அத்தியாயம் 85: வருண் வெசஸ் பிரவீன் (பார்ட் 1)
சித்தார்த்தன் பள்ளியில்….
மானசாவின் அரஸ்ட் பற்றியும், அவள் ராகவியின் மீது அந்த சிலையை திருடி பழி போட நினைத்தது பற்றியும் தான் அந்த பள்ளி வளாகம் முழுவதும் ஒரே முழுவதும் பேச்சாக இருந்தது. அவர்கள் அனைவரும் மானசாவின் திருட்டு செயல் சி.சி.டிவி. கேமராவின் உதவியால் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்று தான் நினைத்து கொண்டு இருந்தார்கள். அதனால், தொலைக்காட்சியில் செய்தியாக அதைப் பார்த்த மக்கள் கூட திருட்டுப்போன சிலையை அடுத்த நாளே யார் திருடியது என்று கண்டுபிடித்து விட்டார்களே..!! இந்த பள்ளியின் பாதுகாப்பு அமைப்பு சிறந்ததாக தான் இருக்கிறது என்று நினைத்து கொண்டனர்.
அதே சமயம் இது போன்ற ஆட்கள் எல்லாம் எப்படி பள்ளியில் ஆசிரியருக்கு சமமான வேலையில் இருக்கிறார்கள் என்றும் சிலர் பேசி கொண்டு இருந்தனர். ரித்திகா ஸ்டாப் ரூமிற்கு வந்தவுடன், அங்கு இருந்த ஆசிரியர்கள் அனைவரும் அவளை சுற்றி நின்று கொண்டு, என்ன நடந்தது என்று விசாரித்தனர். அந்த கூட்டத்தில் ராகவியின் அருகில் ஷாலினியும் இருந்தாள்.
ரித்திகா அங்கு நடந்த அனைத்தையும் அவர்களிடம் தெளிவாக விவரித்துக் கொண்டு இருந்தாள். ஆனால், அங்கே விஷ்ணு வந்ததை மட்டும் வேண்டுமென்றே அப்படியே தவிர்த்துது விட்டாள். விஷ்ணு அவளுக்காக செய்தது அனைத்தையும், அப்படியே பிரின்சிபல் சாரதா, தனக்காக செய்ததாக மாற்றி அவர்களிடம் சொல்லிவிட்டாள் ரித்திகா. ரித்திகா, சொல்வது தான் உண்மை என்று நினைத்து ஷாலினி உட்பட அதை அப்படியே அனைவரும் நம்பினார்.
பின் சிறிது நேரம், அனைவரும் ராகவியுடன் பேசிவிட்டு அவர்களுடைய வேலைகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டனர். ஷாலினியும் சிறிது நேரம் ராகவியுடன் பேசி விட்டு அவளுடைய வேலைகளை பார்க்க சென்று விட்டாள். விஷ்ணுவையும், ஷாலினியையும், எப்படி சேர்த்து வைப்பது என்று யோசித்த படியே… ராகவியும் தான் செல்ல வேண்டிய வகுப்பிற்கு சென்று விட்டாள்.
மானசா, ராகவியின் மீது திருட்டுப் பழியை போட பார்த்ததால், அவள் மீது கோபமாக இருந்த கௌத்தம்; 😒 அவள் ஏன் இப்படி செய்தாள் என்று யோசித்து கொண்டு இருந்தான். ராகவிக்கு அவள் மேல் இருந்த வெறுப்பு மட்டும் தான் அவள் இதை செய்வதற்கான காரணமாக இருக்கும் என்று அவனால் நம்ப முடியவில்லை. அதனால் மானசாவின் பின்னே இருந்து அவளுக்கு யாராவது உதவி இருக்கார்களா என்று யோசித்து கொண்டு இருந்தான் கௌத்தம்.
இந்த பள்ளியில் நடந்த அனைத்து சம்பவங்களும் சுகந்தியின் மூலமாக செண்பகத்தின் காதுகளுக்கும் சென்றது. அதனால் அவளும் தொலைக்காட்சியில் வலம் வரும் செய்திகளை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தாள். ராகவியை அவள் தன்னுடைய மருமகளாக ஆக்கி கொள்ள நினைக்கும் இந்த நிலையில், ராகவியின் மீது பழி சுமத்தப்பட்டு பின் அவள் குற்றமற்றவள் என்று நிர்வாணமானதால், தன்னுடைய செலக்சன் தவறாக போகவில்லை என்று நினைத்த செண்பகம், நிம்மதி அடைந்தாள்.
நேரம் மாலை 7: 00 மணி…
விஷ்வாவின் அலுவலகத்தில்…
பிரபல தொலைக்காட்சியில் ஓடி கொண்டு இருந்த ஃபிளாஷ் நியூஸ் ஐ கவனித்த சிவா, அந்த தொலைக்காட்சியின் ஆபீஸியல் இணையதள பக்கத்தில் அதே செய்தி வெளியாகி இருக்கிறதா.. என்று செக் செய்தவன், அந்த வீடியோவை டவுன்லோட் செய்து விட்டு தன்னுடைய மொபைல் போன் ஐ எடுத்து கொண்டு விஷ்வாவின் அலுவலக அறைக்கு சென்றான். தன்னுடைய அறைக்குள் வேகமாக நுழைந்த சிவாவை குழப்பமான முகத்துடன் பார்த்தான் விஷ்வா. 🙄
வருண்: “என்னாச்சு..?? எனிதிங் சீரியஸ்..???” என்று அவசரமான குரலில் கேட்டான்.
சிவா: “எஸ் ஆர். இந்த வீடியோவ பாருங்க. இந்த நியூஸ் தான் இப்போ பிளாஷ் நியூஸ்-ஆ எல்லா சேனல்லையும் ஓடிக்கிட்டு இருக்கு.” என்றவன், தன் மொபைல் போனில் இருந்த வீடியோவை பிளே செய்து அதை விஷ்வாவிடம் கொடுத்தான்.
அந்த வீடியோவை பார்த்த விஷ்வாவின் புரூபங்கள் கோபத்தால் சுருங்கியது. 😒
அந்த வீடியோவில்….
மறைந்த பிரபல தொழில் அதிபர் பிரசாத் இன் மனைவியும், வளர்ந்து வரும் இளம் பிசினஸ் மேன் பிரவீனின் அம்மாவும் ஆன ஸ்ரீ தேவி அவர்கள், ஒரு தங்க பெருமாள் சிலையை நம்முடைய அருள்மிகு கோதண்ட ராமசுவாமி திருக்கோயிலுக்கு நன் கொடையாக வழங்கி இருக்கிறார். அந்த காட்சியை தான் இப்போது நான் நேரலையில் பார்த்து கொண்டு இருக்கிறோம். என்று அந்த செய்தி வாசிப்பாளர் பேசி கொண்டு இருக்க, ஸ்கிரீன் இல்… தேவி கோயிலுக்கு செல்லும் காட்சியும், அங்கு இருந்த மூலவரை வணங்கும் காட்சியும், அந்த சிலையை சிவப்பு துணியால் மூட பட்டிருந்த ஒரு தட்டின் மீது வைத்து அதை அந்த கோயிலின் தர்மகர்த்தாவிடம் தேவி ஒப்படைக்கும் காட்சி என வரிசையாக காட்சி படுத்தப்பட்டு அது பிரேக்கிங் நியூஸ் ஆக ஓடி கொண்டு இருந்தது.
வருண், சித்தார்த்தின் பள்ளியில் வைத்து இருந்த அந்த தங்க நடராஜர் சிலையின் எடையும், இப்போது தேவி அந்த கோயிலுக்கு நன் கொடையாக வழங்கி இருக்கும் பெருமாள் சிலையும், கிட்டத்தட்ட ஒரே உயரம் மற்றும் எடையில் இருந்தது. அதை நினைத்து பார்த்த விஷ்வாவிற்கு கோபம் கோபமாக வந்தது. 😡 🔥 அந்த சிலையை கடத்தியது அவன் தான் என்று விஷ்வாவிற்கு தெரிய படுத்துவதற்காக தான் பிரவீன் இந்த வேலையை தன்னுடைய அம்மாவை வைத்து செய்து இருக்கிறான் என்று புரிந்து கொண்டான் விஷ்வா. பிரவீனின் இந்த செயல் விஷ்வாவை மிகவும் எரிச்சலூட்டியது. 😒 அதனால் அவனுக்கு தக்க பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான்.
பிளாஷ் பேக்…
அவன் அனுப்பிய அடியாட்கள் தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த சிலையை திருப்பி திருப்பி பார்த்து கொண்டு இருந்தான் பிரவீன். அந்த தங்க நடராஜர் சிலை கனமாகவும், நேர்த்தியாகவும், இருந்தது. அதை உற்று பார்த்த பிரவீனுக்கு ஒரு குரூர யோசனைை தோன்றியது. அதை செயல்படுத்துவதற்காக தன்னுடைய மேனேஜரை அழைத்தவன், “அந்த விஷ்வா, சிவ பக்தன் ஆச்சே..!!! அதான் அவனோட பையன் படிக்கிற ஸ்கூல்ல நடராஜர் சிலையை தங்கத்துல செஞ்சி வச்சிருக்கான். ஏன் அவனுக்கு மட்டும் தான் பக்தி இருக்கணுமா..!!! எனக்கு எல்லாம் இருக்காதா..??? அவன் சிவன கும்பிட்டா நம்ப பெருமாளை கும்பிடுவோம்.” என்று சொல்லிவிட்டு வில்லத்தனமாக புன்னகைத்தவன், 😂
“இந்த சிலைய எடுத்துட்டு போய் நம்ம ஆசாரி கிட்ட குடுத்து உருக்கி ஒரு பெருமாள் சிலை செய்ய சொல்லு. இன்னைக்கு ஈவினிங்க்குள்ள அந்த சிலை ரெடி ஆகணும். அந்த சிலை ரெடி ஆனதுக்கப்புறம்…. அத எடுத்துக்கிட்டு எங்க அம்மாட்ட கொண்டு் போய் கொடுத்து, பிரவீன் சார் அவருடைய கல்யாணம் முடிவான நம்ப ஊர்ல இருக்கிற பெருமாள் கோவிலுக்கு ஒரு தங்க பெருமாள் சிலைய வாங்கி வைக்கிறதா வேண்டி இருந்தாராம். அதனால, இதை நீங்களே கொண்டு போய் கோயில்ல குடுத்துடுங்கன்னு உங்க கிட்ட சொல்லி குடுக்க சொன்னாருன்னு சொல்லிக் குடுத்துரும் எங்க அம்மாவும் சந்தோஷமா அத வாங்கிட்டு போய் கோவில்ல குடுத்துடுவாங்க. பாவம் என் இன்னசென்ட் மதர் யார் எது சொன்னாலும் நம்புவாங்க.” என்று நக்கலாக சொல்லி சிரித்தவன் மீண்டும் பேச தொடங்கினான். 😂 😂 😂 😂
“அப்புறம் என்னோட டியர் ஃப்ரெண்ட் விஷ்வாவுக்கு அவன் ஸ்கூல்ல இருந்து அந்த சிலைய நான் தான் ஆட்டையை போட்டேன்னு தெரிய வரும் இல்ல…!!! அவன், அந்த டாக்டர் குடுத்த ஸ்லீப்பிங் பில்ஸ்ச போட்டாலும் இனிமே அவன் நிம்மதியா தூங்கவே கூடாது. எப்பவுமே அவன் அவனோட பையனுக்கு என்ன ஆகுமோ, ஏதாகுமோன்னு அவன் பதட்டத்திலேயே இருக்கணும்.” என்று சொன்னவன், அந்த அறையை அதிரும் படி சைக்கோ தனமாக பலமாக சிரித்தான். 😂 😂 😂 😂 🤣 🤣 🤣
அவன் சொன்னதை கேட்டு விட்டு அந்த சிலையை அவனிடம் இருந்து பெற்றுக் கொண்டு அவனுடைய மேனேஜர் அவனை தயக்கத்துடன் பார்த்து, “நீங்க நெஜமாலுமே கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா…???” என்று கேட்டான்.
பிரவீன்: நானும் எத்தனை நாள் தான் டா சிங்கிளாவே இருக்கிறது..?? என்னை விட ஒரு வயசு சின்ன பையன் டா அந்த விஷ்வா. அவன் கெட்ட கேட்டுக்கு ஒரு கல்யாணம் பண்ணி, புள்ள பெத்து, பொண்டாட்டி செத்ததுக்கு அப்புறம் கூட இப்ப பாரேன் ஈஸியா இரண்டாவது கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டான். அதான் நானும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
மேனேஜர்: “யார சார் கல்யாணம் பண்ணிக்க போறீங்க..??? அந்த பொண்ணு வீட்ல பேசி கல்யாணத்த முடிவு பண்ணிட்டீங்களா..???” என்று ஆர்வமான குரலில் கேட்டான்.
பிரவீன்: “அவங்க வீட்ல என்ன முடிவு பண்றது…?? நான் முடிவு பண்ணிட்டேன். அதுக்கான டைம் வரும்போது, நான் யாரை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு பிரஷ்ஹ கூப்பிட்டு வச்சு அநௌன்ஸ் பண்ணுவேன்.” என்று திமிராக சொன்னான்.
பிரவீன் அந்த பெண்ணை பற்றித் தன்னிடம் எதுவும் சொல்ல விரும்பாததால், அதற்கு மேல் அவனிடம் அந்த அதை பற்றி எதுவும் கேட்க விரும்பாத அந்த மேனேஜர், அந்த சிலையை எடுத்து கொண்டு அவன் செய்த வேலையை கச்சிதமாக முடிப்பதற்காக சென்று விட்டான்.
சில மணி நேரத்திற்கு பின்…
பிரவீனின் வீட்டில்..
பிரவீன் சொன்னது போலவே ஒரு தங்க பெருமான் சிலையை செய்து எடுத்து கொண்டு வந்து அதை தேவியிடம் கொடுத்து, பிரவீன் அவளிடம் சொல்ல சொன்னது அனைத்தையும் அப்படியே சொன்னான் அந்த மேனேஜர். அதை கேட்ட தேவி, பேரானந்தத்தில் திளைத்தாள். 😃 அவளுக்கும் தன்னுடைய மகன் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தது. அதனால் அவனுடைய மேனேஜரிடம் அதை பற்றி விசாரித்தாள்.
அதைப்பற்றி அவனுக்கு தெரிந்து இருந்தாலும், அவன் அதை இவளிடம் சொல்லி இருக்க மாட்டான் தான். இப்போது அவனுக்கே அது பற்றி எதுவும் தெரியாத நிலையில், சொல்லவா வேண்டும்..??? அவன் எனக்கு தெரியாது என்று உறுதியாக சொல்லி விட்டான். தேவிக்கு தன் மகன் யாரையாவது திருமணம் செய்து கொண்டால் போதும் என்று தான் இருந்தது. அதனால் அவன் யாரை திருமணம் செய்து கொண்டால் என்ன..?? என்று நினைத்து அதற்கு மேல் அதை பற்றி அவள் யோசிக்கவில்லை. அவளும் எத்தனையோ வருடங்களாக பிரவீனை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியும், கெஞ்சியும், பார்த்துவிட்டாள்.
இத்தனை நாள் தன்னுடைய கோரிக்கையை மறுத்து கொண்டு இருந்த தன்னுடைய மகன், இப்போது தானாகவே திருமணத்திற்கு சம்மதித்தது மட்டுமல்லாமல், அவனே ஒரு பெண்ணையும் பார்த்து முடிவு செய்து, இப்போது அவன் கோவிலில் வைத்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஒரு தங்க சிலையை செய்து, அதை தன்னையே கொண்டு போய் கோயிலில் கொடுத்துவிட்டு வருமாறு சொன்னது அவளுடைய மனதிற்கு நிறைவாக இருந்தது. 😄
பாவம் அந்த அப்பாவி தாய்க்கு தன்னுடைய மகனின் சதி வேலையை பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து, கடவுளிடம் அவனுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அவன் சொன்ன படியே அந்தசிலையையும் அங்கே கொடுத்துவிட்டு வந்து விட்டாள்.
நிகழ் காலம்….
வருணின் அலுவலக அறை…
இம்முறை பிரவீன், சித்தார்த் படிக்கும் பள்ளியிலேயே தன்னுடைய வேலையை காட்டிவிட்டதால், அவனை இப்படியே சும்மா விட்டுவிட கூடாது என்று நினைத்தான் விஷ்வா. இப்போது அவன் பிரவீனுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடத்தில், இதற்கு மேல் எப்போதும் அவன் தன்னுடன் மோதுவது பற்றி யோசித்துக் கூட பார்க்க கூடாது என்று அவனுக்கு தோன்றியது.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)b