அத்தியாயம் 45
நடுநாயகமா உட்கார்ந்திருந்த ஊர்ப் பெரியவர் ஒருத்தரு, “முனியாண்டி என்ன பிராதுன்னு சொல்லிட்டாப்ல.. இப்ப சம்பந்தப்பட்டவங்க என்ன சொல்றீங்க..??” ன்னு கேட்க, “நான் பேசட்டா அண்ணா..??” ன்னு மேகா கேட்க, “இல்ல கண்ணு.. நீ எதுக்கு பஞ்சாயத்துல நின்னு பேசிக்கிட்டு.. நான் போய் பேசுறேன். இந்த மீசை வச்ச ஆம்பளைங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்குறேன். தேவையில்லாம நம்ம குடும்ப விஷயத்துக்குள்ள மூக்க நுழைக்கிறானுங்க..!!” ன்னு கோவமா சொன்ன அனுராதா தன் புடவைய எடுத்து சொருகிக்கிட்டு சண்டைக்குத் தயாரானா.
“நீங்க யாரும் பேச வேண்டாம். நானே பேசிக்கிறேன். உங்ககிட்ட யாராவது எதாவது கேட்டா மட்டும் பதில் சொல்லுங்க போதும்.” ன்னு காளீஸ்வரன் முன்னால போனார்.
“ஐயா கல்யாணம்னா என்னன்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்ல. நாங்க எங்க குடும்பத்துக்குள்ள சும்மா வாய் பேச்சு அளவுல மேகாவுக்கும் வெற்றிக்கும் கல்யாணம் பண்ணனும்னு அவங்க சின்னப் பிள்ளைங்களா இருக்கும்போதே பேசி வச்சுட்டோம். அது எப்படியோ அரசல் புரசலா ஊருக்குள்ளயும் தெரிஞ்சுட்டு. ஆனா, சம்பந்தப்பட்டவங்க ரெண்டு பேருக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கணும்ல..!!
மேகாவுக்கு முன்னாடில இருந்தே இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லங்க. இப்போ அவளுக்கு வேற பையனப் புடிச்சிருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறம், வெற்றியும் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு விலகிக்கிட்டான். அப்புறம் என் தங்கச்சிக்கு அவ மனசுக்குப் புடிச்ச வாழ்க்கைய நாங்க அமைச்சு கொடுக்கிறதுல கண்டவங்களுக்கெல்லாம் எங்க குடையுதுன்னு எனக்குத் தெரியலங்க ஐயா..!!” ன்னு காளீஸ்வரன் சொல்ல,
“வெற்றி உங்க தங்கச்சிய வேண்டாம்னு சொல்லிட்டுப் போய்ட்டான்னு நாங்க எப்படி நம்புறது..?? நம்ம ஊர்க்காரங்கண்ணா வாக்கு சுத்தமான ஆளுங்கன்னு சுத்துப்பட்டியில இருக்குற எல்லா ஊர்க்காரங்களும் ஏன் சொல்றாங்க..?? ஏன்னா இந்த ஊருக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு. கொடுத்த வாக்க யாரா இருந்தாலும் காப்பாத்தணும். பெரிய பிரசிடெண்டா இருக்குற உங்க குடும்பமே இப்படி இருந்தா நாளைக்கு எங்க வீட்டுப் புள்ளைங்களும் யாரையாவது கூட்டிட்டு வந்து எனக்கு இவங்களப் பிடிச்சிருக்கு கட்டி வைங்கன்னு நின்னா நாங்க என்ன பண்றது..?? புழங்க முடியாத எடத்துல பொண்ணு கொடுத்து பொண்ணு கட்ட முடியுமா..??” ன்னு கேட்டான் முனியாண்டி.
“முனியாண்டி சொல்றதும் சரியாத்தானேப்பா இருக்கு..!! இதுவும் யோசிக்கக் கூடிய விஷயம்தானே.. வெற்றி மேகா புள்ள மேல ஆசைப்பட்டது நம்ம எல்லாருக்குமே தெரியும். இப்ப நம்ம அவனப் பத்தியும் யோசிக்க வேண்டியது இருக்குல்ல..!! இப்ப அவனுக்கு இந்தப் பிள்ளையக் கல்யாணம் பண்ணிக்கிறதுல இஷ்டம் இல்லைன்னா அத அவனயே இங்க வந்து பஞ்சாயத்துல சொல்ல சொல்லுங்க. இத்தோட பஞ்சாயத்த முடிச்சுட்டு வெயிலு உச்சிக்கு வர்றதுக்குள்ள எல்லாரும் ஊடு போய்ச் சேரலாம்.” ன்னு ஒரு பெரியவர் சொல்ல, தன் குடும்பத்தினரப் பார்த்து “வெற்றி எங்க..?? நான் மணிகிட்ட அவனக் கூட்டிட்டு வர சொன்னே..!!” ன்னு கேட்டான் காளீஸ்வரன்.
“இப்ப கூட ஃபோன் பண்ணிக் கேட்டேன் அண்ணா. மணி அவன ஊரு ஃபுல்லா தேடிட்டானாம். வெற்றி எங்கயும் இல்லைன்னு சொல்றான். அவன் ஒருவேள இங்க ஊருக்கே வரலையான்னு தெரியல..!!” ன்னா முத்து.
“டேய் என்னடா இப்ப வந்து இப்படி சொல்லிட்டு இருக்க..?? போய் அவனத் தேடுடா.” ன்னு காளி முத்துகிட்ட சொல்ல, முத்து தங்களோட ஆட்களை அழைச்சுக்கிட்டு வெற்றியத் தேடக் கிளம்ப, தன் ஆட்களையும் அவங்ககூட அனுப்பி வச்சான் விஷ்வா.
தன் அப்பாகிட்ட நின்னு விஷ்வாவையே கடித்துத் தின்பவளப் போலப் பாத்துக்கிட்டு இருந்த சங்கமித்ரா “நீங்க எப்படித் தேடினாலும் அந்த வெற்றி கிடைக்க மாட்டான். நாங்க அவனத் தூக்கி ரொம்ப நேரமாவுது. இந்த ஊருக்குள்ள சாதிப் பெருமை, கௌரவம் மண்ணாங்கட்டின்னு பேசிட்டுத் திரியுற ஆளுங்க இருக்குற வரைக்கும், வெற்றி வராத வரைக்கும், உனக்கும் மேகாவுக்கும் இங்க கல்யாணம் நடக்காது விஷ்வா. இந்த பட்டிக்காட்டானுங்க நடக்கவும் விட மாட்டானுங்க.” ன்னு நினைச்சு தனக்குள்ள சிரிச்சுக்கிட்டா.
அவளக் கவனிச்ச மேகா “இந்த பிசாசு எதுக்கு பஞ்சாயத்துக்கு இப்படி மினிக்கிட்டு வந்திருக்கு..?? இவ ஆளும், மூஞ்சியும் ஒன்னும் சரியில்லையே..!! ஒருவேள இவளும் இவங்க அப்பாவும் சேந்து தான் வேணும்னே வெற்றிய எங்கயாவது கிட்னாப் பண்ணி வச்சிருப்பாங்களோ..!!” ன்னு நினைச்சவ, உடனே விஷ்வாகிட்ட காதுல தன் மனசுல இருக்குறத சொல்லி “இவங்க ஃபேமிலியே அந்த மாதிரி விஷயத்தை எல்லாம் சாதாரணமா செய்யக்கூடிய ஆளுங்கதான். இதுல மித்ராவுக்கும் எனக்கும் ஸ்கூல் படிக்கும்போதில இருந்தே சுத்தமா ஆகாது. சோ கண்டிப்பா வேணும்னே அவதான் எதாவது பண்ணிருப்பா. இந்த முனியாண்டிக்கு ராமசாமின்னு ஒரு அல்லக்கை இருப்பான். அவன இந்தக் கூட்டத்துல எங்கயும் ஆளையே காணோம். அவன வச்சுத்தான் இவங்க எதாவது பண்ணிருப்பாங்க. அந்தக் கிழவன கண்டுபிடிச்சா வெற்றி கிடைச்சிடுவான்னு எனக்குத் தோணுது. நீங்க உங்க ஆளுங்ககிட்ட அந்தக் கிழவன முதல்ல கண்டுபிடிக்கச் சொல்லுங்க.” ன்னா.
தொடரும்..