Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 62

மூர்கனின் காதலி CH 62

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 62

விஷ்வாவோட கையப் பிடிச்சிருந்த மேகா, அவனுக்கு இருக்கிற பிரச்சனையை சரி செய்றதுக்கான வழிய கண்டுபிடிச்சு ஃபீல் பண்ணி, அதப் பத்தி அவன் கிட்ட பேசிக்கிட்டிருக்கும்போது, “என்ன விட்டுட்டு போய்டு மேகா.”ன்னு அவ கண்ணப் பாத்து சொல்றான் விஷ்வா.

அதனால பதறிப்போன மேகா, சட்டுன்னு தன் கைய அவன்கிட்ட இருந்து விளக்கிக்கிட்டு, கலங்கின கண்ணோட, “ஏன் திடீர்னு இப்படி சொல்றீங்க விஷ்வா..?? நான் ஏதாவது ஓவரா பேசி உங்கள ஹர்ட் பண்ணிட்டேனா..?? ஐ அம் ஸோ சாரி. இனிமே இப்படி யோசிக்காம எதும் பேசமாட்டேன்.”னு அவனப் பாத்து சொல்லிக்கிட்டிருக்க, அவள இறுக்கமா அணைச்சுக்கிட்டான் விஷ்வா.

அவளும் அவன தன்னோட சேர்த்து இறுக்கிக்க, “இந்த விஷ்வா வெளிய எத வேணாச்சும் சாதிச்சுக் கிழிச்சிருக்கலாம் வாணி. பட், பெர்சனல் லைஃப்ல ஐ அம் அ வெரி பிக் ஜீரோ. நானே நெனச்சாலும் என்னால அகெய்ன் நார்மலா இருக்க முடியல. அதான் உண்மை. நான் ஒழுங்கா தூங்கி ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. என்னால என்னோட எமோஷன்ஸ கண்ட்ரோல் பண்ண முடியல. உங்க வீட்ல இருக்குறவங்க சொன்ன மாதிரி நான் சைகோ தான்.

எப்ப நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.
நீ ஏதோ உனக்கு ஒரு பிராப்ளம்னு என்ன தெரியாம கிஸ் பண்ணதுக்காக, உனக்கு இப்படி ஒரு லைஃப்டைம் பனிஷ்மெண்ட் வேணாம்டி. எல்லார்கிட்டயும் நானே பேசுறேன். எவனாவது நல்ல பையனா பாத்து நானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ஏன் அந்த வெற்றி கூட உன்ன லவ் பண்ணிட்டுதானே இருக்கான்..!! உனக்கு அவனே ஓகேன்னா சொல்லு. யார் என்ன சொன்னாலும் நான் பாத்துக்குறேன்.”னு அவள விட்டுப் பிரிஞ்சு, உணர்ச்சிகள் பொங்க சொன்னான் விஷ்வா.

அழுதுகிட்டே முடியாதுன்னு தலையாட்டின மேகா, “ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க விஷ்வா..?? என்னப் பத்தி நீங்க என்ன நெனச்சுட்டு இருக்கீங்க..?? நீங்க வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா நான் உடனே ஓகே சொல்லணும். வேண்டாம்னு சொன்னா உடனே போய்டுவேனா..?? அப்போ என்னோட ஃபீலிங்ஸ்க்கு எந்த வேல்யூவும் இல்லையா இங்க..??”ன்னு சட்டுன்னு கோபமாவே கேட்க, “உனக்கு என்னடி அப்படி பொல்லாத ஃபீலிங்ஸ் என் மேல…?? என்ன அதுக்குள்ள என்ன லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டியா…?? நீ குளிக்கிறத வீடியோ எடுத்து வச்சு இந்த கல்யாணத்த நிறுத்தச் சொல்லி ஆதித்யா உன்ன மிரட்டும் போதும் நீ என்ன விட்டுப் போகல. உன் வீட்ல இருக்குறவங்க மாத்தி மாத்தி பிராப்ளம் பண்ணியும், நீ என்ன விட்டுட்டுப் போகல.

இப்ப நானே போகச் சொல்றேன்… உனக்கு என்ன தாண்டி பிரச்சனை..?? போயி எங்கயாச்சும் யார்கூடயாச்சும் சந்தோஷமா இருந்து தொலைய வேண்டியதுதானே…!! இப்படியே போனா நானே எத்தன நாள் உயிரோட இருப்பேன்னு தெரியல.

என் கூட இருந்து சாகணுமா உனக்கு..??”னு தானும் கோபமா கேட்ட விஷ்வா வந்த கடுப்புல அவளோட தோளப் பிடிச்சு உலுக்கினான்.‌
அவன் கையத் தட்டிவிட்டு, தன் கண்ணீரத் துடைச்ச மேகா, “சும்மா இப்படி ஏன் ஏன்னு கேட்டா, நான் என்ன சொல்றது விஷ்வா..?? சத்தியமா நான் ஏன் இவ்ளோ சீரியஸா உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு யோசிக்கிறேன்னு எனக்கே தெரியல. நீங்கதான் உங்கள கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்ன ஃபோர்ஸ் பண்ணிட்டே இருந்தீங்க. சோ, தெரிஞ்சோ தெரியாமலோ என்னோட மைண்ட்ல நீங்கதான் என் ஹஸ்பண்ட்னு நான் ஃபிக்ஸ் ஆகிட்டேன்.‌ சும்மா சும்மா உங்க இஷ்டத்துக்கு என்னால என் மனச மாத்திக்க முடியாது விஷ்வா. எல்லாம் கரெக்டா போயிட்டு இருக்கும்போது, மறுபடியும் நீங்களே எதாவது பண்ணி கெடுத்து விட்றாதீங்க.
பெரியவங்க எல்லாரும் சேர்ந்து இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு எங்கேஜ்மென்ட். அது முடிஞ்சு 10 டேஸ் கழிச்சு நமக்கு மேரேஜ்னு டிசைட் பண்ணிட்டாங்க. இனிமே அதுல எந்த சேஞ்சஸ்ம் இருக்கக் கூடாது. நீங்கதான் என் ஹஸ்பண்ட். டூ யு அண்டர்ஸ்டாண்ட்..??”னு கோபமா கேட்க, அவளையே இமைக்க மறந்து பாத்துக்கிட்டு இருந்த‌ விஷ்வா,

சட்டுன்னு அவள் மேல பாய்ஞ்சு, அவள தரையில தள்ளி, அவளோட மென்மையான செவ்விதழ்களை, அவனோட முரட்டு இதழ்களால சிறை செஞ்சான்.

அத எதிர்பார்த்திருக்காத மேகா, ஷாக் ஆகி ‌ கண்ணு விரிய அவனப் பாத்துக்கிட்டிருக்க, ‌அவ கைகள் அவனோட தோள்பட்டைய இறுக்கமா பிடிச்சு அழுத்திக்கிட்டிருந்தது. அந்த அழுத்தம் இன்னும் அவனோட ஆண்மைய கிளறிவிட, தன்னோட முத்தத்தோட ஆழத்த கூட்டுன விஷ்வா, அவளோட இதழ்களை நல்லாக் கடித்து சுவைத்தான். பதட்டத்துல இருந்த மேகாவோட இதயம் வேகமா துடிக்க, அவள் மேல கிடந்த அவனாலயும் அத உணர முடிஞ்சது.‌ அவ தோள்ல இருந்த அவனோட கைகள் அத்துமீறி சட்டுன்னு கீழ இறங்கி அவளோட பெண்மையோட வளமைகளைப் பிடிச்சு அழுத்த, மேகாவோட உடம்பு ஒரு நொடி சிலிர்த்து அடங்குச்சு. அவங்க ரெண்டு பேரும் அவங்களுக்கான உலகத்துல சஞ்சரிச்சு, அந்த ஆழ்ந்த இதழ் முத்தத்துல அவங்கள தொலைச்சு, மோகத்துல திளைச்சிருக்க, அவங்களுக்கு ஆசீர்வாதம் செய்ற மாதிரியே வானத்துல இருந்து நிலவு மகள் தன்னோட ஒளியைப் பரப்பிக்கிட்டிருந்தாள். அது, அந்த அழகிய தியான மண்டபத்துல இருந்த பெரிய ஓட்டைகள் வழியா உள்ள வந்ததால, அவங்களச் சுத்தி ஆங்காங்கே அழகிய டிசைன்கள்ல எதிரொலிச்ச நிலவொளி, அந்தத் தருணத்துக்கு இன்னும் அழகு சேத்துச்சு.
அவ கழுத்தோரம் தன் இதழ்களால கோலம் போட்டுக்கிட்டு இருந்த விஷ்வா, ‘வாணி… வாணி…’ன்னு இன்பத்துல திளைச்சு, ஆசையா அவள அழைக்க, அவனோட காந்தக் குரல் மெல்லிசை ராகமா இனிக்க இனிக்க அவ காதோரம் ஒலிக்க, சொக்கிப் போனா பெண் அவ.‌

அவங்களோட உடலும் மனசும், இன்னும் வேணும் இன்னும் வேணும்னு தவிச்சு மோகத்தாகத்துல எரிஞ்சுகிட்டிருந்தது. விஷ்வா அவ ஆடைக்குள்ள தன் ஒரு கைய நுழைச்சு அவளோட வெற்று இடைய இறுக்கிப் பிடிக்க, “பாஸ்..!! உங்க மச்சான் உங்களையும் மேகாவையும் சாப்பிடக் கூப்பிடுறாரு.”ன்னு சொன்னபடி கேஷுவலா அங்க வந்த மகேஷ், தன் கண்ணு முன்னாடி நடந்துக்கிட்டிருந்ததப் பாத்து, நம்ப முடியாம வாயடைச்சுப் போய் அப்படியே சிலையா ஸ்டன்னாகி நின்னுட்டான்.
அவன் போட்ட சத்தத்துல திடுக்கிட்ட மேகா, தன் மேல இருந்த விஷ்வாவப் பிடிச்சு தள்ளிவிட்டு, வேகமா எழுந்து உக்காந்து, தன்னோட ஆடைகள சரி செய்ய ஆரம்பிச்சா.

அதனால பல நாளா பசியில இருந்தவன், நல்லா நாட்டுக்கோழி பிரியாணி கிடைக்கும்போது, அத வெளுத்து வாங்கலாம்னு நெனச்சு சாப்பிட ஆரம்பிக்கும்போது, அதத் தன்னக் கிட்ட இருந்து யாராவது பிடுங்கிக்கிட்டுப் போனா எப்படி கோபத்துல வயிறு கப கபன்னு பத்திக்கிட்டு எரியுமோ, அதே நெலையில இருந்த விஷ்வா, அந்தத் தீயைத் தன்னோட கண்ணுக்குக் கொண்டு வந்து, அத வச்சு மகேஷை எரிச்சு பஸ்பமாக்கிடும் நெனப்புல அவனப் பாத்தான்.

“ஐயோ பாஸ்.. என்ன அப்படியெல்லாம் பாக்காதீங்க… பயமா இருக்கு. நான் ஏதோ தெரியாம வந்துட்டேன் சாரி. யூ கன்டின்யூ.”ன்ன மகேஷ், ஒரு நொடியும் தாமதிக்காம அங்கிருந்து ஓடிப் போய்ட்டான்.

இப்ப விஷ்வாவப் பாக்கவே மேகாவுக்கு ஒரே வெக்க வெக்கமா வந்ததால, “இன்னைக்கு எல்லார் கூடையும் சேந்து அங்க நம்ம வீட்ல சாப்பிடுங்க. இப்படி ஒதுங்கியே தனியா இருந்துட்டு இருந்தீங்கன்னா, யார்கூடயும் பேசிப் பழக முடியாது.”னு தரையப் பாத்தபடி சொன்னா.

தன்னோட சட்டைய சரி செஞ்ச விஷ்வா, “ம்ம்ம்.. உனக்காக ட்ரை பண்றேன். பட், எதும் வொர்கவுட் ஆகாம எதாவது பிராப்ளம் வந்தா, அதுக்கு நான் ரெஸ்பான்சிபிள் இல்ல. ஓகேவா..??”னு கேட்க, “நீங்க பிராப்ளம் வந்துருமான்னு யோசிக்காம இருந்தாலே எந்த பிராப்ளமும் வராது. அப்படியே எதாவது பிராப்ளம் வந்தாலும் நான்தான் உங்கூட இருக்கனே.. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.”ன மேகா, அவன் கையப் பிடிச்சுக்கிட்டு அவனோட சேந்து தன்னோட வீட்டுக்குப் போனா.

அங்க தலைவாழை இலை போட்டு எல்லாருக்கும் நைட் டிபன் பரிமாறப்பட்டுக்கிட்டு இருந்தது. சாப்பிடலாம்னு நெனச்சு போயி உக்காரப் போன சௌபர்ணிகா, விஷ்வா மேகாவோட வர்றதப் பாத்துட்டு, “ஆல்ரெடி நம்மளாலதான் அவ்ளோ பெரிய சீன் கிரியேட் ஆச்சு. நம்ம இங்க இருந்து கிளம்புற வரைக்கும் இனிமே இவன் கண்ணுலையே படக்கூடாது. ஓரமா இருந்து தம்பி கல்யாணத்தப் பாத்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.”னு நெனச்சு, அந்த இடத்த விட்டு வெளிய போகலாம்னு நெனச்சு, மேகாவோட ரூம நோக்கி நடந்தா.

அத கவனிச்ச விஷ்வா, மேகாவோட கைய இறுக்கமா பிடிச்சுக்கிட்டு, சௌபர்ணிகாகிட்டப் போய், “எனக்காக நீங்க ஏன் சாப்பிடாம போறீங்க..?? போயி சாப்பிடுங்க. இவ என்கூட இருக்குற வரைக்கும் எனக்கு எதும் ஆகாது.”ன்னான்.

“நிஜமாவே இவன் என்கிட்டதான் பேசுறானா..??”னு நம்ப முடியாம, அவ கலங்கின கண்ணோட திரும்பி விஷ்வாவப் பாக்க, மேகாவ அதுவரைக்கும் பாத்துக்கிட்டிருந்த விஷ்வா, இப்போ சௌபர்ணிகாவப் பாத்து, “ஸாரி ஃபார் எவ்ரித்திங்.”னு நிதானமான குரல்ல சொன்னான்.

அந்த வார்த்தைகள் அவளுக்குத் தெளிவா கேட்டும், சௌபர்ணிகாவால அவளோட காதுகளையே நம்ப முடியல. பல நாள் தெய்வத்துக் கிட்ட வரம் கேட்டு, அந்தத் தெய்வமே நேர்ல வந்து, அவ கேட்ட அத்தனையையும் கொடுத்துட்ட மாதிரி, ஓவர்வெல்மிங்கா ஃபீல் பண்ண சௌபர்ணிகாவுக்கு, இப்பவே தன் தம்பிய அணைச்சுக்கிட்டு, அவன் மேல தன்னோட பாச மழைய பொழியணும்னு ஆசையா இருந்துச்சு.

இருந்தாலும், சிரமப்பட்டு தன்னத் தானே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டவ, “இப்பதான் அவன் ஏதோ வாயத் திறந்து நம்மகிட்ட இத்தன வருஷம் கழிச்சு பேசி இருக்கான். அதுக்குள்ள அவசரப்பட்டு நம்மளே எதாவது பண்ணி அத கெடுத்துக்கக் கூடாது.”னு நெனச்சு, தன் கண்ணீரத் துடைச்சுக்கிட்டு, “இட்ஸ் ஓகே. அண்ட், என்கூடப் பேசுனதுக்கு தேங்க்ஸ்.”ன்னவ, சந்தோஷமா போயி சாப்பிட உக்காந்தா.
இந்த காட்சிய சௌபர்ணிகாவ மட்டுமல்லாம, அதப் பாத்துக்கிட்டிருந்த மேகா… ஏன் அவகிட்ட பேசின விஷ்வாவுக்குமே கூட, ஒரே சர்ப்ரைஸிங்காத் தான் இருந்துச்சு. மகிழ்ந்த மேகா அப்படியே விஷ்வாவக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு, “சூப்பர் விஷ்வா சூப்பர். இவ்ளோ சீக்கிரம் உங்க கிட்ட இப்படி ஒரு சேஞ்ச நான் எக்ஸ்பெக்ட் பண்ணல.”ன்னு சொல்ல,

ஓரக் கண்ணால சௌபர்ணிகாவப் பாத்த விஷ்வா, “நானும்தான் எக்ஸ்பெக்ட் பண்ணல. இட்ஸ் ஆல் ஹேப்பனிங் ஒன்லி பிகாஸ் ஆஃப் யூ. தேங்க்ஸ் ஃபார் எவ்ரித்திங்.”னு மனசார சொன்னான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured