அத்தியாயம் 96: திருமணத்திற்கு சம்மதித்த ரித்திகா (பார்ட் 2)
அது வரை கோபமாக இருந்த ஷாலினிக்கு ராகவி தன்னை பார்த்து இப்படி கேட்டுவிட்டது, என்னவோ போல் ஆகிவிட்டது. அதனால் தான் அவசரப்பட்டு ராகவிடம் இப்படி தவறாக பேசி விட்டோமோ என்று நினைத்தவள் சற்று நிதானித்து, “அப்புறம் ஏன் உடனே மேரேஜ்க்கு ஓகே சொன்னீங்க…???” என்று மெல்லிய குரலில் கேட்டாள். 🙄
ராகவி: ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டவள், “நீ சொன்ன மாதிரி அவங்க பணக்கார திமிருல, அவங்க கிட்ட இருக்கிற பணத்துக்காகவாவது நான் ஓகே சொல்லுவேன்னு நினைச்சு அவங்க பையன என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டு இருந்தா, கண்டிப்பா என்ன ஆனாலும் சரின்னு நான் இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருக்கவே மாட்டேன்.
ஆனா அவங்க எவ்ளோ பெரிய மனுஷி… அவங்க என் கிட்ட போய்… கெஞ்சி கேட்டாங்க. அதுவும் அவங்க அத அவங்களுக்காகவோ, அவங்களோட பையனுக்காகவோ, கேக்கல. சித்தார்த்துக்காக கேட்டாங்க. நானும் சித்தார்த்த பத்தி யோசிச்சு, அவனுக்காக மட்டும் தான் ஓகே சொன்னேன்.” என்றவள், செண்பகம் தன்னிடம் சொன்ன அனைத்தையும் அப்படியே ஷாலினியிடம் ல் ஒப்பிதாள். ஆனால் விஷ்ணுவும் செண்பகத்தின் மகன் தான் என்பதை பற்றி மட்டும், ஷாலினியிடம் அவள் வேண்டுமென்றே சொல்லாமல் விட்டு விட்டாள்.
ராகவி சொன்னது அனைத்தையும் பொறுமையாக கேட்ட ஷாலினிக்கு, அவள் எந்த மன நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பாள் என்று நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் ராகவியை பாவமாக பார்த்த ஷாலினி, “சாரி அக்கா. நான் யோசிக்காம பேசிட்டேன். இருந்தாலும், நீங்க உணர்ச்சி வசப்பட்டு உடனே சரின்னு சொல்லி இருக்க கூடாது கா. அவங்க உங்கள நல்லா எமோஷனல் பிளாக் மெயில் பண்ணி இருக்காங்க. நீங்க எதுவா இருந்தாலும், என்னோட பேரண்ட்ஸ் கிட்ட இத பத்தி பேசிக்கோங்கன்னு அவங்க கிட்ட முடிவா சொல்லி இருக்கணும்.” என்றாள். 😞 😣
ராகவி: ஷாலினி தன்னுடைய பெற்றோர்களை பற்றி பேசிய உடன் இதை பற்றி தான் எப்படி அவர்களிடம் சொல்லி புரிய வைக்கப் போகிறோம் என்று நினைத்தவளுக்கு; சிறிது பயமாகவும், கலக்கமாகவும், இருந்தது. இதைப் பற்றி அவள் தன்னுடைய பெற்றோர்களிடம் பேசுவதற்கு முன், தெளிவாக யாரிடம் ஆவது பேசினால் நன்றாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது. அப்போது அவளுடைய மனதில் விஷ்ணுவின் முகம் தான் வந்துவிட்டு சென்றது.
அதனால் இது அவனுடைய குடும்ப விஷயம் தானே… அதனால் இதை பற்றி அவனோடு பேசினால், தனக்கு சற்று தெளிவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. என்று நினைத்தவள் ஷாலினியை பார்த்து, “நான் என் பிரண்டு ஒருத்தர மீட் பண்ண வேண்டியது இருக்கு. நீ ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போ. அப்பா, அம்மா, கிட்ட இத பத்தி எதுவும் வாய தொறக்காத. நானே அங்க போயிட்டு வந்து, அவங்க கிட்ட பேசிக்கிறேன்.” என்றாள் தீர்க்கமான குரலில்.
ராகவியோ விஷ்ணுவை தன் மனதில் வைத்து கொண்டு அவனை தன்னுடைய பிரண்டு என்று ஷாலினி இடம் சொல்ல, ஷாலினியோ அவள் கௌத்தமை பற்றி தான் பேசுகிறாள் போல, என்று நினைத்துக் கொண்டாள். ஏனென்றால் ஷாலினிக்கு தெரிந்த வரை, கௌத்தமை தவிர அவளுக்கு ஆண் நண்பர்கள் என்று வேறு யாரும் இல்லை. அதனால், “இவங்க நிஜமாலுமே ஏதோ ஒரு வேகத்தில் தான் அந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாங்க போல. நம்ப நினைச்ச மாதிரி கௌத்தம் அண்ணா மேல இவங்களுக்கும் இன்ட்ரஸ்ட் இருக்கு. அதான் இத பத்தி இந்த சுச்சுவேஷன்ல கௌத்தம் அண்ணா கூட டிஸ்கஸ் பண்ணா நல்லா இருக்கும்ன்னு இவங்க நினைக்கிறாங்க போல. எப்டியோ இவங்க அந்த அண்ணா கூட பேசி, ஒரு நல்ல முடிவா எடுத்தா சரி.” என்று தன் மனதிற்குள் நினைத்தவள், ராகவியிடம், “ஓகே அக்கா நீங்க போய் அவர மீட் பண்ணிட்டு வாங்க. அவங்க கூட பேசிட்டு ஒரு நல்ல முடிவா எடுங்க.” என்று ஒரு உள் அர்த்தத்துடன் ராகவியை பார்த்து லேசாக புன்னகைத்த படி சொன்னாள். 😁 😁 😁
ஏற்கனவே மணி இரவு 7:00 ஐ கடந்து விட்டதால், விரைவில் விஷ்ணுவை சென்று சந்திக்க வேண்டும் என்று நினைத்த ராகவி; கோயிலில் இருந்து வேகமாக வெளியே வந்து, விஷ்ணுவிற்கு கால் செய்து, அவனை அருகே உள்ள ஒரு காபி ஷாப்பிற்கு வர சொன்னாள். ராகவியின் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்த விஷ்ணு, அவளுக்கு ஏதோ எமர்ஜென்சி சுச்சுவேஷன் போல என்று நினைத்தவன், அவளிடம் எந்த காரணமும் கேட்காமல், விரைவில் அவள் சொன்ன இடத்திற்கு வருவதாக சொல்லிவிட்டு காலை கட் செய்தான்.
அவள் ஆசைப்பட்டது போலவே கௌத்தமும், ராகவியும், தான் ஒன்று சேர போகிறார்கள் என்று நினைத்து மகிழ்ந்த ஷாலினி, ஆர்வக்கோளாறில் கௌத்தமிற்கு கால் செய்து, செண்பகம் ராகவியை அழைத்து கோவிலில் அவளிடம் தன்னுடைய குடும்பத்தை பற்றி சொல்லி விஷ்வாவை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டது பற்றியும், ராகவியும் அந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டது பற்றியும், இப்போது ஷாலினி சொன்னதால் ராகவி தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நினைத்து, அவளுடைய நண்பர் யாரோ ஒருவரை பார்ப்பதற்காக இப்போது சென்று இருக்கிறாள் என்று சொன்னவள், “நீங்க ராகவி அக்காவ லவ் பண்றீங்களா அண்ணா..???” என்று கௌத்தமிடம் கேட்டாள்.
கௌத்தம்: சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “நீ இத கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டு இருந்தா கூட, எனக்கு தெரியலன்னு தான் நான் சொல்லி இருப்பேன் மா. நானும் நிறைய தடவை எனக்கு அவ மேல இருக்கிறது லவ்வா, இல்ல பிரண்ட்ஷிப் ஆன்னு யோசிச்சு பாத்து இருக்கேன். ஆனா நீ எப்ப ராகவிக்கு வேற ஒருத்தவங்களோட கல்யாணம்ன்னு சொன்னியோ, அந்த செகண்ட் என் மனசு அவ்ளோ வலிச்சுது. இந்த அளவுக்கு ஒரு பெயின் ஐ என் வாழ்க்கையில நான் பீல் பண்ணதே இல்ல. ராகவி என் கூட இல்லைனா, தினமும் என்னால அவள பாக்க முடியலைன்னா நான் என்ன ஆவேன்னு எனக்கே தெரியல மா. இப்ப தான் நான் அவள எவ்ளோ லவ் பண்றேன்னு எனக்கே புரியுது. நான் அவள லவ் பண்ற மாதிரியே, அவளும் என்னை லவ் பண்ணா நல்லா இருக்கும்.” என்று வலி நிறைந்த குரலில் சொன்னான். 💔 😞
ஷாலினி: “ஐயோ…!!! அண்ணா, நீங்க ஃபீல் பண்ணாதீங்க. இந்த கல்யாணத்தை பத்தின செகண்ட் தாட் வந்ததுனால தானே அவங்க அவங்களோட ஃப்ரெண்ட் யாரோ ஒருத்தர இந்த நேரத்துல மீட் பண்றதுக்கு கிளம்பி போய் இருக்காங்க. இந்த ஊர்ல உங்கள விட்டா அவங்களுக்கு வேற எந்த பையன அண்ணா தெரியும்..??? அதனால எனக்கு தெரிஞ்சு அவங்க உங்கள தான் பாக்க வருவாங்க. அவங்களே அவங்களுக்கு உங்கள புடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு கூட ஒரு சான்ஸ் இருக்கு.” என்று நம்பிக்கையாக சொன்னாள்.
கௌத்தம்: ஷாலினி சொன்னதை கேட்டு அவன் நிம்மதியாக உணர்ந்தாலும், இன்னொரு பக்கம் ராகவி தனக்கு கிடைக்காமல் போய்விடுவாளோ என்ற பயமும் அவனுக்கு இருந்தது. 😞 அதை பற்றி அவன் யோசித்துக் கொண்டு இருக்க அப்போது அவனுக்கு சந்தோஷ் சந்தோஷ் ஐ பற்றி ஞாபகம் வந்தது. அதனால், “ஒரு வேளை அவ இப்ப சந்தோஷ் ஐ பாக்குறதுக்காக போயிருப்பாளோ…??? அவனும் ராகவியை லவ் பண்றான்னு நினைக்கிறேன்.” என்று அவசரமான குரலில் சொன்னான்.
ஷாலினி: “அட போங்க அண்ணா. நீங்க வேற… ராகவி அக்கா சந்தோசவா…??? அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல. அவன் ராகவி அக்காவ விட சின்ன பையன். அவன் எல்லாம் லிஸ்டிலயே இல்ல சோ டோன்ட் வரி.” என்றாள் உறுதியாக.
ஷாலினி கொடுத்த தைரியத்தில் ராகவி எப்படியும் தன்னை தான் சந்திக்க வருவாள் என்று நினைத்த கௌத்தம், நம்பிக்கையுடன் அவளுடைய வருகைக்காக காத்திருந்தான். கௌத்தமுடன் பேசிவிட்டு ஷாலினி ஒரு ஆட்டோவை பிடித்து தன்னுடைய வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டாள்.
ராகவி சொன்ன இடத்திற்கு; ராகவி வருவதற்கு முன்பே தன்னுடைய ஸ்போர்ட்ஸ் காரில் வேகமாக வந்த விஷ்ணு, அந்த காபி ஷாப்பில் உள்ள ஒரு பிரைவேட் அறையை புக் செய்துவிட்டு அவளுடைய வருகைக்காக அங்கு காத்திருந்தான். சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்த ராகவி, குழம்பிய முகத்துடன் விஷ்ணுவிற்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். 🙄
விஷ்ணு: ராகவியின் முகத்தில் வெளிப்படையாக தெரியும் குழப்ப ரேகைகளை கவனித்தவன், “என்னாச்சு அக்கா..??? ஏதாவது பிரச்சனையா..???ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..!!!!” என்று அக்கரையாக விசாரித்தான்.
ராகவி: விஷ்வாவின் டீடைல்ஸ் அடங்கிய பைல் ஐ விஷ்ணுவிடம் நீட்டியவள், “இத உங்க அம்மா என்ன மீட் பண்ணி என் கிட்டட குடுத்தாங்க.” என்றாள்.
அதை கேட்டு குழப்பம் அடைந்த விஷ்ணு, அந்த பைல் ஐவாங்கி அதில் என்ன இருக்கிறது என்று படித்துப் பார்த்தான். அதன் முதல் பக்கத்தில் விஷ்வாவின் புகைப்படத்தை பார்த்தவுடனே அவன் அதிர்ச்சி அடைந்தான். 🙄 😳
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)