அத்தியாயம் 131: பெண் பார்க்கும் படலம்
நாராயணன் பேலஸில்….
வருண் அறையில்…
எப்போதும் அவன் ஆபீசுக்கு செல்லும்போது கோட் சூட் அணிவதைப்போல இப்போதும் அதே கருப்பு கோட் அணிந்து கொண்டு, கண்ணாடியை பார்த்து தன்னுடைய டையை கட்டிக் கொண்டு இருந்தான் வருண். ஆனால் அவனுடைய முகத்தில் எந்த ஆர்வமோ, உற்சாகமோ துலியும் இல்லை. 😐
அப்போது வருனின் அறையின் கதவுகளை திறந்து கொண்டு அங்கே ஹரியும், விஷ்ணுவும், வந்தனர். அவர்கள் இருவரும் தங்களுடைய டிசைனரிடம் சொல்லி ஒரே மாதிரியான ஆடைகளை தயார் செய்து ப்ளூ கலரில் பேண்ட் சர்ட் போட்டு இருந்தனர். அதே போன்று ப்ளூ கலரில் சற்று சிறப்பான கூடுதல் வேலைப்பாடுகளுடன் இருந்த இன்னொரு ஆடையை தன்னுடைய கையில் வைத்து இருந்தான் விஷ்ணு.
ஹரி: வருணை பார்த்து சிரித்தவன், “டேய் விஷ்ணு, நீ சொன்னது கரெக்டு தான் டா. இவனுக்கு ஃபேஷன் சென்சே இல்ல. பொண்ணு பாக்க போறதுக்கு, ஏதோ போட் மீட்டிங்கு போற மாதிரி டை எல்லாம் கட்டிக்கிட்டு பிளாக் கலர்ல கோட் சூட் போட்டு ரெடி ஆகி இருக்கான் பாரு…!!!” 👔 🧥 🤵 😂 😂 😂 என்று விஷ்ணுவிடம் சொல்லி சிரித்தான்.
ஹரி சொன்னதை கேட்ட விஷ்ணு குபேரன்று சிரித்தவன், “ஆமா டா.. நாம்ம அண்ணா எப்ப பாத்தாலும் ரொம்ப வெறப்பாவே இருக்காரு. பாவம் ரித்திகா அக்கா. இல்ல ரித்திகா அண்ணி, இவர பாத்து பயப்படாம இருந்தா சரி.” என்று கிண்டலாக சொன்னான். 😂 😂 😂
வருண்: அவர்கள் சொன்னதை கேட்டவன், ஹரி. விஷ்ணுவை பார்த்து முறைதான். 😒 🤨
வருணின் கூர்மையான பார்வையால் பயந்து போன விஷ்ணு, ஹரியின் பின்னே சென்று மறைந்து கொண்டவன், “டேய் அண்ணா, காப்பாத்து டா. இருக்கிற கடுப்புல என்ன போற போக்குல ரெண்டு போடு போட்டுட்டு போயிட போறாரு.” என்று ஹரியின் காதுகளில் முணுமுணுத்தான்.
ஹரி: வருணை பார்த்து சிரித்தவன், “வருண் இப்ப எதுக்கு நீ அவனை பாத்து முறைக்கிற..??? அவன் கரெக்டா தானே சொன்னான். நீ எங்க கிட்டயே எப்பயாவது தான் சிரிச்சு நார்மலாா பேசுற. அண்ணி பாவம் டா, அவங்க சின்ன பொண்ணு. நீ இப்படி மிலிட்டரி ஆபீஸர் மாதிரி வெரப்பாவே இருந்தினா, அவங்களுக்கு எப்படி உன்னை..??? அவங்களுக்கு உன்னை பிடிக்கிறது எல்லாம் கூட ஒரு பக்கம் இருக்கட்டும். முதல்ல அவங்க உன் கிட்ட நார்மலா பேசிபழகணும் இல்ல…!!” என்று கேட்டான்.
வருண்: கேஷுவலாக அவர்களை பார்த்தவன், “அவளுக்கு ஒன்னும் என்ன பிடிக்க தேவையில்லை.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான். 😒
அவன் சொன்னதை கேட்ட விஷ்ணுவும், ஹரியும், அதிர்ச்சி அடைந்தனர். இப்போது விஷ்ணுவிற்கு ரித்திகாவை நினைத்து கவலையாக இருந்தது. அதனால் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வருணை பார்த்தவன், “அப்ப உங்களுக்கு ரித்திகா அக்காவ பிடிக்கலையா அண்ணா..??? ப்ளீஸ் அண்ணா அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்கள ஹர்ட் பண்ணிடாதீங்க.” என்று மெல்லிய குரலில் சொன்னான்.
வருண் என்னமோ எல்லாமே எனக்கு புடிச்சு தான் இங்க நடக்கிற மாதிரி நீ ஏன் என்ன கேள்வி கேக்குற விஷ்ணு.?? நான் அம்மாவுக்காக தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிறேன்னு உங்களுக்கு தெரியாதா…??? அவ நல்லவன்னா, அப்ப நான் கெட்டவனா…???” என்று கடுப்பான குரலில் கேட்டான்.
ஹரி: “ஏய்… உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா டா…??? அவன் சொல்ல வர பாயிண்ட நீ தான் புரிஞ்சுக்காம பேசுற. உனக்கு வேணா இது கம்பல்சன்ல நடக்கிற மேரேஜா இருக்கலாம். ஆனா அந்த பொண்ணுக்கு இதுப்தான் ஃபர்ஸ்ட் மேரேஜ். சோ அவங்களுக்கும் எப்படி எல்லாம் உன் கூட வாழனும்னு ஆசை இருக்கும் இல்ல…???
உனக்கு அவங்கள புடிக்கலைன்னா கூட பரவால்ல. ஜஸ்ட் அவங்க கூட பிரண்டா இருக்கவாது ட்ரை பண்ணு. அதுவே போதும் போகப்போக உங்களுக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் வந்துரும்.” என்று தன்னுடைய அண்ணனின் வாழ்க்கையின் மீது இருக்கும் அக்கரையில் சொன்னான்.
வருண் “அவ இந்த வீட்டுக்கு அம்மா சொன்ன மாதிரி சித்தார்த்தோட அம்மாவாக மட்டும் தான் வரப் போறா. நீங்க சொல்ற மாதிரி என்னால அவ கூட பிரண்டா கூட இருக்க முடியாது. நான் ஏற்கனவே ஜான்விக்கு துரோகம் பண்றேன்னு நினைச்சு நினைச்சு கில்ட்டி ஃபீலிங் -ல இருக்கேன். நீங்களும் தேவை இல்லாம எதையாச்சும் பேசி என்னை டென்ஷன் பண்ணிட்டு இருக்காதீங்க.
இப்ப நான் அங்க அவள பாக்க வர்றதே அவ கிட்ட, என்னோட லைஃப்ல அவளுக்கான இடம் எதுன்னு சொல்லி புரிய வைக்க தான். கல்யாணத்துக்கு முன்னாடியே அவளுக்கு எல்லாமே தெரியணும். ஊருக்கு மட்டும் தான் அவ எனக்கு பொண்டாட்டியா இருப்பா. அத அக்செப்ட் பண்ணிக்கிட்டு அவ ஓகே ன்னு சொன்னா மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்கும். இன்னைக்கு நான் அவகிட்ட எல்லாத்தையும் பத்தியும் தெளிவா பேசுனஅப்புறம் தான் இந்த கல்யாணத்தை பத்தி முடிவு எடுக்க போறேன்.” என்று உறுதியான குரலில் சொன்னான்.
அதைக் கேட்ட விஷ்ணுவும், ஹரியும், என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்து போய் நின்றனர். ஒரு பக்கம் அவர்களுக்கு இவர்களுடைய திருமண வாழ்வு எப்படி இருக்குமோ என்ற பயம் இருந்தாலும், இன்னொரு பக்கம் திருமணத்திற்கு பின் கண்டிப்பாக இவர்களிடம் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த மாற்றம் வருகிறது இல்லையோ இருந்தாலும் அப்படி நினைத்து தங்களுடைய மனதை தேற்றிக் கொள்வதை தவிர அவர்களால் வேறு எதையும் செய்ய முடியவில்லை. அதனால் வருனிடம் தேவை இல்லாமல் பேசுவதை விட்டுவிட்டு, தாங்கள் கொண்டு வந்த பேண்ட் சட்டை அவனை அணிந்து கொள்ளும்படி வற்புறுத்தி அதை அணிவித்து அவனை அழைத்து கொண்டு கீழே வந்தனர்.
சீதாவிற்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லை என்பதால், அவள் செண்பகத்துடன் ரித்திகாவின் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை. அதனால் தன்னுடைய சார்பாக தன்மகள் தர்ஷினியை செண்பகத்துடன் செல்லும் படி அனுப்பி வைத்தாள். என்ன தான் தர்ஷினி வருணை முழுவதுமாக மறந்துவிட்டு இருந்தாலும், அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு பெண் பார்க்க தானே அவனுடன் செல்ல வேண்டுமா..??? என்று நினைத்து அவள் வருத்தப்பட்டாள்.
ரித்திகாவின் வீடு அருகிலேயே இருப்பதால் நடந்து செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள், தங்கள் கையில் பூக்கள், பழங்கள், வாழைப்பழம் வெற்றிலை பாக்கு, பல வகையான இனிப்புகள், பட்டுப் புடவை, தங்க நகைகள், என அனைத்தையும் ஒவ்வொரு தட்டில் வைத்து அதை ஒவ்வொருவரும் தங்களுடைய கைகளில் ஏந்திய படி ரித்திகாவின் வீட்டிற்கு உறுதி பேசுவதற்காக நடந்தே சென்றனர். செண்பகம் வெகு தூரம் நடக்க கூடாது என்பதால் அவள் மட்டும் வீல்ச்சாரில் இருக்க, தாரா பாதுகாப்பாக அவளை அழைத்து வந்து கொண்டு இருந்தாள்.
வருணை தவிர அனைவரின் கைகளிலும் சீர்வரிசை தட்டுகள் இருந்தன. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒரே மாதிரியாக ப்ளூ கலரில் ஆடை அணிந்து, விஷ்வாவும் செண்பகமும் முன்னே செல்ல மற்றவர்கள் அனைவரும் அவர்களை பின் தொடர்ந்து அணிவகுத்து சென்றனர். அவர்கள் வரும் காட்சியை சந்தோஷ் மன வேதனையுடன் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தான். 💔 😞 கண்டிப்பாக தனக்கு ரித்திகா விஷ்வாவிடம் போட்டியிடும் தகுதி கூட இல்லை என்று நினைத்த சந்தோஷ், கண்களில் கண்ணீருடன் மடம் உடைந்து தன்னுடைய வீட்டிற்குள் சென்று கதவை சாத்தி தாலிட்டான். 😭 💔
சந்தோஷின் மன நிலையை புரிந்து கொண்ட அவனுடைய பாட்டி, அவனை ஆறுதல் படுத்த முயற்சித்தார். நாராயணன் குடும்பத்தினர் அருகே வந்துவிட்டதை கவனித்த ஷாலினி, வேகவேகமாக தன்னுடைய வீட்டின் கதவை பூட்டிவிட்டு ரித்திகாவின் வீட்டிற்கு ஓடி வந்தாள். இன்று தீம் கலர் ப்ளூ என்று விஷ்ணு அவளிடம் சொல்லி இருந்ததால், அவளும் ப்ளூ கலர் பட்டுப் புடவை அணிந்து இருந்தாள். ரித்திகா தனக்காக புடவை வாங்க ஷாப்பிங் செல்லும்போது ஷாலினிக்கு அவள் தான் இந்த புடவையை வாங்கி கொடுத்து இருந்தாள்.
ரித்திகாவின் வீட்டில்…
ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை என்பது போல, ரித்திகாவின் பெற்றோர்களும் தங்களால் முடிந்தவரை தங்களுடைய வீட்டை அழகுப்படுத்தி வைத்து இருந்தனர். பின் அவர்களுக்காக வெல்கம் டிரிங்க் முதல் உணவுகள் வரை அனைத்தையும் தாங்களே தங்களுடைய கைகளால் தயார் செய்து வைத்து இருந்தனர். அவர்களுடைய வீட்டில் மூன்று பேர் அமரும் அளவிற்கு ஒரே ஒரு சோஃபா தான் இருந்தது. அதனால் வாடகைக்கு பிளாஸ்டிக் சார்களை வாங்கி ஆங்காங்கே போட்டு வைத்து இருந்தனர்.
ரித்திகா தயாராகி விட்டாளா என்று பார்ப்பதற்காக அவளுடைய அறைக்கு சென்றாள் ஷாலினி. ரித்திகாவும் அவளை போல் ப்ளூ கலரில் தான் பட்டுப்புடவை அணிந்து இருந்தாள். தன்னுடைய நீண்ட கூந்தலை லூசாக பின்னி இருந்த ரித்திகா, அளவான ஒப்பனைகளுடன்; தலை நிறைய மல்லிகை பூ வைத்து 🌼 வானில் இருந்து இந்த மண்ணுலகத்திற்கு இறங்கி வந்த அப்சாரசை போல்; பேரழகியாக இருந்தாள். அதனால் அவளை ரசித்துப் பார்த்த ஷாலினி, “ப்பா…!!! அக்கா செம்மையா இருக்கீங்க போங்க. 😍 💗 நான் மட்டும் பையனா இருந்தேன்னு வைங்களேன்… நீங்க என்ன விட பெரிய பொண்ணா இருந்தாலும் பரவால்லன்னு எப்படியாவது உங்களை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிப்பேன்.
வருண் மாமா உங்கள பாத்த உடனே அப்படியே ப்பிளாட் ஆகி மயக்கம் போட்டு விழுக போறாரு பாருங்க. அப்புறம் விஷ்ணு இது தான் அழகுல மயங்குறதுன்னு கேட்டு உங்களை கலாய்ச்சி சாவடிப்பான்.” என்று கிண்டலாக சொல்லி சிரித்தாள். 😂 😂 😂
ரித்திகா: “அடியே வாய மூடு டி செத்த நேரம். அவ அவ இங்க ஏற்கனவே பயத்துல அல்லு விட்டு போய் உட்கார்ந்துருக்கா. நீ வேற நேரம் காலம் புரியாம கிண்டல் பண்ணிட்டு இருக்கிறவ..!!! போ டி… அவங்க வந்துட்டாங்களான்னு முதல்ல போய் பாரு.” என்று சொல்லி அதட்டினாள்.
ஷாலினி: “உங்க ஆளு, என் ஆளு, அத்தை எல்லாருமே வீட்டு கிட்ட வந்துட்டாங்க. இந்நேரம் உள்ள வந்திருப்பாங்க. இருங்க நான் பாத்து சொல்லுறேன்.” என்று சொன்னவள் லேசாக கதவை திறந்து அதன் கேப்பில் வெளியே எட்டிப் பார்த்தாள்.
தரையில் விரிக்கப்பட்டு இருந்த ஒரு பெரிய ஜம்காலத்தில், தாங்கள் கொண்டு வந்த அனைத்து தட்டுகளையும் தர்ஷனும், தர்ஷனியும், சோபியாவும் ஆதித்யாவும் அடுக்கிக் கொண்டு இருந்தனர். அந்த சிறிய வீடு புதிதாக வந்தவர்களின் கூட்டத்தினால் நிறைந்து இருந்தது. சுதாகரும், ஹரியும், வருனும், சோபாவில் அமர்ந்து இருந்தனர். பிராத்தனாவும், விஷ்ணுவும், அவர்களின் அருகே நின்று கொண்டு இருந்தனர். தன்னுடைய வீல்சேரில் செண்பகம் அமர்ந்திருக்க, அவளின் அருகே நின்று கொண்டு இருந்தான் சித்தார்த். பிராத்தனாவிற்கும் சீதாவை போலவே இந்த சம்பந்தத்தில் பெரிதாக விருப்பமில்லை.
இருப்பினும் எது எப்படி இருந்தாலும் சித்தார்த்தும், வருணும், மகிழ்ச்சியாக இருந்தால் தனக்கு அதுவே போதும் என்று நினைத்து தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். அவர்கள் அனைவருக்கும் தன் ஒருவரால் ஸ்நாக்ஸ் கொடுக்க முடியாது என்று நினைத்த ரேவதி, ரித்திகாவின் அறையில் இருந்த ஷாலினியை அழைத்தாள். ரித்திகாவின் தங்கை என்ற முறையில் அவர்களை வரவேற்று உபசரித்தாள் ஷாலினி. இதற்கிடையில் அவளும் விஷ்ணுவும் தங்களை மாறி மாறி ஒருவரை ஒருவரர் சைட் அடித்துக் கொள்ள தவறவில்லை.
– நேசம் தொடரும்….
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)