Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 118

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 118

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 118: வைசாலியை அடித்த விஷ்ணு (பார்ட் 1)

ஷாலினி: “அப்ப நானும், விஷ்ணுவும், கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த பிரச்சினையும் வராதா..???” என்று அப்பாவியாக கேட்டாள்.

ரித்திகா: “அதுலாம் வராது டி. அப்படியே வந்தாலும் அவனோட அண்ணனும், நானும், பாத்துக்க மாட்டமா..??? நீயும், நானும், ஒரே வீட்டுக்கு மருமகளா போ போறேன்னு நான் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா..?? உனக்கு அந்த சந்தோஷமே இல்லையா..???” என்று சோகமாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு கேட்டாள். 😞

ஷாலினி: சோகமாக ராகவியை பார்த்தவள், “சாரி அக்கா. நான் இந்த ஆங்கில்ல யோசிக்காம விட்டுட்டேன். நானும் விஷ்ணுவ கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தானே அக்கா ஆசைப்படுறேன். எனக்கு அது நடக்காம போயிருமோன்னு தான் பயமாமா இருக்கு. அவ வந்து என் கிட்ட பேசிட்டு போனது தான் என் மண்டையில ஓடிக்கிட்டே இருந்துச்சு. அதனால என்னால வேற எத பத்தியும் யோசிக்க முடியல. சாரி அக்கா நான் உங்க கிட்டயும் கோவமா பேசிட்டேன்.” என்று மனதார மன்னிப்பு கேட்டாள். 

ரித்திகா: அட பரவால்ல அத விடு. நீ விஷ்ணு கிட்ட தான் சாரி கேக்கணும். அவன போய் சூசைட் பண்ணிப்பேன்னு எல்லாம் சொல்லி மிரட்டி இருக்க. பாவம் டி அவன். ரொம்ப பயந்து போயிட்டான். எங்க வீட்டுக்கு வந்து நடந்தது எல்லாத்தையும் சொல்லி எப்படி அழுதான் தெரியுமா..???

ஷாலினி: “இப்ப அவன் எங்க அக்கா இருக்கான்..!! வீட்டுக்கு போய்ட்டானா..???” என்று ஆர்வமாக கேட்டாள். 😍 இப்போதே அவளுக்கு விஷ்ணுவை பார்த்து அவனிடம் மன்னிப்பு கேட்டு, அவனை கட்டி கொண்டு தன்னுடைய காதலை அவனுக்கு உணர்த்தி விட வேண்டும் என்று அவளுக்கு ஆசையாக இருந்தது. 🥰

ரித்திகா: “அவன் இங்கயே இருந்தா அதை பத்தியே யோசிச்சிட்டு இருப்பான்னு, நான் தான் அவன கிளம்பி அவன் பிரண்டோட சிஸ்டர் பங்ஷனுக்கு போக சொன்னேன். இந்நேரம் அவன் அந்த பங்க்ஷனுக்கு போய் இருப்பான்.” என்றாள் கேஷுவலாக.

ஷாலினி: “என்ன அக்கா..!! அப்ப அவன் என்ன விட்டுட்டே அங்க போயிட்டானா..???” என்று சோகமான குரலில் கேட்டாள். 🙁 😓
ராகவி: அவளைப் பார்த்து முறைத்தவள், “அடியே..!! உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா, இல்லையா..??? உன்ன பாக்குறதுக்காக ஆசையா வந்த பையன போ… போன்னு.. சொல்லி விரட்டி விட்டுட்டு இப்ப அவன் உன்ன விட்டுட்டு போயிட்டானான்னு வேற கேக்குறியா…???” என்று கேட்டாள். 😒 😕 🤨

வெட்கமின்றி ராகவியை பார்த்து சிரித்த்த ஷாலினி, “எனக்கு இப்பவே அவன பாத்து அவன் கிட்ட சாரி கேக்கணும் போல இருக்கு. பாவம் அக்கா என் விஷ்ணு. நான் அவனை ரொம்ப ஹெர்ட் பண்ணிட்டேன். நான் அவன அவ்ளோ பேசியும், அவன் கோபமா என்ன ஒரு வார்த்தை கூட பேசல. ஹி இஸ் சோ ஸ்வீட்.” என்று சிறு வெட்கத்துடன் சொன்னாள். ☺️ 😁 😁

அவள் மீது செல்லமாக கோவப்பட்ட ராகவி அவளை லேசாக கிளியவள், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவன அந்த பேச்சு பேசிட்டு, இப்ப அவன் உன் விஷ்ணுவா…??? இப்ப தான் உனக்கு அவனோட அருமை புரியுதா…??? என் தம்பிய பாத்தா உனக்கு எப்டி டி தெரியுது..?? நீ எவ்ளோ அடிச்சாலும் அவன் தாங்குகிறான்னு, இப்படி தான் அவன போட்டு கொடுமை படுத்துவியா…???” என்று கேட்டாள். 

ஷாலினி: அவள் கிள்ளைய இடத்தில் தேய்த்து கொண்டே, “அதுக்குன்னு இப்படியா அக்கா கிள்ளுவீங்க..??? என்ன அக்கா இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள உங்க கொழுந்தனாருக்கு சப்போர்ட்டா..???” என்று நக்கலாக கேட்டாள். 😂 😂 😂

ராகவி: “கல்யாணத்துக்கு அப்புறம் தான் அவன் எனக்கு கொழுந்தனாருு. ஆனா, அவன் எப்பயுமே எனக்கு தம்பி தான். நீ தான் ரொம்ப பைத்தியக்காரியா இருக்க. அதனால நான் உன்ன தான் என் தங்கச்சியா வச்சுக்கலாமா, வேணாமான்னு யோசிக்கனும்.” என்று சீரியஸாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு சொன்னாள்.

ஷாலினி: “ஒழுங்கா நீங்க எனக்கு அக்காவாவே இருங்க. இல்லைனா, உங்களுக்கு பின்னாடியே விஷ்ணுவ கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்க வந்து உங்க கூட ஓரகத்தி சண்டை போடுவேன்.” என்று அவளும் தன்னுடைய முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொன்னாள்.

ராகவி: “ஓ..!!! என் கூடவே சண்டை போடுவியா..??? போட்டு தான் பாரேன். அப்பயும் இதே மாதிரி தான் உன்ன நல்லா கிள்ளி வச்சுருவேன் டி.” என்று சிரித்துக் கொண்டே சொன்னவள், மீண்டும் அவளை பிடித்து கிள்ளினாள். 😂😂 😂

இப்போது ஷாலடியின் வீடு முழுவதும், ராகவி மற்றும் ஷாலினியின் சிரிப்பு சத்தத்தால் நிறைந்து இருந்தது. மகிழ்ச்சியுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்த ரேவதி, “கடவுளே..!! இவங்க மேல யாரு கண்ணும் பற்ற கூடாது. என் ரெண்டு பிள்ளைங்களுமே இதே மாதிரி ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும்.” என்று தன் மனதிற்குள் பிரார்த்தித்தாள். 😍 🥰 

எங்கேஜ்மென்ட் பங்க்ஷன் நடக்கும் மண்டபத்தில்….

தன்னுடைய காரில் அங்கு வந்த விஷ்ணு, சோகமாக அதில் இருந்து கீழே இறங்கி ஃபங்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்தான். அவன் அங்கே வருவதற்குள் எங்கேஜ்மென்ட் பங்க்ஷனே முடிந்து இருந்தது. விஷ்ணுவின் நண்பர்கள் பட்டாளமே அந்த பங்க்ஷனுக்கு வந்து இருந்தனர். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு மண்டபத்திற்கு வெளியே இருந்த இருந்த கார்டன் ஏரியாவில், நடந்து கொண்டு இருந்த மியூசிக் பார்ட்டியில் இருந்தனர்.

அவர்களை கவனித்த விஷ்ணு அவர்களின் அரிகே சென்றான். விஷ்ணுவை பார்த்தவுடன் அவனுடைய நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். 😍 இப்போதெல்லாம் அவன் ரெகுலராக பள்ளிக்கும் மற்ற நேரங்களில் ஷாலினியின் பின்னும் சுத்திக் கொண்டு இருப்பதால், அவன் தன்னுடைய நண்பர்களுடன் பெரிதாக நேரம் செலவிடுவதில்லை. விஷ்ணு ஏற்கனவே அவர்களிடம் இன்று தான் தன்னுடைய காதலியை அவர்களுக்கு அறிமுக படுத்துவதாக சொல்லி இருந்தான். அதனால் அவனைப் பார்த்த உடனேயே அவனை சூழ்ந்து கொண்டவர்கள், அவனிடம் ஷாலினியை பற்றி விசாரிக்க தொடங்கினர். 

விஷ்ணுவிற்கு அவர்களிடம் தன் என்ன பதில் சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை அதனால் அமைதியாகவே இருந்தான். அப்போது அவனுடைய வீங்கிய உதடுகளையும் முகத்தில் இருந்த சோகத்தையும் கவனித்த அவனுடைய நண்பர்களுள் ஒருவன், “எங்க டா உன் ஆள காணோம்..??? நீ வேற பாக்க ஆளே சரி இல்லையே..!!! ஒன் லிப்ஸ்ச பாத்தாலே, வெறித்தனமா லாங்  லிப் லாக் பண்ணி வீங்குன மாதிரி இருக்கேடா…!!! அதான் அந்த பொண்ணு பாவம் டயர்ட் ஆகி இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டான்னு நீ பீலிங்ல இருக்கியா…???” என்று அவனாக ஒரு கதையை உருவாக்கி அவனிடம் சொல்லி அனைவரின் முன்னிலையில் அவனை கிண்டல் செய்தான். விஷ்ணு தன் மனதில், “நீ சொல்ற மாதிரி நடந்து இருந்தா தான் நல்லா இருக்குமே…!!!” என்று நினைத்துக் கொண்டான். ஒரு வேளை அவன் சொன்னதைப் போல் நடந்து இருந்தால், விஷ்ணு வெட்கத்துடன் “ஆமாம்” என்று வெட்கமின்றி தன்னுடைய நண்பர்கள் கூட்டத்தின் முன் அதை ஒப்பு கொண்டு இருப்பான். ஆனால் இப்போது இங்கு கதையே வேற மாதிரி இருப்பதால், அவனுடைய முகம் காத்து போன பலூன் போல் சுருங்கி இருந்தது.😞

இந்த ஃபங்ஷன் தொடங்கியதில் இருந்தே விஷ்ணு வந்துவிட்டானா என்று அவனை தேடி கொண்டு இருந்த மதன், அவன் இங்கே இருக்கிறானா என்று பார்ப்பதற்காக அங்கே வந்தான். நல்ல வேளையாக விஷ்ணு அவனுடைய கண்களில் தென்பட்டான். அவனைக் கண்ட முதல் பார்வையிலேயே அவனுடைய முகத்தை வைத்து அவன் சரியில்லை என்று புரிந்து கொண்ட மதன், அந்த கூட்டத்தில் இருந்து விஷ்ணுவை தனியாக விளக்கி கூட்டி கொண்டு வந்து அவனிடம் பேச தொடங்கினான். 

மதன்: “என்ன டா ஆச்சு ஏன் இவ்ளோ லேட்டு..?? நீ ஏன் ஒரு மாதிரி இருக்க…??? உன் கூட ஷாலினியையும் கூட்டிட்டு வரேன்னு சொன்ன, எங்க அவளை காணும்..??” என்று பதட்டமான குரலில் கேட்டான்.

ஒரு பெருமூச்சு ஒன்றை விட்ட விஷ்ணு, கலங்கிய கண்களுடன் நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தான். அவன் பேசியதை கேட்ட மதனின் முகம் சட்டு என்று மாறிவிட்டது. அவனால் வைஷாலி விஷ்ணுவை காதலிக்கிறாள் என்று நம்பவே முடியவில்லை. எது எப்படி இருந்தாலும், விஷ்ணு தான் வைஷாலியை காதலிக்கவில்லையே என்று நினைத்து அவன் நிம்மதி அடைந்தான். 

மதன்: நம்ம வைஷு இப்படி பண்ணி இருப்பான்னு என்னால நம்பவே முடியல டா. நீ ஷாலினிய நினைச்சு வருத்தப்படாத. அதான் ராகவி அவ கிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்காங்கல்ல…!!! அவங்க பேசுனா ஷாலினி சரி ஆயிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. 

ஆனா, இவ்ளோ நடந்து இருக்கு உனக்கு முன்னாடியே வைஷாலி இங்கே வந்துட்டா. நான் கூட அவ கிட்ட நீ எப்ப வருவேன்னு கேட்டேன். நீ வர்றதுக்கு லேட் ஆகும்னு நீ தான் அவளை முன்னாடி போக சொல்லி அனுப்பிச்சேன்னு சொன்னா.

விஷ்ணு: வைஷாலியின் மீது இருந்த கோபத்தில் தன்னுடைய பல்லை கடித்துக் கொண்டு, “அப்ப அவ இங்க தான் இருக்காளா..???” என்று கேட்டான். 😒 😡 🔥

மதன்: “டேய் மச்சான் கோவப்படத டா. என்ன தான் இருந்தாலும் வைஷு நம்ம வீட்டு பொண்ணு. அவ பண்ணது தப்பு தான். ஏதோ சின்ன பொண்ணு தெரியாம பண்ணிட்டான்னு, நினைச்சு மன்னிச்சு விட்று. அவள ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பேசிடாத.”என்று அவள் மேல் இருந்த அக்கறையில் சொன்னான். 

 விஷ்ணு: “அவ நம்ம வீட்டு பொண்ணுன்னா அப்ப ஷாலினி யாரு..?? யாரோ தெருவுல போறாவளா…!!! இத்தன நாளா நானும் அவள சின்ன பொண்ணுன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா ஒரு சின்ன பொண்ணு பண்ற வேலையவா பண்ணிட்டு இருக்கா…??? இது எனக்கும், அவளுக்கும், இருக்கிற பிரச்சினை. நான் இன்னைக்கு அவளை சும்மா விட மாட்டேன். நீ எங்களுக்கு நடுவுல வராத. அவ எங்க இருக்கா…???” என்று கோபமாக கேட்டான். 😕😠 😤

மதன்: “உள்ள என் தங்கச்சி கூட தான் இருக்கா. ப்ளீஸ்…!!! கொஞ்சம் பாத்து பேசு டா.” என்று அப்போவும் விஷ்ணு சொன்னதை மதிக்காமல் வைஷாலிக்காக பரிந்து பேசினான்.

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured