Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 66

மூர்கனின் காதலி CH 66

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 66

கண்களை இறுக்கமா மூடியிருந்த மேகா, தன்னோட கைய அறுத்துக்கிட்டு சாகப் போற நேரத்துல, பின் வாசல் வழியா சுவர் ஏறி குதிச்சு அவளோட வீட்டுக்குள்ள நுழைஞ்ச விஷ்வா, வேகமா அவ ரூம் கதவ தொறந்து உள்ள போனான்.

அவனப் பாத்தவுடனே பதறிப் போய் எந்திரிச்ச மேகா, தன் கையில இருந்த கத்திய கீழ போட்டுட்டா. அதனால வந்த கோபத்துல வேகமா அவ கிட்ட போயி அவள அடிக்க கை ஓங்கின விஷ்வா, தனக்கு முன்னாடி பாவமா வேட்டைக்காரன கண்டு பயந்து நடுங்குற சின்ன முயல் குட்டி மாதிரி அவ நடுங்கிட்டு இருக்கறத பாத்து மனசு இறங்கி தன்னோட கைய கீழ இறக்கி விட்டுட்டு, “உனக்கு எல்லாம் அறிவு இருக்கா இல்லையா…? இன்னும் எத்தன வருஷத்துக்குத் தான் எவனாவது எதையாவது காட்டி பயமுறுத்துனா உடனே பொண்ணுங்கல்லாம் இப்படி suicide பண்ணி செத்துக்கிட்டே இருப்பீங்க?

கொஞ்சங்கூட வெக்கமே இல்லாம personal-ஆ நடந்ததெல்லாம் record பண்ணி வச்சுக்கிட்டு ஒருத்தன் உன்ன மிரட்டுறான். அவன் உயிரோட இருக்கலாம். அதனால பாதிக்கப்பட்ட நீ சாகணுமா? என்னடி லாஜிக் இது?”ன்னு கோபமா கேட்டான்.

அதனால ஓடிப்போயி அவன இறுக்கமா கட்டிப் பிடிச்ச மேகா, “உங்களுக்கு எப்படித் தெரியும்?”னு கண்ணீரோட கேட்க, தானும் அவள கட்டிப் பிடிச்ச விஷ்வா, “அன்னைக்கு அவன் வீடியோவ அனுப்பி உன்னை blackmail பண்ணும்போதே, திரும்பவும் கண்டிப்பா இதே மாதிரி உன்ன மிரட்டுவான்னு என் ஆளுங்கள உன் mobile phone-அ hack பண்ணச் சொன்னேன். இப்போ ஏதோ தப்பா நடக்குதுன்னு எனக்கு தோணிட்டே இருந்துச்சு. அதான் அவனுங்கள என்னன்னு பாக்கச் சொன்னேன். ஆதித்யா உனக்கு சென்ட் பண்ண posts-அ எனக்கு forward பண்ணாங்க”ன்னு நிதானமான குரல்ல சொன்னான் விஷ்வா.

அவன விட்டுப் பிரிஞ்ச மேகா, “அத பாத்துட்டு உங்களுக்கு என் மேல கோபம் வரலையா?”ன்னு பயந்த குரல்ல கேட்க, “இதுல நான் கோபப் பட என்ன இருக்கு? நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணதுதான் எனக்கு already தெரியுமே! நான்தான் உன்ன first time hotel room-ல பார்க்கும்போதே சொன்னேன்ல.. உன்னோட personal life-ல நான் interfere பண்ண மாட்டேன். பட் உனக்கு ஒரு problem வந்தா கண்டிப்பா உனக்காக வருவேன்!”னு சாதாரணமா சொன்னான் விஷ்வா.

“இல்ல விஷ்வா.. அன்னைக்கு நடந்தது வேற. பட் அத அவன் வேற மாதிரி project பண்ணப் பாக்குறான். அது ஒரு வருஷத்துக்கு முன்னாடி அவனோட birthday party நடந்தப்போ எடுத்தது. அவனும் மீராவும் சேர்ந்துக்கிட்டு எனக்கே தெரியாம என்ன ஜூஸ்ல alcohol கலந்து என்ன குடிக்க வச்சுட்டாங்க. அப்போ நான் கிட்டத்தட்ட மயங்கி விழுகிற ஸ்டேஜ்ல இருந்தேன்.

ஆதித்யா அவன் ரூமுக்கு என்ன கூட்டிட்டுப் போனான்”னு மேகா சொல்லிட்டு இருக்க, அதுக்கு மேல அவ சொல்ல வர்றதெல்லாம் கேட்குற பொறுமை இல்லாம விஷ்வா, “போதும் நிறுத்து”ங்கிற மாதிரி ஒத்தக் கைய அவளுக்கு முன்னாடி நீட்டினான்.

“Oh my God.. please Vishwa.. let me finish!”னு மேகா அவனப் பாத்துக் கத்த, “சொல்லித் தொலை!”ங்கிற மாதிரி அவளப் பாத்தான் விஷ்வா.

“அந்த ஃபோட்டோல இருக்குற மாதிரி நாங்க கிஸ் பண்றதெல்லாம் உண்மைதான். பட் அதுக்கப்புறம் வேற ஒண்ணும் நடக்கல. நானும் குடிச்சிருந்தேன். எனக்கு மேல அவன் நிறைய குடிச்சிருந்தான். அதனால ரெண்டு பேருமே மட்டையாகி தூங்கிட்டோம். இதான் நடந்துச்சு. அப்பவும் நான் ஆதித்யாவ நம்பல. எனக்கு பயமா இருந்ததுனால நான் next day-வே ஹாஸ்பிடல் போய் செக் பண்ணேன். டாக்டர் எனக்கு எதுவும் ஆகலன்னு ரிப்போர்ட்டும் கொடுத்ததுக்கப்புறம் தான் என்னால நிம்மதியாவே இருக்க முடிஞ்சது. அந்த ரிப்போர்ட்டு கூட என்கிட்ட தான் இருக்கு. இருங்க.. நான் எடுத்துட்டு வர்றேன்”னு மேகா வேகமா போக, அவ கையப் பிடிச்சு தடுத்தான் விஷ்வா‌.

அதனால மேகா கேள்வியா அவனப் பாக்க, “நீ எதையும் எனக்கு prove பண்ண வேண்டிய அவசியமில்ல. I know everything”னு சொன்னான் விஷ்வா. “எப்படி?”னு மேகா ஆச்சரியமா கேட்க, “அந்த photo-வ நான் analyse பண்ணி பாத்தேன். நீ சொன்ன மாதிரி அது ஒரு வருஷத்துக்கு முன்னாடி எடுத்ததுதான். அண்ட் உன்ன அந்த ரூமுக்கு கூட்டிட்டுப் போய் உன்கூட சேர்ந்து இருந்து அத வீடியோ எடுக்கணும்னு already பிளான் பண்ணி அவன் அங்க camera fix பண்ணி வச்சிருந்திருக்கான்.

அதுல record ஆனதுதான் அந்த வீடியோவும், photo-வும்.
இத்தனையும் கரெக்ட்டா பிளான் பண்ண அந்த நாய், camera-அ correct-ஆன angle-ல place பண்ணாம விட்டுட்டான். சோ அவன் எடுத்த வீடியோல உன் face ஒழுங்கா தெரியல.

அதான் உன்ன பயமுறுத்துறதுக்காக வேணும்னே face-அ blur பண்ணிருக்கான். And mainly, அவன் நெனச்ச மாதிரி அங்க சம்பவம் நடந்திருந்தா, அதுல ஒரு தரமான bit scene-அ choose பண்ணித்தான் போட்டுருப்பான். அதான் effective-ஆ இருக்கும்.

அவனுக்கு கெடச்சதெல்லாம் அந்த கிஸ் scene-உம், நீங்க சேர்ந்து தூங்குற மாதிரியான long video-வும் தான். சோ, இருக்குறத வச்சு அவன் உன்ன blackmail பண்ணிருக்கான். ஹாஸ்பிடலுக்குப் போய் டெஸ்ட் எல்லாம் பண்ணி பாக்குற அளவுக்கு உனக்கு அறிவு இருக்குல்ல..
அதான் ஒண்ணுமே நடக்கலையே.. அப்புறம் ஏன் நம்ம பயப்படணும்னு கொஞ்சம் brain-அ யூஸ் பண்ணி இதையெல்லாம் யோசிச்சு பாத்திருந்தா உனக்கே புரிஞ்சிருக்கும். எங்க.. அந்த அளவுக்கு உனக்குதான் அறிவில்லையே!”ன்னு சொன்னான் விஷ்வா.

அவன் தனக்கு அறிவு இல்லைன்னு சொல்றதால கோபப்படுறத விட்டுட்டு, “என்ன நடந்துச்சுன்னு எதுவுமே தெரியாம.. just ஒரு photo-உம் video-உம் வச்சு, நடந்தது எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பாத்த மாதிரி இவர் என்ன அப்படியே கரெக்ட்டா சொல்றாரே! விஷ்வா நிஜமாவே ரொம்ப smart-தான்”னு நெனச்சு சந்தோஷப்பட்டா.

“இருந்தாலும் அத அவன் release பண்ணிட்டா என்ன பண்றது? 2 years-ஆ நீங்களும் நானும் love பண்ணிட்டு இருக்கோம்னு நான் media-வுல சொல்லிட்டேன். இப்போ இதெல்லாம் வெளிய வந்தா, எல்லாரும் என்ன கேவலமா தானே நெனப்பாங்க! அப்பவும் அவன் நெனச்சது நடந்திருமே விஷ்வா!”னு மேகா சோகமா கேட்க, “அதெல்லாம் நடக்கிறதுக்கு முதல்ல அவன் இருக்கணும்ல!”ன்ன விஷ்வா, கீழ கெடந்த கத்திய எடுத்துக்கிட்டுப் போயி கிச்சன்ல வச்சுட்டு, அவள தன்னோட அழைச்சிகிட்டு அரண்மனைக்குப் போயிட்டான்.

“மறுபடியும் நீங்க அவன உங்க ஆளுங்கள வச்சு தூக்கிட்டீங்களா?”னு கேட்டபடி மேகா அவனோட போக, “ம்ம்ம். பட் இந்த தடவை யாருக்காகவும் எதுக்காகவும் நான் அவன உயிரோட விடுறதா இல்ல”ன்னு கோபமா சொன்னான் விஷ்வா.

“அதுலாம் அப்புறம் பாத்துக்கலாம். நீங்க இந்த மாதிரி ஏதாவது பண்ணுவீங்கன்னு அவன் ஏற்கனவே யோசிச்சு, அவனுக்கு ஏதாவது நடந்துச்சுன்னா என்ன பண்றதுன்னு வேற யாரையாவது வச்சு அத leak பண்ண பிளான் பண்ணிருந்தா என்ன பண்றது?”னு மேகா பயத்தோட கேட்க, “ஆமா.. அவன ஒழுங்கா handle பண்ண துப்பு இல்லை. இப்போ என்கிட்ட வந்து எல்லாத்தையும் correct-ஆ யோசிச்சு point-ஆ question கேளு! கம்முனு வாடி. அதெல்லாம் நான் பாத்துக்குறேன்”ன்ன விஷ்வா அவள இழுத்துக்கிட்டு தன்னோட ரூமுக்கு போனான்.

ஹாஸ்பிடல்ல இருந்து இன்னும் discharge கூட ஆகியிருக்காத நிலையில விஷ்வாவையும் மேகாவையும் சேர விடக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல தன்னோட காதலி மீரா கூட சேர்ந்து இந்த திட்டத்த அரங்கேத்தி இருந்தான் ஆதித்யா.

அதனால, வழக்கம் போல ஆதித்யாவ தேடி அங்க போன விஷ்வாவின் ஆட்கள், வெளிய பாதுகாப்பிற்காக இருந்தவங்கள அடிச்சு தொம்சம் பண்ணிட்டு, அவங்க ரெண்டு பேரையும் அங்க இருந்து தூக்கிட்டு கிளம்புனாங்க.

விஷ்வா, “எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் அவங்க ரெண்டு பேரும் இங்க இருக்கணும்”னு சொல்லியிருந்ததுனால, அவங்க ரெண்டு பேரையும் MV Tech-க்கு சொந்தமான private jet விமானத்துல மதுரைக்கு கொண்டு வந்து, மேகாவோட கிராமத்துக்கு வெளிய இருந்த ஒரு ஆள் அரவமே இல்லாத இடத்துல விமானத்த தரையிறக்கினாங்க.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துல விஷ்வாவின் முன்னாடி அரண்மனையில ஆதித்யாவும் மீராவும் அவனோட ஆட்களால கொண்டு வந்து நிறுத்தப்பட்டாங்க. இன்னும் ஆதித்யாவுக்கு treatment முடிஞ்சிருக்காததால, இப்போவும் அவன் பாக்கறதுக்கு பரிதாபமான நிலையிலதான் இருந்தான்.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured