Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 141

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 141

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 141: நீ என்னை விட்டுட்டு போக போறியா? (பார்ட் 2)


குழப்பமான முகத்துடன் தன் கையில் இருந்த கவரை பிரித்துப் பார்த்தான் சிவா. அதில் ஒரு வெட்டிங் கார்ட் இருந்தது. அதன் தலைப்பில் பிரசாந்த் வெட்ஸ் திவ்யா என்று எழுதி இருந்தது. இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் என்று அதில் தேதி அச்சிடப்பட்டு இருந்தது. அதில் இருந்தவற்றை பார்த்து கடுப்பான சிவா, “யாரு டி இந்த பிரசாந்த் பன்னாட..??? யார கேட்டு நீ இவன கல்யாணம் பண்ணிக்க போற..??? கல்யாண பத்திரிக்கையே ரெடி ஆயிடுச்சு அப்படின்னா, இத்தனை நாளா இவ்வளவு விஷயம் நடந்து இருக்கும் போது … நீ ஏன் என்கிட்ட இத பத்தி எதுவுமே சொல்லல..?? உன்னால எப்படி கண்டவன் முன்னாடி எல்லாம் போய் நீ தான் கல்யாண பொண்ணுன்னு நிக்க முடிஞ்சுது..???” என்று தன் கையில் இருந்த கல்யாண பத்திரிக்கையை கசக்கியபடி கோவமாக கேட்டான். 😡 🔥

திவ்யா: “போதும் வாய மூடு சிவா. என்னமோ எல்லாருமே என்ன கேட்டு தான் எல்லாத்தையும் செய்யுற மாதிரி, நீ எதுக்கு இப்ப என்கிட்ட வந்து எகிர்ற..??” என்று அவளும் கோபமாக கேட்டாள். 😒 😡 🔥

சிவா: “பின்ன, உனக்கே தெரியாம கல்யாணம் பேசி முடிவு பண்ணி; இப்ப கல்யாண பத்திரிக்கையை அடுச்சுட்டாங்கன்னு நீ கதை விட போறியா..???” என்று எரிசலாக அவளிடம் கத்தினான். 🗣️

திவ்யா: “நீ என்ன நெனச்சாலும், அது தான் உண்மை. என் வீட்ல ரொம்ப நாளாவே என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி போர்ஸ் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. நானும் இத்தன நாளா வேணா.. வேணான்னு சொல்லி… இந்த பேச்சை போஸ்ட் பான் பண்ணிக்கிட்டே இருந்தேன். 

அதனால அவங்களுக்கு நான் இங்க யாரையோ லவ் பண்றேன்னு டவுட் வந்துருச்சு. மேரேஜ் ஃபிக்ஸ் பண்றேன்னே என்கிட்ட சொன்னா, நான் எப்படியாவது அத பேசி கெடுத்து விட்டுருவேன்னு என்கிட்டே கூட சொல்லாம; அவங்களாவே பேசி இத கல்யாண வரைக்கும் கொண்டு போயிட்டு.. எனக்கே யாரோ மாதிரி இந்த இன்விடேஷன போஸ்ட்ல அனுப்பி வச்சிட்டு இன்னைக்கு கால் பண்ணி நாளைக்கு எங்கேஜ்மென்ட் உடனே கிளம்பி வான்னு சொல்றாங்க.

நானும் இந்த கல்யாணம் வேணாம்னு கெஞ்சி பாத்துட்டேன், மிரட்டியும் பாத்துட்டேன். நான் என்ன சொன்னாலும், அவங்க அத கேட்காம இப்ப கல்யாணத்தை நிறுத்துனா, குடும்பம் மானம் போயிடும்… சொந்த ககாரங்களுக்கு எல்லாம்   பத்திரிக்கை குடுத்தாச்சுன்னு சொல்லி என்ன பிளாக் மெயில் பண்றாங்க. இப்ப நான் என்ன பண்ணிட்டும் சிவா..???  நீயே சொல்லு..!!!! அவங்களுக்கு அவங்க பிரச்சனை… உனக்கு உன் பிரச்சனை… நடுவுல என்ன பத்தி யார் கவலைப்படுறா…???” என்று அழுது கொண்டே சிறு விசும்பல்களுடன் சொன்னாள். 😭 😭 😭

சிவா: “இப்ப நீ என்ன பண்ணலாம்னு இருக்க..??? உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு. நீ என்ன டிசைட் பண்ணாலும், நான் உனக்கு சப்போர்ட் பண்றேன். இந்த பன்னாடை எல்லாம் எனக்கு ஒரே மேட்டரே இல்ல. அவன் புடனியில 4 தட்டு தட்டி  அவன ஓட விட்டுறேன். நீ சொல்லு… நான் என்ன பண்ணட்டும்..???” என்று உறுதியான குரலில் கேட்டான். 

திவ்யா: அவனை எரித்துவிடும் பார்வை பார்த்தவள், “என்ன டா உனக்கு பிரச்சனை..?? இப்பயும் என்னவே சொல்ல சொல்லி கேட்டுட்டு இருக்க…??? ஏன் நீ வாய தொறந்து சொன்னா, உன் வாயில இருக்கிற முத்தெல்லாம் கொட்டி போயிருமா..??? இப்ப கூட நீ சொல்ல மாட்டியா..???  அட்லீஸ்ட் உனக்கு வேணாம்னா அதவாவது சொல்லு. என் தலையில அந்த பன்னாடையை தான் கட்டிக்கிட்டு வாழனும்னு எழுதி இருந்தா, அத யார் மாத்த முடியும்னுன்று…. நான் ஊருக்காவது கிளம்பி போறேன்.” என்று கடுப்பான குரலில் சொன்னாள். 😡 🔥

அப்போது தன் மனதில் இருந்தவற்றை அவளிடம் சொல்ல வந்த சிவா, திவ்யாவின் ஹாஸ்டலுக்குள் சென்று கொண்டு இருந்த பிரவீனை கவனித்தவன் அப்படியே தான் சொல்ல வந்த வார்த்தைகளை தனக்குள் விழுங்கியவன், “போச்சு…!! ஆராதனா மேடம் இங்க இல்லைன்னு பிரவீன் பரதேசி கண்டு பிடிச்சுட்டான் போல… நான் இதை உடனே போய் வருண் சார் சொல்லணும். சாரி திவ்யா நான் இப்ப அவர் கூட அங்கே இருந்தே ஆகணும். நான் அப்புறமா உனக்கு கால் பண்றேன். நீ கீழ இறங்கு. கொஞ்ச நேரம் இங்க வெளியே இருந்துட்டு பிரவீன் கெளம்புனதுக்கு அப்புறமா உள்ள போ. அப்புறம் நீயும் இங்க இருந்து கிளம்பி உங்க ஊருக்கு போயிரு. அதுதான் உனக்கு சேப்.” என்று அவசரமான குரலில் சொன்னவன் திவ்யாவின் பக்கம் இருந்த கதவை அவனே திறந்து அவளை வெளியில் செல்லும்படி சைகை செய்தான். 

திவ்யா: “இப்ப உனக்கு என்ன விட இந்த பிரச்சனை தான் முக்கியமா..??? அப்படியே என்னை விட்டுட்டு நீ பாட்டுக்கு போறேங்குற..??” என்று கோபமாக கேட்டாள். 😡

சிவா: “அதான் நான் உனக்கு கால் பண்றேன்னு சொல்றேன்ல டி.. அப்புறம் என்ன பிரச்சனை..??? மொதல்ல இங்க இருந்து கிளம்புற வழியை பாரு.” என்று அவசரமான குரலில் சொன்னவன் கார் டோரை சாத்திவிட்டு காரி ஸ்டார்ட் செய்தான். 

காரின் ஜன்னல்  திறந்த படி தான் இருந்தது. அதன் வழியாக சிவாவை பார்த்து கண்ணீர் நிறைந்த கண்களுடன், “நான் உன்ன லவ் பண்றேன்னு சொன்னா கூட, இப்ப நீ என்னை விட்டுட்டு போயிடுவியா..???” என்று விரக்தியான குரலில் கேட்டாள் திவ்யா. 😭 😭 😭

சிவா: “சாரி திவ்யா… எனக்கு இப்ப வருண் சார் தான் முக்கியம்.” என்றவன் அவளுடைய பதிலுக்காக கூட காத்திருக்காமல், தன்னுடைய காரை திருப்பிக் கொண்டு அங்கு இருந்து வேகமாக சென்றுவிட்டான். 

கண்ணீர் நிறைந்த கண்களுடன் சிவாவின் கார் தன்னுடைய கண்களில் இருந்து மறையும் வரை அந்த தார் சாலையையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள் திவ்யா. 😭 😭 😭

சித்தார்த்தின் பள்ளியில் இருந்து அவசரமாக கிளம்பி வெளியே வந்த வைஷாலி, ஒரு டிடெக்டிவ்வை வைத்து ஷாலினியின் குடும்பத்தினர் மற்றும் ரவி தங்கி இருக்கும் இடத்தின் அட்ரஸை  கண்டுபிடித்தாள். லாவண்யா சொன்னதன் படி ஷாலினியின் அப்பா மற்றும் சித்திக்கு அவளை பிடிக்காது என்பதால், முதலில் அவர்களை வைத்து விஷ்ணுவிடம் இருந்து ஷாலினியை பிரிக்க நினைத்தவள், ஷாலினியின் பழைய வீட்டிற்க்கு சென்றாள். 

அதிகாரமாக அவர்களுடைய வீட்டிற்குள் நுழைந்த வைஷாலி; சோபாவில் அமர்ந்து கொண்டு அங்கு இருந்த மாலதியிடமும், சசியிடமும், தான் வந்த காரணத்தை தெளிவாக விவரித்தவள், விஷ்ணு யார் என்ற உண்மையையும் அவர்களிடம் சொன்னாள். ஒரு பக்கம் விஷ்ணுவின் உண்மையான அடையாளத்தை பற்றி அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்த ஷாலினியின் பெற்றோர்கள், இன்னொரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தனர். 😍  அதனால் அதைக் கேள்விப்பட்ட அடுத்த நொடியே நாராயணன் பேலஸில் தாங்கள் மகாராஜா ராணியை போல் வாழ்ந்தால், எப்படி இருக்கும்..?? என்று நினைத்து பகல் கனவு காண தொடங்கிவிட்டனர். 

அவர்களை கூர்மையான கண்களுடன் பார்த்த வைஷாலி, “இங்க பாருங்க… நான் சுத்தி வளச்சி எல்லாம் பேச விரும்பல. உங்க வீட்டு பொண்ண எப்படியாவது என் மாமா கூட இருந்து பிரிச்சு விடுங்க. இத நீங்க எனக்காக செஞ்சீங்கன்னா, நீங்க எவ்ளோ காசு கேட்டாலும் அதை நான் உங்களுக்கு குடுக்குறதுக்கு ரெடியா இருக்கேன்.” என்று சொல்ல… அவள் பேசியதை கேட்டு சிரித்த மாலதி, “இந்தமா பொண்ணே…!!! என்ன எங்களை இப்படி எல்லாம் ஆசை காட்டி ஏமாத்த பாக்குறியா..??? என்ன இப்ப நாங்க கேட்டா பிச்சை காசு ஒரு பத்து, பதினைந்து, லட்சம் குடுப்பியா…?? இல்ல அதிகபட்சம் உன்னால ஒரு ஒரு கோடி கொடுக்க முடியுமா.??? 

எங்களுக்கு அவ்ளோ காசு வேணும்னா அத நாங்க எங்க மாப்பிள்ளை கிட்ட கேட்டாலே அவரே குடுத்திட்டுபோக போறாரு…!!! நாங்க கேட்காமயே எங்களுக்கு லட்சம் லட்சமா குடுத்த தர்ம பிரபு அவரு. ராசா மாதிரி இருக்கிற அந்த பையனுக்கு எங்க வீட்டு பொண்ண கட்டி குடுக்குறதுக்கு எங்களுக்கு ஏன் கசக்க போகுது…?? என்ன இருந்தாலும், அவள் இந்த வீட்டு பொண்ணு.  நாளைக்கு எங்களுக்கு ஒன்னுனா அவ வந்து நீப்பா. அவள நம்புறத விட்டுட்டு உன்ன நம்ப சொல்றியா..??? 

விஷ்ணு தம்பி தான் எங்க வீட்டு மாப்பிள்ளைனு நாங்க எப்பவோ முடிவு பண்ணிட்டோம். நாங்களே எங்க ஷாலினி எங்க இருக்கான்னு தெரிஞ்சா அவளை சமாதானப்படுத்தி திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு தான் அவளை தெரு.. தெருவா… தேடிக்கிட்டு இருக்கோம். நல்ல வேளை இப்ப அவ எங்க இருக்கான்னு நீயே வந்து சொல்லி எங்களுக்கு உதவி பண்ணி இருக்க. அதுக்காக உன்ன சும்மா விடுறேன். மரியாதையா என் வீட்டை விட்டு வெளியே போ.” என்று கடுப்பான குரலில் சொன்னாள். 😒 

அந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத வைஷாலி, “நீங்க நினைக்கிறது எல்லாமே வெறும் கனவா மட்டும் தான் இருக்கும். என்ன நடந்தாலும் நான் விஷ்ணுவையும், ஷாலினியையும், ஒன்னு சேர விடமாட்டேன். நான் யாருன்னு தெரிஞ்சும் என்னவே நீங்க அசிங்கப்படுத்திட்டீங்கள்ல… உங்களையும், அவளையும், சும்மா விடமாட்டேன். நான் யாருன்னு உங்களுக்கு காட்டுறேன்.” என்று கோபமாக சொன்னவள் அந்த வீட்டில் இருந்து வெளியே சென்றாள். 😒 😡 🔥

மாலதி: “எதுவா இருந்தாலும் வெளில போய் காட்டிக்கோ டி. என் வீட்டுக்குள்ள வந்து என்னையவே மிரட்டிட்டு இருக்கா. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ. என் பொண்ணுக்கும்  மாப்பிள்ளைக்கும், நானே முன்னாடி இருந்து கல்யாணம் பண்ணி வைப்பேன்.” என்று அவளும் பதிலுக்கு வீராப்பாக சவால் விட்டாள். 

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured