Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 80

மூர்கனின் காதலி CH 80

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 80

விஷ்வாவின் மனப்போராட்டம்
மேகாவிற்கு காய்ச்சல்னு தெரிஞ்சதும், விஷ்வா டாக்டருக்கு போன் பண்ணி வீட்டுக்கே வர சொன்னான். மேகாவை செக் பண்ணிட்டு டாக்டர் அவளுக்கு ஊசி போட்டுட்டு கிளம்ப போனப்போ, “எங்க மாமாவுக்கும் காய்ச்சல் அடிக்குது டாக்டர். அப்படியே அவரையும் கொஞ்சம் செக் பண்ணுங்க” அப்படின்னு வெண்ணிலா சொன்னா.

அப்போதான் தன்னை மாதிரியே அவனுக்கும் உடம்பு சரி இல்லைன்னு மேகாவிற்கு தெரிஞ்சது. உடனே டாக்டரை அப்படியே விஷ்வாவோட ரூமுக்கு கூட்டிட்டு போனா மேகா.

அப்போதான் விஷ்வா சாப்பிட்டு முடிச்சுட்டு தூங்கலாம்னு போராடிட்டு இருந்தான். டாக்டர் வர்றதை பார்த்ததும் அப்படியே ஷாக் ஆகி எழுந்து உட்கார்ந்தான். அவன் முகத்துல பயம் அப்பட்டமா தெரிஞ்சது. அதை பார்த்த மேகா, “என்னது… இவர் டாக்டரை பார்த்து கூடவா பயப்படுவாரு? பாக்குறதுக்கு என்னவோ ஆள் பெருசா, எல்லாரையும் மிரட்டிட்டு டெரரா இருக்காரு. ஆனா பண்றது எல்லாம் குழந்தை மாதிரி இருக்கு” அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே, “டாக்டர், இவருக்கும் என்னன்னு பாருங்க” அப்படின்னு சொன்னா.

“ஏய்… என்ன எதுக்கு டாக்டர் செக் பண்ணனும்? நான் உனக்காகதான் இவரை வர சொன்னேன். இவளை செக் பண்ணிட்டீங்கள்ள… நீங்க கிளம்புங்க டாக்டர், எனக்கு ஒன்னும் இல்ல” அப்படின்னு விஷ்வா அவசர அவசரமா சொல்ல, “என்ன மாமா இப்படி பச்சையா பொய் சொல்றீங்க? இவங்ககிட்ட இருந்துதான் உங்களுக்கும் காய்ச்சல் ஒட்டிக்கிச்சுன்னு நீங்கதானே என்கிட்ட சொன்னீங்க?” அப்படின்னு வெண்ணிலா கேட்டுட்டா.

“அப்போ சிவப்பு கலர்ல பொய் சொன்னா மட்டும் ஒத்துக்குவியா நீ?” அப்படின்னு விஷ்வா வேகமா கேட்க, “ப்ளீஸ் ரிலாக்ஸ் மிஸ்டர் விஷ்வா. டெம்ப்ரேச்சர் செக் பண்ணி பார்த்தாலே உங்களுக்கு பீவர் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுடும். இந்த ஆர்கியூமெண்ட்ஸ் எல்லாம் தேவையில்லை” அப்படின்னு சொல்லிக்கிட்டே டாக்டர் விஷ்வா வாயில தெர்மாமீட்டரை வச்சாரு.
அதை அப்படியே கடிச்சு திங்குற அளவுக்கு கோபத்துல டாக்டரை எரிச்சுடுற மாதிரி பார்த்துட்டு இருந்தான் விஷ்வா.

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அதை எடுத்த டாக்டர், “டெம்ப்ரேச்சர் கொஞ்சம் அதிகமாதான் இருக்கு. இது மழை காலம்ங்கறதால வைரல் இன்பெக்ஷன் நிறைய பரவிட்டு இருக்கு. அதனால ஒரு இன்ஜெக்ஷன் மட்டும் போட்டுடுறேன். ரெண்டு நாளைக்கு டேப்லெட்ஸ் சாப்பிடுங்க. காய்ச்சல் அதுக்குள்ள சரியாயிட்டா ஓகே, இல்லன்னா ஹாஸ்பிடல் வாங்க. ஒரு பிளட் டெஸ்ட் எடுத்துப் பாத்துடலாம்” அப்படின்னு சொல்லிட்டு ஊசியை ரெடி பண்ண ஆரம்பிச்சாரு.

ஊசியையும் டாக்டரையும் மாத்தி மாத்தி பார்த்த விஷ்வா, “நீங்க எத்தனை டேப்லெட்ஸ் வேணாலும் கொடுங்க டாக்டர், ஆனா எனக்கு இன்ஜெக்ஷன் மட்டும் வேணாம். அதெல்லாம் எனக்கு பிடிக்காது” அப்படின்னு சொன்னான்.

அவன் முகத்தையே கவனிச்சுட்டு இருந்த மேகா, “என்னடா நீ இப்படி இருக்க? ஏழு கழுதை வயசாகுது, இன்னுமா சின்ன பிள்ளை மாதிரி ஊசியை பார்த்து பயப்படுவ? இதுல உள்ளுக்குள்ள இருக்க பயத்தை மறைக்க, இன்ஜெக்ஷன் பிடிக்காதுன்னு சீன் வேற! ரொம்பத்தான்” அப்படின்னு அவன் பேசின மாதிரியே மனசுக்குள்ள சொல்லிப் பார்த்தவ, விஷ்வா பக்கத்துல போய் அவன் கையை பிடிச்சுக்கிட்டா.

“நீ என்கிட்ட வராத போ… உன்னாலதான் எனக்கு காய்ச்சலே வந்துச்சு” அப்படின்னு மேகாவை பார்த்துட்டு விஷ்வா முகத்தை தூக்கி வச்சுக்க, “டாக்டர், நான் இவன் கையை பிடிச்சுக்கிறேன், நீங்க டக்குனு போட்டுருங்க. இவன்கிட்ட பேசிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது” அப்படின்னு சொல்லிட்டு மேகா அவன் கையை டைட்டா பிடிச்சுக்கிட்டா.

அதனால டாக்டர் ஈஸியா இன்ஜெக்ஷன் போட்டுட்டாரு. பயத்துல கண்ணை டைட்டா மூடிக்கிட்ட விஷ்வா, அப்படியே மேகாவை அணைச்சுக்கிட்டான்.
அவன் தலை அவ வயித்து மேல இருக்க, பாசமா அவன் தலையை கோதிவிட்டா மேகா. அந்த ஸ்பரிசத்துல தன்னை மறந்திருந்த விஷ்வாவிற்கு, டாக்டர் எப்போ ஊசி போட்டாருன்னே தெரியல.

“போட்டாச்சு போட்டாச்சு ரிலாக்ஸ்” அப்படின்னு டாக்டர் சொல்ல, “அதுக்குள்ள போட்டீங்களா?” அப்படின்னு ஆச்சரியமா கேட்டான் விஷ்வா. “அதெல்லாம் எப்பவோ போட்டாச்சு மாமா. உண்மைய சொல்லுங்க, உங்களுக்கு ஊசின்னா பயம்தானே?” அப்படின்னு வெண்ணிலா கிண்டல் பண்ண, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே” அப்படின்னு சொல்லி சமாளிச்சான் விஷ்வா.

மறுநாள் எல்லாரும் கிளம்பி விஷ்வா-மேகா கல்யாணத்துக்காக மதுரைக்கு போனாங்க. அங்க ஒரு அரண்மனையில தங்கியிருந்த விஷ்வாவிற்கு மேகா ஞாபகமாவே இருந்தது. அமைதியா இருந்த தியான மண்டபத்துக்கு போய் உட்கார்ந்தான். அங்க கடைசியா அவனும் அவளும் சந்திச்சப்போ நடந்ததை எல்லாம் நினைச்சு விஷ்வா உதட்டுல ஒரு சின்ன சிரிப்பு வந்தது. அவன் அங்க இருந்த தூண்ல சாஞ்சு உட்கார்ந்திருக்கப்போ, “தெரிஞ்சே இந்த தப்பை பண்ண போறியா விஷ்வா?” அப்படின்னு யாரோ ஒருத்தன் கேக்குற மாதிரி அவனுக்கு தோணுச்சு.

பெருமூச்சு விட்ட விஷ்வா, “டேய்… மறுபடியும் நீ வந்துட்டியா? நான் என்னை விட்டு போகாதன்னு கெஞ்சினப்போ என்னை பத்தி யோசிக்காம போயிட்ட. இப்போ இப்படி எல்லாம் வந்து பேசி என்னை டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்றேன். ஆனா கேக்காம டார்ச்சர் பண்ணிட்டு இருக்க!” அப்படின்னு கோபமா சொன்னான். ஆனா இப்போ அந்த குரலை கேட்டு அவன் பயப்படல. எல்லாம் மேகா செஞ்ச மேஜிக்தான்.

“நீ என் மேல கோவமா இருக்கியா விஷ்வா?” அப்படின்னு அந்த மர்ம குரல் கேட்க, “ஆமாண்டா. ஆனா வெறும் கோவம் இல்ல, நீ மட்டும் என் கையில கிடைச்ச… உன்னை அடிச்சு மறுபடியும் நானே கொன்னுடுவேன்.

அந்த அளவுக்கு கொலைவெறியில இருக்கேன்” என்றான் விஷ்வா. “டேய் ஏன்டா இப்படி எல்லாம் பேசுற?” அப்படின்னு அந்த குரல் சோகமா கேட்க, “பின்ன வேற எப்படிடா பேச சொல்ற? உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா? அறிவு இல்லாம எவளோ ஒருத்திக்காக ஈஸியா என்னை விட்டுட்டு போயிட்ட. உன்னை விட்டா எனக்கு யாரும் இல்லைன்னு யோசிச்சியா? அதான் போயிட்டல்ல… அப்படியே போய் தொலைய வேண்டியதுதானே! எதுக்குடா டெய்லி என் மண்டைக்குள்ள வந்து பேசி என்னை சாவடிக்கிற? ஏற்கனவே அம்மா என்னை பாதி பைத்தியமா மாத்தி வச்சிருந்தாங்க. நீ பேசிப் பேசியே என்னை முழு பைத்தியமா மாத்திட்ட. இப்போ மேகா மட்டும் வரலன்னா நான் என்ன ஆகிருப்பேன்னு எனக்கே தெரியல” அப்படின்னு ஆதங்கமா சொன்னான்.

“ஓ… அதுதான் காரணமா? இப்பதான் புரியுது. உன் லைஃப்ல புதுசா ஒரு பொண்ணு வந்ததுக்கு அப்புறம் என்னை வெறுக்க ஆரம்பிச்சுட்டல்ல விஷ்வா?” அப்படின்னு அந்த குரல் கேட்க, “வாயை மூடு. இதையெல்லாம் சொல்ல உனக்கு தகுதியே இல்லை. நீ மட்டும்தான் என் லைஃப்னு நினைச்சு வாழ்ந்துட்டு இருந்தேன். அப்படி இருந்த என்னை தனியா தவிக்க விட்டுட்டு போனது நீ. இப்போ என்னை குறை சொல்றியா?” அப்படின்னு எல்லா பக்கமும் பார்த்து கத்தினான் விஷ்வா.

“எனக்கு புரிஞ்சிருச்சு விஷ்வா. உனக்கு என்னை விட அந்த பொண்ணுதான் முக்கியம். அவ வேணாம் விட்டுடுன்னு நான் எத்தனை தடவை சொன்னாலும் நீ கேட்க மாட்டல்ல?” அப்படின்னு அந்த குரல் கேட்க, “நான் உன்னை பேசாதன்னு சொன்னேன். அவ யாரோ ரோட்டுல போறவ கிடையாது. அவ என் பொண்டாட்டி புரிஞ்சுதா?” அப்படின்னு கோபமா கேட்டான்.

“டேய் நான் சொல்றதை புரிஞ்சுக்கோ. எல்லா பொண்ணுங்களும் ஆரம்பத்துல நல்லவங்க மாதிரிதான் நடிப்பாங்க. அப்புறம் உன்னை ஏமாத்திட்டு போயிடுவாங்க. என்ன மாதிரி நீயும் ஏமாந்து நிக்கக்கூடாதுன்னு தான் இவ்வளவு சொல்றேன்” அப்படின்னு அந்த குரல் சொல்ல, “நீ சொல்றதை நான் எதுக்குடா கேட்கணும்? என்னைக்காவது நான் சொன்னதை நீ கேட்டுருக்கியா? இங்க பாரு… எங்கேயோ இருந்து பேசி என்னை பிரைன்வாஷ் பண்ற வேலையை நிறுத்து. நான் இப்படி தனியா பேசிட்டு இருக்கிறதை யாராவது பார்த்தா பைத்தியம்னு நினைப்பாங்க. உனக்கும் அதுதானே வேணும்? என்னை ஒரு சைக்கோவா ஆக்கணும்னுதானே பார்க்குற?” அப்படின்னு எரிச்சலா கேட்டான் விஷ்வா.

“என்னடா இப்படி பேசுற? நான் அப்படியெல்லாம் நினைப்பேனா? என்னை பத்தி உனக்கு தெரியாதா?” அப்படின்னு அந்த குரல் கேட்க, “தெரியாதுடா… யாரை பத்தியும் எனக்கு எதுவும் தெரியாது. என் மேல உனக்கு அவ்வளவு அக்கறை இருந்தா, நேரா வந்து என் மூஞ்சிக்கு முன்னாடி நின்னு சொல்லு.

இப்படி மண்டைக்குள்ள கத்துறது, இரிட்டேட் பண்ற வேலையெல்லாம் வச்சுக்காத” என்றான் விஷ்வா.
விஷ்வாவிற்கு அந்த மர்ம குரல் ஏன் கேட்கிறது?

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured