அத்தியாயம் 102: நான் உன்ன லவ் பண்றேன் ரித்திகா (பார்ட் 2)
ராகவிக்கு இப்போது தான் அவன் ஏன் தன்னிடம் இவ்வளவு நேரம் கோபமாக பேசிக் கொண்டு இருந்தான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. கௌத்தம் தன் மீது இருக்கும் அக்கறையில் தனக்கு எதுவும் தவறாக நடந்து விட கூடாது என்ற பயத்தில் தான் இப்படி எல்லாம் சொல்கிறான் என்று நினைத்த ராகவி, “உங்களோட பயம் எனக்கு புரியுது. ஆனா பிரச்சனை இல்லாத லைஃப்னு ஒன்னு யாருக்குமே இல்லை. எல்லாருக்குமே அவங்களுக்கு தகுந்த மாதிரி அவங்களுக்கான பிரச்சனைன்னு ஏதோ ஒன்னு வந்துட்டு போயிட்டு தான் இருக்கும்.
இதை நம்ப செஞ்சா பிரச்சனை வரும் தப்பா ஆயிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சு நினைச்சு பயந்துக்கிட்டே இருந்தா நம்மளால எதுவுமே செய்ய முடியாது. அந்த பிரவீன்னால தான் பிரச்சனைன்னா இப்ப அவன் தான் ஜெயில்ல இருக்கானே..!!! சோ நீங்க என்ன பத்தி யோசிச்சு கவலைப்படாதீங்க. நான் இந்த கல்யாணத்துக்கு செண்பகம் அம்மா கிட்ட ஓகே -ன்னு சொல்லும்போதே, எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்ன்ற மைண்ட் செட்டுக்கு வந்துட்டேன். என்ன நடக்குமோ நடக்கட்டும் விடுங்க.” என்று கூலாக சொன்னாள்.
இப்போது ராகவி சொன்னவற்றை கேட்ட கௌத்தமின் பிளட் பிரஷர் ரைஸ் ஆனது. அவனுடைய கண்கள் கோபத்தியில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது. 😡 🔥 தன்னுடைய மனதில், “நீ எனக்கு வேணும்ன்னு எனக்கு தோன்ற மாதிரி, உனக்கு ஏன் தோண மாட்டேங்குது ராகவி..??? ஒரு பேச்சுக்கு கூட நீ என்ன கன்சிடர் பண்ணி பாக்கலையா…??? ஒரு வேளை நான் ரிச்சா இல்லாததுனால உனக்கு என் மேல இன்ட்ரஸ்ட் வரலையா..???” என்று பலவாறாக யோசித்தவன் ராகவியை பார்த்து, “நீ என்ன சொன்னாலும் சரி, நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது.” என்று உறுதியான குரலில் காட்டமாக சொன்னான்.
ராகவி: இது வரை அவன் தன் மீது இருக்கும் அக்கறையில் தான் பேசிக் கொண்டு இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு, இப்போது அவன் பேசியது அதிர்ச்சியாக இருந்தது. அதனால் அவனை கோவமாக பார்த்தவள், “நான் யார வேணாலும் கல்யாணம் பண்ணிப்பேன். அது என்னோட இஷ்டம். அத பத்தி உங்களுக்கு என்ன..???” என்று காட்டமாக கேட்டாள். 😡 🔥
கௌத்தம்: “அப்படி எல்லாம் எனக்க்கு என்னான்னு என்னால இருக்க முடியாது.” என்று அவனும் கோபமாக பதில் சொன்னான். 😡🔥
ராகவி: “அதான் நான் ஏன்னு கேட்கிறேன்.” என்று தன்னுடைய பல்லை கடித்துக் கொண்டு கோபமாக கேட்டாள். 😡 🤬
கௌத்தம்: அவள் திரும்பத் திரும்ப தன்னிடம் வாக்குவாதம் செய்து கொண்டே இருப்பதால் எரிச்சல் அடைந்தவன், “ஏன்னா நான் உன்ன லவ் பண்றேன் டி போதுமா….!!! உனக்கு புரியுதா..??? நான் உன்ன லவ் பண்றேன் ராகவி. என்னால எப்படி நீ வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறத பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்…??? அதுவும் நீ வேற எவனையாவது புடிச்சு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட பரவால்ல. இப்படி ஒரு கல்யாணம் உனக்கு தேவையா…????” என்று கோபமாக கேட்டான். 😡 🔥
அவன் சொன்னதைக் கேட்டு வாய் அடைத்து போய் நின்று விட்டாள் ராகவி. அவனுடைய வாயில் இருந்து இந்த வார்த்தைகள் வரும் என்று அவள் ஒருபோதும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஒரு வேளை இந்த திருமண பேச்சுக்கு முன் கௌத்தம் அவளிடம் ப்ரபோஸ் செய்து இருந்தால் கூட, அத ஒருவாட்டி அவள் கன்சிடர் செய்து பார்த்து இருப்பாள்.
ஆனால் இப்போது கௌதம் அவளுடைய கண்களுக்குு மிகவும் ஆண் ஆதிக்கம் மனப்பான்மை உடைய நபராக தெரிந்தான். அவனுக்கு தன் மீது இருக்கும் ஆசையால் தான் தன்னுடைய மனதை மாற்றுவதற்காக, இப்படி விஷ்வாவின் குடும்பத்தை பற்றிய நெகட்டிவ்வான விஷயங்களை பற்றி அவளுக்கு தோன்றியது. அதனால் அவன் மீது கோபப்பட்ட ராகவி, “நீங்க இப்படி இருப்பீங்கன்னு நான் எதிர்பாக்கவேவே இல்ல. உங்களோட சுய நலத்துக்காக விஷ்வா சார் ஐ பத்தின நெகட்டிவான விஷயத்த மட்டும் என் கிட்ட சொல்லி என் வாயாலயே இந்த கல்யாணம் எனக்கு வேணும்ன்னு சொல்ல வைக்க பிளான் பண்றீங்களா…??? ச்சீ…!! ஏன் இவ்வளவு சீப்பா பிஹேவ் பண்றீங்க..??? அவர பத்தி உங்களுக்கு எல்லாமே தெரியும்ன்னு சொல்றீங்கல்ல… அப்ப ஏன் நீங்க சொல்ற அளவுக்கு அவர் கிட்ட ஒரே ஒரு நல்ல விஷயம் கூட இல்லையா….??? அத பத்தி மட்டும் நீங்க ஏன் பேசவே இல்ல..!!!!” என்று கேட்டவள் படபடவென்று பொரிந்து தள்ளினாள். 😒 😡 🤬 🔥
அவள் சொன்னதை எல்லாம் கேட்ட கௌத்தமுக்கு அவள் மீது அதீத கோபம் வர, அவளை அடிப்பதற்காக தன்னுடைய கையை ஓங்கியவன், பெரும் முயற்சிக்குப் பின் அவளை அடிக்காமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். அவன் தன்னை அடிக்க அவனுடைய கையை ஓங்கியதிலேயே, ராகவிக்கு அவன் மீது கோபமும் பெருப்பும் வந்தது. அதனால் அவனைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்தவள், “என்னையே அடிக்க கை ஓங்கிட்டீல்ல…!!! இனிமே உனக்கு என்னோட பிரண்டா இருக்கிறதுக்கு கூட தகுதி இல்ல. இனி மேல் என் கிட்ட சும்மா பேசறதுக்கு கூட ட்ரை பண்ணாத.” என்றவள் கோபமாக டான்ஸ் பிராக்டீஸ் ஹாலில் இருந்து வெளியே சென்று விட்டாள். 😡 🤬
ரித்திகா அங்கு இருந்து சென்ற பின் தான் செய்த தவறை உணர்ந்த கௌத்தம், மன்னிப்பு கேட்பதற்காக ராகவியின் பின்னையே சென்றவன், அவள் அருகில் சென்று “சாரி ராகவி” என்று மந்திரம் போல மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டே இருந்தான். ஆனால் ராகவியோ, தன் அருகில் இப்படி ஒரு மனிதன் இருக்கிறான் என்பதையே கண்டு கொள்ளவில்லை. சில நிமிடங்களில் முதல் பீரியட் ஆரம்பிப்பதை அறிவுறுத்தும் வகையில் பெல் அடிக்க, ராகவி மீண்டும் டான்ஸ் பிராக்டீஸ் ஹாலிற்க்கு சென்றாள்.
கௌத்தமும் அவள் பின்னையே சென்றான். ராகவி வழக்கம் போல் தன்னுடைய வேலையை பார்க்கத் தொடங்கி விட்டாள். அதனால் வேறு வழி இன்றி, அவளுடைய கோபம் தணிந்த பின், அப்புறமாக பேசி அவளை சமாதானம் செய்து கொள்ளலாம் என்றுு நினைத்த கௌத்தமும் அவளோடு இணைந்து கொண்டான். ஆனால் ராகவி ஒருபோதும் அவனுடன் சமாதானமாக போகப் போவதில்லை என்று பாவம் அவனுக்கு தெரியவில்லை.
இது தான் ராகவியின் குணம். அவளுக்கு ஒருத்தரை பிடிக்கும் வரை, அவர்களை தன்னுடைய தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டு அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள். அதுவே அவர்கள் அவளுடைய மனதை நோகடித்து விட்டாலோ, அவள் அவர்கள் மீது வைத்து உருந்த நம்பிக்கையை உடைத்து விட்டாலோ, அவளை ஏமாற்றிவிட்டாலோ, அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், உடனே தன்னுடைய வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிந்து விடுவாள். இப்போது அவள் கௌத்தமையும் அப்படி தான் தூக்கி எறிந்து விட்டாள்.
ஆனால் ராகவியின் மீது அவனுக்கு இருந்த அதீத காதலால், அவளை எப்படியாவது சமாதானப்படுத்தி விட வேண்டும் என்று நினைத்த கௌத்தம், அவனுடைய முயற்சியை கைவிடவில்லை.
சிறைச்சாலை…
மத்திய சிறைச்சாலையில் இருந்த பிரவீனை சந்திப்பதற்காகஅங்கே வந்து இருந்தான் அவனுடைய மேனேஜர். தன்னுடைய மேனேஜரை கோபமாக பார்த்த பிரவீன், “என்ன டா பெயில் கூடவா கிடைக்கல..!! இன்ன வரைக்கும் என்ன வெளியில எடுக்காம என்ன பண்ணிட்டு இருக்க..???” என்றான்.
மேனேஜர்: “அந்த பாதிக்கப்பட்ட பொண்ணோட குடும்பம், மகளிர் சங்கத்து ஆளுங்க, கட்சிக்காரங்கன்னு நிறைய பேர் உங்களுக்கு பெயில் கூட குடுக்க கூடாதுன்னு போராட்டம் பண்ணிக்கிட்டுு இருக்காங்க. அது மட்டும் இல்லாம, ஏற்கனவே நம்ம ப்ராடக்ட்ஸ் ஐ யூஸ் பண்ணி அஃபெக்ட் ஆனவங்க எல்லாம் இப்ப புதுசு புதுசா போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால உங்க கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்காயிடுச்சு சார். சோ, ஜட்ஜ் உங்களுக்கு பெயில் தர மாட்டேன்னு்னு சொல்லிட்டாரு. எனக்கு இப்ப வேற என்ன பண்றதுன்னு தெரியல.” என்றான்.
பிரவீன்: “அப்ப இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு.” என்று வில்லத்தனமாக புன்னகைத்த படி சொன்னான். 😁 😁 😁
– நேசம் தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)