர்சனல் லைஃப்ல நீ இன்டர்ஃப்பியூர் ஆகாத. நான் எடுத்த டெசிஷன் இது. இதனால எனக்கு என்ன நல்லது, கெட்டது, நடந்தாலும் அதுக்கு நான் மட்டும் தான் பொறுப்பு. இதுல மத்தவங்களோட கருத்தெல்லாம் எனக்கு தேவையில்லை.

அண்ட் அவர் என்னமோ பெரிய பூச்சாண்டி மாதிரியும், நான் அவர்கிட்ட போய் மாட்டிக்கிட்டு முழிக்க போற மாதிரியும் நீ பேசிகிட்டு இருக்க. ஆனா நான் இப்ப சொல்றத நல்லா கேட்டுக்கோ, உனக்கெல்லாம் அவரைப் பத்தி பேச கூட எந்த தகுதியும் இல்லை. அவர் உன்ன மாதிரி உள்ள ஒன்னு வச்சுக்கிட்டு வெளில ஒன்னு பேசுற ஆள் கிடையாது. இந்த மேரேஜ் லைப் எப்படி இருக்கும்னு முன்னாடியே என்கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லி இதுக்கு எனக்கு சம்மதம்மான்னு கேட்டுட்டு தான் அவரு புரோசிட் பண்ணாரு.” என்று ரித்திகா சொல்லிக் கொண்டு இருக்க அப்போது அவர்களுக்கு பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. 

அதனால் தன்னுடைய பேச்சை அப்படியே நிறுத்தியவள், “எங்களுக்குள்ள ஆயிரம் நடக்கும். இத பத்தி எல்லாம் நான் எதுக்கு உன்கிட்ட சொல்லணும்..??”  என்றவள், “ஸ்டே அவே ஃப்ரம் மீ.” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். அதற்கு பின் அங்கு மாணவர்கள் பல வர தொடங்கிவிட, சகஜமான ரித்திகா தன்னுடைய வேலையை பார்க்கத் தொடங்கி விட்டாள்.

ரவியின் வீட்டில்….

வெகு நாட்களாக அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்த ரவி, இப்போது தான் ஒரு வாரத்திற்கு முன் தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்தான். இப்போது தன்னுடைய மகனும் சம்பாதிக்க முடியாத நிலைமையில் இருப்பதால்,  அவனுடைய அம்மா 100 நாள் வேலைக்கு சென்று இருந்தாள். பள்ளிக்கு செல்லாமல் பர்மிஷன் கேட்டு விட்டு இங்கே ரவியை பார்க்க வந்திருந்தாள் வைஷாலி.

ஷாலினியின் வீட்டை விட ரவியின் வீடு மிகவும் மோசமான சூழ்நிலையில் அவள் வெறுக்கத்தக்க இருந்தது. அதனால் தன்னுடைய மனதில், “பாரு விஷ்ணு…!! உன்னால தேவை இல்லாம இந்த பொறுக்கி பயலே பாக்குறதுக்கு இந்த மாதிரியான ஒரு இடத்துக்கெல்லாம் நான் வர வேண்டியதா இருக்கு.” என்று நினைத்த வைஷாலி ரவியின் பெயரைச் சொல்லி அழைத்தபடியே அவனுடைய வீட்டிற்குள் சென்றாள். அவன் ஒரு மாதிரியான ஆள் என்பதால் இப்படி ஒரு இளம் பெண் அவனுடைய வீட்டிற்குள் அவனைத் தேடிக் கொண்டு செல்வதை வினோதமாக பார்த்தனர். 

வைஷாலியின் குரலை கேட்டு தூக்கத்தில் இருந்து கண் விழித்த ரவி, ஒரு இளம் பெண்ணின் குரல் கேட்டதால் ஒருவேளை அது ஷாலினியாக இருக்குமோ என்று நினைத்து மகிழ்ந்தான். 😍 என்ன தான் அவனுக்கு ஷாலினியின் மீது கோபம் இருந்தாலும், விஷ்ணு தான் அவளை மயக்கி தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக இதுவரை நினைத்துக் கொண்டு இருந்த ரவி; விஷ்ணுவை பழிவாங்கும் எண்ணத்திலும், ஷாலினியை இன்னும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தான்.

நேராக ரவியின் வீட்டிற்கு உள்ளே வந்த வைஷாலி, அவன் இருந்த இடத்தை தேடி கண்டுபிடித்தாள். வைஷாலியை கண்டவுடன் அவளுடைய அழகில் மயங்கிப்போன ரவி, “யாரு மா நீ..??? என்னை எதுக்கு பார்க்க வந்திருக்க.???” என்று நல்லவனை போல் அமைதியான குரலில் கேட்டான். 

வைஷாலி: “நீ ரவி தானே..!!! நான் உன்கிட்ட ஷாலினிய பத்தி பேசுறதுக்காக வந்து இருக்கேன்.” என்று அவனை ஒரு ஏளனமாக ஒரு பார்வை பார்த்து சொன்னாள். 👀

ரவி: “ஷாலினிய பத்தி பேசுறதுக்கா..!! அப்ப நீ அவளோட ஃப்ரெண்டா..???” என்று ஆச்சரியமான குரலில் கேட்டான். 

வைஷாலி: “நான் அவளுக்கு ஃபிரண்ட் இல்ல, எனிமி.”  என்றவள்; தான் யார் என்றும், விஷ்ணு யார் என்றும், தான் வந்ததன் நோக்கம் என்னவென்றும் அவனிடம் தெளிவாக சொன்னவள், “இங்க பாரு அந்த ஷாலினி அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு எல்லாரையும் நடிச்சு ஏமாத்துறா. என்னோட விஷ்ணு மாமாவுக்கு யார் மேலயும் சும்மா கோபப்பட கூட தெரியாது. அப்படியாப்பட்ட மனுஷன் இப்போ  உன்ன ஆள வச்சு இப்படி அடிச்சிருக்காருன்னா, அதுக்கு யார் காரணம்ன்னு நீ நினைக்கிற…??? பின்னாடி இருந்து எல்லா வேலையும் பாக்கிறது அந்த ஷாலினி தான்.

இப்படி தான் நான் சும்மா அவ வீட்டுக்கு போய் அவகிட்ட பேசினத பெரிய விஷயமா விஷ்ணு கிட்ட சொல்லி, என்னையும் அவனையும் பிரிச்சிட்டா. அவ ஒரு பணத்தாசை புடிச்ச பேய். விஷ்ணு கிட்ட இருக்கிற பணத்துக்கு ஆசைப்பட்டு தான் அவன் பின்னாடி இவ போய்ட்டா. அதுக்கு நடுவுல நீ இடைஞ்சலா இருப்பேன்னு அவன வெச்சே உன்னையும் இப்படி பண்ணிட்டா. ஆனா இப்ப பாரு அவளால பாதிக்கப்பட்ட நீயும் நானும் தான் இப்படி தனியா கஷ்டப்படுறோம். அவங்க ரெண்டு பேரும் நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ போறாங்க. இந்த ஷாலினி மாதிரி ஆள எல்லாம் சும்மாவே விட கூடாது. ஆனா எனக்கு அவளை என்ன பண்றதுன்னு தான் தெரியல.” என்று பாவமாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு சொல்லி அவனை ஏற்றி விட்டாள். 

ரவி “அவள் சொன்னதைக் கேட்டு கோபத்தில் தன்னுடைய கையை முறுக்கியவன், “அவங்க பண்ண வேலையால இப்ப என்னால குழந்தையே பெத்துக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. எங்க அக்கா அந்த ஆள கட்டினதுல இருந்தே, எனக்கு அந்த ஷாலினி மேல ஒரு கண்ணு இருந்துச்சு. அவ ரொம்ப நல்லவன்னு நினைச்சேன். அதான் இவ்ளோ நடந்தும் கூட இது எல்லாம் அவ பண்ணி இருக்க மாட்டா. அவளை கூட்டிட்டு போனவன் தான் பண்ணிருப்பான்னு நம்புனேன். 

ஆனா இப்ப தான் எனக்கு எல்லா உண்மையும் புரியுது. அவ எல்லாத்தையும் நல்லா திட்டம் போட்டு தான் பண்ணிருக்கா. அவ இப்படி பண்ணக் கூடியவன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல. எனக்கு வாழ்க்கையே இல்லாம பண்ணிட்டு அவ மட்டும் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழ கூடாது. அவள ஏதாவது பண்ணனும் மேடம். நீங்களே சொல்லுங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே கூடாது. அதுக்கு நான் என்ன பண்ணனும்…???” என்று உறுதியான குரலில் கேட்டான்.

வைஷாலி: அவனைப் பார்த்து வில்லத்தனமாக புன்னகைத்தவள், “நீ அவள கொல்லனும். அவ உயிரோடவே இருக்க கூடாது. அவ இருக்கிற வரைக்கும் விஷ்ணு என்னை திரும்பி கூட பாக்க மாட்டான்.” என்று உறுதியான குரலில் சொன்னாள். 😁 😁 😁

 அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் ரவி. அவனும் சிறிது சிறிதாக நிறைய ரவுடித்தனங்களை செய்பவன் தான் இருப்பினும் கொலை வரை அவன் என்றும் சென்றதில்லை. அதனால் அவனுக்கு பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது. 🙄

ரவி: என்ன மேடம் சொல்றீங்க..?? 

வைஷாலி: “ஏன் நான் சொன்னது உனக்கு புரியலையா..??? இல்ல இன்னும் அவ மேல உனக்கு ஏதாவது பாசம் இருக்கா..???” இன்று நக்கலாக அவனிடம் கேட்டாள். 

ரவி: சேச்சே..!! அப்படி எல்லாம் இல்லைங்க மேடம். என்ன இந்த நிலைமையில படுக்க வச்சிருக்கா அவ. எனக்கு எப்படி அவ மேல பாசம் வரும்..?? நான் இதுவரைக்கும் அந்த மாதிரி பெரிய சம்பவம் எல்லாம் பண்ணது இல்ல.. அதான் எப்படி பண்றதுன்னு கொஞ்சம் தயக்கமா இருக்கு. வேற ஒன்னும் இல்ல.

வைஷாலி: தன்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்து இரண்டு ஒரு லட்சம் ரூபாய் கட்டுகளை எடுத்து அவன் முன்னே போட்டவள், “நீ பண்ணனும்னா, அத நீயே செய்யணும்னு அவசியம் இல்ல. டெய்லியும்  அவ அவளோட பிரண்டு கூட தான் ஸ்கூட்டில வந்துட்டு போயிட்டு இருக்கா. அவளோட பிரண்டுக்கு என்னோட பெரிய மாமா கூட கல்யாணம் ஆகப்போகுது. அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னோட பெரிய மாமா சும்மா இருக்க மாட்டாரு.

அதனால முதல்ல அவங்களோட கல்யாணம் முடியட்டும். கல்யாணத்துக்கு அப்புறம் எப்படியும் அவங்கள இந்த மாதிரி ஸ்கூட்டில எல்லாம் அவரு அனுப்ப மாட்டாரு. அப்போ ஷாலினி ஸ்கூலுக்கு தனியா தானே வந்தாகணும்…!!!  அந்த டைம்ல நீ ஆள வச்சு அவளை ஆக்சிடென்ட்  பண்ணி போட்டு தள்ளிரு . பக்காவா பண்ணுனா நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வராது. இதுக்கு எத்தனை லட்சம் செலவானாலும் சரி, நீ எவ்வளவு கேட்டாலும் நான் குடுக்கிறதுக்கு ரெடியா இருக்கேன்.

ஆனா ஒரே அட்டம்ட்ல அவ சாகணும். உன்னோட ட்ரீட்மென்ட் செலவுக்கும் நான் தனியா காசு தரேன். நீ எவ்ளோ பெரிய ஹாஸ்பிடல் வேணும்னாலும்  ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ. உன்னோட லைஃபை செட்டில் பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு.” என்று அவனுக்கு உத்தரவாதம் கொடுக்க, அவளுடைய பேச்சில் ரவியின் மனம் கரைந்து விட; “தேங்க்ஸ் மேடம். நான் ஆள் எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்கிறேன். நீங்க எப்போ எங்கன்னு மட்டும் சொல்லுங்க. மத்தது எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.” என்று அவனும் உறுதியாக சொல்லிவிட, “நீங்கள் ஒரு வேளை மாட்டிக்கிட்டாலும் இதுல என்னோட பேரு எங்கும்  வரக்கூடாது.” என்று சொல்லி அவனை எச்சரித்துவிட்டு வைஷாலி அங்கிருந்து கிளம்பினாள்.

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured