Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 39

மூர்கனின் காதலி CH 39

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 39

முத்து, விஷ்வாவுக்கும் அவனோடு வந்தவங்களுக்கும் அரண்மனைய சுத்தி காட்டச் சொல்லிட்டு போனதால, மேகா அவங்கள கூட்டிட்டு போய் ஒவ்வொரு இடமா காட்டுனா. 

அந்த இடம் சும்மா சிம்பிளாவும் நீட்டாவும் ஒரு மன அமைதிய தரக்கூடியதா இருக்க, “நாங்க எத்தனையோ பெரிய பெரிய ஹோட்டல்ல ஸ்டே பண்ணி இக்கோம்மா. ஆனா இந்த இடத்துல ஸ்பெஷலா ஏதோ ஒண்ணு இருக்கு. இடம் பாக்க சிம்பிளா இருந்தாலும், நம்ம ஊருல ஒரு அரண்மனைன்னு நெனைக்கும்போது, இங்க இருக்கும்போது டிஃபரென்ட் வைப்ரேஷன் கெடைக்குது,”-ன்னு மகேஷ் சொன்னான்.

“ஆமா ப்ரோ. அந்த இடத்துல சைடுல ஒரு குட்டி சந்து மாதிரி போகுதுல்ல.. அதுக்குள்ள போனா ஒரு தியான மண்டபம் இருக்கும். அங்க இந்த நேரத்துல மேல இருக்கிற ஹோல்ஸ் வழியா டைரக்டா சன்லைட் உள்ள வரும். அது தரையில படும்போது, ஒவ்வொரு பக்கத்துல இருந்து பாக்கும்போதும் ஒவ்வொரு டிசைன்ல தெரியும். யாரோட டிஸ்டர்பன்ஸும் இல்லாம அங்க போய் மெடிடேஷன் பண்ணா, சூப்பரா இருக்கும். பாசிட்டிவ் வைப்ஸ் கெடைக்கிறத ஃபீல் பண்ணலாம். ஆனா அதெல்லாம் ரசன உள்ளவங்களால மட்டும்தான் உணர முடியும். எல்லாருக்கும் அந்த அறிவு இருக்காதுல்ல..!!” -ன்னு மேகா ஓரக் கண்ணால விஷ்வாவைப் பாக்க, அத கவனிக்காம, 

“ஆமாமா.. எல்லாராலயும் என்ன மாதிரி புத்திசாலியா இருக்க முடியுமா..?? கலைய ரசிக்கிறதுக்கெல்லாம் ஒரு ஆர்ட் சென்ஸ் வேணும். அதெல்லாம் நிறைய பேருக்கு இருக்காது,”-ன்னு தற்பெருமை பேசினான் மகேஷ்.

மேகா விஷ்வாவைப் பார்த்து நக்கலா சிரிக்க, கடுப்பான விஷ்வா மகேஷ் கால்ல வேகமா மிதிச்சான். அதனால, “ஆஆஆ..!! வலிக்குது. இப்போ எதுக்கு பாஸ் என்ன மிதிச்சீங்க..?? நான் உங்களுக்கு புடிக்காத மாதிரி எதுவுமே பண்ணலையே..!!” -ன்னு பாவமா மகேஷ் சொல்ல, “மூடிட்டு வாடா,”-ன்ன விஷ்வா மேகா சொன்ன அந்த தியான மண்டபத்துக்குப் போனான்.

மத்தவங்களும் மகேஷப் பார்த்து சிரிச்சிட்டு அங்கே போனாங்க. மேகா சொன்னத விடவே அந்த இடம் காலை நேர சூரியனோட கதிர்களால ஜொலிச்சுகிட்டு இருந்துச்சு.

“இந்த தடவை எப்படியாவது காளீஸ்வரனையும் அவன் குடும்பத்தையும் கிடைச்ச வாய்ப்ப சரியா யூஸ் பண்ணி அசிங்கப் படுத்திபுடணும்டா ராமசாமி..!!” -ன்னு முனியாண்டி தன்னோட ரைட் ஹேண்டா இருக்குற வேலைக்காரன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க,

“ஆமாங்க ஐயா. நீங்களும் பல வருஷமா காளீஸ்வரன தேர்தல்ல ஜெயிச்சுடணும்னு என்னென்னமோ பண்ணி பாக்குறீங்க. ஆனா எதுவுமே நடக்க மாட்டேங்குதே..!! மறுபடியும் மறுபடியும் அவரே ஜெயிக்கிறாருன்னா அதுக்கு ஊர் மக்களுக்கு அவர் மேல இருக்குற மரியாதையும், நல்ல எண்ணமும் தாங்க காரணம். அத இல்லாம பண்ணிபுட்டாலே, அடுத்த தேர்தல்ல நீங்க கண்டிப்பா ஜெயிச்சிருவீங்க,”-ன்னு ராமசாமி அவனுக்கு சப்போர்ட் பண்ணான்.

அவங்க பேசுறதக் கேட்டுக் கிட்டே ஊஞ்சல்ல உக்காந்திருந்த முனியாண்டியோட மகள் சங்கமித்ரா, “அந்த குடும்பத்த அசிங்கப்படுத்துறதெல்லாம் பெரிய விஷயமில்லப்பா. அவங்க வீட்டு பொண்ணுக்கு ஏதோ பெரிய இடத்துல மாப்பிள்ளை அமைஞ்சிருக்குன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்களே.. அது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?” -ன்னு கேக்க, “அவன் எவனா இருந்தா நமக்கு என்ன மா..?? கிடைச்சிருக்குற வாய்ப்ப யூஸ் பண்ணி நம்ம காரியத்த சாதிச்சுக்கணும். அவ்வளவுதான்,”-ன்னு சொன்னான் முனியாண்டி.

“நானும் அதையேதான்ப்பா நெனைக்கிறேன். முதல்ல இதப் பாருங்க..!!” -ன்ன மித்ரா, தன் ஃபோன்ல இருந்த விஷ்வாவோட போட்டோவ அவங்க அப்பாட்ட காட்டி அவனோட அருமை பெருமைகளை எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தா.

அப்போ, “ஐயா.. ஐயா உங்களுக்கு விஷயம் தெரியுங்களா??” -ன்னு கேட்டபடி முனியாண்டியோட தோட்டத்துல வேலை செய்யுறவன் உள்ள ஓடி வந்து கேக்க, “எலேய்.. நீ சொன்னாதானேல.. தெரியும்.. முதல்ல என்னன்னு சொல்லித்தொலை..!!” -ன்னு கேட்டான் முனியாண்டி.

“அந்த மேகாப் புள்ளைக்கு எதிரா நீங்க பஞ்சாயத்துல பிராது குடுத்தும், அத கொஞ்சம்கூட மதிக்காம பிரசிடென்ட் தங்கச்சியையும் மாப்பிள்ளையையும் ஆரவாரமா வெடியெல்லாம் போட்டு வர வேற்கிறாருங்க..!! இந்த கொடுமை எல்லாம் நம்ம ஊர்ல தாங்க நடக்குது..!! பிரசிடென்ட் ஐயாவுக்கு இந்த ஊர்ல அவர்தான் பெரிய ஆளுன்ற எண்ணம் அதிகமாகிப் போச்சுன்னு நெனைக்கிறேங்க..!! எல்லாம் பணக்கார மாப்பிள்ளை வந்த தைரியம்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க..!!” -ன்னு அந்த வேலைக்காரன் மூச்சு வாங்க முனியாண்டிகிட்ட சொல்ல, 

“வேற எதாச்சும் முக்கியமான விஷயம் இருக்குங்களா?” -ன்னு கேட்டா மித்ரா. “இல்லைங்க பாப்பா..!!” -ன்னு அவன் சொல்ல, “அப்போ நீங்க கெளம்புங்க..!! எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம். 10 மணிக்கு நடக்கப் போற பஞ்சாயத்துக்கு எல்லாரும் வரணும். புரிஞ்சுதா?” -ன்னு கேட்டா சங்கமித்ரா.

“புரிஞ்சுது பாப்பா. பஞ்சாயத்து நடக்குற சமயத்துல ஊருக்குள்ள ஒரு ஈ காக்கா கூட இருக்காது. எல்லாரையும் நான் அங்க வர வச்சுப்புடுறேன்…!!” -ன்ன வேலைக்காரன் வேகமா அங்க இருந்து கெளம்புனான். அவன் போன பின், தங்களை சுத்தி யாராவது இருக்காங்களான்னு ஒரு தடவ தன் கண்கள சுழலவிட்டு ஸ்கேன் பண்ண மித்ரா, “அப்பா..!! வந்திருக்கிற விஷ்வா சாதாரண ஆள் இல்ல. இன்னைக்கு தேதிக்கு இந்தியால இருக்குற பத்து பணக்காரங்கள்ல அவனும் ஒருத்தன். நான் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் விசாரிச்ச வரைக்கும், நம்மள மாதிரி ஆளுங்க எல்லாம் அவன நேர்ல பாக்கணும்னு நெனச்சாக்கூட அது நடக்காதாம். அப்படிப்பட்டவன், போயும் போயும் அந்த மேகாவுக்காக நம்ம ஊருக்கு வந்திருக்கான். இத நெனைக்கும்போது அப்படியே எனக்குப் பத்திக்கிட்டு வருதுப்பா..!!” -ன்னு கோபமா சொன்னா.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured