அத்தியாயம் 139: சதி திட்டம் (பார்ட் 2)
ஒரு ரெஸ்டாரன்ட்டில்….
மதனும், வைசாலியும், ஒரு டேபிளில் எதிரெதிரே அமர்ந்து இருந்தனர். மதனை பார்த்து முறைத்த வைஷாலி, “அவன் உன்னோட பிரண்டு தானே…!!! இதெல்லாம் தேவை இல்லாத வேலை.. அவ அவனுக்கு சரிப்பட்டு வரமாட்டான்னு நீ அவனுக்கு சொல்லி புரிய வைக்க மாட்டியா..???” என்று காட்டமாக அவனைப் பார்த்து கேட்டாள். 😒 🤨
மதன்: “அவன் கிட்ட போய் என்ன… என்ன டி சொல்ல சொல்ற…???? அவன் தெளிவா தான் இருக்கான். நீ தான் பைத்தியம் மாதிரி பண்ணிட்டு இருக்க. அவனுக்கு தான் உன் மேல இன்ட்ரஸ்ட் இல்லேன்னு தெரியுதுல்ல…!!! அப்புறம் ஏன் அவன் பின்னாடி சுத்தி நீ டைம் வேஸ்ட் பண்ற..???
நீ அவனை லவ் பண்ற மாதிரி எங்கயோ யாரோ உன்னையையும் ட்ரூவா லவ் பண்ணிட்டு இருக்கலாம். அப்படி ஒருத்தன் வந்து உன்கிட்ட சரியான டைம்ல உன்கிட்ட ப்ரொபோஸ் கூட பண்ணுவான். அப்ப அவனுக்கு ஓகே சொல்லி, அவன் கூட வாழ்ற வழியை பாரு.” என்று ஒரு உள் அர்த்தத்துடன் சொன்னான்.
வைஷாலி: “என்ன ஊருல இருக்குறவன் எல்லாரும் நீ லவ் பண்றவங்களை விட உன்ன லவ் பண்றவங்கள கல்யாணம் பண்ணிக்கோ அப்ப தான் உன் லைஃப் நல்லா இருக்கும்னு பூமர் மாதிரி பேசுவாங்களே அதே டயலாக்கை நீ என்கிட்ட வேற மாதிரி சொல்றியா..???
இன்னொரு தடவை என் கிட்ட விஷ்ணுவ மறந்துரு, கிறந்துருன்னு சொன்னேன்னு வையேன்… பிரண்டுன்னு கூட பாக்க மாட்டேன். இந்த காபியை தூக்கி அப்படியே உன் மூஞ்சில ஊத்திருவேன்.” என்றவள், சூடாக இருந்த அந்த காபி கப்பை எடுத்து மதனின் முன்னே ஆட்ட அதிலிருந்து சில காபி துளிகள் டேபிளில் ஊற்றியது.
மதன்: வைஷாலியின் குணத்தை பற்றி ஏற்கனவே நன்கு அறிந்து வைத்து இருந்தவன் அவளை நிதானத்துடன் பொறுமையாக கையாண்டான். “ஹே கூல் யா. இப்ப எதுக்கு அடுப்புல வச்ச பால் மாதிரி இவ்ளோ பொங்குற நீ..?? உன்னோடது ஒன் சைடு லவ். இப்ப விஷ்ணுவும், ஷாலினியும், லவ் பண்றாங்க. உண்மைகள் இந்த காபி மாதிரி கசக்க தான் செய்யும். ஆனா நீ அதுல கொஞ்சம் சுகர ஆட் பண்றேன்னு வையேன், குடிக்கிறதுக்கு சும்மா கின்னுன்னு இருக்கும். சோ நீ அவன பத்தி யோசிச்சு உன்ன நீயே ஹர்ட் பண்ணிக்கிறதை விட, இந்த உலகத்துல உனக்குன்னு கியூட்டான, ஹன்ட்சமான, ஸ்வீட்டான, என்ன மாதிரி பையன் எங்கேயாவது பொறந்து இருப்பான்.
அவனா உன்ன தேடி வரும்போது நீ அவனை அக்செப்ட் பண்ணிக்கிட்டு கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகுற வழியை பாரு. அத விட்டுட்டு நீ சும்மா இப்டி டென்ஷன் ஆயிட்டே இருந்தனா, பி.பி. வந்து தான் சாவ.” என்று சிறு புன்னகையுடன் சொன்னான். 😁 😁 😁
வைஷாலி: அவன் சொன்னதை கேட்டு கடுப்பானவள், “நீ எல்லாம் ஒரு ஆளுன்னு… நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு நம்பி, உன்னை பாக்கிறதுக்கு இங்கே வந்தேன் பாத்தியா.. என்ன நானே செருப்பால அடிச்சுக்கணும்.” என்று கோபமாக சொன்னவள் தன்னுடைய ஹேண்ட் பேக்கைை எடுத்து கொண்டு அவளுடைய கார் ஐ ஸ்டார்ட் செய்து சித்தார்த்தின் பள்ளிக்கு வந்தாள்.
சித்தார்த்தின் பள்ளியில்…
இப்போது தான் உணவு இடைவேளை முடிந்து இருந்ததால் அனைத்து மாணவ, மாணவியர்களும், தங்களுடைய வகுப்பறைக்கு சென்று கொண்டு இருந்தனர். லாவண்யாவிற்கு இன்று லஞ்ச் டியூட்டி போட்டு இருந்ததால், அவள் கிரவுண்டில் சுற்றி கொண்டு இருந்தாள். ரித்திகா, வைஷாலி, ஷாலினி விஷ்ணு, என யாரும் இன்று பள்ளிக்கு வராததால் அவளுக்கு மிகவும் போர் அடித்தது. இப்போது தான் ஸ்டாப் ரூமிற்கு சென்றாலும் அங்கே தன்னுடன் அமர்ந்து சாப்பிட யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்த லாவண்யா, தன்னுடைய லஞ்ச் பாக்ஸை எடுத்து கொண்டு கிரவுண்டில் இருந்த ஒரு மரத்தின் அடியில் வந்து அமர்ந்தாள். அப்போது ரெஸ்ட்ரூம் -க்கு சென்று தன்னுடைய ஸ்போர்ட்ஸ் வியரை அணிந்து கொண்டு கிரவுண்டிற்கு வந்த வைஷாலி, யாரும் இல்லாத அந்த விசாலமான கிரவுண்டில் வாலிபால் விளையாடும் இடத்தில் கையில் ஒரு பாலுடன் சென்று விளையாட தொடங்கினாள்.
இது தான் வைஷாலியின் குணம். ஸ்போர்ட்ஸ் தான் அவளுடைய மொழி, காதல், விருப்பம் அனைத்துமே. அதனால் அவள் எப்போதும் சோகமாக இருந்தாலும் சரி, வருத்தமாக இருந்தாலும் சரி, தன் மனதில் இருக்கும் அனைத்து பாரங்களும் இறங்கும் வரை இப்படித்தான் பேய் பிடித்தவளை போல் ஏதாவது ஒரு விளையாட்டை தனியாக வெகு நேரமாக மீண்டும் மீண்டும் விளையாடிக் கொண்டு இருப்பாள். தன் கையில் இருந்த பந்தை ஷாலினி என்று நினைத்துக் கொண்ட வைஷாலி அதை வெறித்தனமாக தரையில் தட்டி விளையாடியவள், அவளை தன்னுடைய வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று நினைத்து கூடையில் தூக்கில் தூக்கி எறிந்தாள். 🏀 🏃♀️🤾♀️ அப்போது பீட்டிடுமின் ஒரு பால் குறைவதை கவனித்த மகேஷ், ஒரு வேளை கிரவுண்டில் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக அங்கே வந்தான். அப்போது அவனுடைய கண்களில் வெறித்தனமாக வாலிபால் விளையாடிக் கொண்டு இருந்த வைஷாலி பட்டுவிட, அவள் இன்று பள்ளிக்கு வரவில்லை என்பதால் அதுவரை சோகமாக இருந்த மகேஷின் கண்கள் அவளை பார்த்தவுடன் பிரகாசித்தன. 😍 👀
ஆசையாய் அவள் அருகே சென்ற மகேஷ், “ஒய்… வைஷு வாட் எ பிளசென்ட் சப்ரைஸ்..?? இன்னைக்கு நீ வர மாட்டேன்னு சொன்ன அப்புறம் என்ன திடீர்னு வந்துருக்க..???” என்று உற்சாகமான குரலில் கேட்டான்.
வைஷாலி: “ஏன் நான் இங்க வரணும்னா உன்கிட்ட பர்மிஷன் கேட்டு தான் வரணுமா..???” என்று கோபமாக கேட்டாள். 😒 ஆனால் அப்போதும் அவள் விளையாடுவதை நிறுத்தவில்லை.
மகேஷ்: “ஐயோ வைஷு.. நான் உன்ன பாத்த எக்ஸைட்மெண்ட்ல ஹேப்பி ஆ தான் கேட்டேன். அதுக்கு ஏன் இப்படி கோச்சிக்கிற..??” என்று பாவமாக தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான். 😔
வைஷாலி: யப்பா… மகி ப்ளீஸ்…!!! நானே கொஞ்ச நேரம் இங்க வந்து இருந்தாலாவது நிம்மதியா இருக்கும்னு தான் இங்க வந்தேன். என்ன கொஞ்ச நேரம் தனியா விடு. இங்க நின்னு நீயும் ஏதாச்சு என்கிட்ட சொல்லிட்டே இருந்தா, கடுப்பாகி இங்க இருந்து கிளம்பி வேற எங்கயாச்சும் போயிடுவேன்.” என்று எரிச்சலான குரலில் சொன்னவள் மீண்டும் விளையாட தொடங்கினாள். 😒
மகேஷ்: அவளுக்கு ஏதோ பிரச்சனை போல என்று நினைத்து வருத்தப்பட்டவன், இப்போது தான் அதைப்பற்றி கேட்டு அவளுக்கு ஆறுதல் சொல்ல நினைத்தாலும், கண்டிப்பாக தன்னுடைய பிரச்சனையைப் பற்றி அவள் தன்னிடம் பகிர்ந்து கொள்ள போவதில்லை என்று நினைத்தவன்; குறைந்தபட்சம் அவளை தொந்தரவு செய்யாமல் ஆவது இருக்கலாம் என்று நினைத்து அங்கு இருந்து சென்றுிட்டான்.
அவர்கள் இருவரின் சம்பாசனைகளை சற்று தொலைவில் இருந்து தெளிவாக கேட்டுக் கொண்டு இருந்த லாவண்யா, வேகவேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டு வைஷாலியின் அருகே சென்றாள். லாவண்யா தன் அங்கே வந்ததை ஓர கண்ணால் கவனித்த வைஷாலி, அவளை கண்டுகொள்ளாமல் அவள்பாட்டிற்கு விளையாடிக் கொண்டு இருந்தாள். தன்னை புறக்கணிக்கிறாள் என்று புரிந்து கொண்டு தானாக விலகி செல்வதற்கு இவள் என்ன மகேஷா…??? இவள் தான் நம்முடைய லாவண்யாவாயிற்றே, அதனால் வலிய தானே சென்று வைஷாலியிடம் பேச்சு கொடுத்தாள்.
லாவண்யா: “என்ன சிஸ்டர் மூட் ஆஃப்ல இருக்கீங்க போல…!!!” என்று நக்கலாக கேட்டாள்.
வைஷாலி: அதான் தெரியுதுல்ல… அப்புறம் அத வேற ஏன் என்கிட்ட வந்து கேக்குற..???
லாவண்யா: எல்லாம் உங்க மேல இருக்கிற அக்கறைல தான் கேட்கிறேன்.
வைஷாலி: “ஓ..!!! அப்ப நான் என்ன பிரச்சனைன்னு சொன்னா, அத நீ உடனே சால்வ் பண்ணிடுவியா..??” என்று கலாய்க்கும் தோரணையில் கேட்டாள். 😂 😂 😂
லாவண்யா: “யாருக்கு தெரியும்..?? என்னால அத சரி பண்ண கூட முடியலாம். நீங்க முதல்ல என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க. அப்புறம் என்னால என்ன பண்ண முடியுமோ நான் அது எல்லாத்தையும் உங்களுக்காக பண்றேன்.” என்று உறுதியான குரலில் சொன்னாள்.
வைஷாலி: சில நொடிகள் இவளை வைத்து தனக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா..?? என்று யோசித்து பார்த்தவளுக்கு ஏதோ ஞாபகம் வர அவளை பளிச்சிடும் கண்களுடன் பார்த்தவள், “நீ எனக்கு பெருசா எதுவும் செய்ய தேவையில்லை. எனக்கு ஒருத்தர பத்தின டீடெயில்ஸ் வேணும். நான் கேட்டா நீ அவங்கள பத்தி சொல்லுவியா..???” என்று புதிர் போட்டாள்.
லாவண்யா: “கேளுங்க, நீங்க யாரை பத்தி கேட்டாலும் அவங்கள பத்தி எனக்கு என்னென்ன தெரியுமோ அது எல்லாத்தையும் சொல்றேன்.” என்று ஒரு விஷம புன்னகையுடன் சொன்னாள். 😁 😁 😁
வைஷாலி: “எனக்கு ஷாலினியை பத்தி எல்லாமே தெரியணும். அப்படி என்ன விட அவகிட்ட என்ன பெட்டரா இருக்குன்னு விஷ்ணு அவ பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும். ப்ளீஸ் எதையும் மறைக்காம சொல்லு.” என்று மென்மையான குரலில் கேட்டாள்.
அவளுடைய கேள்வியின் அர்த்தத்தை நன்கு புரிந்து கொண்ட லாவண்யா, ஷாலினியை பற்றி தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒன்று விடாமல் வைஷாலியிடம் ஒப்பித்தாள். இதில் அவள் ஷாலினியின் குடும்பத்தை பற்றியும், ரவி அவளுக்கு கொடுத்த தொந்தரவு பற்றியும், அவள் குறிப்பிட மறக்கவில்லை. அவள் சொன்னது அனைத்தையும் தெளிவாக தன்னுடைய மனதில் பதிய வைத்துக் கொண்டாள் வைஷாலி. இப்போது அவள் ஷாலினியை தன்னுடைய வழியில் இருந்து அகற்றுவதற்கான ஒரு வழியை கண்டுபிடித்துவிட்டதன் அறிகுறியாக அவளுடைய முகத்தில் ஒரு வெற்றி புன்னகை தோன்றியது. 😁 😁 😁
அவளுடைய முகத்தில் புதிதாக தோன்றியுள்ள இந்த புன்னகையை பார்த்த உடனே தான் எந்த நோக்கத்தில் அதை அவளிடம் சொன்னோமோ, அந்த நோக்கம் சரியாகநடந்து முடிந்து விட்டது என்று நினைத்து லாவண்யாவும் தனக்குள் புன்னகைத்து கொண்டாள். 😁 😁 😁 அப்போது அந்த பீரியட் முடிவதன் அறிகுறியாக மணி ஒலிக்க, வைஷாலி இடம் விடை பெற்றுக்கொண்டு தான் செல்ல வேண்டிய வகுப்பிற்கு சென்றுவிட்டாள் லாவண்யா. அவள் அங்கு இருந்து சென்றவுடன் கொடுரமாக புன்னகைத்த வைஷாலி, “ஷாலினி இந்த தடவை நான் என்னோட கைய கொஞ்சம் கூட அழுக்காக்கிக்காம உன்ன என்னோட வழியில இருந்து ஈசியா தூக்கி எறிய போறேன். இந்த தடவ ஒன்ஸ் நீ போயிட்டனா, நீயே நினைச்சாலும் உன்னால திரும்பி வர முடியாது. அந்த அளவுக்கு நான் உன்ன தூரமா அனுப்பி வைக்கப் போறேன். பாய் பாய் ஷாலினி. உன்னோட சாப்டர் சீக்கிரம் முடிய போது.” என்று தனக்கு சொல்லிக் கொண்டாள். 😁 😁 😁
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)