Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 43

மூர்கனின் காதலி CH 43

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 43 

“ஏதாவது சொல்லி நீங்க என்னைய ஏமாத்தலாம்னு பார்த்தா, நிஜமாவே அப்பாகிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிடுவேன்.”ன்னு முதல்ல இருந்து ஆரம்பிச்சா வெண்ணிலா. 

“உன்னை எல்லாம் யாராலயாவது ஏமாத்த முடியுமாடி..??”ன்னு நெனச்ச மேகா அவளையும், அரவிந்தையும், தயாளனையும் மாறி மாறிப் பார்த்தா. அவங்க இன்னும் இவளைப் பார்த்து “எதையும் சொல்லிடாதம்மா..!!”ன்னு தான் சைகை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.

“ஐயோ, உங்களுக்கு இவள பத்தித் தெரியாது..!! எங்க பெரிய அண்ணனைவிட இவதான் ரொம்ப டேஞ்சர். யார் என்ன பண்ணினாலும் உடனே கண்டுபிடிச்சிடுவா. இவகிட்ட இருந்து தப்பிக்க முடியாது.”ன்னு தன் மனசுக்குள்ள அவங்ககிட்ட சொன்ன மேகா, “சரி டி சொல்றேன். ஆனா, நீ அதை யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணு.”ன்னு அவள் செஞ்சதைப் போலவே தன் கையைத் தூக்கித் தன் தலையில வச்சா.

“நீங்க சொல்றதக் கேக்காம என்னால எதையும் முடிவு பண்ண முடியாது. உங்களுக்குப் பிரச்சனை வர்ற மாதிரி ஏதாவது இருந்தா கண்டிப்பா நான் அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன். சாரி அத்தை..!!”ன்னு மனசுக்குள்ள நெனச்ச நிலா “ப்ராமிஸ்”ன்னு மட்டும் சொன்னா.

“இந்தப் பொண்ணு இப்ப என்ன சொல்லப்போறான்னு தெரியலையே..!!”ன்னு நெனச்சு திக் திக் இதயத்தோட தயாவும் அரவிந்தும் அவங்க ரெண்டு பேரையும் பாத்துக்கிட்டு இருக்க, தங்களை யாராவது கவனிக்கிறாங்களான்னு ‌சுத்தி முத்திப் பார்த்த மேகா பேசத் தொடங்குனா.

“நான் நியூஸ்ல எங்க உறவு பத்தி சொன்னது எதுவுமே பொய்யில்லை நிலா. உங்க மாமா விஷ்வா ஒண்ணும் கே (Gay) இல்ல. அவர் எவ்ளோ ரொமாண்டிக்ன்னு லாஸ்ட் ரெண்டு வருஷமா அவரோட இருந்த எனக்கு மட்டும்தான் தெரியும்.”ன்னு மேகா சொல்ல, “அப்புறம் ஏன் அவர் நான் சும்மா கையப் பிடிச்சதுக்கே அப்படி கோவப்பட்டு எனக்குப் பொண்ணுங்களையே பிடிக்காதுன்னு சொல்லி அடிக்க வந்தாரு..?? யாராவது நார்மலா இருக்கிறவங்க அப்படி நடந்துக்குவாங்களா..??”ன்னு பாயிண்டா கேட்டா வெண்ணிலா.

“அவர் இந்தப் பொண்ணுங்க விஷயத்துல மட்டும் கொஞ்சம் நார்மலா இருக்க மாட்டாரு. உன்கிட்ட மட்டும் இல்ல, அவரோட சொந்த அக்காகிட்டயே அவர் இப்படித் தான் நடந்துக்குவாரு. அதுக்காக அவருக்குப் பசங்களைத் தான் பிடிக்கும்னு அர்த்தம் இல்ல. என்னைத் தவிர வேற யாரையும் அவருக்குப் பிடிக்காதுன்னு அர்த்தம்.”ன்னு சொன்ன மேகா, சௌபர்ணிகா தன்னோட சொன்ன அத்தனையும் என்னவோ தானே அவனோட பழகித் தெரிஞ்சிக்கிட்டதைப் போல இன்னும் எக்ஸ்ட்ரா சேர்த்து பில்டப் செஞ்சு சொன்னா.

அவள் சொன்னதைக் கேக்கக் கேக்க வெண்ணிலாவுக்கு விஷ்வாமீது பரிதாபம் ஏற்பட்டுட, “மாமா ரொம்பப் பாவம்ல்ல அக்கா.. ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்காரு. நீங்க சொல்றத வச்சுப் பார்த்தா, நீங்க அவர் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம்தான் அவர் கொஞ்சம் சந்தோஷமாவே இருந்திருக்காரு.

நல்லவேளை நான் என்ன ஏதுன்னு கேட்டேன். இல்லைன்னா நான் போய் அப்பாகிட்ட எல்லாத்தையும் உங்க பேச்சைக் கேக்காம சொல்லிருந்தா, பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். நீங்க என்கிட்ட சொன்னதை எல்லாம் அவங்க கிட்ட சொன்னா அவங்க புரிஞ்சிக்க மாட்டாங்க.”ன்னு கலங்கின கண்களோட ஃபீல் செஞ்சு சொன்னா.

“ஆமாங்க.. அட்லீஸ்ட் உங்களுக்கு இப்பயாவது புரிஞ்சுதே..!! எங்க பாஸ் ரொம்ப நல்லவரு. நீங்க சொன்ன மாதிரி மேகா மேடம் வர்றதுக்கு முன்னாடி அவர் சிரிச்சுக்கூட நாங்க யாரும் பார்த்தது இல்ல. எப்பயும் உணர்ச்சியே இல்லாத ‌ ரோபோட் மாதிரி இருப்பாரு. நாங்கெல்லாம் அவர் கிட்ட வேலை செஞ்சாலும், எப்பயும் அவர் எங்களை அவரோட தம்பி மாதிரிதான் ட்ரீட் பண்ணுவாரு. விஜய் சார் இருக்கும்போது கூட, ‌ அவர் வேற நாங்க வேறன்னு எப்பயுமே எங்க பாஸ் எங்களை பிரிச்சுப் பார்த்ததில்லை. இப்படி மத்தவங்க கிட்ட பேசும்போது கூட அவர பாஸ் பாஸ்ன்னு நாங்க விட்டுக் கொடுக்காமப் பேசுறதுக்குக் காரணம்… எங்களுக்கு அவர் மேல இருக்கிற பாசமும் மரியாதையும்தான்.”ன்னு அரவிந்த் சொல்ல,

“ஆமாம்மா. அவரப் பத்தி  நீ தெரிஞ்சிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.”ன்னா தயாளன்.

“அதெல்லாம் இவளுக்கு தெரிஞ்ச வரைக்கும் போதும்.”ன்னு சொன்ன மேகா நிலாவைப் பார்த்து,

“இங்க பாரு நிலா.. நீ உண்மையைச் சொல்லச் சொல்லி கேட்ட. நானும் உன்னை மதிச்சு எல்லாத்தையும் சொல்லிட்டேன். நீ யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்னு எனக்குப் ப்ராமிஸ் பண்ணியிருக்க. அதை எப்பவும் காப்பாத்துறது மட்டும் இல்லாம, நான் விஷ்வா பக்கத்துல இல்லாத நேரத்துல அவர் கிட்ட எந்தப் பொண்ணும், ஏன் வயசான கிழவிக்கூட வந்திராம நீ தான் பாத்துக்கணும். எங்களுக்காக எங்க மேரேஜ் முடிஞ்சு நாங்க இங்க இருந்து கிளம்புற வரைக்கும் இந்தப் உதவியை பண்ணுவியா..??”ன்னு கேக்க, “கண்டிப்பா பண்றேன்.”ன்னு சொன்ன நிலா மீண்டும் அவளுக்கு மனசாரப் ப்ராமிஸ் செஞ்சா.

காலை 9:00 மணி..‌

அனைவரும் சாப்பிட்டு முடிச்சுட்டுப் பஞ்சாயத்துக்குப் போறதுக்காகக் கிளம்பிக்கிட்டு இருந்தாங்க. அனைவரும் வந்து வாசல்ல தயாராகி நிக்க, அந்தக் கூட்டத்துல வெற்றிச் செல்வனோட அம்மா அனுராதாவை மட்டும் காணோம். அதனால காளீஸ்வரன் வசந்தியை அழைச்சு, “ஏண்டி.. அத்தை எங்க? ஆளையே காணோம்..!!”ன்னு கேக்க, “அவங்க  நம்ம வெற்றிக்குப் மேகாவ கட்டிக் குடுக்கலைன்னு மூஞ்சியத் தூக்கி வச்சுக்கிட்டு கொல்லபுரத்து பக்கம் உக்காந்திருக்கிறாங்க. நான் போய்க் கூப்பிட்டுப் பார்த்தேன். வரலைன்னு சொல்லிட்டாங்க மாமா..!!”ன்னா வசந்தி.

தொடரும்..‌

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured