அத்தியாயம் 69
மேகாவின் நிச்சயதார்த்தத்துக்கு ஏகப்பட்ட சொந்தக்காரங்க வந்திருந்ததால, வீட்ல இடம் பத்தாததால, அவளோட நிச்சயதார்த்த ஆடையை சௌபர்ணிகா, மீரா மற்றும் கலைச்செல்வியோட அரண்மனையில உள்ள ஒரு ரூம்ல உட்கார்ந்து பார்த்துகிட்டு இருந்தா மேகா.
இன்னைக்குதான் மீராவுக்கு கல்யாணம் ஆகியிருக்கு. அதனால அவளுக்கும் ஆதித்யாவுக்கும் ஏதாவது செய்யணும்னு நெனச்ச காளீஸ்வரன், முத்துவை அவங்களுக்காக சிலத வாங்கிட்டு வரச் சொல்லி மதுரைக்கு அனுப்பி வச்சிருந்தார்.
கையில நாலஞ்சு ஷாப்பிங் பேக்ஸோட வந்த முத்து, அதைக் கொடுக்குற சாக்குல சௌபர்ணிகாவைப் பார்க்கிற ஆசையில, பெண்கள் இருந்த ரூம் கதவைத் தட்டிட்டு உள்ள போனான். “வாங்கண்ணா.. என்ன கையில நிறைய பேக் வச்சிருக்கீங்க.. நீங்களும் தனியா ஏதாவது வாங்கிட்டீங்களா..??”ன்னு மேகா அவனைப் பார்த்து கேட்க, “மீராவுக்கும், ஆதித்யாவுக்கும் அண்ணன்தான்மா இதெல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னாரு,” ன்ன முத்து, தன் கையில இருந்த பைகளை மீரா கிட்ட கொடுத்தான். “நான் மேகாவுக்கு செஞ்சது எல்லாம் தெரியாம இவங்க என்னையும் அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி எவ்வளவு நல்லா பார்த்துக்கிறாங்க.. ச்சே.. நாம ஏன் அவன்கூட சேர்ந்து அவனை மாதிரியே மாறிட்டோம்.. இனிமே என்ன ஆனாலும் சரி. மேகாவுக்கு நம்மளால எந்தப் பிரச்னையும் வரக் கூடாது,” ன்னு நெனச்ச மீரா,
“தேங்க்ஸ் அண்ணா,” ன்னா கலங்கிய கண்களோட.
“அண்ணான்னு சொல்லிட்டு அப்புறம் எதுக்குமா தேங்க்ஸ் சொல்லி என்னை அன்னியப்படுத்துற..??”ன்னு முத்து கேட்க, “சாரி அண்ணா,” ன்னு தன் கண்ணைத் துடைச்சிட்டு மீரா சிரிச்ச முகமா சொன்னா.
“அதையும் இனிமே சொல்லாத,” ன்ன முத்து, ஓரக்கண்ணா சௌபர்ணிகாவைப் பார்த்துட்டு அந்த ரூமை விட்டு வெளிய போனான். அப்போ சௌபர்ணிகாவுக்கு ஒரு கால் வர, வேகமா அத அட்டெண்ட் செஞ்சு, “வந்துட்டியா நீ..??”ன்னு உற்சாகமான குரல்ல கேட்டவள், தன் புடவையைத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டு முத்து கீழ போறதுக்குள்ள அவனத் தாண்டி வேகமா கீழ ஓடுனா.
“இவங்க எங்க இவ்வளவு வேகமா ஓடுறாங்க..??”ன்னு கலைச்செல்வி கேட்க, “தெரியலையே வாங்க போய் பார்க்கலாம்,” ன்ன மேகா, தங்க ரூம்ல இருந்து வெளிய வந்து பால்கனியில நின்னு கீழ எட்டிப் பாத்தா. 33 வயசு மதிக்கத்தக்க ஒருத்தர் கார்ல இருந்து இறங்கி அந்த அரண்மனை வாசல்ல நிக்க, ஓடிச்சென்ற சௌபர்ணிகா தான் இருக்குற இடத்தை மறந்து தாவி அவனைக் கட்டிப்பிடிச்சுகிட்டு, “நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் Chey…!!” ன்னு கலங்குன கண்களோட சொன்னா.
“Cheyவா.. இவர் யாரு..??”ன்னு மீரா கேட்க, அதே கேள்விய தன் மனசுல வச்சுகிட்டு அந்த காட்சிய உடைஞ்ச மனசோட பார்த்துகிட்டு இருந்தான் முத்து. “எனக்கு என்னடி தெரியும்…?? ஒருவேளை இவர் அவங்க பாய்ஃப்ரெண்டா இருக்கலாம். அவருக்கும் அந்த அக்காவுக்கும் ஒரே வயசுதான் இருக்கும்,” ன்னா மேகா. தன்னைக் கட்டிப்பிடிச்சிருந்த சௌபர்ணிகாவ அப்படியே தூக்கி ஒரு சுத்து சுத்திய Chey என்கின்ற சேரன், அவளைக் கீழ இறக்கிவிட்டு,
“நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்டி.
ஆக்சுவலா இன்னைக்கு எனக்கு மும்பையில ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு தெரியுமா.. இன்னைக்கு நீ உன் தம்பிக்கு எங்கேஜ்மென்ட்னு சொன்னவுடனே அதையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு உனக்காக ஓடி வந்துட்டேன்,” ன்னு அவன் காதலோட சொல்ல,
“நீ மார்ஸ்லயே இருந்தாலும் நான் கூப்பிட்டா எனக்காக நீ உடனே வருவேன்னு எனக்குத் தெரியும்,” ன்னு சின்ன வெக்கத்தோட சந்தோஷமா சொன்னா அவள்.
“இப்படி பேலஸ்க்கு வர சொல்லிட்டு வாசல்லயேதான் என்ன நிக்கவச்சு பேசிட்டு இருப்பியா..??”ன்னு சேரன் பொய்யா கோபத்தோட கேட்க, “சாரி சாரி… உன்ன ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்த எக்சைட்மென்ட்ல உன்னை உள்ள கூப்பிடவே மறந்துட்டேன். என் கூட வா… இன்னைக்கு நான் உன்னை என் தம்பிக்கு இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறேன்,” ன்ன சௌபர்ணிகா, அவன் கையப் பிடிச்சு கூட்டிட்டுப் போய் விஷ்வாவோட ரூமுக்கு போனா.
அதனால மேகாவும் அங்க போக, மத்தவங்க எல்லாம் வெளிய நின்னு வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தாங்க. அதுவரைக்கும் பிஸியா தன் லேப்டாப்ல வேலை பார்த்துகிட்டு இருந்த விஷ்வா, அவங்க தன்கிட்ட வந்து நின்ன உடனே,
என்னன்னு கேக்குற மாதிரி நிமிர்ந்து பாத்தான்.
“சாரி விஷ்வா நான் இவர பத்தி உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும். இவர் நேரில வரும்போது, இவர உனக்கு இன்ட்ரடியூஸ் பண்ணிட்டு அப்புறமா இத பத்தி பேசிக்கலாம்னு இவ்வளவு நாளா வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன். இவர் பேரு சேரன்.
கவர்மென்ட் காலேஜ்ல ப்ரொபஸரா வேலை பார்க்கிறாரு. நான் காலேஜ் படிக்கும்போது இவர் எனக்கு சீனியர்.
காலேஜ்ல இருந்தே நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறோம். பாட்டிக்குத் தெரியும். உன் கிட்ட தான் சொல்ல முடியாம போயிடுச்சு.
என்ன பத்தி பேச்சு எடுத்தாலே நீ டென்ஷன் ஆகுறேன்னு பாட்டியும் எங்க லவ் விஷயத்தை பத்தி உன்கிட்ட சொல்லாம விட்டுட்டாங்க. இப்போ உனக்கு மேரேஜ் நடக்கப் போகுது. இதவிட நீங்க மீட் பண்றதுக்கு வேற என்ன பெர்ஃபெக்ட் டைம் இருக்க முடியும்..?? அதான் நான் இவர உடனே கிளம்பி வரச் சொன்னேன்,” ன்னு உற்சாகமான குரல்ல சொன்னா சௌபர்ணிகா.
அவ முகத்தையே உத்துப் பார்த்த விஷ்வா, “காலேஜ்ல இருந்தே லவ்வா..?? அப்போ இவங்கள பத்தி மேகா சொன்னது உண்மைதான். இவங்க நெனச்சிருந்தா எப்பவோ கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிருக்கலாம். ஆனா இவங்க இவ்வளவு வருஷமா எனக்காக வெயிட் பண்ணிருக்காங்க.
இப்படி பண்றதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும். என் பேரண்ட்ஸ் விஷயத்துல நான் ரொம்ப அன்லக்கின்னு நெனச்சேன். பட் சிப்ளிங்க்ஸ் விஷயத்துல ஐ யாம் பிளஸ்டு (I am blessed). இந்த விஜய் தான் என்ன பத்தி யோசிக்காம அவசரப்பட்டு என்ன பாதியிலயே விட்டுட்டு போயிட்டான்,” ன்னு நெனச்சவன் திடீர்னு விஜயைப் பத்தின நெனப்புகளுக்குள்ள தன்னை தொலைச்சான்.
“என்ன இவன் அமைதியா இருக்கான்.. ஒருவேளை இவனுக்கு சேரனப் பிடிக்கலையா..?? இல்ல நான் லவ் பண்றதே பிடிக்கலையா..??”ன்னு நெனச்சு குழம்புன சௌபர்ணிகா, “விஷ்வா..!!” ன்னு கூப்பிட்டுட்டு கேள்வியா அவனைப் பார்க்க, “ம்ம்ம்.. ஆல் தி பெஸ்ட். ரெண்டு பேரும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க…!!” ன்னு சாதாரணமாக அவங்கல பார்த்து ன்னான் விஷ்வா.
“என்னடி உன் தம்பி அப்படி இப்படின்னு அவ்வளவு பில்டப் பண்ண.. நீ ஒருத்தன லவ் பண்றேன்னு கூட்டிட்டு வந்து சொல்லிட்டு இருக்க.. இவன் இவ்ளோதான் ரியாக்ஷன் கொடுப்பானா..??”ன்னு சேரன் மெல்லிய குரல்ல கேட்க, “நீங்க என்ன பண்ண எனக்கு என்னன்னு கேட்டு வெளிய போங்கன்னு துரத்தாம, நம்மள மதிச்சு ஏதோ ரெண்டு வார்த்தை பேசுனானேன்னு நெனச்சு சந்தோஷப்படு,” ன்னா சௌபர்ணிகா.
வெளிய நின்னு அவங்க பேசுறதெல்லாம் கவனிச்சுகிட்டு இருந்த முத்துவால அதுக்கு மேல அதையெல்லாம் பார்க்க முடியல. அவன் சௌபர்ணிகாவ பார்த்து ஒரு வாரம் கூட ஆகியிருக்கல. ரெண்டு பேரும் முழுசா இதுவரைக்கும் 10 நிமிஷம்கூட பேசி பழகி இருக்கல. இருந்தாலும்கூட, அவளப் பார்க்கும்போது ஏற்பட்ட இனம் தெரியாத ஒரு ஃபீலிங்னால, தன்ன அறியாம அவ மேல காதல் வந்துருச்சு முத்துவுக்கு. அதனால அவனோட காதல் மனசு அவன போட்டு வாட்ட,
“உன்ன பார்க்கும்போதே.. நமக்குள்ள இருக்கிற வித்தியாசம் எல்லாமே பளிச்சுன்னு என் கண்ணு முன்னாடி தெரிஞ்சது. அதான் நான் உன் மேல ஃபீலிங்ஸ வளத்துக்க கூடாதுன்னு நெனச்சு ரொம்ப கண்ட்ரோலா இருந்தேன். பட் என்ன பண்றது..?? என்ன மீறி நானே உன்ன லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டேன் சௌபர்ணிகா. ஏற்கனவே நீ எங்கயோ இருந்த. நான் எங்கயோ இருந்தேன்.
இப்போ நமக்கு நடுவுல வேற ஒருத்தன் வந்துட்டான். எப்படியும் உனக்கும் அவனுக்கும் சீக்கிரம் மேரேஜ் ஆகிடும். அப்புறம் அடுத்தவன் பொண்டாட்டிய நெனச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்கிறது தப்புன்னு நான் உன்ன மறக்கணும். இது தான் நடக்கப் போகுது..
பரவால்ல நடக்கட்டும். எனக்கு கஷ்டமா இருந்தாலும், நான் இதையெல்லாம் கடந்து போய்தானே ஆகணும்..!!! என்னோட லவ் தான் சக்சஸ் ஆகல. அட்லீஸ்ட் உன்னோட லவ் ஆவது சக்சஸ் ஆகி நீ சந்தோஷமா இருந்தா சரி,” ன்னு நெனச்சு கனத்த மனசோட அரண்மனையில இருந்து வெளிய போனான் முத்து.
“என்னக்கா.. என் கிட்ட கூட உங்களுக்கு ஆள் இருக்குன்னு நீங்க சொல்லவே இல்ல..!!” ன்ன மேகா கிண்டலா கேட்க, “நான் உன்கிட்ட சொன்னா.. நீ இவன்கிட்ட சொல்லாம இருப்பியா..?? முதல்ல என் தம்பிகிட்ட நானே சொல்லணும்னு தான் நான் உன்கிட்ட சொல்லல. நீ தப்பா நெனச்சுக்காத,” ன்னா சௌபர்ணிகா.
“பரவால்ல பரவால்ல. பட் நீங்க உங்க லவ் ஸ்டோரிய சொல்லலைன்னா நான் அப்போதான் தப்பா நெனச்சுக்குவேன். சீக்கிரம் சொல்லுங்க.. உங்க ரெண்டு பேர்ல யார் ஃபர்ஸ்ட் ப்ரபோஸ் பண்ணது..?? நீங்களா அண்ணாவா..??” ன்னு ஆர்வமா மேகா கேட்க,
“இவர்தான் முதல்ல சொன்னாரு. ஆனா இவர் சொல்றதுக்கு முன்னாடியே நான் இவர லவ் பண்ணிட்டுத்தான் இருந்தேன். இவரே வந்து ப்ரபோஸ் பண்ணலைனாலும், நானே போய் கொஞ்ச நாள்ல ப்ரபோஸ் பண்ணியிருப்பேன்,” ன்னு சொல்லிட்டு சிரிச்ச சௌபர்ணிகா தன்னோட காதல் கதைய சொல்ல ஆரம்பிச்சா.
மேகா அத ஜாலியா கேட்டுகிட்டு இருக்க, விஷ்வா அமைதியா எந்த உணர்ச்சியும் இல்லாத முகத்தோட எல்லாத்தையும் கவனிச்சுகிட்டு இருந்தான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)