அத்தியாயம் 83
“இன்னைக்கு உன்ன கொல்லாம விடமாட்டேண்டி.” அப்படின்னு சொல்லிட்டே விஷ்வா அவ மேல பாய்ஞ்சான். உடனே மேகா வேணும்னே விஷ்வாவோட முகத்துக்கு பக்கத்துல தன் முகத்தை கொண்டு போய் இரும்புற மாதிரி ஆக்ட் குடுக்க, “ஏய் சும்மா இருடி. இப்பதான் பீவர் சரியாகி நான் நார்மலா இருக்கேன். மறுபடியும் எனக்கு ஒட்ட வச்சுட்டு போயிடாத. நீ ரொம்ப டேஞ்சரான வைரஸ்டி. இத்தனூண்டு இருந்துட்டு என்னென்ன வேலை பாக்குற..!!” அப்படின்னு சொல்லிட்டே விஷ்வா அவளை அப்படியே தூக்கி குனிய வச்சு விளையாட்டா அவ முதுகுல குத்தினான்.
“ஆஆஆ.. வலிக்குது என்னை விடுங்க…!!” அப்படின்னு கத்துன மேகா, அவன் வயித்துல ஏதோ ஜல்லிக்கட்டு காளை மாதிரி முட்டிட்டு இருந்தா. “ஓஹோ, இந்த குட்டி தலைய வச்சுட்டே என்னை அட்டாக் பண்ண பாக்குறியா?? இதே மாதிரி நானும் பண்ணவா?? வா, யார் தலை பெருசுன்னு பாக்கலாம்.” அப்படின்னு விஷ்வா அவ முடியை பிடிச்சு இழுக்க, அவ தலையில இருந்த ரப்பர் பேண்ட் அவன் கையோட வந்துடுச்சு. மேகா இப்போ தலைவிரி கோலமா நின்னா.
“எதுக்கு என் ஹேர் பேண்டை பிச்சீங்க??” அப்படின்னு கேட்டவ தன் தலையை இடவலமா ஆட்ட, அவளோட நீளமான கூந்தலும் சேர்ந்து ஆடுச்சு.
“ஏய், பாக்குறதுக்கு அப்படியே மோகினி பிசாசு மாதிரியே இருக்கடி!! இல்ல இல்ல, நீ குட்டி பிசாசு.” அப்படின்னு கிண்டல் பண்ண விஷ்வா, “குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே..!!” அப்படின்னு பாடி அவளை வெறுப்பேத்துனான். “நான் உங்களுக்கு குட்டி பிசாசா?? இருங்க கோஸ்ட் அட்டாக்னா எப்படி இருக்கும்னு காட்டுறேன்.” அப்படின்னு சொன்ன மேகா, பேய் பிடிச்ச மாதிரி தலையை சுத்த, அவ பண்றது எல்லாம் விஷ்வா கண்ணுக்கு க்யூட்டா தெரிஞ்சுது.
“வாடி வாடி வெள்ளை பிசாசு இங்க வா. உன்னை அடக்க வந்த சாமியார் நான் தான். வா.. வா.. நீயா நானான்னு ஒரு கை பாத்துடலாம்.” அப்படின்னு சொல்லிட்டு விஷ்வா அவளோட ஒரு மினி வாருக்கு ரெடியானான்.
மேகா வேகமா ஓடி வர, அவளை பிடிக்க விஷ்வாவும் வேகமா ஓடுனான்.
அதுல விஷ்வா மேல மோதி மேகா கீழ விழுந்துட, “ஹிஹிஹி”னு வாய்விட்டு சிரிச்ச விஷ்வா, “பாத்தியா?? இதுக்குதான் புருஷன் பேச்சை கேட்டு அடக்க ஒடுக்கமா இருக்கணும்.” அப்படின்னு சொல்லிட்டு அவளை எழுப்பி விட போனான். அப்போ அங்க இருந்த மேட் தடுக்கி அவனும் கீழ விழுந்துட்டான். இதை பார்த்ததும் கைதட்டி சிரிச்ச மேகா, “பாத்தீங்களா?? இதுக்குதான் எப்பவும் பொண்டாட்டியை டாமினேட் பண்ணனும்னு நினைக்கக் கூடாது. கடவுள் இருக்கார் விஷ்வா மாமா. கரெக்டான டைம்ல உடனே ஆப்பு அடிச்சிட்டார் பாருங்க!!” அப்படின்னா.
“இருடி வரேன்.” அப்படின்னு விஷ்வா அப்படியே நகர்ந்து அவ பக்கத்துல போக, மேகா ரெண்டு அடி பின்னாடி போனா. அப்படியே ஒருத்தரை ஒருத்தர் சண்டை போட்டு கட்டிப்பிடிச்சுட்டு தரையில உருண்டு பிரண்டு விளையாடிட்டு இருந்தாங்க.
அவங்க ரூமுக்கு வெளிய கதவையே பாத்துட்டு தயாளன், அரவிந்த், மகேஷ் மூணு பேரும் நின்னுட்டு இருந்தாங்க.
“என்னடா உள்ள இருந்து வெரைட்டி வெரைட்டியா சத்தம் வருது!! ஒருவேளை நம்ம பாஸ்க்கு பேய் பிடிச்சிருக்குமோ??” அப்படின்னு அரவிந்த் கேட்க, “டேய், அதுக்கு கூட அவரை பிடிக்காதுடா. மனுஷனா அவரு?? நம்ம பாஸ் பேய்க்கே பயம் காட்டுற ஆளு.” அப்படின்னு கிண்டலா சொன்னான் மகேஷ்.
“டேய் அவருக்கு இன்னைக்குதானேடா கல்யாணம் ஆச்சு.. அதான் மனுஷன் ஃபர்ஸ்ட் நைட்ல புகுந்து விளையாடுறாருன்னு நினைக்கிறேன். நம்ம பாஸ் தான் எல்லாத்துலயும் தீயா இருப்பாரே.. அந்த ஃபயருக்கு இந்த எபெக்ட் கூட இருக்காதா??” அப்படின்னு பேசிட்டு இருந்த தயாளன், வசந்தி வர்றதை பார்த்துட்டு வாயை மூடிக்கிட்டான்.
அவன் சொன்னதுக்கு அரவிந்த் ஏதோ கவுண்டர் கொடுக்க வர, அதுக்குள்ள “வாங்க அக்கா..!!” அப்படின்னு தயாளன் சத்தமா கூப்பிடவும் மத்த ரெண்டு பேரும் திரும்பி பார்த்தாங்க. “ஏன் தம்பி இங்க கதவுக்கு வெளிய நிக்கிறீங்க?? உள்ள போறதுனா போக வேண்டியதுதானே??” அப்படின்னு வசந்தி கேட்க, “நாங்க உள்ள போனா எங்க உயிர் மேல போயிடுமே அக்கா..!!” அப்படின்னு விஷ்வா மேல இருந்த பயத்துல மகேஷ் டக்குன்னு சொல்லிட்டான்.
“என்னது உயிர் போயிடுமா?? ஏன் என்னாச்சு ஏதாவது பிரச்சனையா??” அப்படின்னு புரியாம வசந்தி கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்லங்க, அவன் ஒரு லூசு. ஏதாவது உளறுவான், நீங்க கண்டுக்காதீங்க.” அப்படின்னான் தயாளன்.
“என்ன இந்த நேரத்துல இங்க வந்துருக்கீங்க??”னு மகேஷ் கேட்க, “அது ஒன்னும் இல்லப்பா, நம்ம குடும்ப வழக்கப்படி கல்யாணம் ஆனவங்களுக்கு தோட்டத்து வீட்டுல தான் முதல் ராத்திரி நடக்கும். அதுக்கான ஏற்பாடு எல்லாம் அங்க பண்ணியாச்சு. ஆனா பிள்ளைங்ககிட்ட சொல்ல மறந்துட்டோம். அதுக்குள்ள அவங்க அவசரப்பட்டுட கூடாதுல.. அதான் ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாம்னு வந்தேன். 10 மணிக்கு மேலதான் நல்ல நேரம், அதுவரை அவங்களை சேர விடக்கூடாதுன்னு ஜோசியர் சொல்லிருக்காரு.” அப்படின்னு வசந்தி சொல்ல, மூணு பேரும் ஷாக் ஆகி நின்னாங்க.
விஷ்வா ரூம்குள்ள இருந்து அப்போ “லகலகலக”னு சந்திரமுகி படத்துல வர்ற மாதிரி சிரிப்பு சத்தம் கேட்டுச்சு. சந்தேகமா வசந்தி அந்த அறையை பாக்க, “நீங்க கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன் அக்கா.” அப்படின்னு தயாளன் சொன்னான். உடனே பதறின வசந்தி, “அய்யய்யோ, தப்பான நேரத்துல ஒன்னு சேர்ந்து மறுபடியும் அவங்க வாழ்க்கையில ஏதாவது தப்பா நடந்துட போகுது.” அப்படின்னு சொல்லிட்டு, “மேகா.. மேகா.. கதவை திறடி!!”னு கத்துனா.
விஷ்வாவோட தரையில உருண்டு விளையாடிட்டு இருந்த மேகா, “அண்ணி கூப்பிடுறாங்க என்னை விடுங்க!!”னு விஷ்வாவை தள்ளிவிட்டுட்டு போய் கதவைத் திறந்தா.
ஆனா தான் எப்படி இருக்கோம்னு அவ கவனிக்கும்ல.. தலைமுடி எல்லாம் கலைஞ்சு, டிரஸ் எல்லாம் கசங்கி இருக்கவும், வசந்தி எதை நினைக்கக் கூடாதுன்னு நினைச்சாளோ அது நடந்துடுச்சுன்னு முடிவு பண்ணிட்டா. தலையில கை வச்சுட்டு, “அய்யோ, நான் என்ன நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது நடந்துடுச்சே!!” அப்படின்னு அழ ஆரம்பிச்சிட்டா.
தன் முடியை அள்ளி முடிஞ்சுட்டு, “என்னாச்சு அண்ணி எதுக்கு அழறீங்க?? நீங்க என்ன நினைச்சீங்க?? இங்க என்ன நடந்துச்சு??” அப்படின்னு மேகா புரியாம கேட்டா. “அவங்க எதுவும் நடக்கக் கூடாதுன்னு நினைச்சாங்கமா, ஆனா எல்லாம் நடந்துடுச்சுன்னு ஃபீல் பண்றாங்க.” அப்படின்னான் தயாளன்.
“இப்ப என்ன நடந்துச்சுன்னு சொல்றீங்க?? எனக்கு ஒன்னும் புரியல. நானே இவ்வளவு நேரமா அவர் கூட சண்டை போட்டு அடி வாங்கி டயர்டா இருக்கேன். நீங்க ஏன் என்னை இன்னும் டயர்ட் ஆக்குறீங்க??”னு மேகா சலிப்பா கேட்க, “அப்போ ஒன்னும் நடக்கலையா??” அப்படின்னு தயாளன் ஷாக்கா கேட்டான்.
“என்ன கேக்குறீங்க?? நாங்க சும்மா விளையாடிட்டு தான் இருந்தோம்!! வேற என்ன நடக்கணும்??” அப்படின்னு மேகா அப்பாவியா கேட்க, “போச்சே போச்சே”னு அழுதுட்டு இருந்த வசந்தி உடனே சிரிச்சிட்டா. “இப்பதான் எனக்கு உசுரே வந்தது. உனக்கும் விஷ்வா தம்பிக்கும் தோட்டத்து வீட்டுல முதலிரவு ஏற்பாடு பண்ணிருக்கு. பத்து மணிக்கு மேலதான் டைம் நல்லா இருக்கு. அதுக்குள்ள எதுவும் தப்பா நடந்திட கூடாதுன்னு தான் சொல்ல வந்தேன். எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்.” அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா.
அவங்க முதலிரவை பத்தி ஓப்பனா பேசின அப்புறம்தான் மேகாவுக்கு விஷயம் புரிஞ்சது.
வெட்கத்துல என்ன பண்றதுன்னு தெரியாம டக்குன்னு கதவை சாத்துனா மேகா. இதையெல்லாம் பார்த்த விஷ்வா கலகலன்னு சிரிக்க, மேகாவுக்கு செம கோபம் வந்துடுச்சு. “எல்லாம் உங்களால தான் விஷ்வா. நீங்க பண்ண வேலையால என் மானமே போயிடுச்சு. இப்போ அண்ணி போய் எல்லார்கிட்டயும் சொல்லிடுவாங்க. நாளைக்கு வெளிய போனா எல்லாரும் கிண்டல் பண்ணி சாவடிப்பாங்க!! உங்களோட பெரிய இம்சையா போச்சு.” அப்படின்னு சொல்லிட்டு அவனை சரமாரியா அடிக்க ஆரம்பிச்சா மேகா.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)