அத்தியாயம் 113: கனவெல்லாம் கருகியதே (பார்ட் 2)
வைஷாலி: அவள் சொன்னதைக் கேட்டு விரத்தியல் பலமாக சிரித்தவள், “நான் அவன காதலிக்கிறத பத்தி உன் கிட்ட சொல்லி; அவன எனக்கு விட்டுகுடுன்னு உன் கிட்ட காதல் பிச்சை கேட்க வந்தேன்னு நினைச்சியா..???? 😂 😂 😂 😂 யூ ஃபுல்..!!!! அவன நீ என்ன டி எனக்கு விட்டுத்தர்ரது..??? அவன லவ் பண்ண கூட உனக்கு எந்த தகுதியும் இல்ல.” 😒 😡 😤 என்று காட்டமான குரலில் சொன்னாள்.
வைஷாலி சொன்னதைக் கேட்டு கோபப்பட்ட ஷாலினி, “ச்சீ…!!! வாய மூடு. அவன லவ் பண்ண எனக்கு தகுதி இருக்கா, இல்லையான்னு சொல்ல நீ யாரு டி..??? ஒரு வேளை அந்த தகுதி எனக்கு இல்லைன்னு நினைச்சா விஷ்ணு ஏன் என் உன்ன விட்டுட்டு என்னை லவ் பண்ண போறேன்…??? அவன் உன்ன லவ் பண்ணலைன்றதுகாக தேவை இல்லாம உன் வாய்க்கு வந்த படி எல்லாம் பேசாத.” என்று் பதிலுக்கு பதில் பேசினாள். 😒 😡 🔥
வைஷாலி: “வாட்..!!!! நான் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்கேன் ஆ…??? முதல்ல அவன் யாரு அவனோட ஸ்டேட்டஸ் என்னான்னு உனக்கு தெரியுமா…???? அது தெரிஞ்சா, நீ இப்படி எல்லாம் என் கிட்ட துல்லிக்கிட்டு இருக்க மாட்ட.” என்று நக்கலாக சொன்னாள். 😂 😂 😂
ஷாலினி: “என்ன உளறிட்டு இருக்க..???” என்று கடுப்பாக கேட்டாள். 😒
வைஷாலி: அவளை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தவள், “இந்த ஊர்ல இருந்துகிட்டு கிரேட் பிசினஸ் கிங் மிஸ்டர் விஷ்வா நாராயணன் ஐ உனக்கு தெரியாம இருக்காதுன்னு நினைக்கிறேன்..” என்று இழுத்தாள்.
ஷாலினி: “தெரியும். ராகவி அக்கா அவர தான் கல்யாணம் பண்ணிக்க போறாங்க. இப்ப அவருக்கு என்ன..???” என்று காட்டமாக கேட்டாள். 😡
வைஷாலி: அவருக்கு ஒன்னும் இல்ல. அவர் என்னோட மாமா. உனக்கு விஷ்ணுவோட ஃபுல் நேம் தெரியாதுல்ல…???? அவன் பேரு “விஷ்ணு நாராயணன்,” நீ வேலை பாக்குறியே ஸ்கூல், அதோட சேர்மனே அவன் தான். இவன மேனேஜ்மென்ட்ட பாத்துக்க சொல்ல ஸ்கூலுக்கு அனுப்பிச்சா, இவன் அந்த வேலைய பாக்காம எதுக்குடா டீச்சரா ஜாயின் பண்ணி இருக்கான்னு நான் யோசிச்சேன். இப்ப தானே தெரியுது அவன் உனக்காக தான் இத எல்லாம் பண்ணி இருக்கான்னு..!!!!” என்று கலங்கிய கண்களுடன் சொன்னாள். 🥺
விஷ்ணு இவளெல்லாம் ஒரு ஆள் என்று இவளுக்காக இத்தனை தூரம் மெனக்கெட்டிருக்கிறானே என்று அவளால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. 😒 இந்த நிமிடம் அவளுக்கு ஷாலினியை விட விஷ்ணுவின் மீது மிகவும் கோபம் கோபமாக வந்தது. 😡 🔥
வைஷாலி சொன்னதைக் கேட்டு ஷாலினி, வாயடைத்து போய் நின்று விட்டாள். அவளுடைய கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருந்தது. 😭 😭 😭💧இப்போதும் இது எல்லாம் உண்மை என்று அவளால் நம்ப முடியவில்லை. “இதெல்லாம் உண்மையா..!!! இல்ல நீ என் கிட்ட சும்மா பொய் சொல்றியா…???” என்று தழுதழுத்த குரலில் வைஷாலியை பார்த்து கேட்டாள் ஷாலினி.
வைஷாலி: “ஓ.. இத நீ நம்பறதுக்கு உனக்கு ப்ரூப் பெற வேணுமா..??? சரி காரட்றேன் இரு.” என்றவள், தன்னுடைய மொபைல் போனில் இருந்து அவர்களுடைய குடும்ப புகைப்படத்தை எடுத்து ஷாலினியிடம் காட்டினாள். அவள் கையில் இருந்த அந்த போனை பிடிங்கி அந்த போட்டோவை உற்றுப் பார்த்தாள் ஷாலினி. அந்த போட்டோவில் விஷ்ணு, விஷ்வா, செண்பகம் சித்தார்த், வைஷாலி, என அனைவரும் இருந்தனர்.
அந்த போட்டோவில் கூட விஷ்ணுவின் தோளில் கை போட்ட படி, அவன் அருகே தான் நின்று கொண்டு இருந்தாள் வைஷாலி. இப்போது ஷாலினிக்கு வைஷாலி சொல்வது உண்மை தான் என்று நம்புவதை தவிர வேறு வழி இல்லை. அவள் விஷ்ணுவின் முகத்தையும், விஷ்வாவின் முகத்தையும், ஒப்பிட்டு பார்த்தாள். அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருந்தார்கள். பாவம் நம் ஷாலினி தான் இத்தனை நாட்களாக அதை கண்டு பிடித்திருக்கவில்லை.
இப்போது அவளுக்கே வைஷாலி விஷ்ணுவை காதலிப்பதற்கு தனக்கு தகுதி இல்லை என்று சொன்னது சரி என்று தான் தோன்றியது. “ஆமா அவனை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கு..???” என்று தனக்குள் கேட்டு கொண்டவள், கதறிி அழுதாள். 😭 😭 😭
ஷாலினி அழுவதை பார்த்து சத்தமாக சிரித்த வைஷாலி, “நல்லா சத்தமா அழு… ஷாலினி அழு. அவன் உன்ன லவ் பண்றான்னு தெரிஞ்சப்ப நானும் இப்படி தான் அழுதேன். அவன் என்ன விட்டுட்டு, கேவலம் ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு உன்ன போய் லவ் பண்றான்னு தெரிஞ்சப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும்…??? அப்ப என்னமோ அப்படி பேசின, இப்போ என்னோட வலி என்னன்னு உனக்கு புரியுதா…???
இங்க பாரு ஷாலினி நீ ஒன்னும் என்னோட எனிமி கிடையாது. நீ ஏதோ அவன் யாருன்னு தெரியாம லவ் பண்ணி இருப்ப, உன் கிட்ட வந்து உன்னோட பிளேஸ் என்னான்னு சொல்லி உனக்கு புரிய வச்சிட்டா… நீயே உன் இடம் என்னன்னு புரிஞ்சுகிட்டு அவன விட்டு போயிடுவேன்னு நினைச்சு தான் இங்க வந்து இத உன் கிட்ட சொல்லிட்டு இருக்கேன். இந்த விஷயம் என்ன தவிர எங்க ஃபேமிலியில வேற யாருக்கும் தெரியாது.
நீ எந்த பிரச்சனையும் பண்ணாம அமைதியா போயிடீன்னா கடைசி வரைக்கும் நான் இதை யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். ஏதோ சித்தார்த்துக்காக அந்த ராகவிய விஷ்வா மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அதே மாதிரி உன்ன விஷ்ணு மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்கன்னு கனவுல கூட நினைக்காத. அப்படி ஒரு விஷயம் எப்பவும் நடக்காது. தேவை இல்லாம இந்த மாதிரி பெரிய குடும்பங்களுக்கு நடுவுல வந்து மாட்டிக்கிட்டு இல்லாம போயிடாத. நான் அவ்ளோ தான்சொல்லுவேன்.” என்று சொல்லி வெளிப்படையாக அவளை மிரட்டினாள்.
வைஷாலி பேசியதை கேட்டு மனமுடைந்து போன ஷாலினி அழுது கொண்டே, “நீங்க சொன்னது சரி தான். விஷ்ணுவ கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கு இல்ல.” என்று உடைந்த குரலில் சொல்லி அழுதாள். 😭 😭 😭 😭
அவள் சொன்னதைக் கேட்டு திருப்தியாக புன்னகைத்த வைஷாலி, விஷ்ணு இங்கே வருவதற்குள் தான் இங்கு இருந்து செல்ல வேண்டும் என்று நினைத்து; “இந்தா ஷாலினி இதுல ஒரு 15 லேக்ஸ் இருக்கு. இதுக்கு மேல எவ்ளோ வேணும்னாலும் கேளு. நான் தரேன்.” என்று சொல்லி அதை ஷாலினியின் கைகளில் வலுக்கட்டாயமாக திணித்தாள்.
“இல்ல எனக்கு இதெல்லாம் வேண்டாம். ப்ளீஸ்…!!! இத நீங்களே எடுத்துட்டு போங்க.” என்று சொல்லி மனம் உடைந்து அழுதாள் ஷாலினி. 💔 😭 😭😭 அதை பொருட்படுத்தாத வைஷாலி, அங்கு இருந்து சென்று விட்டாள். தன் கையில் இருந்த பணத்தை கீழே தூக்கி எறிந்து விட்டு கதறி அழுத ஷாலினி, தன்னை பொய் சொல்லி ஏமாற்றி விட்டானே என்று நினைத்து விஷ்ணுவின் மீது கோபப்பட்டவளுக்கு கண்ணாடியில் தெரிந்த அவன் வாங்கிக் கொடுத்த சேலையை பார்க்க பார்க்க மிகவும் ஆத்திர ஆத்திரமாக வந்தது. 😡 😡 🔥
அதனால் அதில் அவள் போட்டிருந்த ஓகே கூட பொறுமையாக கழட்டாமல் தன் மீது இருந்த சேலையையும், பிளவுஸ் ஐயும் கண்ணுமுன்னு தெரியாமல் தன் மீது இருந்து பீய்த்து எறிந்தாள். அவள் இரண்டு மூன்று ஊக்குகள் போட்டு பிளவுசில் சேலை முந்தானையை போட்டு இருந்ததால், அந்த ஊக்கு இவள் இழுத்த வேகத்தில் அவளுடைய தோலை குத்தி கிழித்து ரத்தம் வந்தது. அந்த வலியைக் கூட பொருட்படுத்தாத ஷாலினி, அந்த புடவையையும், பிளவுஸ் ஐயும் கழட்டி எறிந்தவள், ஒரு நைட்டியை எடுத்து போட்டு கொண்டு தலை விரி கோலத்தில்; தன் தலையில் அடித்து கொண்டு, கதறிி அழுதாள். 😭 😭 😭 பாவம் அந்த பேதைக்கு ஆறுதல் சொல்வதற்கு கூட அங்கே யாரும் இல்லை. “நீ என்ன ஏமாத்திட்டல்ல விஷ்ணு…!!!” என்று மீண்டும் மீண்டும் சொல்லி புலம்பிய படியே அழுது கொண்டு இருந்தாள். விஷ்ணுவின் மீதும் தன்னுடைய விதியின் மீதும் தனக்கு இருந்த கோபத்தை அவளால் தன் மீது மட்டுமே காட்டிக்கொள்ள முடிந்தது. 😭 😭 😭 😭
💔 💔 💔 💔 💔 💔 💔 💔 💔 💔
தொடு வானம் தொழுகின்ற நேரம்… ☁️
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும் ☁️☁️☁️🌪️
தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே விட்டுப் போகிறாய்… ☁️☁️☁️
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்…. 😒
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே..!!!! 💔 😭
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ…. 😭
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது …. 😒
அது வாழ்வினும் கொடிது…. 😕
💔 💔 💔 💔 💔 💔 💔 💔 💔 💔
-நேசம் தொடரும்..