Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 78

மூர்கனின் காதலி CH 78

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 78

விஷ்வா அவனோட ரூமுக்கு போயிட்டதால, தானும் வெண்ணிலாவை கூப்பிட்டுக்கிட்டு மேகா அவ ரூமுக்கு போயிட்டா.

கல்யாணத்துக்கு வந்திருந்த அவளோட ஒண்ணு விட்ட ரெண்டுவிட்ட சொந்தக்காரங்க எல்லாம், “கல்யாணம் மறுபடியும் நம்ம ஊர்ல தானே நடக்கப்போகுது..!! அதுவரைக்கும் இங்க இருந்துட்டு நாம என்ன பண்றது? நம்ம ஊருக்கு போய் பொழைப்பப் பார்ப்போம்..!!” அப்படின்னு நினைச்சுட்டு அவங்கவங்க மூட்டையை கட்டிக்கிட்டு கிளம்பிட்டாங்க. இப்போ மேகாவோட குடும்பம் மட்டும் விஷ்வாவோட வீட்ல தங்கி இருந்தாங்க.

“அத்தை, இந்த வீடு செமையா இருக்கு…!! நீங்களும் மாமாவும் இனிமே இங்கதான் இருக்கப் போறீங்களா?” அப்படின்னு நிலா ஆர்வமா கேட்க, “ஆமாம்மா, நான்தான் இந்த வீட்டு ஓனர் ஹிட்லருக்கு வாக்கப்பட்டுட்டேனே.. இனிமே இங்கதான் இருக்கணும்”னு சலிப்போட சொன்னா மேகா.

“ஏன் அப்படி முகத்தை ஒரு மாதிரி வச்சுக்கிட்டு மாமாவை ஹிட்லர்னு சொல்றீங்க? உங்களை இப்படி பேலஸ் மாதிரி ஒரு வீட்ல உங்க ஹஸ்பண்ட் குயீன் மாதிரி வச்சிருக்காரு. இப்போ உங்களால நாங்களும் இங்க தங்கியிருக்கோம். இந்த ஆப்பர்சுனிட்டி எல்லாருக்கும் கிடைக்குமா?”னு நிலா கேட்க,

“ம்ம்ஹிம்.. அவரைப் பத்தி எனக்குத்தானே தெரியும்..!!” அப்படின்னு நினைச்ச மேகா, “அதெல்லாம் சும்மா செல்லமா கூப்பிடுறதுடி. சரி அதை விடு. உனக்கும் இங்க வந்து செட்டில் ஆகணும்னு ஆசையா இருந்துச்சுன்னா சொல்லு… அரவிந்த் அண்ணா உன்னை கரெக்ட் பண்ண ட்ரை பண்றாருன்னு அப்பட்டமா தெரியுது. உங்க மாமாகிட்ட பேசி நீ படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் உனக்கும் அவருக்கும் மேரேஜ் பண்ணி வச்சிடுறேன்..!!” அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சா.

“ஐயோ அத்தை நீங்க வேற சும்மா இருங்க..!! அவர் ஏதோ சும்மா என்கூட டைம் பாஸ் பண்ண விளையாடிக்கிட்டு இருக்காரு..!! நீங்க அதுக்குள்ள இந்த அளவுக்கு யோசிக்கிறீங்க..!!” அப்படின்னு நிலா சொல்ல,

“என்ன அத்தைன்னு கூப்பிடாதடினு உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது? ஒழுங்கா அக்கான்னு சொல்லு”னு சொல்லி அவ இடுப்புல கிள்ளுன மேகா, “நான் பார்த்த வரைக்கும் அரவிந்த் ஓகே தான். இருந்தாலும் இன்னும் நீ படிச்சு முடிக்க டைம் இருக்குல்ல.. அதுவரைக்கும் நான் அவரை குளோஸா வாட்ச் பண்ணிப் பார்க்குறேன். உனக்கும் அவரை பிடிச்சிருந்துச்சுன்னா அப்புறம் என்னன்னு பார்த்துக்கலாம்” என்றாள்.

“ம்ம்ம்.. ஏதோ தெரியாம ஒரு ப்ளோல அத்தைன்னு சொல்லிட்டேன். அதுக்குன்னு கிள்ளுவீங்களா நீங்க?”னு வெண்ணிலா பதிலுக்கு அவளை அடிக்க, “ஏய் என்னையே அடிக்கிறியா நீ? இன்னைக்கு உன்னை விடமாட்டேன்டி”னு மேகா பதிலுக்கு அவளை அடிக்க முயற்சி பண்ணா. ரெண்டு பேரும் அந்த ரூம்க்குள்ள ஓடிப் பிடிச்சு விளையாடிக்கிட்டு இருந்தாங்க. அப்போ திடீர்னு கதவைத் திறந்துக்கிட்டு விஷ்வா உள்ள வர, ஆறடி உயரத்துல இருந்த விஷ்வா மேல மேகா மோதி நின்னா.

வெறும் நாலடிக்கு கொஞ்சம் அதிகமா இருந்த மேகாவோட முகம் அவனோட நெஞ்சுல உரசிக்கிட்டு இருக்க, அண்ணாந்து அவன் முகத்தைப் பார்த்த மேகா ‘ஈஈஈ’னு இளிச்சா.

“இப்படியெல்லாம் குளோசப்ல உன் மூஞ்சிய காட்டி என்னை பயமுறுத்தாத”னு சொன்ன விஷ்வா, அவ தோள்களைப் பிடிச்சு தன்னை விட்டு ரெண்டு அடி தள்ளி நிறுத்தினான். அவன் சொன்னதைக் கேட்டு நிலா ஓரம் போய் நின்னு சிரிச்சுக்கிட்டு இருக்க, “இவ முன்னாடிதான் இவன் என்னை அசிங்கப்படுத்தணுமா?”னு நினைச்சுக்கிட்டு மேகா அவங்க ரெண்டு பேரையும் முறைச்சுப் பார்த்தா.

“என்னை பார்த்து இப்படி முறைக்கிற வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது. எல்லா நேரமும் நான் ஒரே மாதிரியெல்லாம் இருக்க மாட்டேன்”னு அவ கண்ணைக் குத்துற மாதிரி விரலைக் காட்டிச் சொன்ன விஷ்வா, “நம்ம லாயர் உன்கிட்ட என்னமோ பேசணும்னு சொன்னாரு. இந்தா அவர் லைன்ல இருக்காரு பேசு. உனக்கு கான்பரன்ஸ் கால் போட இங்க ஒருத்தன் ரொம்ப நேரமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன். நீ கால் வர்றதைக் கூட கவனிக்காம விளையாடிட்டு இருக்க.. ம்ம்ம்.. அப்புறமா வச்சுக்கிறேன்டி உன்னை” அப்படின்னு சொல்லிட்டு மியூட் ஆப் பண்ணி போனை அவகிட்ட கொடுத்தான்.

“சின்னதா ஒரு ரீசன் கிடைச்சா கூட, உடனே அதை வச்சு என்னை திட்டுறான் இவன். சரியான பைத்தியக்காரன். நானும் உன்னை அப்புறமா வச்சுக்கிறேன்.. இருடா..!!” அப்படின்னு முணுமுணுத்த மேகா, போனை வாங்கி லாயர்கிட்ட பேச ஆரம்பிச்சா.

மறுநாள் காலையில…

வெளியில போக காளீஸ்வரன் பர்மிஷன் கொடுத்ததால, எல்லாரும் ஜாலியா சீக்கிரமே கிளம்பி தயாராகிட்டாங்க. அசிஸ்டன்ட் நேத்ராகிட்ட பேசிக்கிட்டே வாசலை நோக்கி சௌபர்ணிகா போக, “எல்லாரும் வெளிய போக கிளம்பிட்டு இருக்காங்களே.. நீங்க வரலையா?”னு கேட்டான் முத்து.

“இல்ல எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் ஒர்க் இருக்கு. விஷ்வா மேரேஜ் முடியுற வரைக்கும் சேரன் இங்கதான் இருப்பாரு. அவர் உங்கக்கூட வருவாரு. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க. எனக்கு லேட் ஆகுது, கிளம்புறேன் பாய்”னு சொல்லிட்டு சௌபர்ணிகா பதில் கூட எதிர்பார்க்காம வேகமா போயிட்டா.

“நீயே வரலைன்னா அப்புறம் நான் மட்டும் போய் என்ன பண்ணப் போறேன்?”னு நினைச்ச முத்து, தலை வலிக்குதுன்னு சொல்லிட்டு அவனோட ரூமுக்கு போயிட்டான்.
கிளம்புன மேகா விஷ்வாவோட ரூமுக்கு போய், வழக்கம் போல அவனையும் கூட வரச் சொல்லி அடம்பிடிச்சா.

“போயிட்டு வாங்க பாஸ். நேத்து உங்க மேரேஜ் பத்தி வந்த ரூமர்ஸ் எல்லாம் நீங்க ரெண்டு பேரும் பப்ளிக் பிளேஸ்ல ஒண்ணா இருக்குறத மக்கள் பார்த்தா தானா ஸ்டாப் ஆயிடும்”னு மகேஷ் சொல்ல,

“ஆமாண்டா.. இந்த ஊர்ல இருக்குறவங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லை பாரு.. விஷ்வா என்ன பண்றான்.. விஷ்வா தின்னானா தூங்குனான்னு எல்லாரும் என்னை பத்திதான் யோசிச்சுட்டு இருப்பாங்க..!!”னு நக்கலா சொன்னான் விஷ்வா.

“நீங்க கிண்டலா சொன்னாலும் அதுதான் பாஸ் உண்மை. நீங்க வேணா மெரினா பீச்ல தனியா நின்னு ஒரு அஞ்சு நிமிஷம் சீப்பை வச்சு தலை சீவிப் பாருங்களேன்..!! உடனே அதை எவனாவது வீடியோ எடுத்துப் போட்டு வைரல் ஆக்கிடுவான். அப்புறம் அது நியூஸ்ல வந்து நீங்க ட்ரெண்ட் ஆயிடுவீங்க”னு மகேஷ் சிரிக்க,

“ரெண்டு வருஷமா நான் சென்னையில இருந்தும் மெரினா பீச்சுக்கு போனதே இல்லை. ப்ளீஸ் விஷ்வா, எங்க அண்ணா கூட மட்டும் தனியா போனா அவர் எங்களை எதையும் என்ஜாய் பண்ண விடமாட்டாரு. நீங்களும் கூட வந்தீங்கன்னா அவர் கொஞ்சம் அமைதியா இருப்பாரு. எங்களுக்காக வாங்களேன் ப்ளீஸ்..!!”னு விஷ்வாவோட கையைப் பிடிச்சு கெஞ்சுனா மேகா.

அதனால, “இவ இப்படி பாவமா மூஞ்சிய வச்சுக்கிட்டு எதைக் கேட்டாலும் ‘நோ’ சொல்ல மனசே வரமாட்டேங்குது. இப்படியே எதையாவது பண்ணி இவ என்னை நல்லா மயக்குறா.. சரியான ஆள் மயக்கி..!!” அப்படின்னு நினைச்ச விஷ்வா,

“சரி வா, நானும் வந்து தொலையுறேன். உன்னை கல்யாணம் பண்ண பாவத்துக்கு உன் குடும்பத்துக்கு இந்த விஷ்வா டூரிஸ்ட் கைடு வேலையெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு.. ச்சை..!!” அப்படின்னு புலம்பிக்கிட்டே அவகூட போனான்.

மேகா ஆசைப்பட்டதால எல்லாரையும் ஒரு மினி வேன்ல ஏத்திக்கிட்டு மெரினா பீச்சுக்குதான் முதல்ல கூட்டிட்டு போனான் விஷ்வா. அங்க இருந்த எல்லாத்தையும் ஃபேமிலி கூட பார்த்து என்ஜாய் பண்ண மேகா, கடைசியா தூரத்துல இருந்த ஒரு போட்டோகிராபரைக் காட்டி, “வாங்க நாமளும் ஒரு போட்டோ எடுத்துக்கலாம். இதெல்லாம் மெமரீஸ். எனக்கு எங்க போனாலும் போட்டோ எடுத்து மெமரீஸ் கலெக்ட் பண்றது ரொம்பப் பிடிக்கும்”னு உற்சாகமா சொன்னா.

“ஏய் அவன் வச்சிருக்க டுபாக்கூர் கேமராவை விட என் போன் கேமராவே நல்லா இருக்கும்டி. வேணும்னா சொல்லு என் போனை தர்றேன். நாலஞ்சு செல்பி எடுத்து உனக்கு சென்ட் பண்ணிட்டு என் போன்ல இருந்து டெலீட் பண்ணிடு. அப்படியும் நல்ல போட்டோ வேணும்னா இன்னைக்கு நைட் வரைக்கும் வெயிட் பண்ணு. எவனாவது நியூஸ் சேனல்காரன் நமக்கே தெரியாம போட்டோ எடுத்து செலிபிரிட்டி நியூஸ்னு போடுவான். அதுல வர்ற போட்டோவை எடுத்து வச்சுக்கோ”னு விஷ்வா சொல்ல,

“உங்களைக் கூப்பிட்டேன் பாருங்க, அது என் தப்புதான். ஐ அம் சோ சாரி மிஸ்டர் விஷ்வா.

இதுக்கு நானே என் செருப்பை எடுத்து அடிச்சுக்கலாம். உங்க சேவை எனக்குத் தேவையில்லை. நானே போய் போட்டோ எடுத்துக்கிறேன்”னு சொல்லிட்டு மேகா வேகமா அந்த போட்டோகிராபர் கிட்ட போனா.

“அட இவளை வச்சுக்கிட்டு ஒரே இம்சை..!!”னு நினைச்ச விஷ்வா, வேற வழியில்லாம அவ பின்னாடியே போனான்.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured