Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 36

மூர்கனின் காதலி CH 36

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 36

“இதுக்கு மேல நம்ம என்ன சொன்னாலும் இவன் நம்பவே மாட்டான். எப்படியாவது இங்க இருந்து தப்பிச்சுப் போனாப் போதும்..!!”ன்னு நினைச்ச ஆதித்யா, “சார், அதான் உண்மையைச் சொன்னா விட்டுடுவீங்கன்னு சொன்னீங்கள்ல… நாங்க ரெண்டு பேரும் எல்லாத்தையும் சொல்லிட்டோம். ப்ளீஸ், எங்களை விட்டுடுங்க..!! அவளோட வீடியோ எல்லாத்தையும் நான் டெலிட் பண்ணிடுறேன். இனிமே என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. அவ ரொம்ப நல்லப் பொண்ணு சார். நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க..!!”ன்னான்.

விஷ்வா, மேகாவைப் பார்க்க, அவள் கண்ணுல தண்ணியோட “இவனைப் போய் நான் எப்படி லவ் பண்ணேன்னே தெரியலையே..!!”ன்னு நினைச்சு சோகமானா. “என்னதான் நீ ஒரே செகண்ட்ல நல்லவன் மாதிரி வேஷம் போட்டாலும்… உன்னை அப்படியே விடுற அளவுக்கு நான் நல்லவன் இல்லையேடா..!!”ன்னு சொன்ன விஷ்வா, “இவனுங்க ரெண்டு பேரோட ரைட் ஹேண்ட் (Right Hand)-ஐயும், லெஃப்ட் லெக் (Left Leg)-கையும் உடைச்சுவிட்டு, ரெண்டு மூணு மாசத்துக்கு எழுந்து நடக்க முடியாத மாதிரி நல்லாப் பாத்துக்கோங்க டா. அப்பத்தான் வாழ்க்கை முழுக்க இந்த மாதிரி பண்ணணும்னு இவங்களுக்கு ஒரு செகண்ட் தோணுச்சுன்னா கூட, வாங்கின அடி ஞாபகம் வரும். அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா கொடுங்க”ன்னான்.

அதனால, குருநாத் கையில பெரிய குச்சியோட அவங்ககிட்ட போக, அவங்க ரெண்டு பேரும் “வேண்டாம், எங்களை விட்டுடுங்க… இனிமே இப்படிப் பண்ண மாட்டோம்..!!”ன்னு கோரஸா கெஞ்ச, அவங்களை துரத்தித் துரத்தி அவங்க பின்பக்கத்திலயே அடிச்சான் குருநாத். அதனால, தங்களோட பட்டக்ஸ்ல கை வச்சுக்கிட்டு “ஆஆஆ.. அம்மா, வலிக்குது..!!”ன்னு ரெண்டு பேரும் கத்திக்கிட்டே எங்கெங்கோ ஓடினாங்க. அதைப் பார்க்க காமெடியா இருக்க, தன்னை மறந்து சின்னதா சிரிச்சா மேகா. அதைக் கண்ணோட ஓரத்தால பார்த்து ரசிச்ச விஷ்வா, “நான் சொன்னதை முடிச்சுட்டு இவனுங்களை கொண்டு போய் ஆதி குரூப் வாசல்ல போடுங்க. எவனாவது வந்து பொறுக்கிக்கிட்டு போகட்டும்”ன்னு தன்னோட ஆளுங்க கிட்ட சொன்னவன், “டேய், இங்க பாருங்கடா, நான் சொல்றது கேக்குதா??”ன்னு அவங்களைப் பார்த்து சத்தமா கேட்டான்.

குருநாத் கிட்ட அடிவாங்கிக் கிட்டே “அப்படியே சொல்லுங்க சார், நல்லாவே கேக்குது..!!”ன்னு அவங்களும் பதிலுக்குக் கத்த, “இவளுக்காக மட்டும்தான் உங்க ரெண்டு பேரையும் உயிரோட விடுறேன். இல்லேன்னா உங்க பொணம்கூட எவனுக்கும் கிடைக்காத மாதிரி பண்ணிருப்பேன். உசுரு மேல ஆசை இருந்தா இனிமே ஒழுங்கா இருங்க..!!” ன்னு மிரட்டுனான் விஷ்வா.

“ஓகே சார். இனிமே மேகா மேடம் இருக்கிற பக்கம்கூட நாங்க வரமாட்டோம். எங்களுக்கு உசுருதான் முக்கியம்.”ன்னு சொன்னபடியே அவங்க ரெண்டு பேரும் குருநாத் கிட்ட அடி வாங்கிக்கிட்டே ஓடினாங்க.

இப்போ மேகா அதைப்பார்த்து எல்லாத்தையும் மறந்து சத்தமாவே சிரிக்க, “இனிமே வெளிய எங்கேயாவது போனா ஜாக்கிரதையா இரு. முக்கியமா இவனை மாதிரி சீப்பான ஆளுங்க யாரையும் நம்பாத.”ன்னு சொன்ன விஷ்வா, வீடியோ காலை கட் பண்ணிட்டு காரை ஸ்டார்ட் பண்ணான். 

“ஓகே”ன்னு சொன்ன மேகாவுக்கு, “இப்போ இதுக்காக நான் இவருக்கு நன்றி சொல்லணுமா??”ன்னு தோண, “வேணாம் வேணாம்.. இவர் என்னோட புருஷனாகப் போகிறவரு.

என்னை நல்லா பாத்துக்க வேண்டியது இவரோட பொறுப்புடின்னு இவர்தானே சொன்னாரு..!! அப்புறம் இவர் கடமையை இவர் செய்றதுக்கு நான் எதுக்கு நன்றி சொல்லணும்??”ன்னு நினைச்சு நன்றி சொல்லாம, அவனைத் தன் கண்ணால அளவெடுத்தபடியே இருந்தாள்.

விஷ்வா, ராத்திரி நேரத்துக்கு ஏத்த மாதிரி ஒரு சாதாரண சட்டையும் பேன்ட்டும் மட்டும் போட்டிருக்க, அப்போதும் அந்தப் பொண்ணோட கண்ணுக்கு அவன் ரொம்ப அழகானவனாகவே தெரிஞ்சான். அதனால பச்சையா அவனை சைட் அடிச்சவள், “இவரை எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் அழகாதான் தெரியுறாரு”ன்னு நினைச்சு தனக்குள்ள அவன் கிட்ட “ஆதித்யா மாதிரி ஆளுங்களுக்கு வேணா நீங்க வில்லனா தெரியலாம். பட், யூ ஆர் மை ஹீரோ மிஸ்டர். விஷ்வா”ன்னாள்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured