Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 59

மூர்கனின் காதலி CH 59

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 59

விஷ்வா பைத்தியம் பிடிச்சவன் மாதிரி நடந்துகிட்டதை மேகாவோட சொந்த பந்தங்கள் எல்லாருமே பாத்துட்டதால, பிரச்சனை இன்னும் பெருசாகக் கூடாதுன்னு நெனச்சு அவனை அவனோட ரூமுக்குள்ள தள்ளி, விஷ்வாவோட ஆட்கள் டோர்-அ லாக் பண்ணிட்டாங்க. அப்பவும் ரொம்ப பயத்துல இருந்த விஷ்வா, “அம்மா ப்ளீஸ் கதவத் திறங்க.. open the bloody door. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. டேய் விஜய்.. நீ எங்கடா இருக்கே??”னு தொடர்ந்து கத்தியவன், 

“டேய் விஷ்வா.. நான் உன்கூடவேதான்டா இருக்கேன். விஷ்வா.. நான் பேசுறது உனக்குக் கேக்குதா??”னு நாலு பக்கமும் அவனுக்கு ஒரு மர்மக் குரல் கேட்டதால, தன் தலையைப் பிடிச்சிக்கிட்டு மயங்கி விழுந்தான் விஷ்வா.

வெளியில இருந்தவங்க எல்லாம் விஷ்வாவத் தொடர்ந்து பைத்தியக்காரன்னு தங்களுக்குள்ள பேசிக்கிட்டு இருக்க, மேகாவோட பெரியப்பா நேரா காளீஸ்வரன்கிட்ட போய், “என்ன காளி இதெல்லாம்? ஆள் எப்படின்னு ஒழுங்கா பாத்து விசாரிக்காம நம்ம வீட்டுப் பொண்ண இப்படித்தான் எவன் தலையிலயாவது பணக்காரனா இருந்தா பரவால்ல, அது போதும்னு நெனச்சு கட்டி வைக்கப் பார்ப்பியா?”னு எல்லார் மத்தியிலும் வெச்சு கேக்க, அவருக்கு அசிங்கமாப் போச்சு. 

அதனால மேகாவ முறைச்சுப் பாத்துட்டுத் தலக்குனிஞ்ச காளீஸ்வரன் “என்ன பெரியப்பா என்னைப்பத்தி இப்படிச் சொல்லிட்டீங்க..!! நான் போய் அப்படிப் பண்ணுவேனா..?? எல்லாம் இந்தக் கூறு கெட்ட சிறுக்கியால தான் வந்தது. காதல் மண்ணாங்கட்டின்னு இஷ்டத்துக்கு பண்ணிட்டு வந்து ‌ இப்படி என்ன நாலு பேருக்கு முன்னாடி அசிங்கப்படுத்திக்கிட்டே இருக்கா..!! அப்படியே எனக்கு வர்ற கோபத்துக்கு..!!”னு சொன்னவர், தன் கைய ஓங்கிக்கிட்டு மேகாவ அடிக்கிறதுக்காகப் போனாரு.

விஷ்வாவோட ஆட்கள் அவர தடுத்துட, காளீஸ்வரனோட கோபம் அதோட எல்லையத் தாண்டி போய்க்கிட்டே இருந்துச்சு. எல்லாரும் விஷ்வாவத் தொடர்ந்து பைத்தியக்காரன்னு சொல்லி மட்டம் தட்டி பேசிக்கிட்டே இருந்ததக் கேட்டு எரிச்சலான சௌபர்ணிகா, “போதும் எல்லாரும் வாய மூடுங்க. நீங்க எல்லாரும் ஏதோ புண்ணியம் பண்ணிருக்கீங்க.‌ அதான் அந்தக் கடவுள் உங்க எல்லாருக்கும் நல்ல வாழ்க்கைய அமைச்சுக் கொடுத்திருக்காரு. சோ சந்தோஷமா நிம்மதியா வாழற நீங்க எல்லாம் என் தம்பி மாதிரி கஷ்டப்படுறவங்களப் பாத்து இப்படித் தான் மனசாட்சி இல்லாம பேசுவீங்க. அவன் ஏன் இப்படி இருக்கான்னு மட்டும் வேகமா எல்லாருக்கும் கேட்கத் தெரியுதுல்ல..

இவ்வளவு நேரம் நார்மலா இருந்தவனுக்கு திடீர்னு என்ன ஆகிருக்கும்.. அவன் ஏன் இப்படி இருக்கான்னு யாராவது யோசிச்சு அவனுக்காக கவலைப்பட்டீங்களா? உங்களுக்கு எடுத்தவுடனே மத்தவங்கள கேவலமாப் பேசி பழி சொல்ல மட்டும் தானே தெரியும்..!! ச்சீ.. இவ்வளவு தானே நீங்க எல்லாம்..!! உங்களுக்கெல்லாம் என் தம்பியப் பத்தி பேசுறதுக்கு எந்தத் தகுதியும் இல்லை. மரியாதையா எல்லாரும் வாய மூடிட்டு அமைதியா இருங்க.”னு கண்ணீரோட கோவமா உடைஞ்ச குரல்ல எல்லாரையும் தன் விரலை நீட்டி எச்சரிச்சு சொன்னா.‌ அவள் பேச்சுல அவ்வளவு ஆளுமை.

அந்தக் கூட்டத்துல இருந்த ஒருத்தர் “இங்கப் பாருமா.. நீ யாரா வேணா இருந்துட்டுப் போ. உங்க பணக்காரத் திமிரையெல்லாம் உங்க ஊரோட வெச்சுக்கணும். நீ இருக்கிறது எங்க ஊரு. இங்க நின்னுக்கிட்டு உன்னவிட வயசுல பெரியவங்க ‌கிட்ட எல்லாம் இப்படி மரியாதை இல்லாம கைநீட்டி பேசிக்கிட்டு இருக்க..!! இதெல்லாம் நல்லா இல்லை. அப்புறம் பதிலுக்கு நாங்களும் ஏதாவது பண்ணணும்னு நெனச்சா, இந்த இடத்துல ஒரு பெரிய கலவரமாகிப் போடும் பாத்துக்கோ..!!”னு சௌபர்ணிகா கிட்ட சொல்ல,

“போதும்.. இந்தக் கல்யாணத்தால எங்க குடும்பம் பட்டதெல்லாம் போதும். இவ கடைசி வரைக்கும் கல்யாணம் ஆகாம எங்க வீட்டோட கடந்தாகூட கடந்துட்டுப் போகட்டும். தங்கச்சிய கிளியாட்டம் பாத்து பாத்து வளத்துட்டு கடைசியில இப்படிப் போய் பணத்துக்கு ஆசைப்பட்டு குரங்கு கைல புடிச்சுக் கொடுத்துட்டான் இந்தக் காளீஸ்வரன்கிற பேரு எனக்கு வேண்டாம்.

உங்களுக்கு உங்க தம்பி ஒசத்தினா, எங்களுக்கு எங்க தங்கச்சி வாழ்க்கை முக்கியம்ங்க. இனி இந்தக் கல்யாணம் நடக்காது. உங்க தம்பிய நாங்க குறை சொல்லவும் இல்ல. தப்பா பேசவும் இல்ல. நீங்க அவரைக் கூட்டிட்டு முதல்ல இங்க இருந்து கிளம்புங்க. அவ்ளோதான் எல்லாம் முடிஞ்சுடுச்சு.”னு சொன்ன காளீஸ்வரன் சௌபர்ணிகாவைப் பாத்து கையெடுத்துக் கும்பிட்டாரு.

“நீங்க கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா, உடனே நாங்க கிளம்பிடணுமா? என் தம்பிக்கும் உங்க தங்கச்சிக்கும் தான் கல்யாணம்னு எல்லாருக்கும் தெரியுற மாதிரி மீடியாவில announce பண்ணியாச்சு. இதுக்கு மேல யார் என்ன நெனச்சாலும் எதுவும் மாறாது. முதல்ல என்ன முழுசாப் பேச விடுங்க.‌ நீங்க எல்லாம் நெனைக்கிற மாதிரி என் தம்பிக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. நான் இப்ப இங்க வந்ததுதான் பிரச்சனை.‌

கல்யாணம் சம்பந்தமாப் பேசுறதுக்கு மாப்பிள்ளை வீட்ல இருந்து யாராவது வரணும்னு நீங்க சொன்னதா மேகா சொன்னதுனாலதான் நான் இங்க வந்தேன். நான் பாக்குறதுக்கு எங்க அம்மா மாதிரியே இருக்குறதால அவனுக்கு சின்ன வயசுல நடந்ததெல்லாம் ஞாபகம் வந்திருக்கும்.‌ அதான்.. இப்படி எல்லாம் பயந்துபோய் abnormalஆ behave பண்ணிட்டான். மத்தபடி அவனுக்கு வேற எந்தப் பிரச்சனையும் இல்ல.”னு சௌபர்ணிகா தன் மனசுல உள்ளதை எல்லாம் கொட்ட,

“அது எப்படீங்க பெத்த அம்மா மாதிரி இருக்கிற அக்கா-வப் பாத்து யாருக்காவது பயம் வரும்? அதுவும் இந்த வயசுல.. நாங்க எல்லாம் படிக்காத முட்டாள் பட்டிக்காட்டு பசங்கன்னு நெனச்சு சும்மா உங்க இஷ்டத்துக்கு எதையாவது சொல்லாதீங்க..!! அதான் எங்க அண்ணன் இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டாருல்ல.. இந்த ஊர்லயே அவர் பேச்சுக்கு மறுப்பேச்சு கிடையாது. எங்க மனசு மாறி நாங்க வெட்டுக் குத்துன்னு இறங்குறதுக்குள்ள ஒழுங்கா உங்க தம்பியையும் அவனோட வந்த ஆளுங்களையும் கூட்டிக்கிட்டு இங்க இருந்து கிளம்பி வீடு போய்ச் சேருங்க..!!”னு சொன்னான் மணிகண்டன்.‌

“போதும். இப்படியே ஆளாளுக்குத் தேவையில்லாமப் பேசிக்கிட்டு இருக்காதீங்க. மேகாவும் என் தம்பியும் லவ் பண்றாங்க. இந்தக் கல்யாணம் வேண்டாம்னா, என் தம்பிய அவளுக்குக் கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கலைன்னா, அத அவ வாயால சொல்லச் சொல்லுங்க.‌ அவ இந்தக் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டா, நீங்க சொன்ன மாதிரி எல்லாரையும் கூட்டிட்டு நான் இங்க இருந்து கிளம்பிடுறேன்.”னு சொன்ன சௌபர்ணிகா மேகாவப் பாக்க, 

மத்தவங்களும் அவளத்தான் பாத்து தங்களோட பார்வையாலயே மிரட்டிக்கிட்டு இருந்தாங்க.

மேகா விஷ்வாவச் சந்திச்சு முழுசா ஒரு வாரம்கூட ஆகலை. இருந்தாலும் தனக்கு அவன் கூட ஒரு strong-ஆன bond இருக்குறத உணர்ந்த மேகாவால ‌இந்தத் திரு‌மணம் வேண்டாம்னு சொல்ல முடியலை. அதனால அவள் அமைதியாவே இருக்க, 

“என்னடி வாய் திறந்து பேசுறதுக்கு உனக்கு என்ன கேடு..?? அதான் அவங்க கேக்குறாங்கல்ல..‌ இந்தக் கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லன்னு சொல்லு. இந்தத் தடவையாச்சு உன்ன இத்தனை வருஷமாப் பொத்திப் பொத்தி வளர்த்த பாவத்துக்கு ‌ நாங்க சொல்றதக் கேளு. இதுக்கு மேலயும் நீ எங்கள அசிங்கப்படுத்திக்கிட்டே இருந்தீன்னா, இப்படி ஒருத்தி எங்க கூடவே பொறக்கலைன்னு‌  நாங்க உன்னத் தலைமுழுக்கிட்டு அப்படியே போய்க்கிட்டே இருப்போம்.”னு மேகாவப் பாத்து கோவமாச் சொன்னாரு காளீஸ்வரன்.

அப்பவும் எல்லாரையும் பாத்து கண்ணுல கண்ணீரோட மேகா அமைதியா நின்னுக்கிட்டு இருந்தாளே தவிர, அவள் வாய்ல இருந்து “நீங்க சொன்னா சரிதான் அண்ணா. எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்.”னு ஒரு வார்த்தைக்கூட வரலை.

அதனால வந்த கோவத்துல வேகமா தன் வேட்டியத் தூக்கி மடிச்சுக் கட்டின காளீஸ்வரன் “அவ்ளோதான் இங்க இனிமே நமக்கு மரியாதை இல்லை. இந்தச் சனியன் எப்படியோ நாசமாப் போகட்டும்.‌ வாங்கடா எல்லாரும் போகலாம்.”னு அரண்மனையவிட்டு வெளியில போக முயற்சி பண்ணினாரு.‌

“ஒரு நிமிஷம். நான் இன்னும் பேசி முடிக்கலை. தயவு செஞ்சு நான் சொல்ல வர்றத ‌ எல்லாரும் முழுசா கேளுங்க. அதுக்கப்புறம் நீங்க என்ன முடிவெடுத்தாலும் சரி, நான் உங்களத் தடுக்க மாட்டேன்.”னு சொன்ன சௌபர்ணிகா கண்ணீரோட எல்லாரையும் பாத்து கையெடுத்துக் கும்பிட்டா.

எது எப்படி இருந்தாலும் அவளோட ஸ்டேட்டஸ்க்கு அவள் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுறது பெரிய விஷயம் இல்லையா? அதனால எல்லாரும் அமைதியா நின்னு “என்னன்னு சொல்லு.. கேட்டுத் தொலையுறோம்.”ங்கிற மாதிரி அவள கேள்வியாப் பாத்தாங்க.‌

தன் கண்ணீரத் துடைச்சிக்கிட்ட சௌபர்ணிகா “காசு பணம் இல்லாதவங்களுக்கு அது இல்லைங்கிறது மட்டும்தான் பிரச்சனை. ஆனா எல்லாமே இருந்தும், நாங்க இப்ப வரைக்கும் ஒரு நாளும் ஒன்னா எல்லாரும் சேந்து சந்தோஷமா நிம்மதியா வாழ்ந்ததே இல்ல.”னு சொன்னவ, அவங்க குடும்ப வரலாற்றை எல்லார்ட்டயும் சொல்லி விஷ்வா ஏன் இப்படி இருக்கான்னு புரிய வெச்சவ, “உங்க வீட்டுப் பொண்ணு மேகா என் தம்பி வாழ்க்கை-க்குள்ளே வந்ததுக்கு அப்புறம்தான், அவன் கொஞ்சம் சந்தோஷமா இருக்கான். ப்ளீஸ்.. உங்க எல்லாரையும் நான் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்.. அவன் சந்தோஷத்தை அவன்கிட்ட இருந்து யாரும் பறிச்சிடாதீங்க…!!”னு சொன்ன சௌபர்ணிகா ரெண்டு கையக் கூப்பி கண்ணீரோட மண்டியிட்டு தரையில உக்காந்துட்டா.

இப்போ எல்லாரோட கண்ணுக்கும் அவள் தன்னோட தம்பியோட சந்தோஷத்துக்காகப் போராடுற பாசமான அக்காவா மட்டும் தான் தெரிஞ்சா. அதனால முன்ன மாதிரி இப்போ அவங்களால இந்தத் திருமணம் வேண்டாம்னு கராரா அவள்கிட்ட சொல்ல முடியலை. மாறா “எல்லார் வாழ்க்கையும் என்ன ஒரே மாதிரியா இருக்கும்..?? நம்ம எதப் பாத்து வளர்றோமோ அப்படித்தானே இருப்போம்..!! பாவம் அந்தத் தம்பி சின்ன வயசுல இருந்து நிறைய கஷ்டப்பட்டுருக்காரு. அதுக்காக இப்ப ஏன் இப்படி இருக்கீங்கன்னு நம்ம அவரையா குத்தம் சொல்ல முடியும்??”னு நெனச்சு அமைதியா இருந்தாங்க.

அவங்களோட அமைதிய வெச்சே அவங்க மனசு மாறிட்டாங்கன்னு உணர்ந்துகிட்ட சௌபர்ணிகா மேகாவப் பாத்து வேகமா “நீ சொல்லு மேகா.. என் தம்பிய லவ் பண்ணிட்டு, உன்னால வேற யாரையாவது கல்யாணம் பண்ணி அவன்கூட சந்தோஷமா வாழ முடியுமா?”னு கேக்க, இல்லைனு தலையாட்டினா அவள்.

காளீஸ்வரனும் மத்தவங்களும் கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா..??

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured