Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே CH-48

அன்புள்ள அரக்கனே CH-48

by oviyablessy
அன்புள்ள அரக்கனே CH-53

அவ‌ளோ முத்த‌மிட‌ தெரியாம‌ல் அவ‌ன் இத‌ழுள் தன் இத‌ழை நுழைத்து ஏதேதோ செய்து திண‌றிக் கொண்டிருந்தாள். அதில் புரியாது புருவத்தை குறுக்கி, பிறகுதான் புரிந்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட‌வ‌ன், அன்னிச்சையாய் த‌ன் முன்னிருந்த‌ க‌ண்ணாடி சுவ‌ரின் வெளியே க‌வ‌னிக்க‌, அங்கே ப‌ல‌ புத‌ர்க‌ள் அசைந்து ப‌ற‌வைக‌ள் க‌லைந்து ப‌ற‌ந்த‌து. அதை பார்த்து ந‌க்க‌லாய் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன், அதை பார்த்த‌ப‌டியே த‌லையை சாய்த்து முழு வ‌ன்மையாய் அவ‌ள் இத‌ழ்க‌ளை சுவைத்தான்.

அதில் இறுக்கி மூட‌ வேண்டிய‌ அவ‌ள் விழிக‌ள் சுக‌த்தில் சொருக‌, அவ‌ன் வ‌ன்மையும் அவ‌ள் பெண்மையைதான் குடைந்து கிள‌றிய‌து. அதில் முழுதாய் அவ‌ன் சிகைக்குள் க‌ர‌த்தை நுழைத்து க‌லைத்து சுருட்டிய‌வ‌ள், இன்னும் ஆழ‌மாய் அவ‌ன் இத‌ழுள் புதைய‌, அவ‌ள்  மூக்கு ந‌சுங்கும் அள‌விற்கு அழுத்த‌மாய் புதைந்து அவ‌ள் இத‌ழ்க‌ளை சுவைத்து எடுத்தான் அவ‌ன். அவ‌ன் வ‌ன்ம‌த்தின் வேக‌த்தில் இரு முக‌ங்க‌ளும் அழுத்தமாய் உர‌சிக்கொள்ள‌, இருவ‌ரின் உட‌லும் மோக‌த்தில் சூடேறிய‌து. அதில் சுவாச‌ வேக‌மும் அன‌லாய் அதிக‌ரிக்க‌, அவளுக்கு மூச்சு காற்றின் தேவை அதிகமாகிய‌து. அதில் திண‌றிய‌ப‌டி அவ‌ள் தொண்டை அடைத்து ஏறி இற‌ங்க‌, அப்போதும் அழுத்த‌மாய் புதைந்து த‌ன் மூச்சு காற்றை அவ‌ளுக்கு கொடுத்தானே த‌விர‌ வில‌க‌வில்லை. அவ‌ளும் அவ‌ன் சுவாச‌த்தை விழுங்கிய‌ப‌டி அவ‌ன் ச‌ட்டையை இறுக்கி பிடித்து மேலும் அவ‌னுள் புதைய‌, நொடிக‌ள் க‌ட‌ந்து இருவ‌ரின் உண‌ர்ச்சிக‌ளும் உச்ச‌ம் தொடும் நொடி அவ‌ன் சுவாச‌ குழ‌ல் மொத்த‌மும் தீர்ந்து போய் மெதுவாய் இத‌ழை பிரித்தான்.

அதில் மூச்சு வாங்க‌ பிரிந்த‌வ‌ளின் க‌ர‌ம் மெதுவாய் அவ‌ன் சிகையிலிருந்து இற‌ங்கி அவ‌ன் பின் க‌ழுத்தில் அழுத்தி ப‌திய‌, அப்ப‌டியே பின்னிருந்த‌ க‌ண்ணாடி சுவ‌ரில் சாய்ந்து மூச்சுவாங்கினாள். அவ‌ளுக்கு த‌ன் மூச்சு மொத்த‌த்தையும் கொடுத்து தீர்த்த‌ இவ‌னுக்குமே இப்போது மூச்சு வாங்க‌, அவ‌ள் நெற்றியில் சாய்ந்து சில‌ நொடிக‌ள் விழி மூடி மூச்சு வாங்கினான்.

அதில் இருவ‌ரின் வேக‌ மூச்சுக‌ளும் ஒன்றாய் க‌ல‌ந்து அன‌லை கூட்ட‌, மெதுவாய் நிமிர்ந்து அவ‌ள் விழி பார்த்தான். அவ‌ளுமே ப‌த‌ற்ற‌மாய் இமையை நிமிர்த்தி அவ‌ன் விழிக‌ளை ச‌ந்திக்க‌, அவ‌னோ மெல்ல‌ இத‌ழ் வ‌ளைத்து பார்வை கீழே இற‌க்கி காட்டினான். அதில் அவ‌ளும் கேள்வியாய் பார்வையை கீழே இற‌க்க‌, அவ‌ளின் க‌ர‌ம் அவ‌ன் ச‌ட்டையை தாண்டி அவ‌ன் வெற்று மார்புக்குள் நுழைந்திருந்த‌து. அதில் ச‌ட்டென்று அவ‌ள் க‌ர‌த்தை வில‌க்க‌ போக‌, ப‌ட்டென்று அந்த‌ க‌ர‌த்தை பிடித்தான் அவ‌ன். அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் பார்வையை நிமிர்த்த‌, அவ‌னோ அழ‌காய் பார்வையை இற‌க்கி அந்த‌ பிஞ்சு விர‌ல்க‌ளுக்கு ஈர‌ம் ப‌திய‌ முத்த‌மிட்டான். அதில் சிலிர்வாய் அவ‌ள் க‌ர‌த்தோடு சேர்ந்து அவள் உடலும் குறுக, அப்ப‌டியே நிமிர்ந்து அவ‌ள் விழி பார்த்தான். அதில் அவ‌ள்  வெட்க‌ புன்ன‌கையாய் இமை குடையை தாழ்த்த‌, அத‌ன் மேல் மென்மையாய் ப‌திந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் மேலும் சிலிர்வாய் அவ‌ன் தோள் ச‌ட்டையை இறுக்கி பிடித்து குறுகினாள் அவ‌ள். அதில் மெதுவாய் அவ‌ள் முக‌மெங்கும் நாசியை உர‌சி அவள் ஈர‌ முக‌த்தை சூடேற்றியவன், அப்ப‌டியே அவ‌ள் க‌ன்ன‌முர‌ச‌ நாசியை சாய்த்து அவள் இத‌ழோர‌ம் முத்த‌மிட்டு, “அம்மு!” என்றான் மெல்லிய‌ குர‌லில். அதில் உட‌லெங்கும் உஷ்ண‌மும் உண‌ர்வும் ஒன்றாய் ப‌ர‌வ‌, “ம்ம்” என்றாள் விழி மூடிய‌ப‌டியே.

அதில் மெதுவாய் நாசியை ந‌க‌ர்த்தி அவ‌ள் க‌ன்ன‌த்தின் கீழ் சூடாய் உர‌ச, “அம்மு!” என்றான் அன‌ல் மூச்சாக‌. அதில் இவ‌ள் மூச்சிலும் தாப‌ அன‌ல் பெருக‌, “ம்ம்” என்றாள். அப்ப‌டியே அவ‌ள் க‌ழுத்த‌ருகே மீசையை ப‌ட‌ர‌விட்டு சூடேற்றிய‌ப‌டி, “அம்மு…” என்ற‌வ‌னின் குர‌ல் கிற‌க்க‌மாய் வெளியில் வ‌ர‌, அதில் க‌ழுத்தை விரித்து தாப‌த்தில் இழைந்த‌வ‌ளின் குர‌ல் “ம்ம்” என்று முன‌ங்க‌லாய் வெளியில் வ‌ந்த‌து.

அதில் சூடேற்றிய‌ இட‌த்தில் எச்சிலை ப‌ட‌ர‌விட்டு ஈர‌மாக்கிய‌வ‌ன், “மை அம்மு” என்ற‌ப‌டி அழுத்த‌மாய் க‌டித்தான். அதில் ப‌ட்டென்று அவ‌ள் அவ‌னின் மார்புக்குள் புகுந்துக்கொள்ள‌, அவ‌ளை இறுக்க‌மாய் அணைத்துக்கொண்டு அவ‌ள் க‌ழுத்தில் முக‌த்தை புதைத்தான். அதில் அவ‌ள் சிலிர்வாய் நெளிய, அவ‌னோ அவ‌ள் க‌ழுத்தெங்கும்  இத‌ழை ப‌ட‌ர‌விட்டு வ‌ளைவில் அழுத்தி முத்த‌மிட்டான். அதில்  அவ‌ன் முதுகு ச‌ட்டையை அவ‌ள் இறுக்கி பிடிக்க‌, அவ‌னோ அங்கே மோக‌த்தில் விய‌ர்த்த‌ நீர் துளிக‌ளில் மீசையை துடைத்து முத்த‌மிட‌, குறுகுறுப்பாய் தோள்ப‌ட்டையை நெளித்து அவ‌னுள் புகுந்தாள். அதில் வாகாய் அவ‌ள் ஈர‌ கூந்த‌லுள் விர‌ல்க‌ளை நுழைத்து பிடித்த‌வ‌ன், மெதுவாய் நிமிர்ந்து அருகே தொங்கி கிட‌ந்த‌ ஜ‌ன்ன‌ல் திரையை உருவினான். அவ‌ன் உட‌ல் அசைவில் அவ‌ளோ அவ‌னை வில‌க‌ விடாது மேலும் அவ‌னுள் புதைந்துக்கொள்ள‌, அவ‌ளை த‌ன‌க்குள் ப‌த்திர‌மாய் இறுக்கிக்கொண்ட‌வ‌ன் அப்ப‌டியே அந்த‌ திரையை க‌ழ‌ற்றி எடுத்து அவ‌ள் ஈர‌ கூந்த‌லை துவ‌ட்ட‌ ஆர‌ம்பித்தான். அதில் அவ‌ன் மார்புக்குள் குழ‌ப்பமாய் புருவ‌த்தை குறுக்கிய‌வ‌ள் மெல்லிய‌தாய் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌,  அவ‌ள் நெற்றியில் அழுத்தி முத்த‌மிட்ட‌வ‌ன், அவ‌ள் முன்ப‌க்க‌மும் துணியை போட்டு துவ‌ட்ட‌ ஆர‌ம்பித்தான். அதில் அப்ப‌டியே விழியை மூடி அமைதியாய் நின்ற‌வ‌ள், அவ‌ன் முதுகை க‌ட்டியிருந்த‌ த‌ன் க‌ர‌ங்க‌ளை இன்னும் இறுக்க‌மாய் க‌ட்டிக்கொண்டாள். அவனும் அவளை தாங்கி பிடித்தபடியே மிச்சமிருந்த பகுதிகளையும் சுத்தமாய் துவட்டிவிட, சுகமாய் அவன் மார்பில் சாய்ந்துக்கொண்டாள் அவள். அதில் வாகாய் அவள் காதோரமும் அதன் கீழும் என்று ஒளிந்திருந்த ஈரத்தையும் தேடி துவ‌ட்டி முடித்தவன், மெதுவாய் அவளை விலக்கி அந்த‌ கண்ணாடி சுவரில் சாய்த்தான்.

அதில் அவ‌ளும் மெதுவாய் இமையை பிரிக்க‌, அவ‌ளின் முக‌த்தில் சித‌றியிருந்த‌  கூந்த‌லை மென்மையாய் ஊதி வில‌க்கிய‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் அவ‌ள் இத‌மாய் விழி மூட‌, அழ‌காய் அவ‌ள் காதோர‌ம் அந்த‌ தாம‌ரையை சொருகிய‌து அவ‌ன் விர‌ல்க‌ள். அதில் அவ‌ள் சிலிர்வாய் புருவ‌ம் குறுக்கி நெற்றியை சுழிக்க‌, அவ‌ள் உட‌லில் சூடாய் என்ன‌வோ ப‌டர்ந்த‌து. அதில் அவ‌ள் புரியாது விழியை குறுக்கி இமையை பிரிக்க‌, அவ‌ள் ஈர‌ சேலையை அவ‌ள் மீது போட்டு, தோளில் பின் குத்திய‌து அவ‌ன் விர‌ல்க‌ள். அதில் அவ‌ள் திடுக்கிட்டு த‌ன் தோளை பார்க்க‌, அத‌ற்குள் அங்கே அழுத்த‌மாய் ப‌திந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் ஜிவ்வென்று அவ‌ள் உட‌ல் உண‌ர்வை க‌ட‌த்த‌, சிலிர்த்து விழி மூடினாள். அவ‌ள் தோள்ப‌ட்டையில் மெல்ல‌ பிரிந்த‌ அவ‌ன் இத‌ழ்க‌ள் அவ‌ள் க‌ழுத்தில் தாடியுர‌ச‌ நிமிர்ந்து அவ‌ள் க‌ன்ன‌த்தில் மென்மையாய் ப‌திய‌, அவ‌ளோ சிலிர்வாய் க‌ன்ன‌த்தை திருப்பினாள். அந்த‌ க‌ன்ன‌த்தில் இத‌ழை அழுத்தி ப‌ட‌ர‌விட்டு ந‌றுக்கென்று அவ‌ன் க‌டிக்க‌, அவ‌ளோ திடுக்கிட்டு இமையை பிரித்தாள். அடுத்த‌ நொடி அங்கே அவ‌ன் இல்லை. அதில் அவ‌ள் அவ‌ச‌ர‌மாய் அவ‌னை தேட‌ போக‌, அவ‌ள் சேலையோடு ஒட்டி வெளிப்ப‌டையாய் தெரியும் வெண்ணிடையில் க‌ர‌த்தை ப‌தித்து த‌ன் ப‌க்க‌ம் திருப்பினான் அவ‌ன். அதில் அவ‌ள் திடுக்கிட்டு திரும்பி அவ‌ன் இத‌ழில் புதைந்து வில‌க‌, அவளின் முதுகை உர த‌ன் க‌ர‌ங்க‌ளை மெல்ல‌ உய‌ர்த்தி த‌ன் க‌ருப்பு ஜேக்கெட்டை மீண்டும் அவ‌ளுக்கு  போர்த்தினான். அதில் அவ‌ள் திடுக்கிட்டு திரும்பும் முன் இச் என்று அவ‌ள் இத‌ழில் அழுத்தி முத்த‌மிட்டு த‌ன்னை பார்க்க‌ வைத்த‌வ‌ன், அவ‌ளின் குழ‌ப்ப‌மான‌ ப‌த‌றிய‌ விழிக‌ளை இர‌ச‌னையாய் ஆராய்ந்த‌ப‌டியே அவ‌ள் மேல் இத‌ழை மெல்லிய‌தாய் ஈர‌ம் செய்தவன், “நா ம‌ட்டுந்தா பாப்பேன்.” என்றான் மெல்லிய‌ குர‌லில். அதில் அவ‌ள் புரியா ப‌த‌ற்ற‌மாய் விழிக்க‌, அவ‌ள் மார்ப‌ருகே உர‌சிய‌து அவ‌ன் விர‌ல்க‌ள். அதில் அவ‌ள்  குனிந்து பார்க்க‌, அந்த‌ க‌ருப்பு ஜேக்கெட்டின் இருமுனையையும்  இழுத்து முழுதாய் மூடிவிட்டது அந்தவிரல்கள்.

அதில் அவ‌ள் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவள் மூக்கில் மெல்லியதாய் முத்தமிட்டு, “வா” என்றபடி அவளை அணைவாய் அழைத்து சென்றான். அவளும் புரியாது அவனையே பார்த்தபடி அவ‌ன் அணைப்பிற்குள் நடக்க, அந்த கண்ணாடி அறையை  தாண்டி வெளியில் அழைத்து வந‌்தான் அவ‌ன். அதில் அவள் திடுக்கிட்டு முன்னால் பார்க்க வெளியே இன்னுமே மை இருட்டாய் இருந்தது. அதில் அவள் புரியாது சுற்றி பார்க்க, அவள் தோளை அழுத்தி பிடித்து அந்த கண்ணாடி பாதையில் அவளை அழைத்து சென்றான். அவ‌ளும் புரியாது அவ‌னுட‌ன் ந‌ட‌க்க‌, அந்த‌ குள‌த்தை தாண்டி இருவ‌ரும் வெளியில் வந்த நொடி, வேக‌மாய் அவ‌ர்க‌ள் முன் வ‌ந்து நின்ற‌து ஒரு சாம்ப‌ல் நிற‌ கார்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு அப்ப‌டியே நிற்க‌, அந்த‌ கார் க‌த‌வை திற‌ந்துவிட்டு, “கெட் இன்.” என்றான் ருத‌ன்.

அதில் த‌ய‌க்க‌மாய் அந்த‌ புது காரை பார்த்த‌வ‌ள், த‌டுமாற்ற‌மாய் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ ஏறு என்று க‌ண் அசைத்தான். அதில் அவ‌ளும் த‌ய‌க்க‌மாய் உள்ளே ஏறி அம‌ர‌, க‌த‌வை அடைத்துவிட்டு முன்னால் ட்ரைவ‌ர் சீட்டை பார்த்த‌வ‌ன், “டென் மினிட்ஸ்ல‌ வீட்டுல‌ இருக்க‌ணும்.” என்றான் ருத‌ன்.

“ஓகே ப‌ாஸ்” என்றான் யோகி.   அதில் அப்ப‌டியே இவ‌ள் ப‌க்க‌ம் திரும்பி, “கேர்ஃபுல்” என்றான் ருத‌ன்.

அதில் ப‌த‌றி முன்னிருக்கையை பார்த்துவிட்டு அவ‌னை பார்த்த‌வ‌ள், “அ..அப்ப‌ நீங்க‌..” என்று கேட்க‌ வ‌ர‌, அவ‌ள் க‌ன்ன‌த்தில் அழுத்தி முத்த‌மிட்டு, “நா சீக்கிர‌ம் வ‌ந்த‌ர்றேன். நீ மொத‌ல்ல‌ கெள‌ம்பு.” என்றான் ருதன்.

“இல்ல‌ நானும்..” என் அவ‌ள்  வாய் திற‌க்கும் முன் அவ‌ள் இத‌ழில் அழுத்தி முத்த‌மிட்டு அந்த‌ வார்த்தையை அவ‌ள் தொண்டையில் இற‌க்கினான் ருத‌ன். அதில் திண‌றி அடைத்த‌ தொண்டை ஏறி இற‌ங்க‌, மெதுவாய் வில‌கி அவ‌ள் விழி பார்த்த‌வ‌ன், “வ‌ந்த‌ர்றேன்.” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் த‌லை தானாய் ச‌ரியென்று மெல்ல‌ ஆட‌, அவ‌னோ திரும்பி யோகியிட‌ன் க‌ண்காட்டினான்.

அதில் அவ‌னும் வேக‌மாய் காரை எடுக்க‌, இவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் ஜ‌ன்ன‌லில் க‌ர‌த்தை ப‌தித்து  அவ‌னையே பார்க்க‌, அவ‌னும் அப்ப‌டியே பின்னிருந்த‌ க‌ம்ப‌த்தில் சாய்ந்து இர‌ச‌னையாய் அவ‌ளையே பார்த்திருந்தான். அப்ப‌டியே அவ‌ள் கார் க‌ண்ணைவிட்டு ம‌றைய‌, அவ‌ன் இர‌ச‌னை முக‌ம்  அப்ப‌டியே வெறியில் இறுகிய‌து.

அப்ப‌டியே மேலே அந்த‌ முழு நில‌வை கார் மேக‌ங்க‌ள் முழுதாய் ம‌றைக்க‌, அத‌ன் கீழே அந்த‌ மொத்த‌ தோட்ட‌மும் மை இருட்டாய் மாறியிருந்த‌து. அத‌னுள் ம‌றைந்திருந்த‌ அனைவ‌ரும் புளூ டூத்தில் க‌னைக்ட் ஆகி, “டேய் டார்ச் ஆன் ப‌ண்ணா மாட்டிப்போம். சைல‌ன்ட்டா அந்த‌ க்ளாஸ் ஹ‌வுஸ்கிட்ட‌ போங்க‌. அங்க‌தா இருக்க‌ணும்.” என்று கூற‌, “ஓகே பார்ட்ன‌ர்.” என்ற‌ப‌டி அனைவ‌ரும் அந்த‌ க்ளாஸ் ஹ‌வுஸ் நோக்கி நெருங்கின‌ர்.

அப்போது திடீரென்று ஒருவ‌னின் கால் த‌டுக்கிவிட‌, திடுக்கிட்டு கீழே பார்த்தான். என்ன‌வோ பெரிதாய் ப‌டுத்திருந்த‌து. அதில் அவ‌ன் ச‌ட்டென்று பின்னெட்டு வைத்து த‌ன் லைட்ட‌ரை ஆன் செய்து பார்க்க‌, த‌லையில் புல்ல‌ட் சித‌றி பிண‌மாய் கிட‌ந்தான் அவ‌ன் கூட்டாளி.

அதில் ச‌ட்டென்று த‌டுமாறி அவ‌ன் விரல் வில‌கி லைட்ட‌ர் அணைந்துவிட‌, அவ‌ச‌ர‌மாய் மீண்டும் லைட்ட‌ரை ஆன் செய்தான். அடுத்த‌ நொடி உண்டான‌ வெளிச்ச‌த்தில் அப்ப‌டியே அவ‌ன் நெருப்பை நிமிர்த்த‌, அத்த‌னை அருகில் ருத‌னின் குரோத‌ முக‌ம். அதில்  அர‌ண்டு ஊறைந்த‌வ‌னின் விழிக‌ள் அக‌ல‌ விரிய‌,  ச‌த‌க்கென்று ஒரு ச‌த்த‌ம். அடுத்த‌ நொடி அருகிலிருந்த‌  வெள்ளை ரோஜா இர‌த்த‌த்தில் குளித்த‌து.

“இந்த‌ தெட‌வ‌ மிஸ் ஆக‌ கூடாது.” என்று இங்கே ஆர்.கே அழுத்தி கூற‌, “க‌ண்டிப்பா மிஸ் ஆகாது பாஸ். அங்க‌ எந்த‌ செக்கியூரிட்டியும் கெடையாது.” என்றான் ஒருவ‌ன்.

அதில் வேக‌மாய் திரும்பி, “இப்பிடித்தா அந்த‌ ரோஸ் வில்லாலையும் கார்ட்ஸ் யாரும் இல்ல‌ வேல‌ முடிஞ்சிரும்னு சொன்ன‌. ஆனா என்ன‌ ஆச்சு? அந்த ஒருத்தனே அத்த‌ன‌ பேரையும் பார்ச‌ல் பண்ணி எனக்கே அனுப்பி வெச்சிருக்கான்.” என்று ப‌ல்லை க‌டித்தார்.

“இந்த‌ தெட‌வ‌ க‌ண்டிப்பா மிஸ் ஆகாது பாஸ் நீங்க‌ டென்ஷ‌னாகாதீங்க‌.” என்று அவ‌ன் கூற‌, “ஆக‌ கூடாது. இன்னிக்கு அவ‌ங்க‌ ரெண்டு பேரோட‌ பொண‌ந்தா இங்க‌ பார்ச‌லா வ‌ர‌ணும்.” என்று அழுத்தி கூறினார்.

ஆனால் இங்கே ப‌ல‌ பிண‌ங்க‌ள்  விழுந்து கிட‌க்க‌, அத‌ன் ந‌டுவே க‌ருப்பு ஷூ பாத‌ங்க‌ளை அழுத்த‌மாய் ப‌தித்து ந‌ட‌ந்து வ‌ந்த‌வ‌னின் க‌ர‌த்தில் குருதி க‌ரை வ‌ழிய‌, அந்த‌ சூடான‌ இர‌த்த‌ம் சொட்ட‌ சொட்ட‌ முன்னால் ந‌ட‌ந்து வ‌ந்த‌வ‌னை சுற்றி கிட‌ந்த‌ பிண‌ங்க‌ள் அனைத்துமே இர‌த்த‌ கிள‌றியாய்தான் கிட‌ந்த‌து. அந்த‌ இர‌த்த‌ம் முழுக்க‌ காவு வாங்கிய‌ அவ‌ன் க‌ர‌த்தை ஒரு உத‌று உத‌ற‌, அங்கிருந்த‌ பூக்க‌ள் எங்கும் சித‌றி தெளித்த‌து இர‌த்த‌ம். அப்ப‌டியே சுற்றியும் அந்த‌ பூந்தோட்ட‌ம் முழுக்க‌ இர‌த்த‌ க‌ரைகள்தான் நிறைந்திருக்க‌, அதையெல்லாம் க‌ட‌ந்து வ‌ந்து அப்ப‌டியே  நின்ற‌வ‌னின் முன்னால் க‌ண்ணாடியாய் அந்த‌ தாம‌ரை குள‌ம். அதில் ம‌ட்டும் ஒரு பொட்டு இர‌த்த‌ம்கூட‌ ப‌டாம‌லிருக்க‌, அவ‌ன் இத‌ழ்க‌ள் இர‌ச‌னையாய் வ‌ளைந்த‌து. இவை அனைத்தும் த‌ன்ன‌வ‌ளுக்கு பிடித்த‌ பூவாயிற்றே, அதிலிருந்த‌ ஒவ்வொரு தாம‌ரையிலும் அவ‌ளின் முக‌ம்தான் அவ‌னுக்கு தெரிந்த‌து.

அதில் நிறைந்திருந்த‌ வ‌ண்ண வ‌ண்ண‌ தாம‌ரைக‌ளில் பிங்க் நிற‌ தாம‌ரை ஒன்றை மெதுவாய்  அவ‌ன் எடுக்க‌ போக‌, ச‌டாரென்று அவ‌ன் விலாவிலேயே சொருக‌ வ‌ந்த‌ க‌த்தியிட‌மிருந்து ச‌ட்டென்று உட‌லை வில‌க்கி அவ‌ன் நெஞ்சிலேயே ஓங்கி உதைத்திருந்தான் ருத‌ன்.  அடுத்த‌ நொடி அவ‌ன் பாய்ந்து சென்று அந்த‌ குள‌த்திற்குள் விழ‌ போக‌, ப‌ட்டென்று அவ‌ன் ச‌ட்டையை கொத்தாய் பிடித்த‌து ருத‌னின் க‌ர‌ம். அதில் அவ‌ன்  சாய்ந்த‌ நிலையில் அந்த‌ர‌த்தில் அப்ப‌டியே நிற்க‌, அவ‌ன் சாய்ந்த‌ உட‌லுக்கு பின்னால் அத்த‌னை  குரோத‌மாய் தெரிந்த‌து ருத‌னின் முக‌ம். அதில் இவ‌னோ பீதியில் எச்சில் விழுங்க‌, அவ‌ன் முக‌த்தோர‌ம் வ‌ழிந்த‌ விய‌ர்வை துளி ஒன்று பொத்தென்று கீழே விழ‌, அது கீழிருந்த‌ அந்த‌ பிங் தாம‌ரை இத‌ழில் விழுந்த‌து. அடுத்த‌ நொடி அவ‌னை எட்டி ஒரு உதை உதைக்க‌, அவ‌னோ பாய்ந்து சென்று அங்கிருந்த‌ கார்ட‌ன் விள‌க்கில் ச‌ர‌மாறியாய் மோத, க‌ண்ணாடியும் தீப்பொறியுமாய் சித‌றி பொத்தென்று த‌ரையில் விழுந்தான்.

அதில் கை கால்க‌ள் உடைய‌ துடித்து த‌லையை நிமிர்த்திய‌வ‌னின் க‌ழுத்திலேயே ச‌த‌க்கென்று பாய்ந்த‌து அவ‌னின் அதே க‌த்தி. அதில் ப‌ட்டென்று பின்னிருந்த‌ அதே விள‌க்கு க‌ம்ப‌த்தில் சாய்ந்துவிட்ட‌வ‌னின் மொத்த‌ மூச்சும் அட‌ங்க‌, அப்ப‌டியே ச‌ரிந்து கீழே விழுந்தான் அவ‌ன்.

அதில்தான் இவ‌னின் மொத்த‌ ஆத்திர‌மும் அட‌ங்க‌, அப்ப‌டியே திரும்பி அந்த‌ பிங்க் தாம‌ரையை மெதுவாய் கொடியோடு கையில் எடுத்தான். அதை மென்மையாய் த‌ன் உள்ள‌ங்கையில் தாங்கி, அத‌ன் மீது விழுந்த‌ அந்த‌ விய‌ர்வை துளியை த‌ன் ச‌ட்டை நுனியால் அழுத்தி துடைத்தெடுத்தான். அந்த‌ க‌ர‌த்தில் அவ‌ர்க‌ளின் குருதி ஆறே ப‌டிந்திருந்த‌து, ஆயினும் த‌ன்ன‌வ‌ளின் பூவொன்றில்கூட‌ இன்னொருவ‌னின் ஒரு சொட்டு விய‌ர்வைக்கூட இருக்க‌ கூடாதாம். ஏனோ அவ‌ளிட‌ம் ம‌ட்டும‌ல்ல‌ அவ‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அனைத்து விஷ‌ய‌ங்க‌ளிலும் த‌ன்னை த‌விர‌ வேறு ஒருவ‌னின் வாடைக்கூட‌ ப‌ட‌க்கூடாது என்ப‌து அவ‌ன் எண்ண‌ம்.

அந்த‌ தாம‌ரை இத‌ழை முழுதாய் துடைத்துவிட்டு தூக்கி ச‌ரிபார்த்தவ‌ன், இர‌ச‌னையாய்  அத‌னுள் இத‌ழ் வைத்து முத்த‌மிட்டான்.

அதே நேர‌ம் இங்கே இந்த‌ சிவ‌ப்பு தாம‌ரையை த‌ன் மார்ப‌ருகே பிடித்திருந்த‌வ‌ளின் பார்வை இர‌ச‌னையாய் அதனுள் குவிந்திருக்க‌, ஏனோ இத‌னுள் அவ‌ன் முக‌ம்தான் தெரிந்த‌து. அதில் இர‌ச‌னையாய் அவ‌ள் செவ்வித‌ழ்க‌ள் வ‌ளைய‌, அழ‌காய் அந்த‌ பூவித‌ழுக்கு முத்த‌மிட்டாள்.

ஒரே நாளில் இந்த‌ள‌வு அவன் த‌ன‌க்குள் நுழைந்துவிடுவான் என்று அவ‌ள் க‌ன‌விலும் நினைத்திருக்க‌வில்லை.

     – நொடிக‌ள் தொட‌ரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured