இங்கே ஒரு அறையின் சுவர் முழுக்க உயர் ரக மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அப்படியே கீழே அமைந்திருந்த ஒரு மேசை ஒன்றில் பொத்தென்று காலி பாட்டிலை வைத்தது ஒரு கரம்.
அந்த கரம் அந்த காலி பாட்டிலை இறுக்கி பிடிக்க, அந்த கை நரம்புகள் எங்கும் கோவத்தில் புடைத்தது. அடுத்த நொடி பட்டென்று அந்த பாட்டிலை கீழே தள்ளி உடைத்துவிட்டு அடுத்த பாட்டிலை எடுத்து வாய்க்குள் சரித்தார் ஆர்.கே. அந்த பாட்டிலையும் மொத்தமாய் காலி செய்து தூரம் வீசியவரின் விழிகள் இரத்தமாய் சிவந்திருந்தது. அந்த விழி நரம்புகள் கோவத்தில் புடைத்திருக்க, இவ்வளவு குடித்தும் போதையைவிட கோவமே அந்த விழிகளில் அதிகம் நிறைந்திருந்தது.
“விட மாட்டேன். என் பையனுக்காக இல்லன்னாலும், ரெண்டு தெடவ எனக்கு தோல்விய காட்டுனதுக்காகவே உனக்கு நரகத்த காட்டுவன்டா.” என்றபடி அடுத்த பாட்டிலை வாயிக்குள் சரிக்க, “பாஸ்!” என்றபடி வேகமாய் தடுத்து பிடுங்கினான் அவரின் பி.ஏ.
“நீங்க இவ்ளோல்லாம் குடிக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.” என்று கூற, ஓங்கி அவன் வயிற்றிலேயே உதைத்திருந்தார் ஆர்.கே.
அதில் அவன் பொத்தென்று அறை வாசலுக்கு சென்று விழ, “என்ன தடுக்குற அளவுக்கு வந்துட்டியா நீ?” என்று பல்லை கடிக்க, அதில் வலியுடன் வயிற்றை இறுக்கி பிடித்து மெதுவாய் எழுந்து நின்றான் அவன்.
“கெட் அவுட்!!! இன்னிக்கு எவனும் என் கண்ணு முன்னாடியே வர கூடாது.” என்று சத்தமாய் கத்தினார் ஆர்.கே.
அந்த சத்தம் அந்த கெஸ்ட் ஹவுஸ் முழுக்க அதிர்வை உண்டு படுத்த, இங்கே அவர் முன் நின்றிருந்தவனோ பார்வையை தாழ்த்தி, “சாரி பாஸ். யாரும் டிஸ்டர்ப் பண்ணாம பாத்துக்குறேன்” என்றபடி வெளியேறினான்.
அதில் அவரும் அடுத்த பாட்டிலை எடுத்து கோவமாய் வாயுக்குள் சரிக்க, இங்கே கதவை அடைத்துவிட்டு திரும்பியவனோ முகத்தை இறுக்கி, “கெழட்டு நாயு. வயசுக்கு மீறி குடிக்க வேண்டியது, அப்றம் ஹாஸ்பிட்டல்ல போய் படுத்துட்டு ஏன்டா அவ்ளோ குடிக்கவிட்டன்னு அடிக்க வேண்டியது. இன்னிக்கு நல்லா குடிச்சுட்டு ஒரே அடியா போய் சேரட்டும்.” என்று முனுமுனுத்தபடி அங்கிருந்து நகர, “அகில் சார்!” என்றான் ஒருவன்.
அதில் அவன் நின்று திரும்பி அவனை பார்க்க, “என்ன ஆச்சு சார்?” என்று அவன் கேட்க, “பாஸ் யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டா சொல்றாரு. யாரும் மேல போக வேண்டா.” என்றான் இவன்.
“சரிங்க சார். நா சொல்லிர்றேன்.” என்றான் அவன்.
இங்கே நிதானம் இழக்கும் அளவிற்கு குடித்திருந்த ஆர்.கே, அடுத்த பாட்டிலையும் காலி செய்து கோபமாய் வீசியடிக்க, அது சுவரில் பட்டு தெறித்த நொடி பட்டென்று கரண்ட் கட் ஆனது.
அதில் அவர் போதையில் சிவந்த விழிகளை மெதுவாய் உருட்டி சுற்றி பார்க்க, ஒரே இருட்டாக இருந்தது. ஜன்னல் வழி வந்த வெளிச்சம் மட்டுமே அந்த அறையை நிரப்ப, “டேய் அக்கில்!!!” என்று குழரலாய் அழைத்தார்.
அந்த சத்தம் அந்த அறை வாசலை கூட தாண்டவில்லை. அதில் எரிச்சலாய் எழ முயன்றவர் தள்ளாடி பொத்தென்று இருக்கையிலேயே விழ, சுற்றியிருக்கும் அனைத்துமே அவருக்கு மங்களாய்கான் தெரிந்தது.
அதில் தலையை உலுக்கிவிட்டு நிதானித்தவர், “எங்க போய் தொலஞ்சான்?” என்றபடி தன் மொபைலை நெறுவி தேடினார்.
அளவுக்கு மீறி குடித்ததில் கரங்களெல்லாம் நடுக்கம்கொள்ள ஆரம்பித்திருக்க, தடுமாற்றத்தில் கரம் பட்டு மொபைல் கீழே விழுந்து நொறுங்கியது.
“ஷிட்” என்று பல்லை கடித்தவர் வேகமாய் எழ முயல, கால்கள் தடுமாறி மேசையை தள்ளிக்கொண்டு தரையில் விழுந்தார். அடுத்த நொடி தலையை உலுக்கி மீண்டும் நிதானத்திற்கு கொண்டு வர முயன்றவர், எரிச்சலாய் கரத்தை தரையில் ஊன்றி தலையை தூக்க, அவரின் முகத்தருகே இருந்தது ஒரு கருப்பு ஷூ பாதம்.
அதில் அவர் சட்டென்று பின்னால் நகர்ந்து மங்கிய விழிகளை குறுக்கி விரித்து பார்வையை நிமிர்த்த, அவன் முகமுரச காலை ஆட்டிக்கொண்டிருந்தவனின் கருப்பு ஷூ கால் அவனின் மறு தொடையில் வைத்திருக்க, கால்மேல் கால் போட்ட நிலையில் சாய்ந்தமர்ந்திருந்தவனின் கையில் இரு விரல்கள் தன் கருப்பு மோதிரத்தை மெதுவாய் சுழற்றிக்கொண்டிருந்தது.
அதில் குழப்பமாய் விழியை சுருக்கி, “யார்ரா நீ?” என்று கேட்க, ஜன்னல் வழி அடித்த தென்றலில் அவன் கருப்பு சட்டையின் காலர் மெல்லியதாய் விலகி அதனுள்ளிருந்த கருப்பு ஆர் டாலர் தெளிவாய் மின்னியது.
அதில் இவரின் போதை விழிகள் கோவத்தில் விரிய, வேகமாய் தன் துப்பாக்கியை எடுக்கும் நொடி பட்டென்று அவர் நெற்றியிலே அழுந்தியது ஒரு துப்பாக்கி. அதில் அவர் திடுக்கிட்டு பின்னிருந்த மேசையில் அழுத்தி சாய, அப்போதே இருளுக்குள்ளிருந்த முகத்தை மெதுவாய் குனித்து அவர் முகம் நெருங்கி, “நைஸ் மீட்டிங் யூ” என்றான் ருதன். அதில் அவர் விழிகள் அகல விரிய, சட்டென்று வெளிச்சம் வந்து வந்து வந்து மறைந்தது அவ்விடத்தில்.
இங்கே எப்போதோ வீட்டிற்கு வந்திருந்த அமீரா, தன் அறையில் குளித்துவிட்டு ஆடைகளை மாற்றி வெளியில் வர, அந்த வெறும் மெத்தையில் வெறுமையாய் கிடந்தது அந்த செந்தாமரை.
அதை மெதுவாய் கையில் எடுத்துக்கொண்டவளின் இதழ்கள் ஏக்கமாய் வளைய, அதே இதழில் அழுத்தி முத்தமிட்டு, “வந்தர்றேன்.” என்று கூறிவிட்டு சென்ற அவனின் மெல்லிய குரல் இன்னுமே அவள் காதில் ஒலித்தபடியே இருந்தது. அதில் திரும்பி கடிகாரத்தை பார்க்க, மணி பத்தை கடந்துக்கொண்டிருந்தது. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று யோசித்தவள், அப்படியே மெத்தையில் அமர்ந்து பார்வையை அந்த பூவில் குவித்தாள்.
அதில் ஏக்கமாய் மூச்சை வெளியில் விட்டவளின் உடல், பயண களைப்பு, தண்ணீரில் நனைந்தது, அதிக உணவு உண்டது என்று கடும் சோர்வில் இருக்க, ஏக்கமாய் அந்த பூவை வருடியபடியே மெல்ல தலையணையில் சாய்ந்து படுத்து, சுவர் கடிகாரத்தையே பார்த்திருந்தாள்.
நேரம் செல்ல செல்ல, கடிகாரத்தின் முட்கள் நகர்ந்ததோடு இவளின் இமைகளும் மெல்ல சொருகியது. அப்படியே அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருக்க, அவள் வயிற்றருகே அந்த தாமரையை பத்திரமாய் பிடித்திருந்தது அவள் விரல்கள். அந்த தாமரையின் இதழ்கள் அவள் மார்பில் உரசிக்கொண்டிருக்க, அதை மெதுவாய் மெல்ல உருவியது அவன் விரல்கள். அதில் அவசரமாய் அவள் விரல் அதை இழுத்து பிடிக்க, அவ்விரலில் ஈரம் பதிய அழகாய் முத்தமிட்டது அவன் இதழ்கள். அதில் இதமாய் தளர்ந்த அவள் விரல்கள் அந்த பூவை விட்டுவிட, அதை அப்படியே விலக்கி அருகே இருந்த ஃப்ளவர் வாஷில் சொருகிவிட்டு திரும்பியவனின் முகம் அவள் முகத்தை உரசியது. அதில் அவள் புருவங்கள் தொந்தரவாய் குறுக, அதன் நடுவே மென்மையாய் தன் இதழை பதித்தான்.
அதில் இதமாய் அவள் புருவங்கள் தளர, சுகமாய் உறக்கத்தை தொடர்ந்தாள். அதில் அவள் இமையிலும் பட்டும் படாமல் ஒரு மெல்லிய முத்தம் வைத்தவன், அப்படியே அவளை அணைத்தபடி அவளருகே சரிந்து படுத்து விழி மூடினான்.
சில நொடிகளில் அவனும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருக்க, அவளோ உறக்கத்தில் மெல்லியதாய் பிரண்டு படுத்தாள். அதில் அவளை இழுத்து தன்னுடன் இறுக்கி கொண்டவனின் தாடி அவள் கன்னத்தில் புதைய, உருத்தலாய் புருவத்தை குறுக்கினாள். அவனோ உறக்கத்தில் தன் தாடியை அவள் முகத்தில் தேய்த்தபடி மேலும் நெருங்கி படுக்க, இவளோ முடிகள் குத்தியதில் முகத்தை சுருக்கி தொந்தரவாய் மெல்ல இமையை பிரித்தாள்.
அடுத்த நொடி அவள் விழிகள் விரிய, அத்தனை அருகே தன்னவனின் அமைதி முகம். அதில் வியப்பாய் சில நொடிகள் அவனையே பார்த்தவளின் விழிகளில் மெல்ல இரசனை பூச, அப்படியே அவன் முகமெங்கும் மென்மையாய் தழுவியது அவள் பார்வை.
இப்போது அமைதியாய் உறங்கும் இந்த முகத்தினுள்ளே, அன்று முதல் முறையாய் பார்த்த அந்த முகம்தான் அவள் கண்முன் வர, அன்றே அவளின் விழிகளில் இவன் பேரழகனாய் தான் பதிந்தான். இரண்டாம் முறை மணகோலத்தில் விழியில் விழும்போது, இவள் இதயமும் சேர்ந்து விழுந்ததுதான் உண்மை. அன்று அவள் விரிந்த விழிகள் அதிர்வையும் தாண்டி முழுதாய் அவனை இரசித்து முடித்திருந்தது.
அவள் பார்த்த அந்த அரக்க முகங்களுக்கு பின்னால் இப்படியொரு அன்பாளனின் முகம் இருக்கும் என்று அவள் கற்பனையிலும் நினைத்திருக்கவில்லை. அப்படியே அவன் கன்னத்தில் விரல்களை படரவிட்டவள், அவன் நெற்றியில் சிதறி கிடந்த சிகை முடிகளின் நடுவே அழகாய் இதழ் பதித்தாள். அதில் அவன் இதமாய் உறக்கத்தை தொடர, அவன் இமையிலும் மென்மையாய் இதழ் பதித்தாள். அதில் அவன் உடலுக்கு பதில் இவள் உடல் சிலிர்வை உணர, அவன் இமையின் கீழும் மெல்லியதாய் இதழ் பதித்தாள். அதில் அவன் மெல்லியதாய் அசைந்து படுக்க, அவன் நாசி அவள் முகமெங்கும் உரசி தழுவியது. அதில் இவள் உடலெங்கும் சூடேற, அவன் நாசி நுனியில் இதழுரசி மெல்லிய முத்தம் வைத்தாள். அதையறியாது அவன் அசந்து உறங்க, சிறு ஏக்கமாய் இதழை சுழித்தவள், அவன் முகமெங்கும் தன் நாசியை படரவிட்டு அனல் மூட்டி அங்கங்கே மெல்லியதாய் ஈர முத்தங்களை மெல்ல வைத்தெடுத்தாள். அதிலும் அவன் இதமாய் உறக்கத்தை தொடர, அப்படியே அவன் கன்னமுரச நாசியை சாய்த்து அவன் மீசையோரம் அழுத்தி முத்தமிட்டாள். அதில் உறக்கத்திலே அவன் மீசை நுனி மெல்லியதாய் சுழிந்து மறைய, மெதுவாய் இதழை நகர்த்தி அவன் முரட்டு இதழில் முழுதாய் இதழை தேய்த்து வருடியபடி மெல்ல மென் முத்தம் வைத்தாள்.
அடுத்த நொடி கட்டுபாடில்லாமல் அவன் இதழை கவ்வி, சுவைக்க தெரியாமல் சுவைத்த நிகழ்வு அவள் கண்முன் வர, வெட்கமாய் அவன் கழுத்தில் முகத்தை புதைத்தாள். அதில் அவனும் வாகாய் அசைந்து படுத்து அவள் கூந்தலுள் விரல்களை நுழைக்க, அவளும் வாகாய் அவனை கட்டிக்கொண்டாள். அதில் முழுதாய் அவளை அணைத்துக் கொண்டவன், அவள் கூந்தலுளிலிருந்த விரல்களை மெதுவாய் அசைத்து வருடி கொடுக்க, அதில் சுகமாய் அவன் கழுத்து வளைவில் முகத்தை தேய்த்து விழி மூடினாள் அவள்.
அப்படியே அந்த இருண்ட வானம் வெளிச்சம் பூச ஆரம்பிக்க, அடுத்த நாள் காலை ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அமீராவின் விழிகள் மெல்ல விழிப்பு தட்டியது. அதில் அவள் சோம்பலாய் விழியை சுருக்கி இமையை பிரிக்க, அருகே அவன் இல்லை. அதில் அவள் திடுக்கிட்டு எழுந்தமர, மெத்தையில் அவள் மட்டுமே இருந்தாள்.
அதில் அவள் புரியாது சுற்றி அவனை தேட, அறையில் எங்குமே அவனை காணாமல் அவசரமாய் நிமிர்ந்து மணியை பார்த்தாள். மணி எட்டை கடந்திருக்க, அவள் விழிகள் அகல விரிந்தது. இது அவன் கிளம்பியிருக்கும் நேரமாயிற்றே இவ்வளவு நேரம் எப்படி உறங்கினோம் என்றபடி வேகமாய் கட்டிலைவிட்டு இறங்க, அந்த கட்டிலில் அவனின் ஈர டவள் கிடந்தது. அதில் புருவத்தை விரித்து அதை எடுத்து பார்த்தவள், முழு ஈரமாய் இருக்கவும் பதறி, “குளிச்சுட்டாரா?” என்றபடி திரும்பி குளியலறையை பார்க்க, அங்கிருந்து எந்த சத்தமும் வரவில்லை. அதில் வேகமாய் கதவை திறந்து உள்ளே சென்று பார்க்க, உள்ளே அவன் இரவு அணிந்திருந்த ஆடைகள் தொங்கி கிடந்தது. அதில் முழுதாய் புருவத்தை விரித்தவளின் இதயம் பதற ஆரம்பிக்க, அப்படியென்றால் சென்றுவிட்டானா என்றபடி வேகமாய் பால்கனி சென்று கீழே தேடினாள்.
அங்கே அவன் காரும் இருப்பதுப்போல் தெரியவில்லை. அதில் இவள் இதயமே ஒரு நொடி துடிப்பை நிறுத்த, அவள் விழியோரம் நீர் துளிர்த்தது. ஒரு வார்த்தைக்கூட கூறாமல் சென்றுவிட்டான் என்று மெல்லிய கோவமும் எட்டி பார்க்க, சில நொடி அப்படியே நின்றிருந்தவள் தன் விழி நீரை அழுத்தி துடைத்தபடி மெதுவாய் திரும்பினாள். அடுத்த நொடி அவள் மொத்த உடலும் உறைந்து விழிகள் அகல விரிய, அந்த பால்கனி சோஃபாவில்தான் வசதியாய் சாய்ந்தமர்ந்து தன் ஃப்ரூட் சேலட்டை ஃபோர்க்கில் குத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்தான் ருதன்.
அதில்தான் அவள் இதயம் மீண்டும் துடிக்கவே ஆரம்பித்திருக்க, அவளையே பார்த்தபடி உணவை மென்று விழுங்கியவனின் பார்வையை இப்போது வேறு எங்கோ ஆழமாய் பதிந்தது. அதில் அவளும் புருவத்தை இடுக்கி குனிந்து பார்க்க, அடிக்கின்ற காற்றில் அவளின் சேலை முழுதாய் விலகி, அவளின் வெண்ணிற மணி வயிறு முழுதாய் தெரிந்துக் கொண்டிருந்தது. அதன் நடுவே ஆழமாய் குழிந்திருந்த அந்த நாபி குழிக்குள் அவன் பார்வை கூர்மையாய் குவிய, அதனுள் அவன் நாவை நுழைத்து துடைத்து, அவள் நெஞ்சுக்குழி அடைத்து சிலிர்த்து கிளிர்ச்சியை கிளப்பிய நொடி கண்முன் வர, இறுக்கி விழி மூடி உணர்வுகளை இழுத்து பிடித்தவள் சேலையை இழுத்து மூடினாள். அதில் பட்டென்று அவன் முகம் இறுக, அவளோ அவசரமாய் அதை மூடி சரி செய்துவிட்டு நிமிர, அவன் அங்கு இல்லை. அதில் அவள் திடுக்கிட்டு சேலையை விட்டு அவனை தேட, அதில் மீண்டும் விலகி பறந்த சேலையின் உள்ளே அவள் வெற்று மணிவயிற்றில் அழுத்தி கரம் பதித்து தன் பக்கம் திருப்பினான் அவன். அதில் அவள் திடுக்கிட்டு அவன் மார்பில் மோதி நிமிரும் முன், சட்டென்று அவளை அள்ளி தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டான் அவன். அதில் அவள் அதிர்ந்து, “என்ன பண்றீங்க?” என்று பதற, அவளை அப்படியே தூக்கிக்கொண்டு உள்ளே வந்து பொத்தென்று மெத்தையில் போட்டான் ருதன்.
அதில் அவள் பதறி நிமிர்ந்து அவனை பார்க்க, வேகமாய் அவள் சேலையை உருவி வீசினான் அவன். அதில் அவள் பதறி தன் இரு கரத்தால் உடலை மறைக்க முயல, அதற்குள் அசுர வேகத்தில் அவள் ஜேக்கெட்டையும் கிழித்து எறிந்து, உள்ளாடை பாவாடை என்று அனைத்தையும் கிழித்து வீசினான். அவை அறையெங்கும் சிதறி விழுக, இங்கே மெத்தையில் வெறும் உடலாய் அவனடியில் கிடந்தவளின் இரு கரத்தையும் அவள் தலைக்கு மேல் தூக்கி இறுக்கி பிடித்திருந்தவன், “இப்ப எதடி மறைப்ப?” என்று அத்தனை அழுத்தமாய் கேட்டான்.
– நொடிகள் தொடரும்…