அத்தியாயம் 31
விஷ்வா சொன்ன மாதிரியே எல்லாரையும் கூட்டிட்டு பக்கத்துல இருந்த செவன் ஸ்டார் ரெஸ்டாரன்ட்டுக்கு போனான். அப்போ ராத்திரி 12 மணிக்கு மேலாகியும் அங்க ஃப்ரெஷ்ஷா நிறைய சாப்பாடுகள் கெடச்சுது.
“வேண்டாம், வேண்டாம்”னு மொதல்ல காளீஸ்வரன் வீரப்ப அண்ணனுக்குச் சொன்னாலும், தெரியாத உயர்தர சாப்பாடுகளை விதவிதமா கண்ணுல பாத்துட்டு யாரால சாப்பிடாம இருக்க முடியும்..? எல்லாத்தையும் ஒரு பிடி பிடிச்சாரு.
சாப்பிடும்போது கூட அவரு விஷ்வாவையே தான் கவனிச்சிட்டு இருந்தாரு.
“இந்தத் தம்பிகிட்ட குறை சொல்ற மாதிரி எதுவுமே இல்ல… இவருக்கு இருக்கிற மவுஸும், அழகும், ஆளுமையும் வேற எவனுக்கு இருக்கும்..? அப்படியே இருந்தாலும் அவன எப்படி நம்மால மேகாவுக்குப் பாத்திருக்க முடியும்..? நம்ம வெற்றியை விட மேகாவுக்கு இவர்தான் பொருத்தமான மாப்பிள்ளை. அத புரிஞ்சுக்கிட்டுத்தான் அவனே விலகிப் போயிட்டான்”னு நெனச்ச காளீஸ்வரனுக்கு மெல்ல மெல்ல விஷ்வா மேல மரியாதையும், அன்பும் கூடுச்சு.
சாப்பிட்டு முடிச்ச உடனே காளீஸ்வரனையும், மாரிமுத்துவையும் கூட்டிட்டு மகேஷ் தன்னோட கார்ல ஏற, முன்னால பாடிகார்டுகளோட தயாளனும், அரவிந்தும் போக, நடுவுல விஷ்வாவோட கார்ல அவனும் மேகாவும் மட்டும் தனியாப் போனாங்க. அவன் பக்கத்துல முன்ன சீட்டுல உக்காந்திருந்த மேகா, “ஏன் எப்பவுமே நீங்களே ட்ரைவ் பண்றீங்க..? டிரைவர் வெச்சுக்கலாமே?”னு கேக்க, “எனக்கு டிரைவிங் பிடிக்கும். சோ, சான்ஸ் கெடைக்கும் போது மோஸ்ட்லி நானே தான் டிரைவ் பண்ணுவேன்”னான் அவன்.
“ம்ம்…”ன மேகா அதுக்கு மேல அவன்கிட்ட எதுவும் பேசல. அவ வெளிய வேடிக்கை பாத்துட்டு இருக்க, “சரி, நீ இப்போ நார்மலாத்தானே இருக்க.. உனக்கு என்ன பிரச்னைன்னு சொல்லு”னு சட்டெனக் கேட்டான் விஷ்வா. அதனால ஷாக் ஆகி அவனைத் திரும்பிப் பாத்த மேகா, “ஏன் இப்படிக் கேக்குறீங்க..? எனக்கு என்ன பிரச்னை இருக்கப் போகுது..? எங்க வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு யோசிச்சுத் தான் பயந்துட்டு இருந்தேன். இப்போ அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. சோ, இருந்த ஒரு ப்ராப்ளமும் சால்வ் ஆயிடுச்சு”னு சாதாரணமாகச் சொன்னா.
“இல்ல, வேற என்னமோ இருக்கு. உன்னப் பாத்தாலே தெரியுது நீ சரியில்ல. ஐ கேன் சென்ஸ் இட் (I can sense it). என்ன மாதிரிதான் உங்க முத்து அண்ணனுக்கும் ஃபீல் ஆகியிருக்கு. அதான் அவரு உன்னைத் தனியா கூட்டிட்டுப் போய்ப் பேசிருக்காரு. பட், எனக்குத் தெரிஞ்சு நீ அவர் கேட்டு எதுவும் சொல்லிருக்க மாட்ட. ஒழுங்கு மரியாதையா சொல்லு”னு விஷ்வா அவள மிரட்ட, “ச்ச்.. சும்மா ‘சொல்லு, சொல்லு’ன்னா என்னத்த சொல்றது..? நீங்க இப்படிக் கேட்டா, அப்படியே ஏதாவது இருந்தாலும் கூட உங்ககிட்ட எப்படி சொல்லத் தோணும்..?”னு இரிடேட் ஆகிக் கேட்டா மேகா.
“நீ எக்ஸ்பெக்ட் பண்ற மாதிரி எனக்கு உன்கிட்ட soft-ஆ எல்லாம் பேசத் தெரியாது. பட், உன் பிரச்னை எதுவா இருந்தாலும் என்னால அத சால்வ் பண்ண முடியும். யூ கேன் ட்ரஸ்ட் மீ ஃபார் ஷியூர்” னான் விஷ்வா.
அவனோட அந்தச் சாதாரண வார்த்தைகள் நேரா மேகாவோட இதயத்த போய் தாக்க, திடீர்னு தன் முகத்தை மூடிக்கிட்டு கதறி அழுத மேகா, “எனக்கு இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியல. என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல. டோட்டலி ஐ’ம் கன்ஃப்யூஸ்ட் விஷ்வா”ன்னா.
“நீ என்னன்னு சொன்னாதான் என்னால ஏதாவது பண்ண முடியும் மேகா”னு விஷ்வா மென்மையான குரல்ல சொல்ல, “அந்த இன்டர்வியூ முடிஞ்சு நான் உங்க கூட இங்க பங்களாவுக்கு வந்ததுக்கப்பறம் எனக்கு அன்நோன் நம்பர்ல இருந்து ஒரு வீடியோ வந்துச்சு.
அவங்க அந்த வீடியோவ ஆன்லைன்ல ரிலீஸ் பண்ணாம இருக்கணும்னா நான் உங்கள மேரேஜ் பண்ணிக்கக் கூடாதுன்னு என்ன பிளாக்மெயில் பண்ணாங்க”னு அழுதுக்கிட்டே சொன்னா மேகா. கார சடன் பிரேக் போட்டு நிறுத்துன விஷ்வா, “அது என்ன வீடியோ..?”னு கேக்க, அத தன் வாயால சொல்லத் திராணி இல்லாம மொபைல் ஃபோனை அன்லாக் செஞ்சு அந்த சாட்ட ஓபன் செஞ்சு அவன் கையில குடுத்துட்டா மேகா.
அதுல மேகா குளிக்கும் போதும், டிரஸ் சேஞ்ச் பண்ணும்போதும் எடுத்த வீடியோ இருந்துச்சு. கண்ணுல கோபத்தீ கொழுந்துவிட்டு எரிய, கையில இருந்த ஃபோனை இருக்கமா பிடிச்சபடி அத பாத்துட்டு இருந்த விஷ்வா, “இது அந்த ஆதித்யா பண்ண வேலையா..?”னு தன் பற்களைக் கடிச்சிக்கிட்டு கேக்க, “அவனைத் தவிர வேற எவனும் இத பண்ண மாட்டான். இது நாங்க ஒரு தடவ பிசினஸ் ட்ரிப் போகும்போது ஒரு ஹோட்டல்ல ஸ்டே பண்ணி இருந்தப்ப எடுத்த வீடியோன்னு நெனைக்கிறேன். அந்த இத்துப்போன பரதேசி நாய தெரியாம லவ் பண்ணதுக்கு இன்னும் நான் என்னென்ன அனுபவிக்க வேண்டியதிருக்கோ தெரியலை”னு உடைஞ்ச குரல்ல சொன்னா மேகா.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)