அத்தியாயம் 35
விஷ்வாட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்னு ஆதித்யாவும் பாலாவும் தங்களுக்குள்ள பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்ப அவங்க கையில கட்டியிருந்த கயிறு attachஆகி இருந்த கம்பி தானா மேல போக, அவங்க ரெண்டு பேரும் கூட மேல போக ஆரம்பிச்சாங்க. அதனால ஷாக் ஆன ஆதித்யா, “இது எப்படிடா மேல போகுது..??”ன்னு பயத்தோட கேட்டவன், தப்பிக்கணும்னு நினைச்சு தன் கைகளையும் கால்களையும் உதறினான்.
“அங்க பாருங்க சார் ஒருத்தன் எதையோ கையில பிடிச்சு சுத்திக்கிட்டு இருக்கான். நான் சொன்னது கன்ஃபார்ம் ஆயிடுச்சு. இது இவங்களோட பிரைவேட் ஜெயில்தான். இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம செத்து பேயா ஆகி இங்க சுத்திக்கிட்டு இருக்க பேயோட சேர்ந்து சுத்தப் போறோம்.”ன்னு பாலா புலம்ப, “டேய் வாய மூடுடா. நீ இப்படியே பேசிக்கிட்டு இருந்தினா நானே உன்ன போட்டுத் தள்ளிடுவேன்.”ன்னு கோபமா சொன்னான் ஆதித்யா.
“அதுக்கு நீங்க முதல்ல உயிரோட இருக்கணும் சார்.”ன்னு பாலா சொல்லிக்கிட்டே இருக்க, அவங்கள ஓரளவுக்கு மேல தூக்குனதுக்கு அப்புறம் அந்த சூடான தண்ணி கொதிச்சுக்கிட்டு இருந்த பெரிய சைஸ் அண்டாவுக்கு மேல கொண்டு வந்து நிறுத்தினாங்க.
சைடுல இருந்த அட்ஜஸ்ட்மென்ட்ட சுத்திக்கிட்டு இருந்த தடியன், அவங்கள அந்த சுடு தண்ணிக்குள்ள முக்கிக் கொல்ல தயாரா ஆனான்.
அதனால தொங்கிக்கிட்டு இருந்த ரெண்டு பேரும் பயத்துல அவங்க கால்களை உதற, “சார் சார்.. தடியன் சார்.. ஒரே ஒரு குட்டி ஹெல்ப்… என்னோட லுங்கி ரொம்ப லூஸ் ஆயிட்டே இருக்கு. எப்படியும் கொஞ்ச நேரத்துல கழண்டு விழுந்துடும். இத மட்டும் கொஞ்சம் கட்டி விடுறீங்களா..??”ன்னு கேட்டான் பாலா.
அதை கேட்டுட்டு சிரிச்ச அந்த தடியன், “சாகப் போற நேரத்துல.. இல்லல்ல வெந்து சாகப் போற நேரத்துல.. நீ லுங்கியோட வெந்தா என்ன..?? அப்படியே வெந்தா என்ன..??”ன்னு நக்கலா கேட்க, “நீயும் அவனும் சேர்ந்து தான டா எல்லாத்தையும் பண்ணிருக்கீங்க.. மேகாவை அப்படி அவளுக்கே தெரியாம வீடியோ எடுத்து அத ஆன்லைன்ல ரிலீஸ் பண்ணிடுவேன்னு மிரட்டும்போது உங்களுக்கு அது தப்புன்னு தோணல.
இப்ப சாகும்போது கூட உன்ன மட்டும் யாரும் பார்த்திரக்கூடாது..!!”ன்னு நினைச்சு கோபத்துல தன் பற்களை கடிச்ச விஷ்வா, “அவனுங்க டிரஸை கழட்டிட்டு தண்ணிக்குள்ள போட்டு முக்குங்கடா. செத்துப்போய் நரகத்துக்குப் போகப் போறோமோ இல்லையோ.. அங்க போனாதானே பனிஷ்மென்ட் கிடைக்கும்.. வாழும்போது இஷ்டத்துக்கு வாழலாம்னு நினைக்கிற இந்த பன்னாடைகளுக்கு hellன்னா எப்படி இருக்கும்னு காட்டி டைரக்டா hell-க்கு அனுப்பி வைக்கலாம். ஆல்ரெடி சூடா இருக்குற தண்ணி, இதுல ஹீட்டர் ஆன்ல இருக்கிறதுனால கரண்ட் ஷாக் வேற அடிக்கும். ரெண்டு பேரும் ஜாலியா சாகட்டும்.”னு சொன்னான்.
அதனால மறுபடியும் adjustment-களை மாத்தி அவங்கள கீழ கொண்டு வந்து அவங்களோட டிரஸ்ஸை ரெண்டு தடியர்கள் உருவ ஆரம்பிக்க, அதுக்கு மேல பார்க்க முடியாம தன் முகத்தை திருப்பிக்கிட்டா மேகா. இப்போ பிறந்த மேனியாக இருந்த ஆதித்யாவையும் பாலாவையும் அவங்க தண்ணிக்குள்ள முக்க தயாரா ஆக, “சார் ப்ளீஸ் சார்.. உண்மைய சொல்லிடலாம் சார்..!! விஷ்வா சாரைப் பத்தி நம்ம கேள்விப்பட்டது எல்லாமே உண்மை தான்.
இந்த ஆளு மனுஷனே இல்ல. சரியான பைத்தியக்காரனா இருக்கான்..!!”ன்னு வியர்த்து வடிய உயிர் பயத்துல ஆதித்யாட்ட கெஞ்சினான் பாலா.
“ஆமா இவ்ளோ தூரம் எல்லாத்தையும் பண்றவனுக்கு.. அவளுக்காக என்ன தண்ணிக்குள்ள முக்கி கொல்ல சொல்ல எவ்ளோ நேரமாக போகுது..?? பச்ச தண்ணிக்குள்ள முக்குனாக்கூட பாடையில போகும்போது பதூசா போகலாம். இவன் கொடூரமா கொலை பண்ண பார்க்கிறானே..!!”ன்னு நினைச்ச ஆதித்யா, “சார்.. சார்.. ப்ளீஸ் சார்.. வெயிட் பண்ணுங்க. நான் எல்லா உண்மையையும் சொல்லிடுறேன். என்ன கொன்னுடாதீங்க…!!”ன்னு அலறினான்.
அதனால அந்த தடியன் அட்ஜஸ்ட்மென்ட்ட சுத்துறத நிறுத்திட்டு விஷ்வாவோட பதிலுக்காக அவனைப் பார்க்க, “அவங்கள விடுங்க.”ன்னு சொன்னான் அவன். அதனால ரெண்டு தடியர்கள் வந்து அவங்க ரெண்டு பேரையும் கீழ இறக்கிவிட, கீழ கிடந்த தன்னோட shortsஐ வேகமாப் போட்டுக்கிட்ட ஆதித்யா, “தப்புதான் சார் அந்த வீடியோவ காட்டி நான் மேகாவ மிரட்டுனது தப்புதான். அது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்போ நீங்க தனி காட்டி காட்டுனதுல எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு. ஆனா அது எதையும் நானா பண்ணல. இதோ இருக்கானே பாலா.. இவன்தான் என் கூடவே இருந்து, அன்னைக்கும் ஹோட்டல் ரூம்ல வீடியோ எடுத்து வச்சா என்னைக்காவது யூஸ் ஆகும்னு ஐடியா கொடுத்தான்.
நேத்தும் அந்த வீடியோவை வச்சு மேகாவை பிளாக்மெயில் பண்ணலாம்னும் இவன்தான் ஐடியா கொடுத்தான். நானா எதையும் பண்ணல சார்.”ன்னு அப்ரூவரா மாறி பாலாவைக் கோர்த்து விட்டான்.
“டேய் யார்றா நீ.. உனக்கு நான் விசுவாசமா இருந்ததுக்கு இவர்கிட்ட என்ன கொத்து விடுகிறாயா..??”ன்னு பயந்துப் போய் சத்தமா “பொய்.. பொய்..!!”ன்னு கத்துன பாலா விஷ்வாவ பார்த்து, “சார்.. சார்.. இவன் சொல்றத நம்பாதீங்க சார். இவன் தப்பிக்கிறதுக்காக என்ன பலி கொடுக்கப் பார்க்கிறான். முன்னாடில இருந்தே இவன் மேகா மேடம லவ் பண்ணவே இல்ல.
இவனோட பிளானே அவங்க கூட ஜாலியா சுத்திட்டு கரெக்டான டைம் கிடைக்கும்போது மேட்டர் பண்ணிட்டு அவங்கள கழட்டி விடுறது தான். அவன் நினைச்சது நடக்குறதுக்குள்ள, நீங்க நடுவுல வந்துட்டீங்க.
அதனால முதல்ல மேகா மேடம வச்சு உங்களை ஏதாவது பண்ணலாம்னுதான் நாங்க எல்லாருமே சேர்ந்து பிளான் போட்டோம். இவன்தான் மேகா மேடம் ரொம்ப நல்லவங்க. எவ்ளோ காசு கொடுத்தாலும் இந்த பிளானுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்கன்னு சொன்னான். அதான் அவங்கள இப்படி பிளாக்மெயில் பண்ணி ஒன்னு அவங்களே இந்த கல்யாணத்தை நிறுத்தணும், இல்லனா சாகணும்ன்ற அளவுக்கு அவங்கள டார்ச்சர் பண்ணனும்னு நாங்க பிளான் பண்ணோம். நான் ஒரு சாதாரண அசிஸ்டன்ட் சார். உங்கள மாதிரி பெரிய ஆட்களை பகைச்சுக்கனுன்னு நான் ஏன் நினைக்கப் போறேன்..??”ன்னு உயிர் பயத்துல அழுதுக்கிட்டே கேட்டான் பாலா.
தொடரும்..