Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 70

மூர்கனின் காதலி CH 70

by Thenaruvi Tamil Novels
139 views

அத்தியாயம் 70

சௌபர்ணிகா அவங்க காதல் கதைய எல்லார்கிட்டயும் சொல்ல, மேகாவும் விஷ்வாவும் அதை கேட்டுக்கிட்டு இருந்தாங்க.

“நான் போய் வந்தவருக்கு ஏதாவது கொண்டு வர்றேன்,”ன்னு கலைச்செல்வி உரிமையா மேகா வீட்டுக்கு ஓடிப்போய், அங்க இருந்தவங்க கிட்ட சௌபர்ணிகாவோட காதலன் வந்திருக்கறதா சொல்லி, ஒரு பெரிய தட்டுல எல்லாருக்கும் சேர்த்து ஸ்நாக்ஸ், ஜூஸ்னு எல்லாத்தையும் கொண்டு வந்து விஷ்வாவோட ரூம்ல கொடுத்தா.

விஷ்வா கூட இன்னும் முழுசா தான் சேராததுனால, ரொம்ப நேரமா அவன் பக்கத்துல நின்னு பேசுறது தப்பாயிடும்னு நெனச்ச சௌபர்ணிகா, தன் காதலன் சேரனோட அவனோட ரூமை விட்டு வெளியில போனா.

“நாளைக்கு நம்ம எங்கேஜ்மென்ட்க்கு உங்களுக்கு தெரிஞ்சவங்க எத்தன பேர் வருவாங்கன்னு அண்ணா கேக்க சொன்னாரு. நான் மறந்துட்டேன். என்ன, அட்லீஸ்ட் ஒரு 100 பேர் வருவாங்களா??”ன்னு அவன்கிட்ட ஒரு கிளாஸ் டீயைக் கொடுத்துட்டு மேகா கேக்க, “வரவேண்டியவங்க எல்லாம் ஆல்ரெடி வந்துட்டாங்க. பாட்டியோட ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் ஸ்டேபிள் ஆனதுக்கப்புறம் அவங்கள மேரேஜ்க்கு மட்டும் கூட்டிட்டு வந்தா போதும். வேற யாரும் வரமாட்டாங்க. மேரேஜ் சென்னையில தானே நடக்கப் போகுது… அது ஒண்ணும் பிரச்சனை இல்ல, பாத்துக்கலாம்,”ன்னான் விஷ்வா.

“அப்போ மேரேஜ்க்கு கூட எக்ஸ்ட்ரா பாட்டியைத் தவிர வேற யாரையும் நீங்க இன்வைட் பண்ண மாட்டீங்களா??”ன்னு மேகா ஆச்சரியமா கேக்க, “அது எப்படி கூப்பிடாம இருக்க முடியும் லூசு? க்ளோஸ் பிசினஸ் சர்க்கிள்ல இருக்கிறவங்க மட்டும் வருவாங்க. பட் என்கேஜ்மென்ட்க்கு யாரையும் நான் இன்வைட் பண்ணல,”ன்னான் அவன்.

“ஏன், இத எங்க வீட்ல அரேஞ்ச் பண்றாங்கன்னு நீங்க உங்க சைடு ஆளுகளை எல்லாம் கூப்பிடாம அவாய்ட் பண்றீங்களா?”ன்னு மேகா கொஞ்சம் கோபமாவே கேக்க, “ச்சீ போ… அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. என்ன விட்டா மேரேஜ்க்கே நான் எவனையும் கூப்பிட மாட்டேன். அதெல்லாம் தேவையில்லாத வேலை. என்ன பண்ணித்தொலையிறதுன்னா, என்ன மாதிரி பப்ளிக் ஃபிகரா இருந்தா, 24/7 மீடியா ஆளுங்க இங்கதான் ஃபுல் ஃபோகஸ் பண்ணிட்டு இருப்பானுங்க. நான் யாரையும் கூப்பிடாம மேரேஜ் பண்ணா, ‘விஷ்வாவின் திருமணத்தில் ஏதோ மர்மமான விஷயம் நடக்கிறது. உண்மையில் அவருக்கு திருமணம் நடந்ததா? இல்லை இதில் வேறு ஏதேனும் உண்மை மறைந்திருக்கிறதா?’ன்னு இஷ்டத்துக்கு இவனுங்களே ஒரு கதையை ரெடி பண்ணி, மறுபடியும் ஹெட்லைன்ஸ்ல என்ன பத்தி நியூஸ் போட்டு ட்ரெண்ட் ஆக்கி விட்டுருவானுங்க,”ன்னு சொல்லிட்டு சிரிச்சான் விஷ்வா.

அவனோட தானும் சேர்ந்து சிரிச்ச மேகா, “உங்களுக்கு ஹியூமர் சென்ஸ் கொஞ்சம் இருக்கு. அத இவ்ளோ கொஞ்சமா யூஸ் பண்றதுக்கு பதிலா, கொஞ்சம் அதிகமா யூஸ் பண்ணீங்கன்னா, உங்களுக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது. எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க!!”ன்னு சொல்லிட்டு, தொடர்ந்து அவனோட பேசிக்கிட்டு இருந்தா. வெளியில உள்ள மர பெஞ்ச்ல தனியா உக்காந்திருந்த மீராவிற்கு அவங்க பேசி சிரிச்சது நல்லாவே கேட்டுச்சு.

“அந்த பிரஸ் மீட்ல தான் மேகா விஷ்வாவையே மீட் பண்ணதா சொல்றா! ஆனா அதுக்குள்ள இவங்களுக்குள்ள இவ்ளோ கெமிஸ்ட்ரி இருக்கு. ஆனா எனக்கும் ஆதித்யாவுக்கும் நடுவுல எவ்ளோ நெருக்கம் இருந்தும், இப்படி நாங்க ஜாலியா மனசுவிட்டு பேசி என்னைக்கும் சேர்ந்து சிரிச்சது இல்லை. ஒருவேளை ட்ரூ லவ் இப்படித்தான் இருக்குமோ! பஞ்சாயத்துல ஆதித்யா சொன்ன மாதிரி, எனக்கு அவன் மேலயும் அவன் சொத்துக்கள் மேலயும் தான் ரொம்ப ஆர்வம் இருந்திருக்கு. நான்தான் அத லவ்வுன்னு குழப்பிக்கிட்டு எல்லாத்தையும் இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டுருக்கேன்,”ன்னு நெனச்ச மீரா வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க, விஷ்வா கூட அவனோட ரூம்ல இருந்து வெளிய வந்த மேகா,

“நாங்க வீட்டுக்கு சாப்பிடப் போறோம். நீயும் வா, சாப்பிடலாம்,”ன்னு மீராகிட்ட சொல்லி அவளையும் கூட்டிட்டு அவ வீட்டுக்கு போனா.
அங்க வந்த சொந்தக்காரங்க எல்லாம் ஏற்கனவே பந்தியில உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்க, ஏதோ தன் வீட்டு விசேஷம் நடக்குற மாதிரி எல்லாருக்கும் சந்தோஷமா, உரிமையோட சாப்பாடு பரிமாறிக்கிட்டு இருந்தா கலைச்செல்வி. வெற்றியோட அம்மா அனுராதாவும், “ஏய் புள்ள அங்க பாரு… அவங்க சாம்பார் கேக்குறாங்க, கொண்டு போய் ஊத்து. இங்க பாரு, தண்ணி தீர்ந்து போயிருச்சு. எல்லாருக்கும் தண்ணி ஊத்து,”ன்னு உரிமையா அவகிட்ட சொல்லி வேலை வாங்கிக்கிட்டு இருந்தா.

எல்லாத்தையும் கவனிச்ச மேகா, விஷ்வாவை தன்னோட ரூம்ல உக்கார வெச்சுட்டு, அவனுக்கான சாப்பாட்டை தட்டுல போட்டு கொண்டு போய் கொடுத்துட்டு வந்தா. பின் மத்தவங்க எல்லாரும் சாப்பிட, அரண்மனையில ஆதித்யாவை விஷ்வாவோட ஆட்கள் வெளியில போக விடாததுனால, ஒரு ஹோம் நர்ஸை அப்பாயிண்ட் பண்ணி தனக்குத்தானே ட்ரீட்மென்ட் கொடுத்துக்கிட்டான்.

அவனோட ஆட்கள் அப்பப்ப வந்து அவனைப் பார்த்துட்டுப் போறது, அவனுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து தர்றதுன்னு இருந்தாங்க. ஆனா அவங்க எவ்வளவு முயற்சி செஞ்சும், அவங்களால விஷ்வாவோட ஆட்களை மீறி ஆதித்யாவை ஒரு இன்ச் கூட நகத்த முடியல.

மறுநாள் மாலையில…

மேகாவோட குலதெய்வ கோவில்ல விஷ்வா மற்றும் மேகாவோட நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்துச்சு. விஷ்வாவோட ஆசைக்காக தன் வீட்டிலிருந்து கோவிலுக்குப் போற வரை லெஹங்கால இருந்த மேகா, நிச்சய தாம்பூலம் மாத்திட்டு, மணமக்கள் ரெண்டு பேரும் மோதிரம் மாத்துனதுக்கப்புறம், சௌபர்ணிகா தட்டுல வெச்சு கொடுத்த விஷ்வா அவளுக்காக வாங்கின புடவை கட்டிக்கொண்டு போய் எல்லார் முன்னிலையிலும் நின்னா.

அவ வேட்டி சட்டை போட்டிருந்த விஷ்வாவைப் பார்த்து, “இவருக்கு எந்த டிரஸ் போட்டாலும் பெர்ஃபெக்ட்டா சூட் ஆகுது. இவர் ரோபோட்டா இருந்தாலும் கொஞ்சம் அழகான ரோபோட்தான்,”ன்னு நெனச்சு அவனைப் பார்த்து சைட் அடிச்சா. தானும் அவளை மேலும் கீழும் பார்த்த விஷ்வா, அவளுக்காக தான் ஆசை ஆசையா டிசைன் செஞ்சு வாங்கின அரிதான வைரக்கல் பதிச்ச தங்க மோதிரம் அவளோட வெண்டைக்காய் விரல்ல ஜொலிச்சுக்கிட்டு இருக்கிறத கவனிச்சான். அவன் இன்னைக்குத்தான் மேகாவை முதல் முறையா புடவையில பார்க்குறான்ங்கிறதுனால, “இவ சொன்னது கரெக்ட்தான். என்னதான் லெஹங்கா போட்டாலும், சேலை மாதிரி வராது. இதுல இவ நல்லா கும்முன்னு இருக்கா. ஆனா என்ன, எல்லாரும் ஆசீர்வாதம் பண்றேன்னு இவ முகத்துல நிறைய சந்தன குங்குமத்த அப்பி காமெடி பண்ணிட்டாங்க. அத மட்டும் கிளியர் பண்ணி லைட்டா டச் அப் பண்ணா, இன்னும் செமையா இருப்பா,”ன்னு நெனச்சு தனக்குள்ள சிரிச்சுக்கிட்டான்.

விஷ்வாவும் சௌபர்ணிகாவும் சேர்ந்து மேகாவுக்காக வாங்கி வெச்ச தங்க வைர நகைகளை எல்லாம் நிறைய தட்டுகள்ல கொண்டு வந்து சௌபர்ணிகாவோட அசிஸ்டென்ட்ஸ் அடுக்கி வெச்சாங்க. அதப் பார்க்கவே ஏதோ நகைக்கடையையே அவங்க பார்சல் செஞ்சு வாங்கி வந்த மாதிரி இருந்துச்சு. அதப் பார்த்து ஷாக் ஆன மேகா, “அக்கா எதுக்கு இவ்ளோ? இதையெல்லாம் டோட்டலா வெச்சு வெயிட் போட்டா எப்படியும் ஒரு ரெண்டு மூணு கிலோ இருக்கும் போல. இத நான் ஒருத்தி எப்படி போட முடியும்??”ன்னு கேக்க, சிரிச்ச சௌபர்ணிகா, “மொத்தமா இதுல 10 Kgs இருக்கு. இது எல்லாமே விஷ்வாவோட செலக்ஷன். உனக்கு புடிச்சிருக்கா??”ன்னு கேட்டா.

விஷ்வா அவளுக்காக வாங்கினதுன்னு தெரிஞ்ச உடனேயே மேகாவோட முகம் சட்டென மலர்ந்துச்சு. அதைக் கவனிச்ச விஷ்வா, “இங்க வா. நானே உனக்கு போட்டு விடுறேன்,”ன்னவன், அதுல அவ அணிஞ்சிருக்கிற புடவைக்கு மேட்ச் ஆகுற மாதிரியான நகைகளை மட்டும் சூஸ் செஞ்சு அவளுக்குப் போட்டுவிட்டான். அரண்மனையில பிறந்து வளர்ந்த மேகா, இன்னைக்கு அந்த நகைகளை அணிஞ்சு விஷ்வாவோட பக்கத்துல நிக்கும்போது, உண்மையாவே பார்க்க எல்லார் கண்களுக்கும் மகாராணியைப் போல தெரிஞ்சா. அதனால அந்த நிச்சயதார்த்தத்துக்கு வந்தவங்க எல்லாரும்,

“இவங்க குடும்பமும் வசதிதான். ஆனாலும் இந்தப் பொண்ணுக்கு இப்படி ஒரு வாழ்வா?? புடிச்சாலும் நல்லா புளியங்கொம்பா பார்த்து புடிச்சிருக்காங்க. இன்னும் கல்யாணமே ஆகல. அதுக்குள்ள எந்தப் புருஷன் இப்படி வித விதமா பொண்டாட்டிக்கு நகை போட்டு அழகு பார்ப்பான்?? மேகாவுக்கு கொடுத்து வெச்ச வாழ்க்கதான்,”ன்னெல்லாம் டிசைன் டிசைனா தங்களுக்குள்ள பேசி மேகாவை நெனச்சு பொறாமைப்பட்டாங்க.
குறிப்பா மீரா, தனக்கும் ஆதித்யாவுக்கும் கல்யாணம் நடக்கும்போது இப்படி எல்லாம் அவன் தன்னை தங்கத்தால் குளிப்பாட்டுவான்ன்னு அவ எதிர்பார்த்து இருந்தா. ஆனா அவங்களோட திருமணமோ, இப்படி ஒரு திருமணம் நடந்துச்சுன்னு வெளியில சொல்லிக்கிற அளவுக்குக் கூட நல்லா நடக்கல. அதனால தன்னோட நிலையை நெனச்சு வருத்தப்பட்ட மீரா, இருந்தபோதும், “நம்ம என்ன பண்ணாலும், நமக்கு என்ன கிடைக்கணும்னு இருக்கோ, அதுதானே கிடைக்கும். நான் ஆதித்யாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சேன். அது நடந்துருச்சு. சோ அத நெனச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.

மேகாவோட நல்ல மனசுக்கு அவளுக்கு விஷ்வா கடவுள் கொடுத்த கிஃப்ட்,”ன்னு நெனச்சு மேகாவுக்காக மனசார சந்தோஷப்பட்டா.

தொடரும்..

(என்னை மறக்காமல்பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured