அவள் விழிகள் வலியுடன் நீரை சுமந்து நிற்க, அவனோ குழப்பமாய் அந்த விழிகளை ஆராய, அவளோ தயக்கமாய் அவன் விழிகளை சந்தித்து, “நா அழகா இருக்..குறதாலதா.. எ..ன்ன புடிச்சிருக்கா?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.
அதில் சட்டென்று அவன் புருவங்கள் விரிய, இவளோ கண்ணீருடன் அவன் விழிகளிடம் பதிலை எதிர்பார்த்தாள். அந்த மான் விழிகளுள் தழும்பி நின்ற நீரை சில நொடிகள் அமைதியாய் பார்த்திருந்தவன், அவள் சேலையிலிருந்த தன் விரல்களை மெதுவாய் விலக்கி அவள் கன்னத்தில் படரவிட, அவளோ திடுக்கிட்டு பார்வையை இறக்கும் முன் அவள் முகத்தை அழுத்தி பிடித்து தன்னை பார்க்க வைத்தான். அதில் திடுக்கிட்ட அவள் விழிகள் பதற்றமாய் அவன் விழிகளை சந்திக்க, அவ்விழிகளை ஆழமாய் ஆராய்ந்தவன், “உங்கிட்ட எது அழகுன்னு தெரியுமா?” என்றான் மென்மையாக.
அதில் அவள் புரியா பதற்றமாய் விழிக்கருவை அசைக்க, அந்த விழியருகே மெல்ல தன் விரல்களை நகர்த்தியவன், “யுவர் ஐஸ்” என்றான் மெல்லிய குரலில். அதில் சட்டென்று அவள் இமைகள் அசைவை நிறுத்த, அவள் மனம் என்ன பதிலை எதிர்பார்த்ததோ ஏமாற்றத்தில் அவள் கண்ணீர் பெருகியது. அது விழியோரம் தழும்பி வழிய, அதை கட்டை விரலால் அழுத்தி துடைத்தவன், “பட் அத விட அழகு உன் கண்ணீர்.” என்றான். அதில் அவள் சட்டென்று இமை அசைத்து புரியாது அவனை பார்க்க, அந்த விழிகளுள் இரசனையாய் தன் விழியை நுழைத்தவன், “அதவிட இந்த கண்ணீருக்குள்ள தெரியுற அந்த கோவம்.” என்றான் மெல்லிய குரலில். அதில் அவள் இமைகள் மெல்லியதாய் வியக்க, அவனுக்கோ இதே விழிகள் வெறுப்பில் சிவந்து கண்ணீரில் மூழ்கி நின்ற அந்த நொடிதான் கண்முன் வர, “ஒரு ரெட் Flytrap அப்படியே மழையுல மூழ்குற மாதிரி.” என்றான் அத்தனை இரசனையாக.
அதில் மொத்தமாய் அவள் இமைகள் வியக்க, “அதுக்குள்ளையும் என் மொகம் மட்டுந்தா தெரியணும்.” என்றபடி மெல்ல அவள் ஈர இமையில் முத்தமிட்டான். அதில் அவள் இமைகள் அழுத்தி மூட, உள்ளிருந்த கண்ணீர் மொத்தமும் விழியோரம் வழிந்து சென்றது. அதை அவன் விரல்கள் அழுத்தி துடைத்தபடியே அவள் கன்னத்தில் படர, அவளும் மெல்ல விழியை திறந்து பதற்றமாய் அவன் விழிகளை சந்தித்தாள்.
அவனோ இரசனையாய் பார்வையை அவள் கன்னத்தில் படரவிட்டு, “இந்த வொயிட் ஹைபிஸ்கஸ் எப்போ அழகா இருக்கும்னு தெரியுமா?” என்றான் மெல்லிய குரலில். அவளோ புரியா பதற்றமாய் அவனையே பார்க்க, அவனோ அந்த மென் கன்னத்தை அழுத்தி வருடி, “அதுமேல சன்செட் வெளிச்சம்பட்டு லைட் ரெடிஷ்ஷா தெரியும்போது.” என்றான் அத்தனை மென்மையாக. அதில் அவள் புரியாது தன் கன்னத்தை நோக்கி பார்வையை இறக்க, அவனோ மெதுவாய் அந்த கன்னத்தில் இதழ் வைத்து முத்தமிட்டு, “அப்படித்தா உன் வெட்கம்.” என்றான். அதில் சட்டென்று அவள் புருவங்கள் விரிய, அவள் கன்னத்தில் மெல்ல மீசையுரசியபடி இதழ் அசைத்து, “இது நா நெருங்கும்போது மட்டுந்தா செவக்கும்.” என்றான் மெல்லிய குரலில். அதில் மெல்லியதாய் அவள் கன்னம் சிவக்க, அதில் அழுத்தி இதழை புதைத்தான்.
அதில் கூச்சமாய் அசைந்தவளின் மறு கன்னம் மெத்தையில் புதைய, அதில் சரிந்து விழுந்த கூந்தல் அவள் மூக்கை உரசியது. அதில் மெதுவாய் அவன் நாசி நுனியை நுழைத்து மெல்ல அதை விலக்க, அவளோ சிலிர்வாய் புருவம் குறுக்கினாள். அதில் அழகாய் அந்த கூந்தலை விலக்கிவிட்டு, அவள் நாசி நுனியில் இதழ் வைத்து மெல்ல கடித்தான். அதில் அவள் மெல்லியதாய் முகத்தை குறுக்க, அதை தன் மீசையாலே மெல்ல துடைத்தவன், “இந்த குட்டி மூக்குல எது அழகு தெரியுமா?” என்றான் மெல்லிய குரலில்.
அந்த குரலிலிருந்த அனலில் அவள் சுவாச வேகம் அதிகரிக்க, அவள் நாசியின் கீழ் உள்ள பள்ளத்தில் இதழ் வைத்து முத்தமிட்டவன், “இந்த ஃபாஸ்ட் ப்ரீத்.” என்றான். அதில் அவன் சுவாசம் சூடாய் அந்த பள்ளத்தில் படர, அவள் நாசி துவாரத்திலும் மெல்லியதாய் முத்தம் வைத்தவன், “நா நெருங்கும்போது அதிகமாகுற இந்த ப்ரீத், அதுல நெறஞ்சிருக்குற என்னோட ப்ரீத்.” என்று கூற, அவன் மீசை முடி மெல்லியதாய் அவள் துவாரத்தை உரசியது. அதில் அவள் நாசி கூசி முகத்தை குறுக்கியவள், உடனே “அச்” என்று தும்மி முடிக்கும் முன் பட்டென்று அவள் இதழை கவ்வியிருந்தான் அவன்.
அதில் அவள் தும்மலோடு சேர்ந்து அவள் எச்சிலும் கிருமிகளும் அவன் வாயுக்குள் புதைந்திருக்க, அவளோ பதறி இமை விரித்தாள். அந்த விரிந்த இமைகளுள் நிறைந்த அதிர்வை இரசித்தபடியே அதை விழுங்கி தன் தொண்டையில் இறக்கியவன், மெதுவாய் அவள் இதழைவிட்டு பிரிந்தான். அதில் மெல்ல பிரிந்த அவளும் வியப்பாய் விநோதமாய் அதிர்வாய் அவன் விழிகளையே பார்க்க, அவனோ மெல்ல பார்வையை இறக்கி அவள் இதழில் குவித்தான். அதில் அவள் கீழ் இதழ் மெல்லியதாய் பிரிந்து நடுங்க, அதை அழுத்தி பிடித்தது அவன் இரு விரல்கள். அதில் திடுக்கிட்டு அவள் சுவாசம் அடைக்க, அவன் விரல் அழுத்தத்தில் அழகாய் குழிந்து நின்ற அந்த உள் இதழில் இரசனையாய் பார்வையை குவித்தவன், “இந்த ப்ளட் ரோஸ்ல, ஹனியவிட அழகான ஒன்னு ஒளிஞ்சு இருக்கு.” என்றான் மெல்லிய குரலில். அதில் புரியா பதற்றமாய் அவள் மேல் இதழ் நடுங்க, அதன் கீழ் இதழ் குழியில் மெல்லியதாய் முத்தம் வைத்தவன், “யுவர் வேர்ட்ஸ்” என்றான் மெல்லிய குரலில். அதில் புரியா பதற்றமாய் அவள் இமைகள் தடுமாற, அவ்விதழை மேலும் அழுத்தி பிடித்தவன், “ரொம்பவே கம்மியா வெளிய வர்ற அந்த வேர்ட்ஸ், ஒவ்வொரு தெடவையும் பிச்சு பிச்சு பேசுற அந்த தடுமாற்றம். அதுதா எல்லாத்தையும்விட அழகு.” என்றான் மெல்லிய குரலில். அதில் அவனின் சூடான சுவாசம் அவள் இதழ் குழியில் நிரம்ப, பதற்றமாய் அந்த இதழை மடக்க முயன்று முடியாது மெல்லியதாய் சுழித்தாள். அதில் அவன் மெல்ல இதழ் வளைத்து அதை நறுக்கென்று கடிக்க வர, அவளோ பயந்து இறுக்கி விழி மூடினாள். அதில் கடிக்காமல் மெல்ல இதழை விலக்கி மெல்லியதாய் முத்தம் வைத்தவன், “அதவிட அழகு.. குடுக்க தெரியாம நீ குடுத்த ஃபர்ஸ்ட் கிஸ்.” என்றான் மெல்லிய குரலில். அதில் பதற்றமாய் அவள் இமைகள் பிரிய, அவள் இதழிலிருந்த கரத்தை மெதுவாய் மெல்ல விலக்கினான் அவன். அதில் மெல்ல விடுப்பட்ட கீழிதழ் மெதுவாய் மேலிதழோடு சென்று ஒட்டிவிட, அப்படியே அதை கடந்து அவள் தாடையை தாண்டி கீழிறங்கியது அவன் விரல்கள். அதில் அவள் பதற்றம் அதிகரிக்க மெதுவாய் தாடையை நிமிர்த்தியவளின் சங்கில் ஒற்றை விரலை அழுத்தி நிறுத்தியவன், “இங்க எது அழகுன்னு சொல்லவா?” என்றான் மெல்லிய குரலில்.
அதில் பதற்றமாய் அவள் தொண்டை ஏறி இறங்க, அங்கே மெல்லியதாய் இதழ் வைத்து முத்தமிட்டவன், “தாமர தண்டு தண்ணி குடிக்குற மாதிரி, ஏறி எறங்குற உன் பதற்றம்.” என்றபடி மெல்லியதாய் கடித்தான். அதில் விழியை குறுக்கி, “ஸ்ஸ்” என்று முனங்கியவளின் மார்பு மெதுவாய் ஏறி இறங்க, அந்த மார்பு நடுவே மறைத்திருந்த சேலையை மெல்ல விலக்கியது அவன் விரல்கள்.
அதில் அவள் பதற்றமாய் மார்பை குறுக்க, அதில் குழிந்த மார்பு குழியில் தன் சூடான ஸ்வாசத்தை குவித்து இதழ் உரசியவன், “இங்க குவிஞ்சிருக்குற அழகு உன் பயம்.” என்றபடி மெல்லியதாய் முத்தமிட்டான். அதில் சிலிர்வாய் அவள் மார்பை விரிக்க, அதில் கழன்ற துடித்த முதல் ஹூக்கில் அழுத்தி பதிந்தது அவன் இதழ்கள். அதில் அவன் மீசை அவள் மார்பு குழியில் புதைந்து விலக, சிலிர்வாய் சுவாசத்தை இழுத்து வெளியேற்றினாள். அதில் ஒட்டிக்கொண்டிருந்த முதல் ஹூக் முழுதாய் கழன்றுவிட, அதில் சட்டென்று குறுகிய குழியில் முழுதாய் இதழை உரசியவன், “பனியில சுருங்குற Calla lilly மாதிரி.” என்றான் மெல்லிய குரலில். அதில் மேலும் சிலிர்த்து மார்பை குறுக்கியவளின் விரல்கள் அவன் பின் சிகையை சுருட்டி பிடிக்க, அதில் மேலும் குழிந்த இடத்தை அழுத்தி சுவைத்தது அவன் இதழ்கள்.
அதில் சிலிர்த்து விரிந்த அவள் உடலெங்கும் கூச்சத்தில் குறுகி நெளிய, அந்த நெளிவில் மெல்லியதாய் விலகிய அவள் வெண்ணிடை திரையை மெல்ல பிடித்திழுத்து முழுதாய் விலக்கியது அவன் விரல்கள். அதில் பதற்றமாய் அவள் விரல்கள் மெத்தை விரிப்பை இறுக்கி பிடிக்க, அதற்குள் முழுதாய் வெளிப்பட்ட அவள் நாபி குழியில் மீசையை நுழைத்து முத்தமிட்டது அவன் இதழ்கள். அதில் சிலிர்வாய் அவள் கால் விரல்கள் விரிந்து குறுக, அவள் நாபியில் மெல்ல இதழை உரசியபடி, “இதுதா Peak point.” என்றவனின் அனல் சுவாசம் அவள் நாபி குழியில் குவிந்தது. அதில் அவள் உடலெங்கும் மோக நரம்புகள் எழும்ப, “இங்க தொட்டாதா உன்னோட..” என்று கூற வர பட்டென்று அவன் வாயை மூடியது அவள் கரம். அதில் குறும்பாய் இதழ் வளைத்தவன் மெதுவாய் நிமிர்ந்து அவளை பார்க்க, அவளோ பதற்றத்தை விழியில் நிறைத்து வேண்டாம் என்று மெல்லியதாய் தலையசைத்தாள்.
அது இவனின் இரசனையை தூண்ட, அவளையே பார்த்தபடி தன் வாயிலிருந்த அவள் கரத்தை மெதுவாய் விலக்கியவன், அந்த உள்ளங்கையில் அழுத்தி முத்தமிட, அவளோ சிலிர்வாய் விழி மூடினாள். அந்த சிலிர்வில் விரிந்த அவள் மார்பு குழியில் அவன் சட்டை காலர் மெல்லியதாய் உரசி மேலேற, அவளோ பதற்றமாய் நெற்றியை சுழித்தாள். அங்கே மென்மையாய் இதழை பதித்தவன், “அம்மு!” என்றான் மெல்லிய குரலில். அதில் பதற்றமாய் அவள் இமைகள் பிரிந்து அவன் விழிகளை சந்திக்க, மெதுவாய் அவள் கன்னத்தில் விரல்களை படரவிட்டு அவள் முகமெங்கும் இரசனையாய் பார்வையை தழுவியவன், “இது எல்லாத்துலையும் எனக்கு எது ரொம்ப புடிச்சதுன்னு தெரியுமா?” என்று அனல் மூச்சாய் கேட்டான். அதில் புரியா பதற்றமாய் அவன் விழிகளை பார்த்தவளின் இமைகள் தடுமாற, அந்த இமை குடையில் மென்மையாய் இதழ் வைத்து முத்தமிட்டவன், “எவ்ரிதிங்” என்றான் மெல்லிய குரலில்.
அதில் மெதுவாய் நிமிர்ந்த அவள் இமை குடைகள் சிறு வியப்பாய் அவன் விழிகளை சந்திக்க, அவ்விழிகளில் இரசனையாய் தன் பார்வையை தழுவியவன், “இது எல்லாமே சேந்ததுதா என் அம்மு” என்றான் மென்மையாக. அதில் அவன் விழிகளையே பார்த்தவளின் விழிகள் மெல்ல கலங்க, அவள் விழித்திரையில் தெளிவாய் பதிந்திருந்த அவன் உருவம் மெதுவாய் நீரில் மூழ்கியது. அந்த உருவத்தைதான் தன்னுடையை உணர்வுகளை துளியும் மதிக்காத அரக்கன் என்று நினைத்தாள். ஆனால் தன் உணர்வுகளையும் தாண்டி அந்த உணர்வுகளுள் குடியிருக்கும் ஒவ்வொரு அசைவையும்கூட அனு அனுவாய் இரசித்துக் கொண்டிருந்தவனை அவ்வாறு எண்ணிவிட்டதை எண்ணி அவள் இதயம் வலிக்க, கலக்கத்தில் துடித்த இதழ்களை மெதுவாய் பிரித்து, “ஐயம் சாரி” என்றாள். அதில் மெதுவாய் அந்த இதழில் இதழ் வைத்து முத்தமிட்டவன், “அக்சப்டட்” என்றான் மெல்லிய குரலில். அதில் கண்ணீருடன் அவன் விழிகளை பார்த்தவள், “எதுக்குன்னு கேக்க மாட்..” என்று கூறும் முன் மீண்டும் அழுத்தி முத்தமிட்டவன், “எதுவா இருந்தாலும் அக்சப்டட்” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவன் விழிகளையே பார்த்தவளின் கண்ணீர் பெருகி விழியோரம் வழிய, மெதுவாய் அவன் காலரை சுருட்டி பிடித்தவள், வேகமாய் அவன் இதழோடு இதழ் சேர்க்க போக, பொத்தென்று ஒரு சத்தம்.
அதில் பட்டென்று அவள் திரும்ப, அவனும் குழப்பமாய் திரும்பி பார்த்தான். அங்கே மேசையிலிருந்த அவனின் கருப்பு கோட் சரிந்து விழுந்திருக்க, பொத்தென்று அதன் மேல் விழுந்தது அவளின் ஓவியம்.
அதில் புரியாது புருவத்தை குறுக்கியவன், “என்னது அத்..” என்று கேட்கும் முன், சட்டென்று அவனை விலக்கி தள்ளிவிட்டு கீழே இறங்கினாள் அவள். அதில் திடுக்கிட்டு சரிந்து மெத்தையில் விழுந்தவன், புரியா வேகமாய் நிமிர்ந்து அவளை பார்க்க, அவளோ வேகமாய் அந்த ஓவியத்திடம் சென்றாள்.
அங்கே அந்த கோட்டின் மீது கவிழ்ந்து கிடந்த ஓவியத்தை வேகமாய் குனிந்து எடுத்தவள், பதற்றமாய் அதை திருப்பி பார்த்து ஆராய, அதில் சிறு கீறல்கூட பட்டிருக்கவில்லை. அப்போதே சற்று நிம்மதியடைந்தவள், அதை தன் மார்போடு கட்டிக்கொண்டு மூச்சுவிட்டுக்கொண்டாள். ஏனோ இத்தனை வருங்களில் அவள் பொக்கிஷமாய் நினைத்த தன் ஓவியங்களில் மிஞ்சியிருப்பது இது ஒன்றே ஒன்று மட்டும்தான். இதையும் இழந்துவிட கூடாது என்று அதை இறுக்கி கட்டிக்கொள்ள போக, படுக்கென்று அதை பிடுங்கியது அவன் கரம். அதில் அவள் திடுக்கிட்டு திரும்ப, அதை கேள்வியாய் தூக்கி பார்த்தான் ருதன்.
அந்த அழகிய ஓவியம் அவன் விழித்திரைகளில் பளிச்சென்று நிறைய, அவன் முகத்திலோ எந்த ஒரு உணர்வும் இல்லாது புருவத்தை சுழித்தவன், “என்ன இது?” என்று கேட்டான்.
“அ..அது என்னோடதுதா. திங்க்ஸ் அன்பேக் பண்ணும்போது தெரியாம அங்க வெச்சுட்டேன்.” என்றபடி அவள் வாங்க போக, சட்டென்று அதை விலக்கியது அவன் கரம். அதில் அவள் நிமிர்ந்து அவனை பார்க்க, அப்போதே அந்த ஓவியத்திலிருந்த பார்வையை நிமிர்த்தி அவள் மீது பதித்தவன், “நா என்னதுன்னு கேட்டேன்.” என்றான்.
அதில் தடுமாற்றமாய் பார்வையை தாழ்த்தியவள், “க்..காலேஜ் டைம்ல நா வரஞ்சது.” என்றாள். அதில் புருவத்தை இடுக்கியவன் மீண்டும் அந்த ஓவியத்தில் பார்வையை குவிக்க, அந்த மொத்த ஓவியத்தின் கீழ் ஒரு ஓரத்தில் எழுதியிருந்த மீரா என்ற பெயர் இப்போதே அவன் விழியில் விழுந்தது. அதில் குழப்பமாய் புருவத்தை சுழித்தவன், “மீரா?” என்று கேட்டான்.
அதில் மெல்லியதாய் நிமிர்ந்து, “அ..அத் என் ஷார்ட் நேம்.” என்றாள் தடுமாற்றமாக. அதில் முகத்தை சுழித்தவனுக்கோ அந்த பெயர் சுத்தமாக பிடிக்கவில்லை. அதை பார்த்தவளின் முகம் சுருங்கிவிட, தன் தந்தையை போல் இவனுக்கும் தன் ஓவியம் கிறுக்கலாக தெரிகிறதோ என்று அவள் விழிகள் கலங்க, அவனோ நிமிர்ந்து அவளை பார்த்தான்.
அதில் சட்டென்று இமையை தாழ்த்தி கண்ணீரை மறைத்தவள், தன் தழுதழுத்த தொண்டையை கடினப்பட்டு திறந்து, “உங்..களுக்கு பிடிக்..கலன்னா இனி.. வ..ரைய மாட்டேன்.” என்றாள் தடுமாற்றமாக. அதில் ஒற்றை புருவம் உயர்த்தியவன், குழப்பமாய் நெற்றியை சுருக்கி மெதுவாய் அவளை நெருங்க, அதில் திடுக்கிட்டு பின்னெட்டு வைத்தவள், அப்போதும் நிமிராது அவன் கால்களை பார்க்க, அதுவோ மேலும் அவளை நெருங்கி வரவும் தயக்கமாய் பின்னால் நகர்ந்தாள். அதில் அவனும் ஓவியத்தை முழுதாய் இறக்கியபடி மேலும் முன்னெட்டு வைக்க, அவசரமாய் பின்னெட்டு வைத்தவள், பின்னிருந்த ஜன்னல் கதவில் பலமாய் இடிக்க போக, அதற்குள் அகலமாய் அடியெடுத்து வைத்து அவள் பின்னந்தலையில் தன் கரத்தை பதித்தான். அதில் சட்டென்று அவள் தலை அவன் உள்ளங்கைக்குள் புதைய, அவன் புறங்கை முட்டியில் பலமாய் அடித்தது அந்த ஜன்னல் கதவு.
அதில் திடுக்கிட்டு அவள் திரும்ப போக, அவளை மொத்தமாய் உரசி நின்றது அவன் தேகம். அதில் அவள் திடுக்கிட்டு இவன் பக்கம் திரும்ப, அவள் முகத்தை முழுதாய் உரசியது அவன் முகம். அதில் அவள் பதற்றமாய் விழியை விரித்து அவன் விழிகளை சந்திக்க, அந்த கலங்கிய விழிகளில் குழப்பமாய் தன் விழியை நுழைத்தவன், “என்ன?” என்று கேட்டான். அதில் பதற்றமாய் அவன் விழிகளை பார்த்தவள், “உ..உங்களுக்கு பிடிக்கலன்னா இனி..” என்று கூற வர, “அப்பிடின்னு சொன்னனா?” என்றான். அதில் அவள் திடுக்கிட்டு தடுமாறி விழிக்க, அவனோ பார்வையில் அழுத்தம் கொடுத்து கேள்வியாய் புருவத்தை இடுக்கினான். அதில் அவள் இமைகள் தடுமாறி இறங்கி அவன் கையிலிருந்த தன் ஓவியத்தை தழுவி மீண்டும் அவன் விழியை சந்திக்க, “அ..அப்போ இதுதா நல்லா இல்லயா?” என்று கலக்கமாய் கேட்க, அவனோ அமைதியாய் அவள் விழிகளை பார்த்தான்.
அவன் அமைதியில் அவள் விழிகள் ஏக்கமாய் தவிக்க, அந்த ஜன்னல் வழி வந்த தென்றலில் மெதுவாய் அவள் முகத்தை உரசி இமை மீது வந்து விழுந்தது சில முடிகள். அதில் அவள் தொந்தரவாய் விழி மூட, மெதுவாய் அதை விலக்கியது அவன் விரல்கள். அதில் அவள் அவளோ திடுக்கிட்டு புருவத்தை குறுக்க, அப்படியே அதை மெல்ல ஒதுக்கியபடி அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டவன், “பியூட்டிஃபுல்” என்றான் ஆழ்ந்த குரலில். அதில் அவள் பதற்றமாய் மெல்ல இமைகளை பிரிக்க, அவ்விமை அருகிலும் மெல்லிய முத்தம் வைத்தவன், “உன்ன மாதிரியே” என்றான் மெல்லிய குரலில். அதில் அவள் சிறு வியப்பாய் அவன் விழிகளை சந்திக்க, இடையில் தொங்கியது இரண்டு முடிகள். அதில் அவள் தொந்தரவாய் இமை குறுக்க, அதனுள் அவன் நாசியை நுழைத்து மெதுவாய் விலக்க, அதில் சிலிர்வாய் மூடியது அவள் இமைகள். அப்படியே அதை ஒதுக்கி அவள் காதருகே சேர்த்தவன், அங்கே மெல்லியதாய் இதழை உரசி, “க்ளைமேட் நல்லாருக்கில்ல?” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் திடுக்கிட்டு விழி திறக்க, அந்த ஜன்னல் வழி வந்த ஈர காற்று அவன் முகத்தை வருட, அந்த ஈரத்தை மெதுவாய் அவள் கன்னத்தில் உரசியபடி விலகி அவள் விழி சந்தித்தான். அதில் அவளும் புரியா பதற்றமாய் அவன் விழி சந்திக்க, அதில் மெல்லியதாய் தன் நாசியை உரசி நின்ற அவள் நாசி நுனியில் மெல்லியதாய் இதழ் வைத்து நனைத்தவன், “ஐ வான்ட் மை காஃபி.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் புரியாது பொடபொடவென்று விழிக்க, அதில் அவன் மீசையை உரசி நின்ற அவள் இதழ் நுனியில் மெல்லியதாய் முத்தமிட்டவன், “ஜஸ்ட் டென் மினிட்ஸ்.” என்றான்.
அதில் திடுக்கிட்டு தெளிந்தவள் அப்போதே அவன் வார்த்தை விளங்கி அவசரமாய் சரியென்று தலையத்து நகர, அவனும் மெல்லியதாய் விலக, அவன் தேகத்தை மொத்தமாய் உரசியபடி கடந்து சென்றாள் அவள். அதில் அப்படியே அந்த ஜன்னலில் சாய்ந்து அவளையே பார்த்தவன், மெல்ல தன் கையிலிருந்த ஓவியத்தை உயர்த்தி பார்க்க, மீண்டும் அவன் விழித்திரையில் நிறைந்தது அந்த முழு ஓவியம்.
அதையே சில நொடிகள் அமைதியாய் பார்த்திருந்தவன், மெதுவாய் அதை இறுக்கி பிடித்து பட்டென்று ஓங்கி தரையில் வீசி உடைத்திருந்தான்.
இந்த சத்தத்தில் திடுக்கிட்டு அதிர்ந்து அறை வாசலிலேயே நின்றாள் அமீரா. அவள் பின்னே அவள் உயிர் பொக்கிஷம் உடைந்து சிதறி கிடக்க, அதை குரோதமாய் பார்த்தவனின் முகத்தில் இப்போதே முழு இரசனை தெரிய, “மோர் பியூட்டிஃபுல்” என்றான் ருதன்.
– நொடிகள் தொடரும்…