Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 72

மூர்கனின் காதலி CH 72

by Thenaruvi Tamil Novels
146 views

அத்தியாயம் 72

வெற்றி கிட்ட கலைச்செல்வி அவனை லவ் பண்றதா மேகா சொன்னா. அப்புறம் கலைச்செல்விய தேடிப் புடிச்சு, அவ கையப் புடிச்சு தரதரன்னு தனியா இழுத்துட்டுப் போய், அவகிட்ட மூச்சு வாங்க, “நீ வெற்றி மாமாவ லவ் பண்றேன்னு நான் அதுகிட்ட சொல்லிட்டேன். இப்ப நான் உன்னை அனுப்பி ப்ரோபோஸ் பண்ணச் சொல்றேன். நீ ஓகே சொல்லணும்னு மாமாகிட்ட சொல்லிட்டு வந்துருக்கேன். நீ போய் சீக்கிரம் அவன்கிட்ட ப்ரோபோஸ் பண்ணு போ,” ன்னு மேகா சொன்னா.

ஷாக் ஆன கலை எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாம, “யாருடி நீ, பைத்தியக்காரியா…? உன்கிட்ட நான் உன் மாமன லவ் பண்றேன்னு சொன்னேனா..? அவன்கிட்ட போய் எதுக்குடி அப்படி சொன்ன..? இப்ப அவன் என்னப் பத்தி என்ன நெனச்சிருப்பானோ தெரியலையே… இனிமே எப்படி நான் அவன் மூஞ்சியப் பாத்து பேச முடியும்..? ஏண்டி மேகா இப்படிப் பண்ணி தொலைஞ்ச..?” ன்னு புலம்ப, அவள அடிக்கப் போற மாதிரி பாவனை செஞ்ச மேகா,

“அப்படியே ஒண்ணு வெச்சேன்னா பாரு… இன்னும் எத்தனை வருஷத்துக்குடி உன் லவ்வை உன்னோட புக்குக்குள்ளயும் மனசுக்குள்ளயும் ஒளிச்சு வச்சுக்கிட்டே இருப்ப..! நீயா அவன்கிட்ட சொல்லுவேன்னு நானும் இத்தனை வருஷமா வெயிட் பண்ணிப் பாத்துட்டேன். இதுக்கு மேலயும் உங்கள இப்படியே விட்டா, நீங்க வயசாகி கிழவன் கிழவி வேணா ஆவீங்களே தவிர, கல்யாணம் பண்ணி புள்ள குட்டி பெத்து அப்பா அம்மா ஆக முடியாது. இதுக்கப்புறம் இந்த மாதிரி ஒரு சான்ஸ் உனக்கு எப்பவும் கிடைக்காது. ஒழுங்கா உன் மனசுல இருக்குறத போய் அவன்கிட்ட சொல்லு. அவன் உன்ன வேண்டாம்னு சொல்ல மாட்டான். என்ன நம்பு,” ன்னு உறுதியா சொன்னா.

“அது சரி, உனக்கு எப்படி நான் அவன லவ் பண்றது தெரியும்?” ன்னு கலை அவகிட்ட கேட்க, “இப்ப அதான் ரொம்ப முக்கியம்ல… ஒழுங்கா ஓடிப்போயிரு. இல்லன்னா நானே எங்க அண்ணாகிட்ட சொல்லி இங்க வந்திருக்கிற எங்க சொந்தக்காரங்க பொண்ணுல எவளையாவது ஒருத்தியப் புடிச்சு வெற்றிக்கும் கையோட நிச்சயம் பண்ணிப்புடுவேன் பாத்துக்கோ!” ன்னு அவள மிரட்டுனா மேகா.

“ஆத்தி… நீ செஞ்சாலும் செய்வடி. நான் போய் அவன்கிட்ட பேசுறேன்,” ன்னு சொன்ன கலைச்செல்வி, வெற்றி எங்க இருக்கான்னு கேட்டுட்டு அவனப் பாக்கப் போனா.

மேகா விட்டுட்டுப் போன அதே தென்னை மரத்தடியில வெற்றி தனியா நின்னுட்டு இருக்க, திக்திக் இதயத்தோட அவன் பக்கத்துல போன கலைச்செல்வி, அவன் கண்ணப் பாத்து பேசக்கூட வாய் வராம திருதிருன்னு முழிச்சா. அவளோட அந்தப் பார்வையே மேகா சொன்னது உண்மைதான்னு அவனுக்கு உணர்த்திவிட, “முன்னாடியே சொல்லிருக்கலாமே…!” ன்னு கேட்டான் வெற்றி.

“நீதான் உன் அத்தமவ மேல பித்து பிடிச்சு திரிஞ்சியே… அப்புறம் எப்படி நான் என் மனசுல இருக்குறத சொல்ல முடியும்?” ன்னு இத்தனை வருஷங்களா தன் மனசுல தேக்கி வெச்சிருந்தத கோவமா கேட்டு கலைச்செல்வி வெளிப்படுத்த, அவளப் பாத்து லேசா சிரிச்ச வெற்றி, “அதான் அவ எனக்கு இல்லைன்னு ஆயிடுச்சுல்ல… நான் பைத்தியம் பிடிச்சு தனியாதானே சுத்திட்டு கெடக்கிறேன்… அப்புறம் சொல்றதுக்கு உனக்கு என்ன?” ன்னு கேட்டான்.
“நான் சொல்லியிருந்தா மட்டும் நீ உடனே எனக்கு ஓகே சொல்லிருப்பியா?” ன்னு கலைச்செல்வி கேட்க

“உடனே ஓகே சொல்லிருப்பேனான்னு தெரியல. ஆனா கண்டிப்பா உனக்கு நோ சொல்லிருக்க மாட்டேன்,” ன்னான் வெற்றி. அதனால கலங்குன கண்களோட அவனப் பாத்த கலைச்செல்வி, “இப்ப கேட்கிறேன்… நீ என்ன கட்டிக்கிறியா?” ன்னு கேட்க, “ம்ம்ம்… வா கட்டிக்கிறேன்!” ன்னு சொன்ன வெற்றி, தன் ரெண்டு கைகளையும் விரிச்சு அவள வரவேற்றான். அதனால ஓடிப் போய் இறுக்கமா அவன கட்டிக்கிட்ட கலைச்செல்வி, “ஐ லவ் யூ வெற்றி,” ன்னா

சில நாளைக்குப் பிறகு…

சென்னையில…

நாளை காலையில பிரம்ம முகூர்த்தத்துல விஷ்வாவுக்கும், மேகாவுக்கும் ஒரு பிரம்மாண்ட மண்டபத்துல கல்யாணம் நடக்கப்போகுது. அதனால டின்னர் முடிச்சுட்டு பெண்கள் எல்லாரும் ஒரே ரூம்ல கூடியிருக்க, மெஹந்தி ஆர்டிஸ்ட் பொண்ணு ஒருத்தி அவங்க கையில மருதாணி போட்டுட்டு இருந்தா.

சுவர்ல நல்லா சாய்ஞ்சு உக்காந்த மீரா, “ஏண்டி, பல வருஷமா ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருந்த இவளையே வெற்றிகிட்ட பேச வெச்சு இப்ப அடுத்த மாசம் இவங்களுக்கு கல்யாணமே நடக்கப் போகுது. நீயும் தானே விஷ்வா சார லவ் பண்ற… அவர்கிட்ட போய் உன் மனசுல இருக்குறத சொல்ல வேண்டியது தானே!” ன்னு மேகாகிட்ட கேட்டா.

“அதானே… என்ன மட்டும் என்கிட்ட எதுவும் சொல்லாம கொள்ளாம போய் நேரா உங்க மாமன்கிட்ட கோத்து விட்டிள்ள, அதே மாதிரி நானும் போய் நீ அவர லவ் பண்றேன்னு விஷ்வா அண்ணாகிட்ட சொல்லி வைக்கிறேன் இரு,” ன்னு கலைச்செல்வி வேகமா சொல்ல, “அடியே, நாளைக்கு எங்களுக்கு கல்யாணமே ஆகப் போகுதுடி. இதுக்கு மேல நான் போய் சொன்னா என்ன, சொல்லலைன்னா என்ன..? இத்தனை நாள் கழிச்சு நானே இப்ப தான் அவர் மேல எனக்கு இருக்குற லவ்வை ஃபீல் பண்ணிருக்கேன்.

நார்மல் ஹியூமன் பீயிங் எனக்கே அவர் மேல இருக்குற ஃபீலிங்ஸ அண்டர்ஸ்டாண்ட் பண்ண இத்தனை நாள் ஆகியிருக்கு. அவர் சரியான ரோபோ மண்டைடி. அவருக்கெல்லாம் என் மேல லவ் வந்தாலும் அத அவர் ஃபிராங்கா என்கிட்ட சொல்ல பல வருஷமாகும். அதுக்குள்ள உங்களுக்கு எல்லாம் குழந்தை பிறந்து நீங்க அத ஸ்கூலுக்கே அனுப்பிடுவீங்க,” ன்னு சொல்லிட்டு சிரிச்சா மேகா.

“அப்படி இல்லடி… முன்னாடில இருந்தே உனக்குப் பிடிச்சவன லவ் பண்ணி மேரேஜ் பண்ணனும்னு தானே நீ ஆசைப்பட்ட… நீ விஷ்வாவ மீட் பண்ணும் போது, எல்லார்கிட்டயும் அவர லவ் பண்றதா பொய் சொல்லியிருந்தாலும், இப்போ நிஜமாவே உனக்குள்ள லவ் வந்துருச்சுல்ல… அத நீ அவர் கிட்ட சொல்லிட்டீன்னா… இது நிஜமாகவே லவ் மேரேஜ் ஆயிடும்… எத்தனை பேருக்கு இந்த மாதிரி லவ் பண்றவனையே கல்யாணம் பண்ணிக்கிற ஆப்பர்ச்சூனிட்டி கிடைச்சிருக்கு சொல்லு..? விஷ்வா மாதிரி ஒரு பையன் என் லைஃப்ல வந்திருந்தா அவனப் பாத்து அடுத்த செகண்ட்டே நானெல்லாம் போய் எனக்கு உன்னப் பிடிச்சிருக்குன்னு ப்ரோபோஸ் பண்ணிருப்பேன். நீதான் ரொம்ப டிலே பண்ணிட்டு இருக்க!” ன்னு மீரா சொல்ல,

“இவ சொல்ற மாதிரி இது நிஜமாவே லவ் மேரேஜா நடந்தா நல்லாதான் இருக்கும்..! ஃபியூச்சர்ல எங்க கிட்ஸ் எங்களோட லவ் ஸ்டோரிய சொல்லச் சொல்லி கேட்டா, நான் தெரியாம உங்க அப்பாவ கிஸ் பண்ணிட்டேன். அதனால அவர் ஃபோர்ஸ் பண்ணி என்ன மேரேஜ் பண்ணிக்கிட்டாருன்னா சொல்ல முடியுமா..? எங்களுக்குன்னு ஒரு அழகான லவ் ஸ்டோரி நான்தான் எழுதணும். ஏன்னா அத யோசிச்சு எழுதுற அளவுக்கெல்லாம் விஷ்வாவுக்கு அறிவு இல்ல,” ன்னு நெனச்ச மேகா என்ன செய்யலாம்னு யோசிக்கத் தொடங்குனா.

எல்லாருக்கும் மருதாணி வெச்சு முடிச்ச உடனே மெஹந்தி ஆர்டிஸ்ட் அவளோட ரூமை விட்டுட்டுப் போயிட, மீராவும் கலைச்செல்வியுங்கூட தனக்குத் தூக்கம் வர்றதா சொல்லி அவரவர் ரூமுக்குப் போயிட்டாங்க. தன்னோட ரூம்ல தனியா இருந்த மேகா, அவ கையில செக்கச்செவேர்னு சிவந்திருந்த மருதாணியப் பாத்துட்டு, “அந்தப் பொண்ணு இந்த மெஹந்தி டிசைனுக்குள்ள விஷ்வா நேம எழுதியிருக்கிறதா சொன்னாங்களே… ஆனா அது எங்க இருக்குன்னு நமக்கே தெரியலையே..! நம்மள விட விஷ்வாவோட பிரைன்தான் ஷார்ப்பாச்சே… அவர்கிட்டயே நம்ம கையக் காட்டி இதுல இருக்குற அவர் நேம கண்டுபிடிக்கச் சொல்லி… என் கையில இருக்குற இதே நேம்தான் என் ஹார்ட்டுக்குள்ளயும் இருக்குன்னு அப்படியே சொல்லி ப்ரோபோஸ் பண்ணிடலாமா..? ஆனா நம்ம அப்படி சொன்னா அந்த மரமண்டைக்குப் புரியுமா..? புரியுறது கொஞ்சம் கஷ்டம்தான். அவனுக்குப் புரியலைன்னா, டைரக்ட்டா அவன் கண்ணப் பாத்து பட்டுன்னு டேய் விஷ்வா… நான் உன்ன லவ் பண்றேன்னு சொல்லிடலாம்,” ன்னு நெனச்ச மேகா விஷ்வாவ தேடிப் போனா.

போற வழியில தன் கண்ணுல பட்டவங்க கிட்ட எல்லாம், “விஷ்வா சாரப் பாத்தீங்களா?” ன்னு அவ கேட்க, எல்லாரும் ஒண்ணு போல, “அவர நாங்க பாக்கலையே மேடம். உங்களுக்கு ஏதாவது வேணும்னா சொல்லுங்க. நாங்க அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறோம்,” ன்னு பதில் சொன்னாங்க. அதனால கடுப்பான மேகா, “நோ தேங்க்ஸ். நானே பாத்துக்கிறேன்,” ன்னு சொல்லிட்டு விஷ்வாவத் தொடர்ந்து தேடுனா.

“எங்க போனாரு இவரு..? அவரோட ரூம்லயும் ஆளக் காணோம். இங்க வெளியிலயும் விஐபி மெம்பர்ஸ் அண்ட் ஃபேமிலி மெம்பர்ஸ் ஸ்டே பண்ணியிருக்கிற ரூம்ஸையும் செக் பண்ணியாச்சு. இங்கயும் இல்லன்னா அவர் வேற எங்கதான் போனாரு..? இன்னும் நான் போய் டெர்ரஸ்ல மட்டும்தான் பாக்கல,” ன்னு நெனச்சு மொட்டை மாடிக்குப் போனா.

அவ நெனச்ச மாதிரியே அங்க தன் ஃப்ரெண்ட்ஸோட குடிச்சுட்டு இருந்த விஷ்வா, போதையில, “இந்தப் பொண்ணுங்க எல்லாருமே சரியான பிசாசுங்கடா. கடவுள்னு ஒருத்தர் இந்த வேர்ல்ட்ல இருக்காரான்னு தெரியல. பட் அப்படி ஒருத்தர் இருந்தா… இப்ப அவர என் முன்னாடி வரச் சொல்லுங்க. நான் அவர்கிட்ட ஒரு வரம் கேட்கணும்,” ன்னு உளறினான்.

“உங்க கிட்ட தான் எல்லாமே இருக்கே… அப்புறம் என்ன வேணும்னு வரம் கேட்கப் போறீங்க பாஸ்?” ன்னு போதை ஏறுன குரல்ல மகேஷ் கேட்க, “அதுவா..! இந்த உலகத்தைப் பொண்ணுங்களே இல்லாத உலகமா மாத்திடுங்க கடவுளேன்னு கேட்பேன்!” ன்னு சத்தமா வானத்தப் பாத்துக் கத்துன விஷ்வா, குடிச்சுட்டு தன் கையில இருந்த பீர் பாட்டில தூக்கி எறிஞ்சு உடைச்சவன், தொடர்ந்து பொண்ணுங்களப் பத்தித் தவறா பேசி அவங்களக் கொச்சைப்படுத்துற வார்த்தையில திட்டிக்கிட்டு இருந்தான்.

அவன் கிட்ட தன் காதல சொல்ல ஆசையா ஓடி வந்த மேகாவோட இதயம், அவன் பேசுனதக் கேட்டு சுக்குநூறா உடைஞ்சுது. “இவர் இன்னும் கொஞ்சம்க்கூட மாறல. அப்படியேதான் இருக்காரு. இவர் மாறவும் மாட்டாரு. என்னால இவர மாத்தவும் முடியாது. இவர்தான் அன்னைக்குத் தெளிவா சொன்னாரே… இந்த ஸ்டோரியில நான் உனக்கு ஹீரோவும் இல்ல, வில்லனும் இல்ல. ஜஸ்ட் எக்ஸ் ஆர் ஒய். நான் உனக்கு ஜஸ்ட் கார்டியன் மட்டும்தான். மத்தபடி நமக்குள்ள எதுவும் இல்லைன்னு… நான் தான் அதையெல்லாம் மறந்துட்டு லூசுத்தனமா இவர லவ் பண்ணிட்டேன். இட்ஸ் ஆல் மை ஃபால்ட். இதுல இவர ப்ளேம் பண்றதுக்கு ஒண்ணும் இல்ல,” ன்னு நெனச்ச மேகா, பீறிட்டு வந்த அழுகைய சிரமப்பட்டு உதட்டக் கடித்துக் கட்டுப்படுத்திக்கிட்டு, கலங்குன கண்களோட படிகள்ல இறங்கி கீழ ஓடுனா.
அப்ப இரு வலிய கரங்கள் அவளத் தாக்குச்சு. அதனிடமிருந்து விடுபட முயன்று தோத்துப் போனா மேகா. கல்யாணம் நடக்குமா..?

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured