Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 112

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 112

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 112: இதயத்திலே தீப்பிடிக்க கனவெல்லாம் கருகியதே (பார்ட் 1)

ஷாலினியின் வீட்டில்…

தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்த ஷாலினி, முதல் வேலையாக விஷ்ணு தனக்கு வாங்கி கொடுத்த புடவையை பிரித்து பார்த்தாள். அதைப் பார்த்தவுடன் அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 😍 அன்று ஒரு நாள் விஷ்ணுவும், அவளும், அவளுக்கான ஆடைகளை வாங்குவதற்காக ஷாப்பிங் சென்றபோது, ஒரு துணி கடை பொம்மையில் கட்டப்பட்டு இருந்த இந்த புடவையை பார்த்து, ஷாலினி அது  தன்னுடைய அம்மாவின் கல்யாண புடவையை போலவே இருப்பதால்,, இதை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் அதன் விலை மிகவும் அதிகமாக இருந்ததால் தன்னுடைய ஆசையை கைவிட்ட ஷாலினி; அங்கு இருந்து வந்து விட்டாள்.

இப்போது அதே புடவையை விஷ்ணு தனக்காக தனக்கே தெரியாமல் வாங்கி அதை சப்ரைஸ் ஆக கொடுத்தது, ஷாலினிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ☺️ தன்னுடைய அம்மாவே மீண்டும் விஷ்ணுவின் வடிவில் தன்னிடம் வந்து விட்டதாக நினைத்து மெய் சிலிர்த்து போன ஷாலினி, அந்த புடவையை தன்னுடைய மார்போடு கட்டி அணைத்துக் கொண்டாள். 🤗 ❤️ இந்த கணம் அவளுக்கு தான் தன்னுடைய அம்மாவையே கட்டி அணைத்துக் கொண்டு இருப்பது போல ஒரு மாயை தோன்றியது. அது மாயை என்று தெரிந்தாலும் ஷாலினி அதற்குள் தொலைந்து போக விரும்பினாள். ☺️ 🤗

அப்போது அவளுக்கு ராகவி இடம் இருந்து ஒரு கால் வந்தது. ஷாலினி புடவை கட்ட சிரமப்பட்டு கொண்டு இருப்பாளோ என்று நினைத்த ரித்திகா, அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என்று கேட்பதற்காக கால் செய்து இருந்தாள். “இல்ல கா. எனக்கே சாரீ நல்ல கட்ட தெரியும். நான் பாத்துக்குறேன்.” என்று உறுதியாகச் சொன்னாள் ஷாலினி. “அப்போ ஓகே சீக்கிரம் ரெடி ஆயிடு. பத்திரமா போயிட்டு வாங்க. எனக்கு நீ வீட்டுக்கு வந்துட்டு கால் பண்ணு. அண்ட் எப்படியாவது இன்னைக்கு அவன் கிட்ட உன்னோட லவ்வ சொல்லிடு டி.” என்று சொல்லிவிட்டு அந்த காலை கட் செய்தாள் ரித்திகா.

ரித்திகா உடன் பேசிவிட்டு, ரெஃப்ரெஷ் ஆகி வந்த ஷாலினி; அந்த புடவையை எடுத்து கட்டிக்கொண்டு கண்ணாடியின் முன் நின்று; தன்னுடைய அழகை பார்த்து தானே ரசித்துக் கொண்டு இருந்தாள். விஷ்ணு சொன்னதை போல் அந்த பிளவுஸ் அவளுக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது. அதனால் அவன் அப்போது ராகவியின் முன் தன்னிடம் பேசியதை நினைத்து பார்த்தவள், “திருட்டு பையன். எத எல்லாம் கரெக்டா நோட் பண்ணி இருக்கான் பாரு…!!! சரியான பொறுக்கி டா விஷ்ணு நீ.. ஆனா இந்த பொறுக்கி பயலே தானே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 😍 எப்டி இவ்ளோ ஈஸியா உன்னையே கரெக்ட் பண்ணிட்டான் பாரேன்…!!!” என்று கண்ணாடியை பார்த்து தனக்குத்தானே அவனைப் பற்றி பேசி கொண்டு இருந்தத ஷாலினி, “போய் சீக்கிரம் கிளம்பு டி.” என்று தன்னுடைய தலையில் தானே அடித்து கொண்டு சொன்னவள், தன்னுடைய தலையை தலையை சீவுவதற்காக சீப்பை தேடிக் கொண்டு இருந்தாள். 

அப்போது யாரோ அவளுடைய வீட்டின் காலிங் பெல்லை அடிக்கும் சத்தம் அவளுக்கு கேட்டது. “அடப்பாவி இவன் அதுக்குள்ள வந்துட்டானா..!!!! நான் இப்ப தானே வீட்டுக்கு வந்தேன் அதுக்குள்ள எப்படி கிளம்ப முடியும்..??? இவன் சீக்கிரமா வந்துட்டு, அப்புறம் என்னால தான் லேட் ஆயிடுச்சுன்னு சொல்லி என்ன திட்டுவான்.” என்று புலம்பிய ஷாலினி விஷ்ணு தான் வந்திருக்கிறான் என்று நினைத்து சென்றுகதவை திறந்தாள்.

ஆனால் அவளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, அங்கே வைஷாலி வந்திருந்தாள். “நானும், விஷ்ணுவும், வெளியே கிளம்பற நேரத்துல இவ எதுக்கு இப்ப மூக்கு வேர்த்த மாதிரி கரெக்டா வந்துு இருக்கா…???” என்று நினைத்த ஷாலினி, குழப்பமாக வைஷாலியை பார்த்தாள். 🙄 ஷாலினி தன்னை உள்ளே அழைக்காததால், அவளை கூர்மையாக பார்த்த வைஷாலி; “என்ன ஷாலினி, இவ்ளோ தூரம் உங்கள பாக்குறதுக்காக இங்க வந்து இருக்கேன். என்ன உள்ள வான்னு கூட கூப்பிட மாட்டீங்களா..???” என்று கேட்டாள். 

ஷாலினி: அவளுடைய கேள்வியில் சுதாரித்துக் கொண்டவள், “சாரி, நான் நீங்க இங்க வருவீங்கன்னு எதிர்பாக்கல. அதான் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன். வேற ஒன்னும் இல்ல. ப்ளீஸ்…!!! உள்ள வாங்க.” என்றாள்.

வைஷாலி: “ஓ..!! நீங்க என்ன எதிர்பாக்கலைன்னா, அப்ப வேற யார் இங்க வருவாங்கன்னு எதிர்பார்த்தீங்க..???” என்று நக்கலாக கேட்டவள், “சாரி நீங்க எங்கயோ வெளில போறதுக்கு கிளம்பிட்டு இருப்பீங்க போல, நான் உங்களை வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…???” என்று அப்பாவியாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டுு கேட்டாள்.

ஷாலினி: “அதான் டிஸ்டர்ப் பண்ணிட்டியே டி, அப்புறம் என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டனான்னு  ஒரு கேள்வி..??? கடவுளே இவ இங்க இருக்கும்போது விஷ்ணு மட்டும் இங்க வந்துட கூடாது.” என்று தன் மனதிற்குள் நினைத்தவள், “ஆமா. நீங்க கொஞ்சம் லேட்டா வந்து இருந்தீங்கன்னா நான் வெளில கிளம்பி போயிருப்பேன். என் பிரண்டோட சிஸ்டர் எங்கேஜ்மென்ட் இருக்கு. அங்க போக தான் கிளம்பிட்டு இருக்கேன்.” என்று சொன்னாள்.

வைஷாலி: “அப்ப நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு சொல்றீங்க அப்படி தானே..???” என்று குத்தலாக கேட்டாள். 😒

ஷாலினி: “இப்ப நான் ஆமானு சொன்னா மட்டும், உடனே எந்திரிச்சு வெளிய போயிருவியா..!!! அப்புறம் ஏன் டி அதவே சொல்லிக்கிட்டு இருக்க…???” என்று தன் மனதிற்குள் நினைத்தவள், “நோ நோ…!!! வைஷாலி, நான் அப்டி மீன் பண்ணல.” என்று அவசரமான குரலில் சொன்னாள்.

வைஷாலி: “ஓகே. என்ன மதனோட சிஸ்டர் எங்கேஜ்மென்ட்க்கு விஷ்ணுவோட அங்க போறீங்களா…????” என்று நக்கலாக கேட்டாள். 😁 😁 😁

ஷாலினி: “ஆமா. அது எப்படி உங்களுக்கு தெரியும்..!!! விஷ்ணு சொன்னானா..???” என்று குழப்பமாக கேட்டாள். 🙄

வைஷாலி: “இல்ல. மதன் என்னையும் அந்த ஃபங்க்ஷனுக்கு இன்வைட் பண்ணி இருக்கான். விஷ்ணுவோட ஃப்ரெண்ட்ஸில எனக்கு தெரியாதவங்கன்னு யாருமே இல்ல. அவங்க எல்லாருமே எனக்கு ரொம்ப க்ளோஸ்.” என்று பெருமையாக சொன்னாள். 😌

ஷாலினி: “நீங்க எல்லாரும் ஒரே ஃபேமிலில அதனால அவங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.” என்று கேஷுவலாக சொன்னாள்.

வைஷாலி: “ஆமா..!!! நீங்க சொன்னது கரெக்ட் தான். நாங்க எல்லாரும் ஒரே ஃபேமிலி.” என்று ஒரு உள்ள அர்த்தத்துடன் சொன்னவள், “ஒரே ஃபேமிலி” என்ற வார்த்தைகளை அழுத்தி சொன்னாள். 

வைஷாலி எதை தன் மனதில் வைத்து கொண்டு தன்னிடம் இப்படி எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறாள், என்று ஷாலினிக்கு புரியவில்லை என்றாலும், அவள் பேசும் விதமே அவளுக்கு பிடிக்கவில்லை. அதனால், வேண்டா வெறுப்பாக அவள் பேசியதை கேட்டுக் கொண்டு இருந்தவள், அனைத்தையும் விஷ்ணுவிற்காக பொறுத்து கொண்டாள். 

 வைஷாலி: “நான் இங்கே கரெக்டான டைம்க்கு தான் வந்து இருக்கேன் போல, நான் கொஞ்சம் லேட்டா இங்க வந்து இருந்தா கூட; நீங்க விஷ்ணுவ உங்க கூட கூட்டிட்டு போய் இருப்பீங்கல்ல…??” என்று கேட்ட அவளின் முகத்தில், எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது. 😒

அதை கவனித்த ஷாலினி “என்ன..??” என்று அதிர்ச்சியாக கேட்டாள். 😳 “இல்ல… நான் லேட்டா வந்து இருந்தா; நீங்களும், விஷ்ணுவும், இங்க இருந்து கிளம்பி போயிருப்பீங்க. என்னால உங்கள மீட் பண்ண முடியாம போய் இருக்கும் இல்ல… அத தான் சொன்னேன்.” என்று உடனே தன்னுடைய முக பாவத்தை மாற்றிக்கொண்டு சாதாரணமாக சொன்னாள். 😊

ஷாலினி: “ஓகே. காபி, டீ, ஏதாவது குடிக்கிறீங்களா…??? நான் கொண்டு வரட்டுமா…???” என்று ஒரு ஃபார்மாலிட்டிக்காக கேட்டாள்.

வைஷாலி: “நோ தேங்க்ஸ். நான் உங்க கூட பேசுறதுக்காக தான் இங்க வந்தேன். உட்காருங்க பேசுவோம்.”  என்றாள்.

“இவளையும் தானே அந்த அண்ணா ஃபங்ஷனுக்கு இன்வைட் பண்ணி இருக்காங்க, அப்போ பேசாம அங்க போய் தொலைய வேண்டியது தானே..!!! அங்க போகாம இங்க வந்து உட்கார்ந்துட்டு, என்னையும் போகவிடாம, இப்ப இவ என் கிட்ட பேச  போறா..???” என்று தன் மனதிற்குள் நினைத்தவள் வேறு வழி இன்றி வைஷாலியின் அருகே அமர்ந்து, “சொல்லுங்க.” என்றாள். 

வைஷாலி: “எனக்கு சும்மா சுத்தி வளைச்சு பேசறது எல்லாம் பிடிக்காது. சோ சில விஷயங்களை பத்தி நான் உங்க கிட்ட டைரக்டாவே கேட்கணும். நீங்க அதுக்கு உண்மையா பதில் சொல்வீங்கன்னு நம்புறேன்.” என்றாள்.

அவள் போட்ட டிஸ்கிலைமரிலேயே இன்று ஏதோ பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என்று நினைத்த ஷாலினி சிறு பதட்டத்துடன், “சொல்லுங்க என்ன விஷயம்..???” என்று கேட்டாள். 

 வைஷாலி: ஒரு பெரு மூச்சு ஒன்றை விட்டவள், “விஷ்ணு உங்கள லவ் பண்றானா..???” என்று நேரடியாக கேட்டாள்.

இப்போது இவள் தன்னிடம் அதைப் பற்றி நேரடியாக பேசுவாள் என்று எதிர்பார்த்திராத ஷாலினி, “இப்ப ஏன் இப்படி நீங்க கேக்குறீங்க..???” என்று குழப்பமான குரலில் கேட்டாள். 🙄

வைஷாலி: “அத எல்லாம் விடுங்க. நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. அவன் உங்கள லவ் பண்றானா, இல்லையா…???”  என்று இம்முறை தன்னுடைய வார்த்தைகளில் சிறிது அழுத்தத்தை கூட்டி கேட்டாள்.

அவள் அப்படி கேட்ட விதம் ஷாலினிக்கு கோவத்தை வரவழைத்தது. 😠 அதனால் “அத நான் எதுக்கு டி உன் கிட்ட சொல்லணும்..???  அத பத்தி உனக்கு தெரிஞ்சுக்கிறதுக்கு அவ்ளோ ஆசையா இருந்தா, போய் அத உன் மாமன்காரன் கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியது தானே..???” என்று தன் மனதிற்குள் நினைத்தவள்; உண்மை அதுதான் என்னும்போது அதை நாம் ஏன் இவளிடம் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றுு நினைத்து, “ஆமா. அவன் என்னை லவ் பண்றான்.” என்று தைரியமாக சொன்னாள்.

இதைப் பற்றி வைஷாலி ஏற்கனவே அறிந்து இருந்தாலும், அதை ஷாலினி வாயால் கேட்கும் போது அவளுடைய மனம் இன்னும் வலித்தது. 💔 தன்னுடைய பலவீனத்தை எக்காரணத்தை கொண்டும் இந்த ஷாலினியின் முன் காட்டி விட கூடாது என்று நினைத்த வைஷாலி, கம்பீரமாக தன்னுடைய இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தவள் ஏளனமாக ஷாலினியை பார்த்து, “அவன் உன்ன லவ் பண்றான் சரி, நீயும் அவனை லவ் பண்றியா..???” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள். 

ஷாலினி: “ஆமா. நானும் அவன லவ் பண்றேன். ஆனா, நான் அத இன்னும் அவன் கிட்ட சொல்லல.” என்று தன் மனதில் இருந்து உண்மையாக பதில் சொன்னாள். அவள் விஷ்ணுவை தன்னுடைய ஆழ் மனதில் இருந்து உண்மையாக காதலிக்கும்போது, அதை மற்றவர்களிடம் இருந்து ஏன் மறைக்க வேண்டும் என்று அவளுக்குு தோன்றியது. 

வைஷாலி: ஷாலினியிடம் இருந்து இந்த பதில் வரும் என்று அவளும் எதிர் பார்த்து இருந்தாள் தான். அதனால், அவள் அதிர்ச்சி அடையவில்லை. ஒரு விரக்தி புன்னகையோடு ஷாலினியை பார்த்தவள், “ நெனச்சேன். விஷ்ணு மாதிரி ஒரு பையன யாருக்கு தான் பிடிக்காது..???” என்றாள். 😁

ஷாலினி: “ஆமா. விஷ்ணுவோட கேரக்டருக்கு அவனை எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஆனா, இப்ப இத பத்தி ஏன் கேக்குறீங்க…???” என்று குழப்பமாக கேட்டாள். 🙄

வைஷாலி: “ஏன்னா நான் விஷ்ணுவ லவ் பண்றேன். எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து எனக்கு விஷ்ணு தான் எல்லாம். நான் அவன தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு இத்தனை நாளா நம்பிட்டு இருக்கேன். இப்ப நீ தான் குறுக்க வந்துட்ட.” என்று ஷாலினியை நேருக்கு நேராக பார்த்து சொன்னவரின் கண்களில் ஷாலினியின் மீது வெறுப்பும், காதல் தந்த 😒 😟 😞 💔 இரண்டற கலந்து இருந்தது. 

ஷாலினிக்கும் வைஷாலி விஷ்ணுவை காதலிக்கிறாளோ, என்ற ஒரு சந்தேகம் இருந்து. அதனால் அவள் இப்போது பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை. இப்போது இவள் ஏன் தன்னை பார்க்க வந்து இருக்கிறாள் என்று புரிந்து கொண்ட ஷாலினி; வைஷாலியின் மீது கோபப்பட விரும்பவில்லை. அவளால் வைஷாலியின் இடத்தில் இருந்து யோசித்துப் பார்க்க முடிந்தது. இருப்பினும் கண்டிப்பாக அவள் இவளுக்காக விஷ்ணுவை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று நினைத்தவள், “இப்ப உங்களோட மைண்ட் செட் எப்படி இருக்கும்னு எனக்கு புரியுது. நம்ம ஆசைப்பட்ட மாதிரி நம்மளால இருக்க முடியலேன்னா அந்த பெயின் எப்படி இருக்கும்னு எனக்கும் தெரியும். ஆனா நம்ம என்ன பண்றது விதின்னு ஒன்னு இருக்குல்ல…!!! விஷ்ணுவுக்கு என்ன தான் புடிச்சிருக்கு. என்னால அவன யாருக்கும் விட்டு தர முடியாது.” என்று உறுதியாக சொன்னாள்.

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured