Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 124

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 124

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 124: ரித்திகாவை முத்தமிட்ட வருண் (பார்ட் 1)

செண்பகம் ஹரி மற்றும் தர்ஷிரியின் திருமணத்திற்கு ஒப்பு கொண்டதால், “இப்ப நீங்க சொன்னத கேட்டவுடனே எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்குன்னு உங்களுக்கு தெரியாது. ஆனா இந்த கல்யாணம் நடக்குமான்னு எனக்கு இன்னும் பயமா தான் இருக்கு. ஹரிய கட்டிக்கிறதுக்கு ஆசைப்பட்டு தானே இந்த ஆராதனா இங்கே வந்து உட்கார்ந்து இருக்கா. 

விஷ்வா வேற அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கான். நீங்க என்ன வேணா நினைச்சுக்கங்க, எனக்கு இந்த விஷயத்துல விஷ்வா மேல கோவம் தான். நம்ம வீட்டிலேயே ரெண்டு பொண்ணு இருக்கும்போது அப்படி என்ன இந்த குடும்பத்தை கெடுத்து அழிச்சவன் குடும்பத்தில போய் பொண்ணு எடுக்கணும்னு நமக்கு தலையெழுத்தா..???” என்று சிறு கோபத்துடன் கேட்டாள் சீத்தா. 😒 

செண்பகம்: “பரவால்ல மா. நானும் இந்த விஷயத்துல அவன் மேல கோவமாமா தான் இருக்கேன். நாங்க உன்ன மதிக்கிறது இல்லைன்னு நினைச்சு நீ வருத்தப்படுற. ஆனா உண்மை என்னான்னா வர.. வர… என் பிள்ளைங்க என்னையவே மதிக்கிறது இல்ல. இந்த விஷயத்துல நான் சும்மா விடறதா இல்ல. நானும் பாக்குறேன். என்ன மீறி விஷ்வா எப்படி ஹரிக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்கிறான்னு. நான் சொல்றேன் சீத்தா; தர்ஷினிக்கும், ஹரிக்கும், தான் கல்யாணம் நடக்கும். நான் நடத்திக் காட்டுகிறேன்.” என்று உறுதியான குரலில் சொன்னாள். 

செண்பகத்தின் குரலில் இருந்த உறுதி சீத்தாவிற்கு நிம்மதியை கொடுத்தது. அதனால் தான் வந்த வேலை சிறப்பாக முடிந்து விட்டது என்று நினைத்த சீத்தா, வழக்கம்போல் தன்னுடைய நாரதர் வேலையை தொடங்கினாள். 

சீத்தா: “எனக்கு இது போதும் அண்ணி. உங்க வார்த்தையில எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆமா நீங்க நம்ம விஷ்வாவுக்கு யார பொண்ணு பார்த்து இருக்கீங்க..???” என்று ஒன்றும் தெரியாதவளை போல் கேட்டாள். 

ராகவியைப் பற்றி அவளிடம் சொன்ன செண்பகம், தான் அவளை சந்தித்த நாள் முதல் இன்று அவர்களுடைய வீட்டில் நடந்த வரை அனைத்தையும் தெளிவாக சொல்லி முடித்தாள். செண்பகம் பேசுவதை கேட்க கேட்க சீத்தாவின் முகம் பல கோணங்களில் மாறிக்கொண்டே இருந்தது. அந்த ராகவி யார் என்றே சீத்தாவிற்கு தெரியாத போதிலும், முகம் தெரியாத அந்த பெண்ணிடம் பணம், காசுவும், அந்தஸ்தும், இல்லை என்பதால்; சீத்தாவிற்கு அவளை பிடிக்கவில்லை. என்ன தான் தன்னுடைய மகளை விஷ்வா திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், அதற்காக இப்படி யாரோ ஒரு தராதரம் அற்ற பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்வதற்கு அவளுடைய மனம் இடம் கொடுக்கவில்லை.

சீத்தாவின் முக பாவங்களை வைத்து அவளுடைய மனதில் இருப்பதை படித்து தெரிந்து கொண்ட செண்பகம் அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட்டு, “இவ முழியே  சரி இல்லையே….!!! அடுத்து என்ன ஏழரைய கூட்ட காத்திருக்காளோ..!!” என்று நினைத்த செண்பகம் அமைதியாக சீத்தாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள். 

சீத்தா: “நீங்க எல்லா விஷயத்துலயும் சரியா தான் இருக்கீங்க. ஆனா உங்க பிள்ளைங்க கல்யாண விஷயத்துல மட்டும் ஏன் இப்படி பண்றீங்கன்னு எனக்கு புரியவே இல்ல அண்ணி. எப்ப பாத்தாலும் ஏன் வேலைக்காரங்க குடும்பத்து கூடவே சம்மதம் பண்றீங்க…??? இப்படி இல்லாதவங்க வீட்டில போய் பொண்ணு எடுத்தா, நம்ம பிள்ளைகளுக்கு தானே ஏதோ குறை இருக்குன்னு ஊரெல்லாம் பேசுவாங்க…!!! 

இத பத்தி எல்லாம் நீங்க யோசிச்சு பாக்க மாட்டீங்களா…??? எங்க அண்ணனும் தான் உங்களை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆனா தராதரம் பாத்து தானே காதலிச்சாரு…??? ஏன் அவ்ளோ எதுக்கு எங்க அண்ணனுக்கு மட்டும் உங்களை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி இல்லைன்னா உங்க ஐயா இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டுருப்பாரா…??? இனம் இனத்தோட தான் சேரனுன்ற மாதிரி, பணம் பணத்தோட தான் சேரனும். இல்லாத வீட்டில இருந்து வர்றவ, நாளைக்கு இந்த சொத்து மேல ஆசைப்பட்டு நம்மளையே ஏதாவது பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க…???” என்று நெட்டுூரம் படித்தாள். 

செண்பகம்: “நான் விஷ்வாவுக்கு பொண்டாட்டிய மட்டும் தேடலா மா. நம்ப சித்தார்த்தையும் வர்றவ நல்லா பாத்துக்கணும்ல…??? அந்த பொண்ண தவிர வேற யாரையும் சித்தாரத்துக்கு புடிக்கல. இவளையும் விட்டுட்டா, விஷ்வா வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான். போற போக்குல சித்தார்த்துக்காகவாவது அவன் ராகவிய ஏத்துக்கிட்டு வாழ்வான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நம்ம கிட்ட இல்லாத காசு, பணமா சீத்தா..?? அவ கொண்டு வந்து தான் இங்க நிறைய போகுதா என்ன…??” என்று சொல்லி நிதர்சனத்தை அவளுக்கு புரிய வைக்க விரும்பினாள்.

ஆனால் அவற்றை எல்லாம் புரிந்துகொள்ளும் மன நிலையில் சீத்தா இருக்கவில்லை. “நீங்க என்ன சொன்னாலும், எனக்கு அந்த வீட்டில சம்பந்தம் பண்றதுல இஷ்டம் இல்ல. நான் இப்ப இதை உங்க கிட்ட சொல்ல வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா, நீங்க பேசறத எல்லாம் பாத்துட்டு என்னால சொல்லாம இருக்க முடியல.” என்று சொல்லி புதிர் போட்டாள். 

செண்பகம்: “என்ன சொல்ற..?? நீ எதைபத்தி பேசுறன்னே எனக்கு புரியல.” என்று குழப்பமாக கேட்டாள். 🙄

சீத்தா: “நாங்க இங்க வரும்போது தர்ஷன் மட்டும் தான் இங்க இருந்தான். என் வீட்ல யாருமே இல்லைன்னு கேட்டதுக்கு, நடந்தது எல்லாத்தையும் சொன்னவன்; விஷ்வாவுக்கு ஏதோ உடம்பு சரி இல்லைன்னு சொன்னான். நானும் என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறி அடிச்சுக்கிட்டு அந்த சிவா பையனுக்கு போன் பண்ணிேட்டேன்.” என்று சொன்னவள் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அப்படியே நிறுத்தி விட்டாள்.

செண்பகம்: “என்ன சொல்ற சீத்தா..?? விஷ்வாவுக்கு உடம்பு சரி இல்லையா…!!! ஏன் இத பத்தி என் கிட்ட யாரும் சொல்லல..??? உனக்கு தான் தெரிஞ்சிருக்கே.. அப்ப நீயாவது என் கிட்ட சொல்லி இருக்கலாம்ல்ல..???” என்று பதட்டமாக கலங்கிய கண்களுடன் சொன்னவள், விஷ்வாவிற்கு கால் செய்வதற்காக தன்னுடைய மொபைல் போனை தேடிக் கொண்டு இருந்தாள். அவளுடைய இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. 🥺

செண்பகத்தின் கையைப் பிடித்த சீத்தா, “பதட்டப்பிடாதீங்க அண்ணி. அவனுக்கு ரொம்ப உடம்பு முடியலன்னா, நான் இப்படி உங்க கூட உட்கார்ந்து பேசிட்டு இருப்பனா…??? நீங்க இப்படி டென்ஷன் ஆவீங்கன்னு தான் அவங்க உங்க கிட்ட சொல்லாம விட்டுருப்பாங்க.” என்று சொன்னாலே தவிர விஷ்வாவிற்கு என்ன ஆனது என்று அப்போதும் சொல்லவில்லை. 

அதனால் பதட்டத்திலும், பயத்திலும், செண்பகத்தின் இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. கண்ணீர் நிறைந்த கண்களோடு சீத்தாவை பார்த்த செண்பகம், “முதல்ல என் பையனுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லு.” என்று அவசரமான குரலில் கேட்டாள். 🥺 😥

சீத்தா: “ஏதோ தடுக்கி கண்ணாடி டேபிள் மேல போய் விழுந்துட்டானாம். அதனால கண்ணாடி துண்டெல்லாம் மேல குத்தி ரத்தம் வந்து இருக்கும் போல. டாக்டர் -லாம் வந்து செக் பண்ணிட்டு தான் போனாராம். விஷ்வா இப்ப நல்லா தான் இருக்கான். நான் பேசும்போது கூட ஏதோ ஒரு மீட்டிங்கு போயிட்டான்னு சிவா சொன்னான். அவனுக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு நெனச்சு பயப்படாதீங்க.” 

என்று அவள் ஆறுதலாக பேசினாலும் அவளுடைய வார்த்தைகள், செண்பகத்தை ஆறுதல் படுத்தவில்லை. இன்னும் அவளுக்கு பதட்டமாகவே இருந்தது. 😟 ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத சீத்தா, “நீங்களே பாருங்க அண்ணி..!! இன்னைக்கு தான் அவங்க வீட்ல போய் உறுதி பேசிட்டு வந்து இருக்கீங்க. அதுக்குள்ள இன்னைக்கு நம்ம வீட்டு பையனுக்கு ரத்த காயம் ஆகி இருக்கு. எனக்கு என்னமோ இதெல்லாம் சரியான சகுனமா படல. ஒரு வேள அவ ராசி கெட்டவளா இருந்து, இப்ப அவளை கட்டிக்கிட்டு வந்து; நம்ம பையனுக்கு ஏதாவது ஆயிட்டா என்ன பண்றது..??? ஏற்கனவே ஒருத்தி அல்பாய்ஸ்ல போயிட்டா. இப்ப இவ வந்து, நம்ப விஷ்வாவுக்கு ஏதாச்சு ஆயிடுச்சின்னா.. இழப்பும், வலியும், நமக்கு தானே..!!! உயிர் போனா… போனது தான். அம்மான்னா வருமா..?? ஐய்யான்னா வருமா..?? 

அதான் இந்த சம்பந்தம் வேணான்னு உங்க கிட்ட சொல்லலாம்னு தான், நான் இப்ப உங்க கிட்ட பேசறதுக்கே வந்தேன். அவளுக்கு என்ன இன்னைக்கு விஷ்வாவுக்கு இது இரண்டாவது கல்யாணம்ன்னு கூட பெருசா நினைக்காம அவனை கல்யாணம் பண்ணிக்கிறவ, நாளைக்கே அவனுக்கு ஒன்னுனா கூட, ஈஸியா அத தொடச்சு போட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிட்டு போய்டுவா. ஆனால் நம்ப அப்படி இருக்க முடியாதுல்ல அண்ணி…!!!” என்று சொல்லி ஏற்கனவே பதட்டத்தில் இருந்த செண்பகத்தின் பயத்தை இன்னும் அதிகரித்துக் கொண்டு இருந்தாள். 

செண்பகத்திற்கு பதட்டத்தில் முகம் எல்லாம் வியர்த்துப் போய் போய்விட்டது. 😬 “இல்ல இல்ல அப்படி எல்லாம் இருக்காது. ஏற்கனவே கொஞ்ச நாளா விஷ்வாவுக்கு உடம்பு சரி இல்லை. அதனால அவன் ஏதோ சரியா கவனிக்காம போய் தடுக்கி டேபிள் மேல விழுந்து இருப்பான். அதுக்கு பாவம் அந்த பொண்ணு என்ன பண்ணுவா..???

அவளும் சரி, அவளோட குடும்பமும் சரி, ரொம்ப நல்லவங்க. அவளுக்கு இருக்கிற நல்ல மனசுக்கே, அவளை கல்யாணம் பண்ணா என் பையனுக்கு ஒன்னு ஆகாது. இந்த கல்யாணம் சித்தார்த்துக்காக தான் நடக்குது. ஆனாலும் அவளும் விஷ்வாவும் ரொம்ப வருஷம் நல்லா வாழ்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று சீத்தாவிற்கு சொல்லும் சாக்கில், தனக்குள்ளும் ஒரு முறை தன்னுடைய முடிவு சரி தான் என்று சொல்லிக் கொண்டாள். 

செண்பகம் என்ன சமாதானம் சொன்னாலும், சீத்தா அதை எல்லாம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதையும், செண்பகம் அசோகர்யமாக இருப்பதையும் சிறிது தூரத்தில் தள்ளி நின்று கொண்டு அவர்களையே கவனித்துக் கொண்டு இருந்த செவ்வகத்தின் பாடி கார்ட் சோபியா, கவனித்துக் கொண்டு இருந்தாள். ஏற்கனவே செண்பகத்திற்கு இதய நோய் இருக்கும் போது, அவள் இவ்வளவு டென்ஷன் ஆவது அவருடைய உடம்பிற்கு நல்லதில்லை என்று நினைத்த சோபியா அவர்களுடைய பேச்சுவார்த்தையை தடுக்க தான் நினைத்தாள். 

ஆனால் இவர்களுடைய குடும்ப விவாகரங்களில் தலையிடும் உரிமை அவளுக்கு இல்லை என்பதால் வேறு வழி இன்றி அமைதியாக நின்று கொண்டு நடப்பதை பார்த்து கொண்டு இருந்தாள். சீத்தா மீண்டும் மீண்டும் சென்பகத்தின் மனதை மாற்றுவதற்காக ராகவியை பற்றி தவறாக பேசிக் கொண்டு இருந்தாள். அவள் என்ன தான் சொன்னாலும், செண்பகத்திற்கு கடவுளின் மீதும், ராகவியின் மீதும், அதிக நம்பிக்கை இருந்தது. ஆனால் சீத்தா பேசுவதை கேட்பதற்கு செண்பகத்திற்கு டென்ஷனாகவும், எரிச்சலாகவும், இருந்தது. 😬 ஒரு கட்டத்தில் செண்பகத்திற்கே இது என்னுடைய குடும்ப விஷயம் நீ இதில் தலையிடாதே என்று சொல்லிவிடலாம் என்று கூடட தோன்றியது.

ஆனால் தன்னுடைய நாத்தனாரிடம் அப்படி எடுத்துறிந்து பேசுவதற்கு அவளுக்கு மனம் வரவில்லை. அதனால் அவள் பதிலுக்கு வாக்குவாதம் செய்ய சீதாவும் விடாப்பிடியாக தான் சொன்னது தான் சரி என்று பேசிக்கொண்ட இருக்க, ஏற்கனவே பலவீனமான ஓட்டை உடைய இதயத்துடன் இருக்கும் செண்பகம் மன அழுத்தம் காரணமாக, திடீரென்று தன்னுடைய நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே மயங்கி சரிந்தாள். அதை பார்த்தவுடன் சோபியா அங்கே வேகமாக ஓடி வந்தாள். 

சீத்தாவும் இப்படி  நடக்கும்  என்றும் எதிர்பார்த்து இருக்காதுதால், அவளும் பதட்டத்திலும், பயத்திலும், இருந்தாள். 😬 😟 என்ன தான் சில விஷயங்களில் செண்பகத்தின் செய்கைகள் அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும், இப்படி அவளுக்கு தவறாக ஏதேனும் நடக்க வேண்டும் என்றெல்லாம் சீத்தா ஒருபோதும் நினைத்ததில்லை. அதனால் தன்னுடைய அண்ணிக்கு எதுவும் ஆக கூடாது என்ற பயம் அவளுக்கு ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் தன்னுடன் பேசும்போது தான் செண்பகத்திற்கு இப்படி ஆகிவிட்டதால்; இதற்கான பழி தன் மீது வந்து விழுந்து, ஒரு வேளை செண்பகம் இறந்து விட்டால், இதற்கு தான் தானே காரணம் என்று விஷ்வா தன்னை நிற்க வைத்து கேள்வி கேட்டால் ,என்ன செய்வது என்று யோசித்து பதட்டமானாள். 😐 😟

இதற்கிடையில் சோபியா செண்பகத்தின் பல்ஸை பிடித்து பார்த்தாள். பல்ஸ் ரேட் மிகவும் லோவாக இருந்தது. அதனால் பயந்து போனவள், நாராயணன் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து விட்டு; பின் விஷ்வாவிற்கு கால் செய்தாள். சீத்தா சொன்னது போல், விஷ்வா இன்னும் அந்த மீட்டிங்கில் தான் இருந்தான். அதனால் அவனுடைய மொபைல் போன் சைலன்ட் மோடில் இருந்தது. 

சோபியா இரண்டு, மூன்று, முறை கால் செய்தும் விஷ்வா அந்த கால் ஐ அட்டென்ட் செய்யவில்லை. அதனால் சிவாவிற்கு கால் செய்தாள். சிவாவும் விஷ்வாவுடன் அதை மீட்டிங்கில் தான் இருந்தான். அதனால் அவனும் எடுக்கவில்லை. அடுத்து தான் யாருக்கு கால் செய்து இந்த தகவலை சொல்ல முடியும் என்று யோசித்துப் பார்த்த சோபியாவிற்கு ஆதித்யாவின் ஞாபகம் வந்தது. அதனால் அவனுக்கு கால் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு, செண்பகத்தை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றாள். 

அந்த ஆம்புலன்ஸ்க்கு பின்னேயே, தங்களுடைய கார் ஐ எடுத்து கொண்டு சீத்தா தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தாள். ஆதித்யா; விஷ்வா விஷ்ணு, ஹரி, பிரார்த்தனா என அனைவருக்கும் இந்த விஷயத்தை இன்பார்ம் செய்தான். அந் செய்தியை கேட்ட அவர்கள் அனைவரின் இதயமும் ஒரு நொடி வேதனையால் நின்று துடித்தது.💔 அதனால் அடுத்த கணமே தாங்கள் செய்து கொண்டு இருந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, ஹாஸ்பிடலுக்கு வந்துு சேர்ந்தனர். 

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured