Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 76

மூர்கனின் காதலி CH 76

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 76

விஷ்வா சௌபர்ணிகாவுக்கு ஃபோன் பண்ணி மேகாவைப் பத்தி விசாரிச்சான். “நாங்களும் அவளுக்கு எப்ப மயக்கம் தெளியும்னுதான்டா வெயிட் பண்ணிட்டு இருக்கோம். அவ இன்னும் அப்படியேதான் இருக்கா,”ன்னா அவ.

“ஓகே ஃபைன். அவளை யாரும் டிஸ்டர்ப் பண்ணாம மட்டும் பார்த்துக்கோங்க…!!”ன்ன விஷ்வா, அந்த அழைப்பைத் துண்டிச்சிட்டு சுவத்துல சாய்ஞ்சு தன் கண்ணை மூடினான்.

அப்போ அவன் கண்ணுக்குள்ள மேகாவோட சிரிச்ச முகம்தான் தெரிஞ்சது.
அவனுக்கு அவள்மீது என்ன மாதிரியான ஃபீலிங்ஸ்னு இன்னும் அவனுக்கே தெரியல. அப்படி சொல்றதைவிட, இன்னும் அதைப்பத்தி அவன் யோசிக்கவே ஆரம்பிக்கல. இருந்தாலும் “என்னதான் மேகாவை என் கண்ணுக்குள்ள வெச்சு நான் பத்திரமா பார்த்துக் கிட்டாலும், என்ன மீறி அவளுக்கு ஏதோ ஆகிட்டே இருக்கு,”ன்னு நெனச்சு குற்ற உணர்ச்சியில தவிச்ச விஷ்வா,

“இனிமே அவளுக்கு எதுவும் ஆக விடக் கூடாது. அவளுக்குன்னு தனியா ஃபீமேல் பாடி கார்ட்ஸ் போட்டு எப்பவும் அவங்க அவ கூடவே இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்,”ன்னு உறுதியா இருந்தான்.

அப்போ அவனுக்கு ஃபோன் பண்ண மகேஷ், “பாஸ், அந்த முனியாண்டியையும் ஆதித்யாவையும் தூக்கிட்டு வந்து நல்லா மிதி மிதின்னு மிதிச்சு விசாரிச்சு பார்த்துட்டேன். அவங்க ரெண்டு பேருமே மேகா மேடமை கடத்தலைன்னுதான் சொல்றாங்க. அன்னைக்கு கோவில்ல உங்களைக் கொல்ல ட்ரை பண்ணது முனியாண்டிதான்.

அதை இன்னைக்கு வாங்கின அடியில அவனே ஒத்துக்கிட்டான்,”ன்னு சொல்ல, “சோ மேகாவை அவங்க ரெண்டு பேரும் கிட்னாப் பண்ணலைன்னு சொல்ல வரியா??”ன்னு கேட்டான் விஷ்வா.

“எஸ் பாஸ். முனியாண்டி அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல. நீங்க சொன்னதுனால நாங்க ஆதித்யாவை ஆல்ரெடி ஃபாலோ பண்ணிட்டுத் தான் இருந்தோம். அது அவனுக்கும் தெரியுமே..!! நாங்க அவனை தூக்கிட்டு வரும்போதுகூட அவன் அவனோட ஆஃபீஸ்லதான் இருந்தான். இன்னும் உங்ககிட்ட வாங்குனது அவனுக்கு மறந்திருக்காது. சோ இதை அவனும் பண்ணியிருக்க சான்ஸ் இல்ல,”ன்னு மகேஷ் சொல்ல, “தேன்… அவ்ளோ கிளீனா பிளான் பண்ணி இதை செஞ்சது யாரு??”ன்னு கோபமா கேட்டான் விஷ்வா.

“தெரியல பாஸ். இனிமேதான் அவன் யாருன்னு கண்டுபிடிக்கணும். சிசிடிவி கேமரால மாட்டக் கூடாதுன்னு கரெக்டா ஸ்கெட்ச் போட்டு மேகாவைத் தூக்கிருக்கான். இந்த இடத்தைப் பத்தி நல்லா தெரிஞ்ச, இங்க ஈஸியா வந்துட்டுப் போற, மத்தவங்க யாரும் சந்தேகப்படாத ஒரு ஆள்தான் மேகாவை கடத்தியிருக்கணும்,”ன்னு மகேஷ் உறுதியா சொல்ல, “எஸ். அவன் யாருன்னு நான் சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்,”ன்னான் விஷ்வா.

மறுநாள் காலையில விஷ்வாவை அழைச்சிட்டுத் தன்னோட ஜீப்ல இன்ஸ்பெக்டர் கோர்ட்டுக்கு போய்க்கிட்டு இருந்தார். இங்க இன்னும் திருமண மண்டபத்துல எல்லாரும் மேகாவுக்கு எப்ப மயக்கம் தெளியும்னு காத்துக்கிட்டு இருந்தாங்க. சில நிமிஷங்களுக்குப் பின் கோர்ட்ல குற்றவாளி கூண்டுல விஷ்வாவை நிக்க வெச்சு, அவன் கிட்ட மகளிர் ஆணையம் சார்பா வந்த வக்கீல் சரமாரியா கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க, நிதானமா மீடியா ஆட்கள்கிட்ட என்ன சொன்னானோ அதே பதிலைத் தான் அவங்ககிட்டயும் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தான் விஷ்வா.

“நீங்க என்ன சொன்னாலும் ஒரு பொண்ணு தன்னோட சுயநினைவுல இல்லாதப்போ அவளுக்குத் தாலி கட்டுனதை நீங்க நியாயப்படுத்த முடியாது விஷ்வா. அந்தப் பொண்ணே வந்து இந்த கல்யாணத்துல அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைன்னு சொன்னா மட்டும்தான் உங்களை இந்த கேஸ்ல இருந்து விடுவிக்க முடியும்,”ன்னு ஜட்ஜ் திட்டவட்டமா சொல்லிட, தன் அண்ணன் முத்துவுடன் அரக்கப்பறக்க கோர்ட் ரூம்குள்ள ஓட்டமும் நடையுமா வந்த மேகா, “நான் வந்துட்டேன் சார்,”ன்னு மூச்சு வாங்க ஜட்ஜைப் பார்த்துச் சொன்னாள். அதனால விஷ்வா உட்பட எல்லாரும் அவளைத் திரும்பிப் பார்த்தாங்க.

மயக்கம் தெளிஞ்சதுக்குப் பிறகு நடந்ததைக் கேள்விப்பட்டு வெறும் அரை மணி நேரத்துல கிளம்பி சௌபர்ணிகாவையும், தன்னோட அண்ணனையும் அழைச்சிட்டு அங்க வந்திருந்தா மேகா. அவள் சாதாரண சுடிதார் ஒண்ணு அணிஞ்சிருக்க, அவள் கழுத்துல வெளியில ஐடென்டிட்டி கார்டு மாதிரி தொங்கிக்கிட்டு இருந்தது விஷ்வா கட்டுன மஞ்சள் தாலி.

‌அவள் தன்னோட நெற்றி வகிட்ல அழகா குங்குமம் வெச்சிருக்க, அவளோட அந்த ஒரு செயலே அந்தத் திருமணத்தை அவள் தன் மனசார ஏத்துக்கிறான்னு சொல்லாம சொல்லுச்சு.
“யாருமா நீங்க கோர்ட் ரூம்ல கேஸ் நடந்துகிட்டு இருக்கும்போது நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்றீங்க?? எதை சொல்றதா இருந்தாலும் வந்து கூண்டுல நின்னு சொல்லுங்க,”ன்னு ஜட்ஜ் சொல்ல,

“சார் நான் மேகவாணி விஷ்வா,”ன்னு அழுத்திச் சொன்ன மேகா, விஷ்வாவுக்கு எதிரில் இருந்த சாட்சிக் கூண்டுல போய் நின்னாள். அவள் முகத்துல தெரிஞ்ச தெளிவையும், அவள் தன் பெயரைச் சொன்ன விதத்தையும் வெச்சே “இந்த பொண்ணு விஷ்வாவை கல்யாணம் பண்ணிக்கணும்னுதான் நெனச்சிருக்கா போல!!”ன்னு ஜட்ஜுக்குத் தோணுச்சு.

மகளிர் ஆணையம் சார்பா வந்திருந்த வக்கீல் மேகாவை மடக்கி மடக்கி விஷ்வாவை இந்த கேஸ்ல லாக் பண்றதுதான் தன்னோட ஒரே குறிக்கோள்ங்கறது போல கேள்விகள் கேட்க, விஷ்வா பிரஸ் மீட்ல பேசினதை முத்து அவகிட்ட போட்டுக் காட்டி இருந்ததால, தானும் அதையே சொல்லி விஷ்வாவுக்கு ஒத்து ஊதிய மேகா, “நானும் என்னோட ஹஸ்பெண்டும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப லவ் பண்றோம் சார். இந்த மேரேஜ்க்காக நாங்க ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இது இப்படி நடக்கும்னு நாங்களும் எதிர்பார்க்கலதான். பட் நடந்துருச்சு. அதுக்காக என்ன பண்ண முடியும்?? ஐ லவ் விஷ்வா. அண்ட் ஹீ இஸ் மை ஹஸ்பெண்ட் நவ்,”ன்னு உறுதியா சொன்னாள்.

மேகா தான் விஷ்வாவை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாளே.. அதனால அவள் தன் மனசுல இருக்கிறதைத்தான் அப்படியே சொல்லியிருந்தா. ஆனா, அவள் தன்னைக் காப்பாத்த திரும்பவும் எல்லார் முன்னிலையிலும் தன்னை லவ் பண்றதா பொய் சொல்றான்னு நெனச்சுக்கிட்ட விஷ்வா, அவள் பேசி முடிச்சதுக்கு அப்புறம் அவளைப் பார்த்து, “ஆர் யூ ஓகே??”ன்னு தன் கண்களாலயே சைகை செஞ்சு கேட்டான்.

“எஸ். ஐ ஆம் ஓகே,”ன்னா மேகா. அவங்க இப்படித் தங்கள் கண்களாலயே பேசிக்கிறதை ஜட்ஜ் கவனிக்காம இல்ல.
அதனால தன்னோட புட்டிக் கண்ணாடியை சரி செஞ்சுட்டு, “இந்த மேரேஜ்ல மேகவாணிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லாம இருக்கலாம். ஆனா, இது மாதிரியான திருமணங்களை என்னைக்கும் சட்டம் அங்கீகரிக்காது. அதனால இந்தக் கோர்ட் விஷ்வாவுக்கும் மேகவாணிக்கும் நேத்து எல்லார் முன்னிலையிலும் நடந்த திருமணம் செல்லாதுன்னு அறிவிக்கிறதோட மட்டுமல்லாமல், ரெண்டு பேர் சம்மதத்தோட முறையா மறுபடியும் இவங்க கல்யாணம் பண்ணிக்க பரிந்துரைக்குது. திஸ் கோர்ட் இஸ் நௌ அட்ஜர்ன்ட்,”ன்னு தீர்ப்பு சொல்லி அந்தக் கேஸை முடிச்சு வெச்சார் ஜட்ஜ்.

தன் கழுத்துல கிடந்த தாலியை இறுக்கிப் பிடிச்ச மேகா, “யார் என்ன சொன்னாலும் சரி, என்னைப் பொறுத்த வரைக்கும் எப்ப நீங்க என் கழுத்துல தாலி கட்டுனீங்களோ அப்போல இருந்தே நான் உங்க வைஃப்தான் விஷ்வா,”ன்னு நெனச்சு அவள் அவனைப் பார்க்க, அவளையே கவனிச்சுக்கிட்டு இருந்த விஷ்வா, “என்ன, நடந்த மேரேஜை செல்லாதுன்னு சொல்லிட்டாங்களே.. இப்போ என்ன பண்றது, இந்தத் தாலியை வெச்சுக்கலாமா இல்லன்னா இங்கயே கழட்டிப் போட்டுடலாமான்னு யோசிக்கிறியா??”ன்னு நக்கலா கேட்டான்.

வந்த கோபத்துல அவனை முறைச்சுப் பார்த்த மேகாவுக்கு, அவனுக்குப் பதில் சொல்லக் கூட விருப்பமில்லை. அதனால அவள் அமைதியா போய் தன் அண்ணன் பக்கத்துல நின்னுகிட, கடந்த 24 மணி நேரத்துக்கு மேல அவள் சாப்பிடாம இருந்ததாலயும் அந்த மருந்தின் தாக்கத்தாலயும் சோர்வா ஃபீல் பண்ண மேகாவுக்கு திரும்பத் தலை சுத்துறது போல இருந்துச்சு. அவள் தன் தலையைப் பிடிச்சுக் கொண்டிருப்பதை கவனிச்ச விஷ்வா,

“உனக்கு மயக்கம் தெளிஞ்சதுக்கு அப்புறம் டாக்டர் ஹெல்தி ஃபுட்டா சாப்பாடைக் கொடுக்கச் சொன்னாரே. முதல்ல சாப்டியா நீ??”ன்னு கேட்க, “இல்ல சார். இவளுக்கு மயக்கம் தெளிஞ்சு முழுசா இன்னும் ஒரு மணி நேரம்கூட ஆகல. உங்களை போலீஸ் அரெஸ்ட் பண்ணது தெரிஞ்ச உடனே அவ கிளம்பி இங்க வந்துட்டா,”ன்னான் முத்து.
“அப்போ வாங்க, போற வழியில எல்லாரும் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போலாம். நானும் நேத்துல இருந்து சாப்பிடல.

மண்டபத்துல இருக்கிறவங்களை எல்லாம் கிளம்பி நம்ம வீட்டுக்கு வரச் சொல்லிருங்க..!!”ன்ன விஷ்வா, தயாளன் மற்றும் சௌபர்ணிகாவுடன் ஏதோ பேசினபடியே முன்னே போயிட, வேண்டா வெறுப்பா தன் அண்ணனோட அவங்க பின்னே போனா மேகா.
மதிய வேளையில விஷ்வாவின் வீட்டுல எல்லாரும் ஒண்ணு கூடி இருக்க,

“நடந்த கல்யாணத்தை செல்லாதுன்னு கோர்ட்ல சொல்லிட்டாங்களே.. இப்ப என்ன பண்றது??”ன்னு அனுராதா ஆரம்பிக்க, “அதுக்கு என்ன பண்றது?? இவங்க ரெண்டு பேருக்கும் மறுபடியும் கல்யாணம் பண்ண வேண்டியது தான். ரெண்டு நாள் கழிச்சு அதே மண்டபத்துல ரிசப்ஷன் அரேஞ்ச் பண்ணி இருந்தோமே.. அது முடிஞ்ச உடனே அங்க எடுத்த போட்டோஸ் அண்ட் வீடியோஸ் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போய் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல சப்மிட் பண்ணி அங்க போய் ஒரு தடவ சைன் போட்டு மேரேஜ் பண்ணா போதும். ஆஃபிஷியலா இவங்க ரெண்டு பேரும் மேரிட்னு சர்டிஃபிகேட் குடுத்துருவாங்க,”ன்னா சௌபர்ணிகா.

அதுவரைக்கும் அமைதியா சோஃபால உக்காந்திருந்த காளீஸ்வரன் உடனே எழுந்து நின்னு “இல்ல அது சரிப்பட்டு வராது,”ன்னாரு. அதனால “இப்போ இவர் ஏன் இப்படி சொல்றாரு??”ங்கறது போல எல்லாரும் அவரைப் பார்த்தாங்க.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured