அத்தியாயம் 135: உன்னை என் வைஃபா ஏத்துக்க மாட்டேன் (பார்ட் 2)
செண்பகம் மருத்துவமனையில் இருந்தபோது தன்னிடம் பேசிய வருனும் இவனும் ஒரே ஆள் தானா நின்ற சந்தேகம் கூட அவளுக்குள் எழுந்தது. பயத்தில் அவளுடைய உடம்பெல்லாம் வியர்வை துளிகள் பூத்திருக்க, அவளுடைய எலுமிச்சை நிறை இடுப்பு வலைவில் ஒரு வியர்வைத் துளி பயணித்து அவளுடைய சேலைக்குள் சென்று மறைந்தது. வருனும் அதை கவனிக்க தவறவில்லை. 😍 ரித்திகாவின் கைகளோ அவள் சொன்ன பேச்சை கேட்காமல் அதன் போக்கில் அது நடுங்கிக் கொண்டு இருக்க, அவளால் அந்த பெண்டன்டை போட்டுக் கொள்ள முடியவில்லை.
அதை கண்டு கடுப்பான வருண், வசதியாக தன்னுடைய நீண்ட வலிய கரத்தை அவளுடைய இடுப்பில் போட்டு அவளை தன் பக்கம் வேகமாக இழுத்தவன், ரித்திகாவின் கையை பிடித்து அதில் இருந்த பென்டன்டை வாங்கியவன், அதை தானே அவளுடைய சங்கு கழுத்தில் அணிவித்தான். 👩❤️👨 வருணின் இந்த திடீர் செய்கையால் அதிர்ந்து போன ரித்திகா, கூச்சத்தில் நெளிந்தாள். லேசாக அவளுடைய பொன்மேனியை தழுவிச் சென்ற அவனுடைய விரல்கள் அவளுக்குள் எண்ணற்ற மாயங்களை கண பொழுதில் செய்துவிட்டு சென்றன. அதனால் சிலிர்த்துப் போனவள், சிலையாய் சமைந்து நின்றாள். ☺️ ரித்திகாவின் பின்னே நின்று கொண்டு இருந்த வருண்னின் கண்களுக்கு பிளவுஸிற்கு வெளியே பளிங்கு கற்களைப் போல் பல பலவென மின்னி கொண்டு இருந்த அவளுடைய வெண்ணிற முதுகு தரிசனம் கொடுத்தது. அதிலும் சில வியர்வை துளிகள் உருண்டோடி கொண்டு இருந்தன. 💦 😍 🥰 அவள் தன்னுடைய தலையில் சூடி இருந்த மல்லிகை பூவின் மனம் வேறு அவனை ஏதோ செய்தது. 🌼
கன்னியின் கழுத்தை
பர்த்தால்… 👀
மணமாகவில்லையே…
காதலன் மடியில் பூத்தாள்…
ஒரு பூ போலே… 🌼
மன்னவனே உன் விழியால்…
பெண் விழியை மூடு… 😍 🥰 👩❤️👨
ஆதரவாய் சாய்ந்து விட்டால்…
ஆரிராரோ பாடு… 👩❤️👨 🥰
ஆரிராரோ இவர் யார் எவரோ…
பதில் சொல்வார் யாரோ… 💗 👩❤️👨 💗
கூந்தலில் நுழைந்த கைகள்…
ஒரு கோலம் போடுதோ… 🥰
தன்னிலை மறந்த பெண்மை…
அதை தாங்காதோ… 👩❤️👨 ☺️
மங்கையிவள் வாய் திறந்தால்…
மல்லிகை பூ வாசம்… 🌼
ஓடையெல்லாம் பெண் பெயரை…
உச்சரித்தே பேசும்…
யார் இவர்கள் இரு பூங்குயில்கள்… 🐦🐦
இளம் காதல் மான்கள்… 👩❤️👨
ஒரு நொடி அவற்றை கண்டு சபலப்பட்ட வருண் தன்னுடைய எச்சிலை விழுங்கியவன், ரித்திகாவின் இடுப்பை தன்னுடைய இரு கைகளாலும் இறுக்கி பிடித்து அவளை மீண்டும் தன் பக்கம் திருப்பி அவளை தன்னுடைய முகத்தை பார்க்கும் படி செய்தவன்; “உனக்கு இது தான் நான் கட்டுற பர்ஸ்டு தாலின்னு நினைச்சுக்கோ. இது எப்பவுமே உன் கழுத்துல இருக்கணும்.” என்று காட்டமான குரலில் விரைப்பாக சொன்னவன், எதுவும் நடக்காதது போல் கதவின் தாளைத் திறந்து வெளியே சென்று மீண்டும் பிராத்தனாவின் அருகே அமர்ந்து கொண்டான்.
இங்கு என்ன நடந்தது என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்த ரித்திகா, பேயறைந்ததைப் போல் அமைதியாக சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். வருண் ரித்திகாவின் அறையில் இருந்து வெளியே வந்தவுடன் அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்த ஷாலினி, வேகமாக ரித்திகாவின் அறைக்குள் நுழைந்தாள். அப்போது பித்து பிடித்தவளை போல் சீலிங்கை விரித்துப் பார்த்த படி அமர்ந்து இருந்த ரித்திகாவை பார்த்த ஷாலினி, “என்னாச்சு இவங்களுக்கு ஒரு வேலை இங்க ஏதாவது ரொமான்ஸ் சீன் நடந்து இருக்குமோ…!!! ஆனா இவங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாங்களே..!!! அப்புறம் ஏன் இப்படி ஷாக்ல உக்காந்து இருக்காங்க…???” 🤔 என்று நினைத்து குழம்பியவள் அவளின் அருகே சென்று அவளுடைய தோளில் தன்னுடைய கையை வைத்தாள்.
ஷாலினி தன்னுடைய தோளில் கையை வைத்த உடன் மீண்டும் வருண் தான் அங்கே வந்துவிட்டான் போல என்று நினைத்து பயந்த ரித்திகா சட்டென்று எழுந்து நின்று விட்டாள். அவளுடைய விசித்திரமான செய்கைகளை பார்த்து இன்னும் குழம்பிப்போன ஷாலினி, “என்ன ஆச்சு அக்கா நான் தான் ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க..???” என்று கேட்டவளின் கண்களில் வருண் ரித்திகாவிற்கு அணிவித்து இருந்த பெண்டன்ட் கண்ணில்பட்டது. அதை ஆச்சரியமாக பார்த்த ஷாலினி தன் கையால் அதைத் தொட்டுப் பார்த்த படியே, “என்ன அக்கா இது புதுசாா இருக்கு..??? நீங்க ரூமுக்கு வரத்துக்கு முன்னாடி இது உங்க கழுத்துல இல்லையே…!!! அப்படின்னா இத மாமா உங்களுக்கு கிப்ட் பண்ணாரா…???” என்று உற்சாகமான குரலில் கேட்டாள். 😍
ஷாலினிக்கு விஷ்ணு நம்மகிட்ட பாசமா இருக்கிற மாதிரி. வருனும் ரித்திகாவும் சேர்ந்து வாழ்வார்களா என்ற சந்தேகமும், பயமும், இருந்தது. அதனால் இப்போது வருண் முதன் முதலில் ரித்திகாவிற்கு என்று ஒரு பரிசு கொடுத்திருப்பதால், அதை நினைத்து ஷாலினி உள்ளம் மகிழ்ந்தாள். 😍 ஷாலினி ஆர்வக்கோளாறில் எதை எதையோ ரித்திகாவிடம் வரிசையாக கேட்டுக் கொண்டு இருக்க, ரித்திகாவோ வருண் அங்கு இருந்து சென்ற பின்னும் அவனாஉண்டா தாக்கத்தில் இன்னும் சிலையாய் சமைந்து நின்றாள்.
தான் இவ்வளவு பேசியும் ரித்திகா பதில் சொல்லாததால் அவளை பிடித்து உலுக்கிய ஷாலினி, “அட சொல்லுங்க அக்கா, இத உங்களுக்கு மாமா தானே கிஃப்ட் பண்ணாரு..???” என்று ஆர்வம் நிறைந்த குரலில் கேட்டாள். அப்போதும் அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஆமாம் என்று தன்னுடைய தலையை மட்டும் ஆட்டினாள் ரித்திகா. அதனால் கடுப்பான ஷாலினி அவளை செல்லமாக அடித்தவள், “இது நல்ல விஷயம் தானே…!!! ஆமான்னு வாய தொறந்து சொன்னா என்னாவாம் உங்களுக்கு…??? எதுக்கு இப்படி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருக்கீங்க…???” என்று கேட்டாள். அதற்கு ரித்திகா ஏதோ சிரமப்பட்டு பதில் சொல்ல வருவதற்குள், ஹாலில் இருந்த ரேவதி அவர்கள் இருவரையும் ஹாலிற்கு வரும்படி அழைத்தாள்.
ரேவதி தன்னை அழைத்து ஷாலினியிடம் இருந்து தன்னை காப்பாற்றி விட்டதால் அப்பாடா என்று நினைத்து பெருமூச்சு விட்ட ரித்திகா ஷாலினியுடன் வெளியே வந்தாள். வெளியே வந்தவளின் கண்கள் முதலில் அந்த கூட்டத்தில் இருந்த வருணை தான் தேடியது. 😍 ஆனால் அவனைக் கண்டதும், கூச்சத்தில் அவனுடைய முகத்தை காண முடியாமல், தன்னுடைய தலையை மீண்டும் குனிந்து கொண்டாள். ☺️ வருனும் வெளியில் தன்னை கெத்தாக காட்டி கொண்டு ரித்திகாவை கண்டு கொள்ளாதது போல் நடித்தாலும், ஓரக்கண்ணால் அவளையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். 👀 😍
செண்பகமும், ரித்திகாவின் பெற்றோர்களும், திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர். “நம்ப குடும்ப ஜோசியரை ஒரு நாள் வீட்டுக்கு வர சொல்லி நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் நாள் குறிச்சிடலாம். இப்ப முதல்ல நம்ம தட்ட மாத்திக்கலாம் சம்பந்தி.” என்று செண்பகம் சொல்ல, ஏற்கனவே பூஜை அறையில் தான் தயார் செய்து வைத்து இருந்த தாம்பூல தட்டை ஷாலினியை விட்டு எடுத்து வர சொன்ன ரேவதி; அதை தன்னுடைய கணவனுடன் இணைந்து செண்பகத்திடம் கொடுத்துவிட்டு, செண்பகம் கொண்டு வந்த தட்டை தான் வாங்கிக் கொண்டாள். பெரியவர்கள் இருவரும் தட்டை மாற்றி கொண்டவுடன், இளசுகள் அனைவரும் சேர்ந்து இது ஏதோ பர்த்டே பார்ட்டி போல அனைவரும் கைத்தட்டி தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். 😍
பின் தர்ஷினியை அழைத்த செண்பகம் தாங்கள் கொண்டு வந்த தட்டில் இருந்த தொடுத்து வைத்த மல்லிகை மற்றும் முல்லை மலர்களை தன்னுடைய சார்பில் ரித்திகாவிற்கு வைத்து விடும்படி சொன்னாள். தன்னுடைய ஆழ்மனதில் வேதனைகளை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்ட தர்ஷினி, சிறிதும் முகம் கோணாமல், மலர்ந்த முகத்துடன் செண்பகம் சொன்னது போலவே ரித்திகாவின் கூந்தலில் அந்த மலர்களை சூட்டினாள். 😁 😁 😁
பின் ரித்திகாவை தன் அருகே அழைத்த செண்பகம், தான் கொண்டு வந்த வைரம் மற்றும் மாணிக்க கற்கள் பதித்த தங்க ஆரத்தை ரித்திகாவிற்கு தன் கைகளால் அணிவித்து மகிழ்ந்தவள், அவளுடைய நெற்றியில் பாசமாக முத்தம் கொடுத்தாள். முதலில் இதெல்லாம் வேண்டாம் என்று ரித்திகாவும், அவளுடைய பெற்றோர்களும், செண்பகத்திடம் சொல்லிப் பார்த்தனர். ஆனால் செண்பகத்தின் அன்பு தொல்லையால் வேறு வழி இன்றி அதை ஏற்றுக் கொண்டனர். செண்பகம் மற்றும் ரித்திகா விற்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை பார்த்து மகிழ்ந்த ஷாலினிக்கு இன்னொரு பக்கம் இதே போல் தன்னுடைய அத்தை தன்னிடமும் பாசமாக இருப்பார்களா என்ற அச்சம் தோன்ற, சற்று கவலையாகவும் இருந்தது.
ஆனால் எது எப்படி இருந்தாலும் தன்னுடைய ரித்திகா அக்காவின் சப்போர்ட் தனக்கு இருக்கும் என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள் ஷாலினி. வருண் ரித்திகா விற்கும் பரிசம் போட்டு விட்டதால், அவர்கள் இருவரையும் ஜோடியாக பார்க்க விரும்பிய செண்பகம் ரித்திகாவை அழைத்து பிராத்தனாவை எழுந்திருக்க சொல்லிவிட்டு அவள் அமர்ந்து இருந்த இடத்தில் வருணின் அருகே அமரச் செய்தாள். “ஆமா இவங்களுக்கு இது ஒன்னு தான் குறைச்சல்.” என்று முணுமுணுத்த பிராத்தனா சலிப்புடன் எழுந்து சென்று வேறு ஒரு சேரில் அமர்ந்து கொண்டாள்.
தன் அருகே இருந்த வருணை திரும்பி பார்த்தாள் ரித்திகா. க்ளோசப்பில் பார்க்க இன்னும் வருண் அவளுடைய கண்களுக்கு ஆண் அழகனாக தெரிந்தான். 😍 அவன் அருகே செல்லும்போது மட்டும் காற்றில் லேசாக வீசும் அவன் பயன்படுத்தும் உயர்தர பர்ஃபியூமின் மனம், அவனுடைய வியர்வை வாசத்துடன் கலந்து ரித்திகாவின் நாசிகளுள் நுழைந்தது. அந்த பழக்கப்பட்ட வாசனையை ரித்திகா ரசிக்க தவறவில்லை. இன்னொரு பக்கம் வருணிக்கோ ரித்திகாவின் தேகத்தில் இருந்து வரும் மல்லிகையின் மனம் ஒரு பூந்தோட்டமே தன் அருகில் அமர்ந்து இருப்பதை போன்ற உணர்வை கொடுத்து அவனை சிலிர்க்க வைத்தது. 🥰 அதனால் ஒரு நொடி ரித்திகாவை திரும்பி பார்த்தான் வருண். 😍 ரித்திகாவும் அவனையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். 👩❤️👨
பேசாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே… ♫ 😍 🥰
கண் பார்வை மெல்ல தூண்டில் வீசுதே… ♫ 😍 👀
ஏ பூக்கள் எங்கு பூக்கும் போதும் காற்றில் வாசம் வீசுமே… ♫ 🌼
நான் பேச வந்த வார்த்தை யாவும் கண்கள் இன்று பேசுமே… ♫ 😍 ❤️ 💫 🌟 ✨
சொல்லாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே… ♫ 😍
நில்லாமல் கண்கள் தூண்டில் வீசுதே… ♫ 🤩 😘
ஏ காலம் வந்து மாயம் செய்து நெஞ்சை மாற்றி போகுதே… ♫ 👩❤️👨 ❤️ 👩❤️👨
என்னுள்ளே இன்று காதல் வந்து கொஞ்சி கொஞ்சி பேசுதே.. ♫ ❤️ 💫 🌟 ✨
இந்த நிமிடத்தை காலம் முழுவதும் அவர்களுக்கு ஒரு நல்ல நினைவாக மாற்ற நினைத்த விஷ்ணு, சத்தம் இன்றி அவர்கள் இருவரும் கண்களால் பேசும் காதல் மொழியை, தன்னுடைய மொபைல் கேமராவின் வழியாக, புகைப்படம் ஆக்கி அதை பத்திரப்படுத்தியவன்; பிற்காலத்தில் அவர்கள் எழுதவிருக்கும் காதல் காவியத்தின் முதல் அத்தியாயமாக இது இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான். ☺️
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)